Monday, December 26, 2005

87 - மனமே! என்றும் எங்கும் அவனை நினை.

மனம் ஒரு குரங்கு என்று தான் சொல்கிறார்கள். அது மது அருந்திய குரங்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள். அது உண்மை. மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றிற்கு தாவும் வேகத்தையும் மலரை நினைத்த மறுவினாடி மலத்தை நினைப்பதையும் பார்த்தால் அது உண்மையென்று நன்கு விளங்கும்.

மனமே எல்லா பந்தங்களுக்கும் காரணம் என்றும் அதுவே பந்தங்கள் நீங்குவதற்கு துணைசெய்யும் கருவிகளில் சிறந்தது என்றும் பெரியோர் சொல்வர். எத்தனைத் தான் நல்ல விஷயங்களைப் படித்தாலும் மனதின் துணை இல்லையென்றால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. நல்ல விஷயங்களைப் படித்தும் கேட்டும் பார்த்தும் உணர்ந்தும் முடிந்தவுடனேயே மனம் தன் வழக்கப்படி கெட்ட விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது.
அதனால் தான் மனதிற்கு உரைப்பதாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள் அருளாளர்கள்.

ஹுடினிம் பிஸினிம் சல்னிம் ஹோங்கும்
நடன கோபால் த்யான் சொந்நகோ மொந்நு

ஹுடினிம் - எழும் போதும்

பிஸினிம் - அமரும் போதும்

சல்னிம் - நடக்கும் போதும்

ஹோங்கும் - தூங்கும் போதும்

நடனகோபால் த்யான் சொந்நகோ மொந்நு - நடனகோபாலனின் தியானத்தை விடாதே மனமே.

Saturday, December 03, 2005

70: உஞ்சவிருத்திப் பாட்டு

நாயகி சுவாமிகள் மதுரையில் வசிக்கும் போது உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்ந்து வந்தார். பக்தியும் நற்குணங்களும் கொண்ட இல்லறத்தார் வீடுகளுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைப் பெறுவது தான் உஞ்சவிருத்தி. அப்படி உஞ்சவிருத்திக்குச் செல்லும் போது இறைவன் நாமத்தைப் பாடிய படியும் நல்லவழிகளை போதித்தபடியும் செல்வது வழக்கம். மக்களுக்கு நல்வழி காண்பிப்பதற்கு இதை ஒரு நல்லவழியாகக் கொண்டிருந்தனர் மகான்கள். அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாடியது இந்த பாடல்.

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
பக்திஹோரு தந்தனி கல்னோ
முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ மூலா
முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ - இறைவனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

பக்திஹோரு தந்தனி கல்னோ - பக்தியோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்

முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ - முகுந்தனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.


மூலா முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ - மூலையில் வைத்துள்ள பானையில் இருக்கும் அரிசியை கொண்டுவந்து நீங்கள் அளிக்கவேண்டும்.

ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ
எம தாக் நீ: தந்தனி கல்னோ
காம க்ரோத குண்ணுன் ஜனோ
தமஸ்ஹோனா தந்தனி கல்னோ


ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ - இராமனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

எம தாக் நீ: தந்தனி கல்னோ - எமபயம் இனி இல்லை; நீங்கள் அரிசி கொண்டு வந்து அளிக்கவேண்டும்.

காம க்ரோத குண்ணுன் ஜனோ - காமம், குரோதம் முதலிய குணங்கள் போகவேண்டும்

தமஸ்ஹோனா தந்தனி கல்னோ - தாமதம் செய்யாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ
கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ
கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ
விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ


கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ - கோவிந்தனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ - கோவிந்தா என்று சொல்லியே நீங்களும் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ - கேஸவனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்.

விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ - நம்பிக்கையோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ
லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ
பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ
ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ


அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ - அச்சுதனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ - சலித்துக்கொள்ளாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ - அன்புடன் இறைவனைப் பாடவேண்டும்.

ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ - மகிழ்ச்சியுடன் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ
குரு கைங்கர்யமூஸ் ஹொனோ
புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ
மொரி உஜுநா தந்தனி கல்னோ


ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ - ஹரியின் நாமங்களையே எதிர்பார்க்கவேண்டும்.

குரு கைங்கர்யமூஸ் ஹொனோ - குருவின் சேவைகளே ஆகவேண்டும்.

புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ - புளியம்பழம் இந்த உடல்; இதை உணரவேண்டும்.

மொரி உஜுநா தந்தனி கல்னோ - இறப்பு பிறப்பு இவைகளில் இருந்து விடுபட நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ
நடனகோபாலுக் தந்தனி கல்னோ
ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ
கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ


வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ - நம் குருநாதரான வடபத்ரார்யரின் வழியை அறியவேண்டும்.

நடனகோபாலுக் தந்தனி கல்னோ - நடனகோபாலனுக்கு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ - இன்னும் என்ன செய்யலாம்; இன்னும் என்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து தருமங்களையே கொடுக்கவேண்டும்.

கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ - கரையேறுவதற்கு நீங்கள் வரவேண்டும்.

Tuesday, November 22, 2005

59: எல்லா கஷ்டமும் தீர வழி?

நாம் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம். அதன் பலனாய் இன்பமும் துன்பமும் அனுபவிக்கிறோம். எல்லையில்லா இன்பம் அனுபவிக்க ஏதாவது வழி இருக்கிறதா? இருக்கிறது என்கிறார் நாயகி சுவாமிகள்.

கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன்
கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ.

கைங்கர்ய கிங்கர்யம் காம் ஸாஜா மெனஸ்தெனஸ்கி - சேவையாவது கீவையாவது; உன் வேலையைப் பார் என்பவர்கள் எல்லாம்

கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன் - நல்வினைத் தீவினைப் பயன்கள் என்னும் கருமக் காட்டிலே மாட்டிக்கொண்டு கஷ்டம் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.

கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ - மக்களுக்குச் செய்யும் சேவையே அரிவாள்; கருமக் காட்டை வெட்டிக்கொண்டு போகும் இப்போதே.


மக்கள் தொண்டே மகேசன் தொண்டு - ஆதலினால் தொண்டு செய்வீர் உலகத்தீரே; அக்தன்றோ இவ்வுலகில் தலைமை இன்பம்.

Friday, November 11, 2005

51: நீயே கதி!!!!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - துஸர்
திக்குநீ: தூஸ் கதிரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

srIma-n nArAyaNA AvirE - dhuSar
dhikku-nI: thUS gathirE
(srIma-n nArAyaNA AvirE)

ச்ரீமந் நாராயணா ஆவிரே - 'அகலகில்லேன் இறையும் என்று' எங்கும் எப்போதும் என்றும் உன்னைப் பிரியாமல் இருக்கும் அன்னை லக்ஷ்மியுடன் எம் தந்தையான நாராயணா நீ வரவேண்டும்

துஸர் திக்குநீ: - எனக்கு வேறு கதி இல்லை

தூஸ் கதிரே - நீயே கதி

ச்ரீமந் நாராயணா ஆவிரே - ச்ரீயுடன் கூடிய நாராயணா வரவேண்டும்!

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத்மீ
துக்கு பொந்திலேத் ரி:யேஸி - தூ
மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ
விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhukku-nu dhEy paapu-nu ju:kku karilEthmI
dhukku ponthilEth ri:yESi - thU
mok kopbaak krupa karaSthe
vikku paapu-navi mok kaylEth ri:yESi
(srIma-n nArAyaNA AvirE)

துக்குநு தேய் பாபுநு ஜு:க்கு கரிலேத் மீ - துக்கங்களைத் தரும் பாபங்களை நிறைய செய்து கொண்டே நான்

துக்கு பொந்திலேத் ரி:யேஸி - துக்கங்களை அனுபவித்துக் கொண்டே இருக்கிறேன்

தூ மொக் கொப்பாக் க்ருப கரஸ்தெ - நீ என்மேல் எப்போது உன் கருணையைக் காட்டப் போகிறாய்

விக்கு பாபுநவி மொக் கய்லேத் ரி:யேஸி - விஷம் போன்ற இந்த பாவங்கள் என்னை தின்று கொண்டு இருக்கின்றன

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மியுடன் கூடிய நாராயணா நீ வரவேண்டும்!

