Friday, November 11, 2005

51: நீயே கதி!!!!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - துஸர்
திக்குநீ: தூஸ் கதிரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

srIma-n nArAyaNA AvirE - dhuSar
dhikku-nI: thUS gathirE
(srIma-n nArAyaNA AvirE)

ச்ரீமந் நாராயணா ஆவிரே - 'அகலகில்லேன் இறையும் என்று' எங்கும் எப்போதும் என்றும் உன்னைப் பிரியாமல் இருக்கும் அன்னை லக்ஷ்மியுடன் எம் தந்தையான நாராயணா நீ வரவேண்டும்

துஸர் திக்குநீ: - எனக்கு வேறு கதி இல்லை

தூஸ் கதிரே - நீயே கதி

ச்ரீமந் நாராயணா ஆவிரே - ச்ரீயுடன் கூடிய நாராயணா வரவேண்டும்!

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத்மீ
துக்கு பொந்திலேத் ரி:யேஸி - தூ
மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ
விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhukku-nu dhEy paapu-nu ju:kku karilEthmI
dhukku ponthilEth ri:yESi - thU
mok kopbaak krupa karaSthe
vikku paapu-navi mok kaylEth ri:yESi
(srIma-n nArAyaNA AvirE)

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத் மீ - துக்கங்களைத் தரும் பாபங்களை நிறைய செய்து கொண்டே நான்

துக்கு பொந்திலேத் ரி:யேஸி - துக்கங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன்

தூ மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ - நீ என்மேல் எப்போது உன் கருணையைக் காட்டப் போகிறாய்

விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி - விஷம் போன்ற இந்த பாவங்கள் என்னை தின்று கொண்டு இருக்கின்றன

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மியுடன் கூடிய நாராயணா நீ வரவேண்டும்!

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ
ராக்கல்லேத் மீ காய்கரு - பரந்
தாமா ஸஹஸ்ர நாமா க்ருப ஸியெத்
அவிதொர் பதாலு தெரு
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

rAmA krushNA -hari gOvinthA thUyiSo
rAkkallEth mI kaaykaru - paranth
dhaamaa Sa-haSra nAmA krupa Siyeth
avithor pathaalu deru
(srIma-n nArAyaNA AvirE)

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ ராக்கல்லேத் மீ காய்கரு - ராமா! கிருஷ்ணா! ஹரி! கோவிந்தா! நீ இப்படி நான் செய்த பாவங்களைப் பார்த்து என் மேல் கோபம் கொண்டால் நான் என்ன செய்வேன்

பரந்தாமா -மிக உயர்ந்த, எங்கு சென்ற பிறகு மீண்டும் பிறப்பு இறப்பு இல்லையோ, அந்த மிக உயர்ந்த இடத்தை உடையவனே

ஸஹஸ்ர நாமா - ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவனே

க்ருப ஸியெத் அவிதொர் பதாலு தெரு - உன் கருணை இருந்தால் தானே நான் உன் கால்களை வந்து பிடிக்கமுடியும். உன் கருணை வேண்டும்.

ச்ரீமந் நாராயணா ஆவிரே - செல்வத்திற்கு அதிபதியான ச்ரீயுடன் சேர்ந்து நாராயணா நீ வர வேண்டும்.

தெரன் முஸொனி மொந் தமரேஸ் மீ காய்கரு
தேவு ஸங்கேஸ்யே தொகொ - ஏ
மொரநுஜ்வாவுநுக் பீஜொ:ய் ரி:யெ மொந்நு
மோஸ்கரொரேஸ் மொகோ
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

deran muSoni mo-n dhamarES mI kaaykaru
dhEvu SangkESyE thoko - E
mora-nujvaavu-nuk bIjo:y ri:ye mo-n-nu
mOSkarorES mogO
(srIma-n nArAyaNA AvirE)

தெரன் முஸொனி மொந் - பிடிக்க முடியவில்லை இந்த மனத்தை

தமரேஸ் - அது ஓடிக்கொண்டே இருக்கிறது

மீ காய்கரு - நான் என்ன செய்வது?

தேவு ஸங்கேஸ்யே தொகொ - தெய்வமே உன்னிடம் தான் நான் சொல்லமுடியும்; அதனால் சொல்கிறேன்

ஏ மொரந் உஜ்வாவுநுக் பீஜ் ஹொ:ய் ரி:யெ மொந்நு - இந்த பிறப்பு இறப்பு என்ற சுழற்சிக்கு காரணமாய் (விதையாய்) இருக்கும் மனம்

மோஸ்கரொரேஸ் மொகோ - எனக்கு மோசம் செய்கிறதே!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வரவேண்டும்!

