Thursday, June 29, 2006

180: மாதவனடியாரை மனம்நோகப் பண்ணினால் ...

கடந்த 1994-ல், ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் ஒரு தமிழ் பாடலை முதல் முறையாக கேட்டேன். அப்பாடல் மிகவும் பிடித்து போக எல்லா கீர்த்தனங்களையும் படித்தும், கேட்டும் ஆனந்தித்தேன். அந்த பாடலை இங்கே பதிக்கிறேன்.

மாதவனின் அடியாரின் மனம் கோன செய்தால் என்ன ஆகும் என்று எச்சரிக்கிறாரா? அல்லது நல்ல கதி பெற தன்னால் இயன்ற எளிய அறிவுறைகளை சொல்கிறாரா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு உள்ளது இந்த எளிமையான பாடல். இப்பாடல் ஸ்வாமிகளின் கவிதை நிபுணத்திற்க்கும், தத்துவத்திற்க்கும், எளிமைக்கும் ஒரு மிகப்பெரிய உதாரணம்.

பல்லவி
மாதவனடியாரை மனம்நோகப் பண்ணினால்
மாடாடு ஜென்மம் மருவும் (மாதவனடியாரை)


அனுபல்லவி
பாதகம்வேறில்லை யாதவனடியாரை
பழித்திடுவதுதான் கருவம் (மாதவனடியாரை)


சரணங்கள்
எப்பாவங்களும் தீரும் அப்பன் கோவிந்தனடியாரை இகழ்ச்சியாய்ப் பேசும்
இப்பாவந் தீராது எப்போதும் நரகத்தில் இருக்கும்படி நேரும் மோசம் (மாதவனடியாரை)

கிடைக்குமோ மானிட ஜென்மம் கிடைத்ததற்கு அடைவது இதுதானோ சொல்வீர்
முடவனாய்ப் பிறந்தாலும் தடையில்லை மோக்ஷத்திற்கு முகுந்தனுடைய நாமம் சொல்வீர் (மாதவனடியாரை)

வீடைந்தோமென்றே மாந்திடவேண்டாம்ஓய் வெறுவாய் வெகுளி வார்த்தை பேசி
கேடடைந்தது போதாதோ இனிமேலும் கதிபெறப் பாருங்கள் வாசி (மாதவனடியாரை)

விடத்துக்கொப்பான மாய்கை இடத்திலகப்பட்டு வீணாகக் காலம் போக்குகின்றீர்
வடபத்ராரியர் போற்றும் நடனகோபாலன் நாமம் உரைப்பீர் வைகுந்தம் சேர்வீர் நன்றே (மாதவனடியாரை)


மாதவனான அந்த வைகுண்டவாசனை, நாராயணனனை தெய்வமாக எண்ணி தொழுபவர்களை, மனம் நோக வைத்தால் என்ன நேரும் என்று எச்சரிக்கும் விதமாகவும், சத் பதவிகளான வைகுண்ட வாசமும், பரமபதமும், கிடைக்க வழிசொல்லும் விதமாகவும் அமைந்துள்ள பாடல்.


எந்த பாவங்களை செய்தாலும் அது தீர்ந்து விடும், அல்லது அது தீர ஒரு பரிகாரம் கிடைத்துவிடும் ஆனால், அவனடியாரை பழிப்பது போன்ற பாவம் தீர்வதற்க்கு எந்த வழியும் பரிகாரமும் இல்லை. அதை செய்பவர்கள் எப்போதும் மோசமான நரகத்தில் வீழ்ந்து கிடப்பர் என்று எச்சரிப்பவர், நரகம் அதுவும் மோசமான நரகம் என்றும், வாழ்க்கை மோசமாகும் என்றும் இரு பொருளில் கொள்ளலாம்.