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ
ராக்கல்லேத் மீ காய்கரு - பரந்
தாமா ஸஹஸ்ர நாமா க்ருப ஸியெத்
அவிதொர் பதாலு தெரு
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

rAmA krushNA -hari gOvinthA thUyiSo
rAkkallEth mI kaaykaru - paranth
dhaamaa Sa-haSra nAmA krupa Siyeth
avithor pathaalu deru
(srIma-n nArAyaNA AvirE)

ராமா க்ருஷ்ணா ஹரி கோவிந்தா தூயிஸொ ராக்கல்லேத் மீ காய்கரு - ராமா! கிருஷ்ணா! ஹரி! கோவிந்தா! நீ இப்படி நான் செய்த பாவங்களைப் பார்த்து என் மேல் கோபம் கொண்டால் நான் என்ன செய்வேன்

பரந்தாமா -மிக உயர்ந்த, எங்கு சென்ற பிறகு மீண்டும் பிறப்பு இறப்பு இல்லையோ, அந்த மிக உயர்ந்த இடத்தை உடையவனே

ஸஹஸ்ர நாமா - ஆயிரக்கணக்கான பெயர்களை உடையவனே

க்ருப ஸியெத் அவிதொர் பதாலு தெரு - உன் கருணை இருந்தால் தானே நான் உன் கால்களை வந்து பிடிக்கமுடியும். உன் கருணை வேண்டும்.

ச்ரீமந் நாராயணா ஆவிரே - செல்வத்திற்கு அதிபதியான ச்ரீயுடன் சேர்ந்து நாராயணா நீ வர வேண்டும்.

தெரன் முஸொனி மொந் தமரேஸ் மீ காய்கரு
தேவு ஸங்கேஸ்யே தொகொ - ஏ
மொரநுஜ்வாவுநுக் பீஜொ:ய் ரி:யெ மொந்நு
மோஸ்கரொரேஸ் மொகோ
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

deran muSoni mo-n dhamarES mI kaaykaru
dhEvu SangkESyE thoko - E
mora-nujvaavu-nuk bIjo:y ri:ye mo-n-nu
mOSkarorES mogO
(srIma-n nArAyaNA AvirE)

தெரன் முஸொனி மொந் - பிடிக்க முடியவில்லை இந்த மனத்தை

தமரேஸ் - அது ஓடிக்கொண்டே இருக்கிறது

மீ காய்கரு - நான் என்ன செய்வது?

தேவு ஸங்கேஸ்யே தொகொ - தெய்வமே உன்னிடம் தான் நான் சொல்லமுடியும்; அதனால் சொல்கிறேன்

ஏ மொரந் உஜ்வாவுநுக் பீஜ் ஹொ:ய் ரி:யெ மொந்நு - இந்த பிறப்பு இறப்பு என்ற சுழற்சிக்கு காரணமாய் (விதையாய்) இருக்கும் மனம்

மோஸ்கரொரேஸ் மொகோ - எனக்கு மோசம் செய்கிறதே!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வரவேண்டும்!