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே
மொந்நு ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - தொகொ
தாஸ் ஹொயாஸ்தெங்கொ தாஸொ:ய்கிநு மீயேட்
தந்யுடு ஹோஸ்திஸொ காரி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

mOSkarorES mogo keNtubanthili yE
mo-n-nu -hibbi raa:SthiSo kaari - thogo
dhaaS -hoyaaSthengko dhaaSo:yki-nu mIyEt
dha-nyudu -hOSthiSo kaari
(srIma-n nArAyaNA AvirE)

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே மொந்நு - கங்கணம் கட்டிக் கொண்டு இந்த மனம் எனக்கு மோசம் செய்கிறது

ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - அது நிற்கும் படி செய்வாய்

தொகொ தாஸ் ஹொயாஸ்தெங்கொ - உனக்கு அடியார்கள் ஆனவர்களுக்கு

தாஸொ:ய்கிநு - அடியவன் ஆகி

மீயேட் தந்யுடு ஹோஸ்திஸொ காரி - நான் இங்கு நல்லவன் ஆகும்படி செய்வாய்

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வருவாய்!

தாஸரதே ச்ரீ தாமோதரா அச்யுதா
தாக் ஜாஸ்திஸொ ஸாரே - யமொ
தாக் ஜாஸ்திஸொ ஸாரே ச்ரீ
கேஸவ நாராயணா நடனகோபாலா
க்ருப ஸாரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhaaSaradhE srI dhaamOdharaa asyuthaa
dhaak jaaSthiSo SaarE - yamo
dhaak jaaSthiSo SaarE srI
kESava nArAyaNA natanagOpaalaa
krupa SaarE
(srIma-n naaraayaNaa AvirE)

தாஸரதே - தசரதனின் மகனான ராமா

ச்ரீ தாமோதரா - யசோதை உன்னை உரலுடன் கட்டிப் போட்ட கயிற்றின் தடத்தை வயிற்றில் உடையவா; அடியவர்களுக்கு எளியவனே

அச்யுதா - அடியவர்களை எந்த நேரத்திலும் கைவிடாதவனே

தாக் ஜாஸ்திஸொ ஸாரே - என் பயம் போகும்படி என் மேல் கருணை செய்

யமொதாக் ஜாஸ்திஸொ ஸாரே - எம பயம் போகும்படி என் மேல் கருணை செய்

ச்ரீ கேஸவ - அழகான சுருண்ட முடிகளை உடையவனே; 'க' எனும் ப்ரம்மாவுக்கும், 'ஈச' என்னும் ருத்ரனுக்கும் முதலானவனே

நாராயணா - உலகனைத்துக்கும் உறைவிடமானவனே; உலகனைத்தையும் உறைவிடமாய்க் கொண்டவனே

நடனகோபாலா - நடனமாடிக்கொண்டே பசுக்களை மேய்ப்பவனே; உலகையும் உயிர்களையும் காப்பதை விளையாட்டாய் செய்பவனே

க்ருப ஸாரே - கருணை புரிவாய்!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயனா நீ வருவாய்!

20 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
தி. ரா. ச.(T.R.C.) said...

Kumaran avarkale migavum nalla karuthu ulla padalgalay engirunthu pidikirerkal. onthayavu irunthal than un kalai pidikkamudium unmaiyana varthigal.un arulale un thal vanaghi shati kavasamum ithiye solkirathu.dinamum 12 mani velaikku peraghu vettukku vanthal ungal valai pathivu nalla man amaitheyai thrugirathu.nandri INSOLAN kumarn

தி. ரா. ச.(T.R.C.) said...

Kumaran 51 pathivugal sathanaikku parattugal ungalathu ella pthivugalm rasikkumpadiyaga irukirathu madurai Gopu I'yengar kadai vellai appam pole TRC

குமரன் (Kumaran) said...

TRC...உங்கள் முழுப் பெயர் என்ன?

இந்த 'மதுரையின் ஜோதி' வலைப்பக்கத்தில் உள்ள பதிவுகள் எல்லாம் மதுரையில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ச்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் சௌராஷ்ட்ர மொழியில் எழுதிய பாடல்களை பற்றியதே. அவர் தமிழிலும் பாடல்கள் எழுதியுள்ளார். இனிவரும் பதிவுகளில் தமிழ் பாடல்களையும் பார்க்கலாம்.

நான் மதுரை கோபு அய்யங்கார் கடை வெள்ளை அப்பத்தைச் சுவைத்து இல்லை. ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அது நன்றாய் இருக்கும் போல் தெரிகிறது. அடுத்த முறை மதுரை செல்லும் போது நினைவில் வைத்திருந்து சுவைக்கவேண்டும்.

தொடர்ந்து வலைப்பதிவுகளைப் படித்து உங்கள் கருத்தினைக் கூறுங்கள். நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) said...