இந்த மானிட ஜென்மம் காணகிடைக்காதது, அவ்வாறு கிடைத்த ஜென்மத்தை களிப்பது இது போன்ற வல்வினை செய்தா களிப்பது, கழிப்பது? நீங்கள் பணிகளுக்கு இயலாதவனாய், முடவனாய், பிறந்தாலும் மோக்ஷத்தை அடைய தடையேதும் இல்லை, ஒருமுறையேனும் சொல்லிவிடு அதுவே போதும் என்கிறார். இதே போல் மேலும் ஒரு பாடலில் மனிதனாக பிறந்தவன் தான் கொட்டாவி விடும் போதாவது ‘ராம்’ என்று சொன்னால் அவனை நினைத்து வழிபட்டால் அதுவே போதும் என்றும் சொல்கிறார்.

சிலர் தாம் எல்லாம் அறிந்து விட்டோம் இனி எதுவும் கற்க, காண வேண்டியதில்லை என்று எண்ணுவர், அவர்களை பார்த்து சொல்லும் படியாகவும், மேலும் சிலர் கிடைத்த எதோ ஒன்றை வைத்து இதுவே எல்லாம் என்று விவாதம் செய்வர் அவர்களுக்கு அறிவுறை சொல்லும் விதமாகவும் அமைந்துள்ளது அடுத்த சரணம். அய்யாமார்காளே, அம்மாமார்களே என்பதை ஒரு வார்த்தையில் ஓய் என்று விளிக்கிறார், வீட்டை (எல்லாம்) அடைந்து விட்டோம் என்று இறுமாப்புடன் வெறு வார்த்தைகளை பேசி வாழ்வை கழிக்க கூடாது, அப்படி ஒரு கிடைப்பதற்க்கறிய கிடைத்த (மெய்) வீட்டை தந்தவனை என்றென்றும் வணங்க வேண்டும் என்றும், மேலும் உயரிய நிலைகள் கிடைக்கவும், கிடைத்தது நிலைக்கவும் அவன் திருநாமத்தை என்றென்றும் சொல்லி வரவேண்டும் என்றும் சொல்கிறார்.

விசனத்திற்க்கு ஒப்பான இந்த மாயையில் அகப்பட்டு காலத்தை ஏன் வீணாக போக்குகிறீர்கள், அதிலிருந்து விடு பட (என் குருவான) வடபத்ராரியர் போற்றுகின்ற அந்த நடன கோபாலனின் நாமத்தை உறைப்பீர், எல்லாம் இனிதாக, நன்றாக வைகுண்டம் சேர்வீர்.

Wednesday, June 28, 2006

179: விரைந்து வந்து காட்சி தருவாய்...

ஸெணமவி ஸேவதீ3 ஸெரிர் வெக்ள கெரி தொர
ஸெர மிள்விலேத் ஸீன் திரயி (தொர ஸெர) (ஸெணமவி)

அநுபல்லவி
3ணாலைடா3 ஹாத் எமாக் த4க்கிமீ தொகொ ஹொயேஸ்
மொந்நுதொ2வி ஸ்ரீ லக்ஷ்மிதே3வி ஸெர தூ நிக்ளி (ஸெணமவி)

சரணு
ஸா க்ருபஸா யே ஸம்ஸார் மீ கொ2ப்பா3க் த3டு
ஸாநாஜியெத் மொகொ கோட் வாடு
ஸ்ரீ கேஸவா தொரவிநா க3திநீ: யேட் ஸெய்லே
ஸ்ரீலக்ஷ்மி தே3விஸெர அவிமொகொ தூபொ3வ்லே (ஸெணமவி)

ஸ்ரீ ராமா ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்ரீ கோ3பாலா
ஸ்ரீ ஹரியே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி
தே3மாய் ஹொய்யவி பதா3ல் கோ3 தூ தே3ரெஸ்தா2ம்
தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் (ஸெணமவி)

த்யே விர்ஜாநெத்தி3ம் பு3டி3 தேட்
தி3வ்யரூபு க2டி3 மீ தொக கொ2ப்பா3க் ஸவு
த்யே விர்ஜாநெத்தி3 வாடு தே3நவமெநி பொ3வரேஸ்
தேவி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி அவி தூ ஏடு (ஸெணமவி)