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே
மொந்நு ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - தொகொ
தாஸ் ஹொயாஸ்தெங்கொ தாஸொ:ய்கிநு மீயேட்
தந்யுடு ஹோஸ்திஸொ காரி
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

mOSkarorES mogo keNtubanthili yE
mo-n-nu -hibbi raa:SthiSo kaari - thogo
dhaaS -hoyaaSthengko dhaaSo:yki-nu mIyEt
dha-nyudu -hOSthiSo kaari
(srIma-n nArAyaNA AvirE)

மோஸ்கரொரேஸ் மொகொ கெண்டுபந்திலி யே மொந்நு - கங்கணம் கட்டிக் கொண்டு இந்த மனம் எனக்கு மோசம் செய்கிறது

ஹிப்பி ரா:ஸ்திஸொ காரி - அது நிற்கும் படி செய்வாய்

தொகொ தாஸ் ஹொயாஸ்தெங்கொ - உனக்கு அடியார்கள் ஆனவர்களுக்கு

தாஸொ:ய்கிநு - அடியவன் ஆகி

மீயேட் தந்யுடு ஹோஸ்திஸொ காரி - நான் இங்கு நல்லவன் ஆகும்படி செய்வாய்

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயணா நீ வருவாய்!

தாஸரதே ச்ரீ தாமோதரா அச்யுதா
தாக் ஜாஸ்திஸொ ஸாரே - யமொ
தாக் ஜாஸ்திஸொ ஸாரே ச்ரீ
கேஸவ நாராயணா நடனகோபாலா
க்ருப ஸாரே
(ச்ரீமந் நாராயணா ஆவிரே)

dhaaSaradhE srI dhaamOdharaa asyuthaa
dhaak jaaSthiSo SaarE - yamo
dhaak jaaSthiSo SaarE srI
kESava nArAyaNA natanagOpaalaa
krupa SaarE
(srIma-n naaraayaNaa AvirE)

தாஸரதே - தசரதனின் மகனான ராமா

ச்ரீ தாமோதரா - யசோதை உன்னை உரலுடன் கட்டிப் போட்ட கயிற்றின் தடத்தை வயிற்றில் உடையவா; அடியவர்களுக்கு எளியவனே

அச்யுதா - அடியவர்களை எந்த நேரத்திலும் கைவிடாதவனே

தாக் ஜாஸ்திஸொ ஸாரே - என் பயம் போகும்படி என் மேல் கருணை செய்

யமொதாக் ஜாஸ்திஸொ ஸாரே - எம பயம் போகும்படி என் மேல் கருணை செய்

ச்ரீ கேஸவ - அழகான சுருண்ட முடிகளை உடையவனே; 'க' எனும் ப்ரம்மாவுக்கும், 'ஈச' என்னும் ருத்ரனுக்கும் முதலானவனே

நாராயணா - உலகனைத்துக்கும் உறைவிடமானவனே; உலகனைத்தையும் உறைவிடமாய்க் கொண்டவனே

நடனகோபாலா - நடனமாடிக்கொண்டே பசுக்களை மேய்ப்பவனே; உலகையும் உயிர்களையும் காப்பதை விளையாட்டாய் செய்பவனே

க்ருப ஸாரே - கருணை புரிவாய்!

ச்ரீமந் நாராயணா ஆவிரே - லக்ஷ்மி நாராயனா நீ வருவாய்!

Sunday, October 30, 2005

அனகனும் ஆண்டவனும்

அர்ச்சுனன் பாண்டவர்களில் நடுவனாய் இருந்தாலும் அவன் தான் மகாபாரத்தின் கதா நாயகன். கண்ணனுடன் தோழமை கொண்டவன். வில் வித்தையில் சிறந்து 'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் பெற்றவன். குற்றமற்றவன் என்பதால் அனகன் என்னும் பெயர் பெற்றவன். அவனை நம்பியே பாண்டவர்களின் வெற்றி இருந்தது. அதன் காரணத்தாலேயே தன் பக்தர்களை எந்த நேரத்திலும் கைவிடாத அச்யுதனான கண்ணன் அந்த பார்த்தனுக்கு சாரதியாய் அமர்ந்தான்.

