Friday, May 04, 2007

மோஹனரெங்கா ஹரி மோஹனரெங்கா ...


மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக

மாஞ்சி ராகு
ஆதி3 தாளு


கண்ணினு

மோஹனரெங்கா3 ஹரி மோஹனரெங்கா3 மொக
மோக்ஷு தெ3வேன் மொந்நு தே2வி மோஹனரெங்கா3 [மோ]

கஸ்தூரி ரெங்கா3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 மொர
கர்முனு கடிஹேடி3 ஹரி கஸ்தூரி ரெங்கா3 [மோ]

காவேரி ரெங்கா3 ஹரி காவேரி ரெங்கா3 தீ3
பாஞ்சவ்தார் க2டெ3 உப4ய காவேரி ரெங்கா3 [மோ]

க்ருப ஸா ரெங்கா3 ஹரி க்ருப ஸா ரெங்கா3
தொர பதா3ல்விந து3ஸர்நீ: க்ருப ஸா ரெங்கா3 [மோ]

நமம் தே3 ரெங்கா3 ஹரி நமம் தே3 ரெங்கா3 ஸ்ரீ
நடனகோ3பால ஹரி நமம் தே3 ரெங்கா [மோ]


அழகரின் மோகினி அவதாரத்தை கண்டாவுடன் இப்பாடல் தானாக என் மனதில் குடி கொண்டது அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பாடலின் விளக்கம் அடுத்து வரும் நாட்களில்...

Monday, April 16, 2007

ஹரி இருக்க என்ன பயம்?

நண்பர் சிவமுருகன் நாயகி சுவாமிகளின் அருமையான பாடல் ஒன்றை எடுத்து இட்டுள்ளார். அந்தப் பாடல் மிக ஆழமான பொருள் செறிவு உள்ள பாடல். பலமுறை முதல் நான்கு ஐந்து வரிகள் பாடும் போதே அதன் பொருட் செறிவில் ஆழ்ந்து மயங்கிவிடுவதுண்டு நான்.

நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கிறான் என்று சொல்லும் போது யார் எந்தப் பக்கம் சென்றாலென்ன யார் எப்படி ஆனாலென்ன என்று தொடங்குவார். இது மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்வது போல் முதலில் தோன்றும். ஆனால் அவர் சொல்வது வேறு. மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மைக் காப்பவர்கள் என்று சில பேரை நாம் நினைக்கிறோமே - வைத்த நிதி (வங்கிக் கணக்கு), கணவன்/மனைவி, மக்கள், குலம், கல்வி என்று; அவர்கள் நம்மைக் காக்க வேண்டிய அவசியம் இல்லை; அவர்கள் நம்மைக் காக்காமல் எப்படிச் சென்றாலும் பரவாயில்லை கோவிந்தம் நம்மைக் காக்க காத்திருக்கும் போது - இந்தக் கருத்தைத் தான் முதல் மூன்று வரிகளில் சொல்கிறார்.

கோன் கொங்குட் ஜியெத் காய் - யார் எந்தப் பக்கம் சென்றால் என்ன?
கோன் கிஸொ ஹொயத் காய் - யார் என்ன ஆனால் என்ன?
அம்கோ ஸான் ஹரி ர:த தாக் காய் - நமக்கு நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கும் போது என்ன பயம்?

அடுத்த வரிகளில் இருந்து முன்னர் சொன்னதை விரித்துச் சொல்லத் தொடங்குகிறார்.