நடனகோ3பாலா தொர நாயகிந் ஸெர மிளி
நசி கௌ3னாருக் ஜாய் பாப் து4ளி
வடபத்ரார்யு வாஸுதேவுஸ் தே3வ்மெநி வசெஸி
வாமன ஸ்ரீலக்ஷ்மி தே3விஸெர நிக்ளி (ஸெணமவி)


ஸெணம் அவி ஸேவ தீ3 - சீக்கிரம் வந்து தரிசனமளித்து
ஸெரிர் வெக்ள கெரி - இந்த உடலைத் தூய்மை செய்து
தொர ஸெர மிள்விலேத் - உன்னுடன் கூடும் படி அருள் செய்தால்
ஸீன் திரயி - என் இளைப்புகள் எல்லாம் தீரும்

3ணா லைடா3 ஹாத் - தண்டனைகள் தருவதற்காக கோலைக் கையில் வைத்திருக்கும்
எமாக் த4க்கி மீ - எமனைக் கண்டு பயந்து நான்
தொகொ ஹொயேஸ் - உனக்கே ஆனேன்
மொந்நு தொ2வி - மனம் வைத்து
ஸ்ரீ லக்ஷ்மிதே3வி ஸெர - தேவி ஸ்ரீ லக்ஷ்மியுடன்
தூ நிக்ளி (ஸெணம் அவி) - நீ கிளம்பி (விரைவில் வந்து)
ஸா க்ருப ஸா - அப்பா (ஐயனே) பார் என்னை தயை கூர்ந்து பார்
யே ஸம்ஸார் - இந்த ஸம்ஸார ஸாகரத்தை
மீ கொ2ப்பா3க் த3டு - நான் எப்போது தாண்டுவேன்
ஸாநா ஜியெத் - நீ பார்க்காமல் போனால்
மொகொ கோட் வாடு - எனக்கு என்ன (எது) வழி?
ஸ்ரீ கேஸவா - கேஸ்வா,
தொர விநா க3தி நீ: - உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை
யேட் ஸெய்லே - இங்கே பார்
ஸ்ரீலக்ஷ்மி தே3வி ஸெர - (உடனடியாக) ஸ்ரீ தேவியுடன்
அவி மொகொ தூ பொ3வ்லே - வந்து என்னை நீ அழைத்துக்கொள்

ஸ்ரீ ராமா - ஸ்ரீ ராமா
ஸ்ரீ க்ருஷ்ணா - ஸ்ரீ கிருஷ்ணா
ஸ்ரீ கோ3பாலா - ஸ்ரீ கோபாலா
ஸ்ரீ ஹரி - ஸ்ரீ ஹரி
யே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி - எல்லா இடங்களிலும் நிறைந்தவனே
தே3மாய் ஹொய்யவி - அப்பொருளானவனே
பதா3ல் கோ3 தூ - பவித்ரமான பாதங்களை
தே3ரெஸ்தா2ம் - அதை தந்தருள
தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர - திருமகள் இலக்குமியுடன்
நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் ( ஸெணம் அவி) - நானிருக்கும் இடத்திற்க்கு கிளம்பி வந்து (விரைவில் வந்து)

த்யே விர்ஜா நெத்தி3ம் - அந்த 'விரஜை' என்னும் புனித ஆற்றில் (வைகுண்டத்தில் ஓடும் ஆறு)
பு3டி3 - நீராடி
தேட் தி3வ்ய ரூபு க2டி3 - அங்கே புனித உருவம் தரித்து
மீ தொக கொ2ப்பா3க் ஸவு - உன்னை நான் எப்போது காண்பேன்?
த்யே விர்ஜா நெத்தி3 வாடு - அந்த ஆற்று வழியை
தே3ன் அவ மெநி பொ3வரேஸ் - கொடுப்பதற்காக உன்னை அழைக்கிறேன்
தேவி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி - திருமகள் இலக்குமியுடன்
அவி தூ ஏடு (ஸெணம் அவி) - இங்கு நீ வந்து (விரைவில் வந்து)

