இன்றாவது ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் ஒரு பாடலை பதிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவருடைய பல பாடல்கள் எளிய கருத்துக்களுடன், மிக மிக உயரிய சிந்தனைகளை கொண்டுதுமாக இருக்கும். அப்பேற்பட்ட சிந்தனைகளை தூண்டும் ஒரு பாடல் இப்பதிவில்.
கோன் கொங்கு3ட் ஜியெத்காய்
கோன்கிஸொ ஹொயெத்காய் அம்கொ
ஸான்ஹரிர:த தா4க்காய் முல்லோ
பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய்
ப4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய்
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய்
தெ3க்டா மொந்நு பநிகர்லி சொக்கட்
கு3ண்ணு ஸெந்தோ ஹரித்4யாந் தி3ந்நு கோ3
ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு [கோ]
கோன் கொங்கு3ட் ஜியெத்காய் - யாரெவ்விதம் போனாலென்ன?
கோன்கிஸொ ஹொயெத்காய் - யாரெப்படி ஆனாலென்ன? நல்லவர்களோ ! கெட்டவர்களோ ! உங்களை சுற்றி இருந்தாலென்ன?
அம்கொ ஸான்ஹரிர:த தா4க்காய் - நம்மை காண (காக்க) ஹரிஇருக்க பயமேன்
முல்லோ பான்லிக்கெ தா4நுக் ரா:ய் ரா:ய் - முன்பே எழுதப்பட்ட விதிப்படி தான் இருக்கும்
பு2ள்ளொகரெ போ2ளுந்கா ஸொடி3 ஜாய் ஜாய் - முன் செய்த வினைகள் உங்களை விட்டு விலகும்
லேத் அநெ தி3ந்நு ஸெரேத் - கொண்டு வந்த நாட்கள் கரைந்தால்
ஸெரிர் பொடி3 ஜாய் ஜாய் - உடல் உருண்டோடிடும்
ர:தொஸி நமம் காந்தீ3 ஐகுலுவொ ஹரி ஸாய் ஸாய் - (இவுடல்) இருக்கும் போதே இரு காது கொடுத்து கேளுங்கள்
ப4ஜநயேட் கோந்கரெதிந்நு ஹோய் ஹோய் - பகவானை யார் துதித்தாலும் அந்த நாளே
தே3வவி பதா3ல் தே4ர் மெநி தே3ய் தே3ய் - அவன் வந்து தேவர்களும் முனிவர்களும் பெற துடித்த தன் மலர்தாளை தருவான்.
தெ3க்டா மொந்நு பநிகர்லி - கல்லான உங்கள் மனதை (அவன் நினைவென்னும்) நீரூற்றீ மெருகேற்றி
சொக்கட் கு3ண்ணு ஸெந்தோ ஹரி த்4யாந் - நல்ல குணங்களை பற்றி,ஹரியை தியானித்து
தி3ந்நு கோ3 ஜவள்நாஸ்தக் கரோ பு2ரோ ஜெந்மு - (கடந்து விட்ட நாட்களை நினைக்காமல்)இருக்கும் நாட்களை கடத்தாமல், ஹரியின் தியானம் செய்து, மறுபிறப்பை தவிர்ப்பீர்.
Tuesday, April 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சிவமுருகன். பலமுறை நான் பாடி மகிழும் பாடல் இது. குறைந்தது முதல் அடிகளில் சிலவற்றையாவது பாடிக் கொண்டிருப்பேன். எத்தனை சுவையான ஆழமான கருத்துகள்.
Post a Comment