முல்லோ பான் லிக்கெ தாநுக் ரா:ய் ரா:ய் - முன்னர் தலையில் எழுதிய எழுத்துப்படி எல்லாம் இருக்கும்
புள்ளோ கரெ போளுந் கா ஸொடி ஜாய் ஜாய் - முன்பு செய்த செயல்களுக்கு ஏற்ப விட்டுப் போவது போகும் போகும்
லேத் அநெ திந்நு ஸெரெத் ஸெரிர் பொடி ஜாய் ஜாய் - கொண்டு வந்த நாட்கள் முடிந்தால் உடல் விழுந்து போகும் போகும்
ர:தோஸி நமம் கான் தீ ஐகுலுவோ - இருக்கும் போதே நாமங்களைக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள்
ஹரி ஸாய் ஸாய் - ஹரி கருணைக் கண் பார்ப்பான்
பஜன யேட் கோந் கரெத் திந்நு ஹோய் ஹோய் - எந்த நாளில் பஜனை செய்கிறோமோ அந்த நாள் நன்னாள் ஆகும்
தேவ் அவி பதால் தேர் மெனி தேய் தேய் - தேவன் வந்து தாள்களை இந்தா என்று கொடுப்பான் கொடுப்பான்
தெக்டா மொந்நு பனி கர்லி - கல் மனத்தை நீர் ஆக்கி (பக்தியால் கரைய வைத்து)
சொக்கட் குண்ணு ஸெந்தோ - நல்ல குணங்களுடன்
ஹரி தியான் திந்நு கோ ஜவல்நாஸ்தக் கரொ - நாட்களை வீணாகப் போக்காமல் ஹரி தியானம் செய்யுங்கள்
புரோ ஜன்மு - பிறப்பெடுப்பது அயர்சியைத் தருவது.

ஒவ்வொரு வரியாக ஆழ்ந்து நோக்கி வந்தால் எத்தனை எத்தனை ஆழ்பொருள் கிடைக்கின்றன என்று பார்க்க முடியும்.

Tuesday, April 10, 2007

எது எப்படி இருந்தாலென்ன?

இன்றாவது ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஒரு பாடலை பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவருடைய பல பாடல்கள் எளிய கருத்துக்களுடன், மிக மிக உயரிய சிந்தனைகளை கொண்டுதுமாக இருக்கும். அப்பேற்பட்ட சிந்தனைகளை தூண்டும் ஒரு பாடல் இப்பதிவில்.


கோன் கொங்கு3ட் ஜியெத்காய்
கோன்கிஸொ ஹொயெத்காய் அம்கொ
ஸான்ஹரிர:த தா4க்காய் முல்லோ
பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய்
4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய்
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய்
தெ3க்டா மொந்நு பநிகர்லி சொக்கட்
கு3ண்ணு ஸெந்தோ ஹரித்4யாந் தி3ந்நு கோ3
ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு [கோ]


கோன் கொங்கு3ட் ஜியெத்காய் - யாரெவ்விதம் போனாலென்ன?
கோன்கிஸொ ஹொயெத்காய் - யாரெப்படி ஆனாலென்ன? நல்லவர்களோ ! கெட்டவர்களோ ! உங்களை சுற்றி இருந்தாலென்ன?
அம்கொ ஸான்ஹரிர:த தா4க்காய் - நம்மை காண (காக்க) ஹரிஇருக்க பயமேன்
முல்லோ பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய் - முன்பே எழுதப்பட்ட விதிப்படி தான் இருக்கும்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய் - முன் செய்த வினைகள் உங்களை விட்டு விலகும்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத் - கொண்டு வந்த நாட்கள் கரைந்தால்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய் - உடல் உருண்டோடிடும்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய் - (இவுடல்) இருக்கும் போதே இரு காது கொடுத்து கேளுங்கள்
4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய் - பகவானை யார் துதித்தாலும் அந்த நாளே
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய் - அவன் வந்து தேவர்களும் முனிவர்களும் பெற துடித்த தன் மலர்தாளை தருவான்.
தெ3க்டா மொந்நு பநிகர்லி - கல்லான உங்கள் மனதை (அவன் நினைவென்னும்) நீரூற்றீ மெருகேற்றி
சொக்கட் கு3ண்ணு ஸெந்தோ ஹரி த்4யாந் - நல்ல குணங்களை பற்றி,ஹரியை தியானித்து
தி3ந்நு கோ3 ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு - (கடந்து விட்ட நாட்களை நினைக்காமல்)இருக்கும் நாட்களை கடத்தாமல், ஹரியின் தியானம் செய்து, மறுபிறப்பை தவிர்ப்பீர்.