நடனகோ3பாலா - நாக படம் மீது நடமாடியவனே
தொர நாயகிந் - உன் நாயகியரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் (நாயகி என்று சொல்வது அடியாரையும் குறிக்கும்)
ஸெர மிளி - உடன் சேர்ந்து
நசி கௌ3னாருக் - பாடி ஆடுவோருக்கு
ஜாய் பாப் து4ளி - பாபங்கள் உருண்டோடும்
வடபத்ரார்யு - வடபத்ரார்யர் (இவர் ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் குரு)
வாஸுதேவுஸ் - வாஸுதேவனான மஹாவிஷ்ணுவே
தே3வ்மெநி - தெய்வம் என்று
வசெஸி - சொன்னார்
வாமன ஸ்ரீலக்ஷ்மி - வாமனா, மதுசூதனா திருமகளுடன்
தே3விஸெர நிக்ளி - விரைந்து வருவாய்

கண்ணனை எப்போதும் தரிசனம் கண்டவர், எப்போது வருவார், எப்போது தரிசனம் தருவார் என்று கண்ணன் மேல் பித்து பிடித்தது போல் இருந்தார்.
அச்சமயத்தில் அவர் இந்த பாடலை பாடி பரவசப்பட்டார் என்று அவரது சீடர்கள் சொல்வதுண்டு.

கண்ணா சீக்கிரம் வந்து தரிசனமளித்து, இந்த மனகவலை, சோகம் தீர உன்னுடன் கலந்தால் என் வலி தீரூம்.

அப்படி பட்ட தரிசனம் எதற்க்காக வேண்டும், யார் யாருடன் வந்து தரிசனமளிக்க வேண்டும், என்று அனுபல்லவியில் சொல்கிறார்.

எமனின் கைகளால் தண்டனைகளில் இருந்து தப்ப, நான் அவனுக்கு பயந்து, உனக்கே ஆனேன், மனம் வைத்து ஸ்ரீ தேவியான லக்ஷ்மியுடன் கிளம்பி வருவாய்

சரணங்களில் கண்ணனை புகழ்ந்தும், அவனடியவர்களை பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஐயனே என்னை தயை கூர்ந்து பார் இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து நான் எப்போது மீள்வேன் நீ பார்க்காமல் போனால், எனக்கு என்ன (எது) வழி கேஸ்வா, உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை இங்கே பார், (உடனடியாக) ஸ்ரீ தேவியுடன், வந்து என்னை அழைத்துக்கொள்

ஸ்ரீ ராமா, ஸ்ரீ க்ருஷ்ணா, ஸ்ரீ கோபாலா, ஸ்ரீ ஹரியே எல்லா இடங்களிலும் நிறைந்தவனே, அப்பொருளானவனே பவித்ரமான பாதங்களை, அதை தருவிக்க திருமகள் இலக்குமியுடன், நானிருக்கும் இடத்திற்க்கு எழுந்தருள்வாய்

அந்த புனித ஆற்றில் குளித்து, அங்கே புனித உருவம் தரிக்க உன்னை எப்போது காண்பேன், அந்த ஆற்று வழியிலேயே நீ மக்களக்கு காட்சி தருவதற்காக அழைகிறேன், திருமகள் இலக்குமியுடன், நீ இங்கு வருவாய்.

நாகபடம் மீது நடமாடியவனே உன் நாயகியரான ஸ்ரீதேவி, பூதேவியுடன், உடன் சேர்ந்து இருப்பதை பாடி ஆடி அறிவப்பர்க்கு, இருப்பவர்களுக்கு பாபங்கள் உருண்டோடும்
வடபத்ராரர், வாஸுதேவனான மஹாவிஷ்ணுவே (நீயே) தெய்வம் என்று சொன்னார் வாமனா, மதுசூதனா திருமகளுடன் விரைந்து நீ வருவாய்.