Thirukumaran avarkale, 'thiru' enpatu adai mozhi alla. nalla vizhayangalai ellorukkum oothvam vannam ehuthum thagalai petrra thagal annaikku seiyum vanakangal.nirka Iwill give my full name T.R.Chandrasekaran e'mail trc108uma@yahoo.com.neram kidaithal en maganin valapathivai kanungal.www.cerebralshangrila.blogspot.com nandri meendum varuvenTRC

குமரன் (Kumaran) said...

நன்றி திரு. சந்திரசேகரன் அவர்களே. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். தங்கள் மகனின் வலைப்பதிவைப் பார்த்தேன். விரைவில் முழுவதும் படிக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

Prompt reply isthe best qulification u possess. keep it up if possible see my reply to u r email Neeyum nanum yaragiyaro. yenthayum oonthayum emorai keleer.sembulapayaneer pol anpodai nenjangal serthathuvo. idu kathalan kathalikku mattum alla iru nanbarkalukkum porunthm nandri kumarn avargale.thanks TRC

குமரன் (Kumaran) said...

உண்மைதான் திரு.TRC இந்தப் பாடலை நட்புக்கும் சொல்லலாம்.

Anonymous said...

Thank you so much for this song. This is my family's song. We used to play this song atleast twice a day at our home.

Hemapriya Thoppen

குமரன் (Kumaran) said...

Thanks Hemapriya for visiting and leaving your comment. Yes. This song is very popular among sourashtrians. Whenever my friends ask me to sing a Sourashtra song, I sing this song only.

Please read other postings in my blogs also and leave your comments. Please visit frequently. New postings will be written every week.

Anonymous said...

Sure Kumaran sir,

Its every sourashtrian's first and foremost responsibility to be familiar with all these songs and their meanings...In that way, im bound to visit your site often. Ive added this site to my favorites...

i've some other sourashtra songs which is on varied subjects... will try to ship them to you... i actually wanted to transliterate and publish in a blog..but im unable to... i guess you'll be the right person to do that...

i got to see ur reply for my first comment: I'm yet to show your site to my father... He is not very conversant with the net... So, i'll show him when i get a opportunity.. but i've told a lot abt ur site...

a thousand thanks and wishes,
Hemapriya Thoppen.

குமரன் (Kumaran) said...

Thanks Hemapriya. You can look into my profile to get my email address; please send the sourashtra songs. Also please let me know the comments of your father whenever you get a chance to show him this site.

Anonymous said...

Kumaran,
Ithai 'negative criticism' endru thayavu seithu ninaikka vendam, I just wanted some clarification on the songs of our Mahans. I've read a few songs by Mahans including this one, all of them emphasize on either their sufferings, or, praising the Lord. So, my question is why did they think that they were papis (sinners) and they want relief from their sufferings. Were they not optimistic about their life?

Thanks,
KT

குமரன் (Kumaran) said...

அன்பு KT.

மிக நல்ல கேள்வி. இதை எப்படி நெகடிவ் க்ரிட்டிசிசம் என்று எடுத்துக்கொள்வது. மிக நல்ல கேள்வி அல்லவா கேட்டுருக்கிறீர்கள். உங்கள் கேள்வியைப் படித்ததும் எனக்கு ஒரு பதிலும் தோன்றவில்லை. இறையைச் சிந்தித்து அமர்ந்த பின் தோன்றிய இந்தப் பதிலை இங்கே கொடுக்கிறேன். உங்களால் ஒத்துக்கொள்ள முடிகிறதா பாருங்கள்.

நீங்கள் சொல்வதைப் போல் நம் மகான்கள் எழுதிய பாடல்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் கஷ்டங்களைத் தான் பேசுகின்றன. பொல்லாவினையேன் என்று தங்களைப் பாவிகள் என்று தாழ்த்திக்கொள்வதைத் தான் பார்க்கிறோம். சில பாடல்களில் வாழ்க்கையின் அழகும் இயற்கையின் அழகும் பாடப்பட்டிருந்தாலும் அது சிறுபான்மையாகத் தான் இருக்கிறது (அது நிஜமாகவே சிறு பான்மையாக இருக்கிறதா இல்லை அப்படி நமக்குத் தோன்றுகிறதா என்பதை ஆராய்ந்துப் பார்த்துத் தான் தெளியவேண்டும்).

எனக்குத் தோன்றிய பதில்:

இது பகவான் இராமகிருஷ்ணர் சொல்வது: ஒருவன் தண்ணீரில் மூழ்கும் போது மூச்சுத் திணறி எப்படித் துடிப்பானோ அந்த மாதிரித் துடிப்பு ஒருவனுக்கு இறைவன் கருணையை அடைய வேண்டி வர வேண்டும். அப்படி வந்தால் தான் இறைவன் அருள் வரும் என்பார்.