Tuesday, January 02, 2007

கண்ணன் எப்போது வருவானடி??



இன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். மாதங்களின் நான் மார்கழி என்றான் கண்ணன் கீதையில். ஒவ்வொரு மாதத்திலும் மதிநிறைந்த நன்னாள் (பௌர்ணமி) எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதைக் கொண்டு தான் மாதங்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். மார்கழியில் மதி நிறைந்த நன்னாள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் வருகிறது. அதனால் வடமொழியில் மார்கழிக்கு மார்க்கஸீருஷம் என்று பெயர். கண்ணனும் கீதையில் 'மாஸானாம் மார்க்கஸீர்சோஹம்' என்கிறான்.

இந்த நன்னாளில் தான் மதுரையின் ஜோதி எனப் போற்றப்படும் ஆண்டாளின் அவதாரம் நவ யுக ஆழ்வார் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதரித்தார். இந்த நன்னாளில் சுவாமியின் பாடல் ஒன்றை பதிக்க வேண்டும் என்று சிவமுருகன் விரும்பி மின்னஞ்சல் அனுப்பினார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே பாடலைப் பதிக்கிறேன்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்

கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)




நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

Thursday, October 19, 2006

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்

ராதா4 தொகனவெ நாயகி ஸ்வாமின்
எழுத்தாளர்: T.S. சரோஜா சுந்தர்ராஜன், கோவை
தூ மது2ராபுரிமு ரி:யெஸ்கி பா3
கோ3குலும் மொய்ரெ ஒயஸு ஜியெஸ்கி பா3
தூ மது3ராக் ஜெயெ பா4டாம் ஜூலோ ப4ந்தி3
அம்ரெ ஸ்ருங்கா3ர் கே2ளும் ஸௌரஸேனிம் க3வ்லி
ப்ரக்ருதிம் பஸுபக்ஷிம் அகாஸ் நெத்3தி3ம்
கீஷ்டு தொய்ரெ அங்க3லெக்ஷண் ஸீலி ஸீலி
வராம் பொ4ரி ரி:யெதொய்ரெ பொ3ங்க்3ஸூ ஜகில்லி
விரக்3டாப் ஸஹன்கெர்லி ஜுலிஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3
தூமது2ரா புரிமு ரி:யஸ்கி பா3

'ராதா4' நமம் க4லிகின் ஹவ்ட்4யாகி பா3
ப்ரேம் தா3ராகன் தொய்ரெஹோர் கெ3ளீஸ்கி பா3
ஞாந்தே3ன் தொய்ர் ப்ரேவுக் ஜல்னாஸ்தகு
ஞானினும் மேட் ஞானி 'மீஸ் மெனி' மெல்லீஸ்கிபா3
பரமாத்மா தொரெ ஸெரொ ஐக்யம் ஹொனிக்
ஜீவாத்மாமீ க2டெ ஜெலுமுன் ஸங்குஸ்கி பா3

ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்
ராதா4 க்ருஷ்ணாக் ஜெய் ஜெய்

ஸௌரஸேனி கவிபுருஷ் ஸூர்தா3ஸ் ஹொய்லி
ஸஸர்லாக்2 கவிடான் ராதா4 க்ருஷ்ண ஸ்ருங்கா3ர் லீலான்
3விக3விகின் ஸொம்பு ஹொயெஸ் அந்தர் த்3ருஷ்டிமூ
த்3ருஷ்டுகீன் ஸுர்தாஸுக் லாஜ்நீ: மெந்யாஸி
ஸௌரஸேனி பா4ஷாக் இன்பு பொங்க்3ஸூர் கெர்த்யேஸி
கோ3வர்தன் கிரி த4வ்ராம் அஷ்டசாபுன் ஸெரொ
3விநசிது4ங்கி வைப4வ் ஜிவ்னம் ஜிவேஸி

ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்
ஜெய் கோ3வர்தன்கி3ரி ஸ்ரிநாதுக் ஜெய்