Tuesday, January 24, 2006

128: *நட்சத்திரம்* - வள்ளல் வாஸுதேவன்

நாயகி சுவாமிகள் சௌராஷ்ட்ரத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

வள்ளல் வாஸுதேவன் நாமம்
தெள்ளமிர்தம்; உள்ளே கொண்டால்
கொள்ளைக்காரன் வரமாட்டான்; வந்தாலும்
கொள்ளைக்கிடமில்லாமல் போவான்.

முதலில் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. இரண்டாவது தடவை படித்தபின் புரிந்தது.

வசுதேவரின் புதல்வனான வாசுதேவன் மாபெரும் வள்ளல். கேட்டதெல்லாம் கொடுப்பான். அவன் கூடத் தேவையில்லை. அவனுடைய நாமமே போதும். அதுவே வள்ளல். வள்ளல் வாசுதேவ நாமம். பிறவிப் பிணியையும் அந்த நாமம் நீக்கும். அதனால் அது தெளிந்த அமிர்தம். அதனை நாம் உட்கொண்டுவிட்டால், நம் உயிரைக் கொள்ளைக் கொள்ளும் கொள்ளைக்காரனான காலன் வர மாட்டான். பிறவா நிலை அடைவோம். அப்படியே அவன் வந்தாலும் கொள்ளை கொள்வதற்கு எதுவும் இல்லாமல் போவான். கண்ணன் நாமத்தை நாம் உட்கொண்டவுடன் நம் உயிர் அவனைச் சேர்ந்துவிடுகிறதே. அப்புறம் எமனுக்கு என்ன கிடைக்கும்?

அற்புதமான நாலு வரிப் பாடல் இது.

Monday, December 26, 2005

87 - மனமே! என்றும் எங்கும் அவனை நினை.

மனம் ஒரு குரங்கு என்று தான் சொல்கிறார்கள். அது மது அருந்திய குரங்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள். அது உண்மை. மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றிற்கு தாவும் வேகத்தையும் மலரை நினைத்த மறுவினாடி மலத்தை நினைப்பதையும் பார்த்தால் அது உண்மையென்று நன்கு விளங்கும்.

மனமே எல்லா பந்தங்களுக்கும் காரணம் என்றும் அதுவே பந்தங்கள் நீங்குவதற்கு துணைசெய்யும் கருவிகளில் சிறந்தது என்றும் பெரியோர் சொல்வர். எத்தனைத் தான் நல்ல விஷயங்களைப் படித்தாலும் மனதின் துணை இல்லையென்றால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. நல்ல விஷயங்களைப் படித்தும் கேட்டும் பார்த்தும் உணர்ந்தும் முடிந்தவுடனேயே மனம் தன் வழக்கப்படி கெட்ட விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது.
அதனால் தான் மனதிற்கு உரைப்பதாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள் அருளாளர்கள்.

ஹுடினிம் பிஸினிம் சல்னிம் ஹோங்கும்
நடன கோபால் த்யான் சொந்நகோ மொந்நு

ஹுடினிம் - எழும் போதும்

பிஸினிம் - அமரும் போதும்

சல்னிம் - நடக்கும் போதும்

ஹோங்கும் - தூங்கும் போதும்

நடனகோபால் த்யான் சொந்நகோ மொந்நு - நடனகோபாலனின் தியானத்தை விடாதே மனமே.

Saturday, December 03, 2005

70: உஞ்சவிருத்திப் பாட்டு

நாயகி சுவாமிகள் மதுரையில் வசிக்கும் போது உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்ந்து வந்தார். பக்தியும் நற்குணங்களும் கொண்ட இல்லறத்தார் வீடுகளுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைப் பெறுவது தான் உஞ்சவிருத்தி. அப்படி உஞ்சவிருத்திக்குச் செல்லும் போது இறைவன் நாமத்தைப் பாடிய படியும் நல்லவழிகளை போதித்தபடியும் செல்வது வழக்கம். மக்களுக்கு நல்வழி காண்பிப்பதற்கு இதை ஒரு நல்லவழியாகக் கொண்டிருந்தனர் மகான்கள். அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாடியது இந்த பாடல்.