இந்த மகான்கள் எல்லாம் அந்த நிலையை அடைந்தவர்கள் என்று எண்ணுகிறேன். அவர்களால் இறைவனை அடையாமல் இன்னும் ஒரு வினாடி கூட தாமதிக்க முடியாது என்ற நிலைமை. அதனால் இந்த உலகமும் தங்கள் வாழ்க்கையும் துன்பம் நிரம்பியதாய்த் தெரிகிறது. இறைவனை அடைய வேண்டுமென்றால் அதற்கு அவனுடைய அருள் வேண்டும். அது வராத காரணம் தங்கள் வினைப் பயனே என்றெண்ணுவதால் தங்களைப் பாவிகள் என்று பொல்லா வினையேன் என்றும் கூறிக்கொள்கிறார்கள்.

அவர்களும் நம்மைப் போல் (குறைந்தது என்னைப் போல்) இறைவன் அருள் வரும் போது பார்த்துக்கொள்ளலாம். அதுவரை இந்த உலக இன்பங்களை அனுபவிக்கலாம் என்ற எண்ணம் இருந்தால் எல்லாவற்றையும் Optimisticஆகப் பாடியிருப்பார்கள். இல்லையா?

Anonymous said...

Nalla vizhakkam Kumaran. But ethainayo per ezhaiyin sirippil iraivanai kandirukkirargal. Avargal iraivanai kandargal, athe nerathil matravargalukkum udavinargal. Thangalai thangale varuthi kondu, iraivan thangalai aatkolla varavillaiye endru enni pulambuvathai vittu vittu, avargalum pirarukku udavi seithu iravana adainthirukkalame?
These are just my opinions.

Thanks for all your excellent postings.

KT

குமரன் (Kumaran) said...

அன்பு KT உங்கள் முழுப்பெயர் என்ன?

//pulambuvathai vittu vittu, avargalum pirarukku udavi seithu //

ஒரு ஊருக்கு செல்ல பல வழிகள் உண்டு. இதில் இறைவனை விட்டு ஒரு கணமும் பிரிய முடியாமல் அந்த ஆற்றாமை தாளாமல் வாடி அதனைப் பாடி இறைவன் அருளை நாடி நிற்பது ஒரு வழி. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டு அவன் அருள் எப்போது வருகிறதோ அப்போது வரட்டும் அது வரை நாம் மற்றவர்க்கு உதவலாம் என்று இருப்பது ஒரு வழி. இரண்டுமே அதே ஊருக்குதான் அழைத்துப் போகிறது. எது உயர்வு எது தாழ்வு என்று கூறும் அளவிற்கு நான் இன்னும் வளர்ந்துவிடவில்லை. அதனால் உங்கள் கருத்துக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ எதுவும் எழுத முடியாத நிலைமை. :-)

Anonymous said...

Kumaran Avargale, en muzhuppeyar Karthik Thirukonda.

குமரன் (Kumaran) said...

Thiru. Karthik Thirukonda. You may like reading the articles at http://vaithikasri.blogspot.com/

Anonymous said...

I wish to add something on the 'pessimistic' way of looking at this world. It is simple and it is an universal truth. Nothing only nothing is permanent in this world. At some point of time everyone feels there is nothing in this world. The so-called optimism is like the colourful soap bubbles, that burst in seconds. It makes sense to desire for the original and try to be happy with the replicas. The original is god and the replicas are what the world has got to offer. It will never be a surprise if a simple soul longs for the divine blessings. The longer we stay on this mundane world the more sins we are likely to commit. This reminds me of our guru's song: punnu pappunu karleth kho thinnu khamti najannakan (don't waste your time by doing either sins or virtues). Who knows what we think is a virtue may not be a virtue. If you think that digging a well is a good thing, it could turn otherwise if the water turns out to be poisionous. Suppose some animals or human beings deliberately or unknowingly fall ino the well and die, then the sin will come to you. So it is always better to pray god than wasting our time on either papp or punnu. This is highest form of devotion. We simply mortals need not brood over it.
K P Subramanian
have a good day

குமரன் (Kumaran) said...

திரு. சுப்ரமணியன். நீங்கள் புண்ணியத்திற்கும் பாவத்திற்கும் இந்த உலகின் நிலையாமைக்கும் சொன்ன விளக்கங்கள் அருமை. மிக்க உண்மை. புண்ணிய பாவங்களைப் பற்றிக் கவலைக் கொள்ளாமல் இறைவனை வணங்கி நிற்பதே நாம் செய்ய உகந்தது. மிக்க நன்றி.