ஸௌரஸேனி சிகுர் பா3ஷா மராட்டி பெ3ய்கன்
மீரா நமம் க4ல்லி க்ருஷ்ணபத்னி மெல்லிஸ்
தொரெ ப4ஜன் க4வ்லேத் வராபோக் ஜியெ ஜீவ்
தமிழ் பா4ஷா ஆண்டா4ள் கொய்லி பாஸுரம் க3விஸி
பு2லெ பூ2லூனும் தொரெஸ்மிதமுக ஸிங்கா3ர் ஸீலி
பூ2லுமாலெ கெ3ளாம் கல்லி தொக34ல்திஸி
ராதா4ஸொகன் கோ3பிகானுக் செர்ச்சிலிஸ்கிபா

மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ
மார்க3சீர்ஷொ ம:டொ3 போர் புந்நிம் திந்நுமெநொ

ஸௌரஸேனி சிகுர்பா4ஷொ ஸௌராஷ்ட்ர கவிகன்
நடன கோ3பால் தொரெ நாயகி3 ஹொய்யேஸ்
ராதா4ஜெலும் ரீ:லி கெரெ மொய்ர்ப4க்தி ஸ்ங்கி3ல்லி
தொர் ந்யாவ் மொர்ந்யாவ் ரஜமன்னார்ஜோள் ஸங்கி3தேஸ்
ராதா4ஜெலும்மு ரி:யெ ஹங்க்ருதி ஜெயெஹால்
ராஜமன்னார் தொக கெ4டி3பொ3வி மொய்ர்ஸெரொ செர்சிதேஸ்
த்4யானும்பிஸி 'ஹரி அவ்டி3யோ' மெல்லெத்கன்
ப்ராண்ஸொட3ன் வேள் கெ3ருட்3 வாஹனோ:ர் பொ3ல்ஜியேஸ்

ஸன்மார்கு3ம் பா4ஷாப4க்திர் ப4ஜன் கெரேதி
வடபத்ர ஸாயி ஜொவள் வடஸே வடஸே

Wednesday, October 18, 2006

ஸ்ரீ இராமனை ...

ஒரு சொல்லை ஓரிரு முறை சொன்னால் அது மறந்து விடுகிறது. ஆனால், அதுவே பல முறை நூறு முறை சொல்லப்படும் போது, அதுவே குணமாக மாறிவிடுகிறது. மாறியகுணம் உங்கள் வாழ்வை மாற்றுகிறது. மாறிய வாழ்வு, உங்கள் சுற்று புறத்தை மாற்றுகிறது. எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் நம்மிடம் தான் ஆகவே தான் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தங்களது மாணவ வம்சாவழிக்கு தரும் ஒரு பெரிய நீதியாக இந்நாமாவளி சொல்லப்படுகிறது.

ஸ்ரீ இராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே


உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான இராமனே வரவேண்டும் ஆகவே அவனை துதிசெய்.
உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான வாமனனே வரவேண்டும் அவனை கதி என்று இரு.
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த இராமனது அறம் (குணம்) தான் எமனையும் காமனையும் வெற்றி கொள்ளும் அறம் ஆகவே அவனை சொல் (வணங்கு), அவனது புகழ் பாடுவாய்.

Monday, August 21, 2006

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை...

கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை கண்டால் அடுத்த வினாடியே அவன் வைகுண்ட வாசம் பெருகிறான், அப்பேற்பட்ட பேற்றை பெற என்ன வழி என கேட்ப்பவர்களுக்கு சுவாமிகள் தரும் ஒரு அறிவுரையாக, இப்பாடலை பாடியுள்ளார்.

இப்பாடல் தமது சங்கீத குரலில் திரு. ராமரத்தினம் அவர்கள் பாடியுள்ளார்.



இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி
பொ3வொ
ஆரபி4 ராகு
ஆதி3 தாளு
பல்லவி
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)


அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)


சரணு
மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)


இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)

நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே

அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்


சரணு

மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்

அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்

வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான்

பல்லவி
நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே. (நித்தம்)

அநுபல்லவி

ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்(நித்தம்)

சரணு

கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்(நித்தம்)

நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்(நித்தம்)

வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான் (நித்தம்).