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
பக்திஹோரு தந்தனி கல்னோ
முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ மூலா
முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ - இறைவனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

பக்திஹோரு தந்தனி கல்னோ - பக்தியோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்

முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ - முகுந்தனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.


மூலா முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ - மூலையில் வைத்துள்ள பானையில் இருக்கும் அரிசியை கொண்டுவந்து நீங்கள் அளிக்கவேண்டும்.

ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ
எம தாக் நீ: தந்தனி கல்னோ
காம க்ரோத குண்ணுன் ஜனோ
தமஸ்ஹோனா தந்தனி கல்னோ


ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ - இராமனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

எம தாக் நீ: தந்தனி கல்னோ - எமபயம் இனி இல்லை; நீங்கள் அரிசி கொண்டு வந்து அளிக்கவேண்டும்.

காம க்ரோத குண்ணுன் ஜனோ - காமம், குரோதம் முதலிய குணங்கள் போகவேண்டும்

தமஸ்ஹோனா தந்தனி கல்னோ - தாமதம் செய்யாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ
கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ
கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ
விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ


கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ - கோவிந்தனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ - கோவிந்தா என்று சொல்லியே நீங்களும் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ - கேஸவனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்.

விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ - நம்பிக்கையோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ
லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ
பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ
ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ


அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ - அச்சுதனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ - சலித்துக்கொள்ளாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ - அன்புடன் இறைவனைப் பாடவேண்டும்.

ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ - மகிழ்ச்சியுடன் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ
குரு கைங்கர்யமூஸ் ஹொனோ
புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ
மொரி உஜுநா தந்தனி கல்னோ


ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ - ஹரியின் நாமங்களையே எதிர்பார்க்கவேண்டும்.

குரு கைங்கர்யமூஸ் ஹொனோ - குருவின் சேவைகளே ஆகவேண்டும்.

புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ - புளியம்பழம் இந்த உடல்; இதை உணரவேண்டும்.

மொரி உஜுநா தந்தனி கல்னோ - இறப்பு பிறப்பு இவைகளில் இருந்து விடுபட நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ
நடனகோபாலுக் தந்தனி கல்னோ
ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ
கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ


வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ - நம் குருநாதரான வடபத்ரார்யரின் வழியை அறியவேண்டும்.

நடனகோபாலுக் தந்தனி கல்னோ - நடனகோபாலனுக்கு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ - இன்னும் என்ன செய்யலாம்; இன்னும் என்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து தருமங்களையே கொடுக்கவேண்டும்.

கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ - கரையேறுவதற்கு நீங்கள் வரவேண்டும்.

Tuesday, November 22, 2005

59: எல்லா கஷ்டமும் தீர வழி?

நாம் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம். அதன் பலனாய் இன்பமும் துன்பமும் அனுபவிக்கிறோம். எல்லையில்லா இன்பம் அனுபவிக்க ஏதாவது வழி இருக்கிறதா? இருக்கிறது என்கிறார் நாயகி சுவாமிகள்.

கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன்
கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ.

கைங்கர்ய கிங்கர்யம் காம் ஸாஜா மெனஸ்தெனஸ்கி - சேவையாவது கீவையாவது; உன் வேலையைப் பார் என்பவர்கள் எல்லாம்

கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன் - நல்வினைத் தீவினைப் பயன்கள் என்னும் கருமக் காட்டிலே மாட்டிக்கொண்டு கஷ்டம் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.

கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ - மக்களுக்குச் செய்யும் சேவையே அரிவாள்; கருமக் காட்டை வெட்டிக்கொண்டு போகும் இப்போதே.


மக்கள் தொண்டே மகேசன் தொண்டு - ஆதலினால் தொண்டு செய்வீர் உலகத்தீரே; அக்தன்றோ இவ்வுலகில் தலைமை இன்பம்.

Friday, November 11, 2005

51: நீயே கதி!!!!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - துஸர்
திக்குநீ: தூஸ் கதிரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

srIma-n nArAyaNA AvirE - dhuSar
dhikku-nI: thUS gathirE
(srIma-n nArAyaNA AvirE)

ச்ரீமந் நாராயணா ஆவிரே - 'அகலகில்லேன் இறையும் என்று' எங்கும் எப்போதும் என்றும் உன்னைப் பிரியாமல் இருக்கும் அன்னை லக்ஷ்மியுடன் எம் தந்தையான நாராயணா நீ வரவேண்டும்

துஸர் திக்குநீ: - எனக்கு வேறு கதி இல்லை

தூஸ் கதிரே - நீயே கதி

ச்ரீமந் நாராயணா ஆவிரே - ச்ரீயுடன் கூடிய நாராயணா வரவேண்டும்!

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத்மீ
துக்கு பொந்திலேத் ரி:யேஸி - தூ
மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ
விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhukku-nu dhEy paapu-nu ju:kku karilEthmI
dhukku ponthilEth ri:yESi - thU
mok kopbaak krupa karaSthe
vikku paapu-navi mok kaylEth ri:yESi
(srIma-n nArAyaNA AvirE)

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத் மீ - துக்கங்களைத் தரும் பாபங்களை நிறைய செய்து கொண்டே நான்

துக்கு பொந்திலேத் ரி:யேஸி - துக்கங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன்

தூ மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ - நீ என்மேல் எப்போது உன் கருணையைக் காட்டப் போகிறாய்

விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி - விஷம் போன்ற இந்த பாவங்கள் என்னை தின்று கொண்டு இருக்கின்றன

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மியுடன் கூடிய நாராயணா நீ வரவேண்டும்!

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ
ராக்கல்லேத் மீ காய்கரு - பரந்
தாமா ஸஹஸ்ர நாமா க்ருப ஸியெத்
அவிதொர் பதாலு தெரு
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

rAmA krushNA -hari gOvinthA thUyiSo
rAkkallEth mI kaaykaru - paranth
dhaamaa Sa-haSra nAmA krupa Siyeth
avithor pathaalu deru
(srIma-n nArAyaNA AvirE)

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ ராக்கல்லேத் மீ காய்கரு - ராமா! கிருஷ்ணா! ஹரி! கோவிந்தா! நீ இப்படி நான் செய்த பாவங்களைப் பார்த்து என் மேல் கோபம் கொண்டால் நான் என்ன செய்வேன்

பரந்தாமா -மிக உயர்ந்த, எங்கு சென்ற பிறகு மீண்டும் பிறப்பு இறப்பு இல்லையோ, அந்த மிக உயர்ந்த இடத்தை உடையவனே

ஸஹஸ்ர நாமா - ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவனே

க்ருப ஸியெத் அவிதொர் பதாலு தெரு - உன் கருணை இருந்தால் தானே நான் உன் கால்களை வந்து பிடிக்கமுடியும். உன் கருணை வேண்டும்.

ச்ரீமந் நாராயணா ஆவிரே - செல்வத்திற்கு அதிபதியான ச்ரீயுடன் சேர்ந்து நாராயணா நீ வர வேண்டும்.

தெரன் முஸொனி மொந் தமரேஸ் மீ காய்கரு
தேவு ஸங்கேஸ்யே தொகொ - ஏ
மொரநுஜ்வாவுநுக் பீஜொ:ய் ரி:யெ மொந்நு
மோஸ்கரொரேஸ் மொகோ
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

deran muSoni mo-n dhamarES mI kaaykaru
dhEvu SangkESyE thoko - E
mora-nujvaavu-nuk bIjo:y ri:ye mo-n-nu
mOSkarorES mogO
(srIma-n nArAyaNA AvirE)

தெரன் முஸொனி மொந் - பிடிக்க முடியவில்லை இந்த மனத்தை

தமரேஸ் - அது ஓடிக்கொண்டே இருக்கிறது

மீ காய்கரு - நான் என்ன செய்வது?

தேவு ஸங்கேஸ்யே தொகொ - தெய்வமே உன்னிடம் தான் நான் சொல்லமுடியும்; அதனால் சொல்கிறேன்

ஏ மொரந் உஜ்வாவுநுக் பீஜ் ஹொ:ய் ரி:யெ மொந்நு - இந்த பிறப்பு இறப்பு என்ற சுழற்சிக்கு காரணமாய் (விதையாய்) இருக்கும் மனம்

மோஸ்கரொரேஸ் மொகோ - எனக்கு மோசம் செய்கிறதே!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வரவேண்டும்!

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே
மொந்நு ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - தொகொ
தாஸ் ஹொயாஸ்தெங்கொ தாஸொ:ய்கிநு மீயேட்
தந்யுடு ஹோஸ்திஸொ காரி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

mOSkarorES mogo keNtubanthili yE
mo-n-nu -hibbi raa:SthiSo kaari - thogo
dhaaS -hoyaaSthengko dhaaSo:yki-nu mIyEt
dha-nyudu -hOSthiSo kaari
(srIma-n nArAyaNA AvirE)

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே மொந்நு - கங்கணம் கட்டிக் கொண்டு இந்த மனம் எனக்கு மோசம் செய்கிறது

ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - அது நிற்கும் படி செய்வாய்

தொகொ தாஸ் ஹொயாஸ்தெங்கொ - உனக்கு அடியார்கள் ஆனவர்களுக்கு

தாஸொ:ய்கிநு - அடியவன் ஆகி

மீயேட் தந்யுடு ஹோஸ்திஸொ காரி - நான் இங்கு நல்லவன் ஆகும்படி செய்வாய்

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வருவாய்!

தாஸரதே ச்ரீ தாமோதரா அச்யுதா
தாக் ஜாஸ்திஸொ ஸாரே - யமொ
தாக் ஜாஸ்திஸொ ஸாரே ச்ரீ
கேஸவ நாராயணா நடனகோபாலா
க்ருப ஸாரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhaaSaradhE srI dhaamOdharaa asyuthaa
dhaak jaaSthiSo SaarE - yamo
dhaak jaaSthiSo SaarE srI
kESava nArAyaNA natanagOpaalaa
krupa SaarE
(srIma-n naaraayaNaa AvirE)

தாஸரதே - தசரதனின் மகனான ராமா

ச்ரீ தாமோதரா - யசோதை உன்னை உரலுடன் கட்டிப் போட்ட கயிற்றின் தடத்தை வயிற்றில் உடையவா; அடியவர்களுக்கு எளியவனே

அச்யுதா - அடியவர்களை எந்த நேரத்திலும் கைவிடாதவனே

தாக் ஜாஸ்திஸொ ஸாரே - என் பயம் போகும்படி என் மேல் கருணை செய்

யமொதாக் ஜாஸ்திஸொ ஸாரே - எம பயம் போகும்படி என் மேல் கருணை செய்

ச்ரீ கேஸவ - அழகான சுருண்ட முடிகளை உடையவனே; 'க' எனும் ப்ரம்மாவுக்கும், 'ஈச' என்னும் ருத்ரனுக்கும் முதலானவனே

நாராயணா - உலகனைத்துக்கும் உறைவிடமானவனே; உலகனைத்தையும் உறைவிடமாய்க் கொண்டவனே

நடனகோபாலா - நடனமாடிக்கொண்டே பசுக்களை மேய்ப்பவனே; உலகையும் உயிர்களையும் காப்பதை விளையாட்டாய் செய்பவனே

க்ருப ஸாரே - கருணை புரிவாய்!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயனா நீ வருவாய்!