வீரத்துடன் தன் கடமையைச் செய்வதற்காக போர்களத்திற்கு மாதவனோடு வந்தான் அனகன். அதுவரை பல போர்களங்கள் கண்டவன். எதிரிகளை நெருப்பென தகிப்பதால் பரந்தபன் என்ற பெயர் அடைந்தவன். அவன் இந்த போர்களத்திற்கும் மிக்க ஊக்கத்துடன் வந்ததில் வியப்பேதும் இல்லை. கண்ணனிடம் 'அச்யுதா. இந்த தருமநெறி தவறிய கௌரவர்களுக்காக என்னுடன் போரிட வந்திருப்பவர்களை பார்க்கவேண்டும். ரதத்தை இரு சேனைகள் நடுவில் நிறுத்து' என்றான். கண்ணனும் அவ்விதமே செய்து 'குந்தியின் மகனே. இதோ போரிட வந்திருக்கும் உன் உறவினரான கௌரவர்களைப் பார்' என்றான்.

அங்கு பார்த்தன் பார்த்த காட்சி யாராயிருந்தாலும் உலுக்கியிருக்கும். எங்கு நோக்கினாலும் எதிர்தரப்பில் இருப்பவர்கள் எல்லோரும் உறவினர்களே. இதுவரை எந்த போர்களத்திலும் வராத நடுக்கம் உறவினர்களைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு வந்துவிட்டது. பலவிதமான நியாயங்களை எடுத்துக் கூறி தான் போர் புரிய மாட்டேன் என்று கூறி வில்லை கீழே வைத்துவிட்டு அமர்ந்துவிட்டான். இன்று இவன் கூறும் நியாயங்கள் எல்லாம் உறவினர்களைப் பார்த்ததால் வந்தது. அந்த நியாயங்கள் எந்தப் போருக்கும் பொருந்தும் - ஆனால் அந்தப் போர்களங்களில் எல்லாம் அனகன் அதைப் பற்றி எண்ணிப்பார்த்து கிடையாது.

'நீ செய்வது தவறு. கௌரவர்கள் தான் போரை வலுக்கட்டாயமாய் தொடங்கியவர்கள். தருமத்திற்காக போர் செய்யப் பிறந்த நீ இப்படி பேடியாய் இருக்கக்கூடாது' என்கிறான் மாயவன். பார்த்தனுக்கும் புரிகிறது தான் செய்வது தவறு என்று. ஆனால் 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்னும் முதுமொழிக்கேற்ப மனது குழப்பம் உற்றிருக்கிறது. அதனால் தனக்கு தகுந்த வழியைக் காட்டித்தருமாறு பகவானைச் சரணடைந்தான்.

தன்னிடம் சிஷ்யனாய் சரணடைந்த அனகனுக்கு ஆண்டவன் பல விதமான தருமங்களைப் போதிக்க ஆரம்பித்தான். அது அனகனுக்கு மட்டும் சொன்னதா? இல்லை நம் அனைவருக்கும் சொன்னது.

மனிதன் உடலும் மனமும் கொண்டிருக்கும் வரை செயல் செய்யாமல் இருக்க முடியாது. அதனால் செய்யும் எல்லா செயல்களையும் இறைவனுக்கு தத்தம் செய்துவிட்டு செயலாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். 'செய்க வினை; பயன் நோக்காது ஆற்றுக' என்றான் மாதவன்.

மனமோ மிகவும் சஞ்சலமானது. அவ்விதம் இருக்க எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து செயலாற்றுவது எப்படி சாத்தியம் என்றான் குந்தி மகன்.

நிலையானது எது; நிலையற்றது எது என்ற ஞானத்தை அடைந்தால் அப்படி செயல் செய்வது சாத்தியம் என்றான் மாதவன்.

அந்த ஞானத்தை எப்படி அடைவது என்றான் தருமனின் தம்பி.

மீண்டும் மீண்டும் அதைப் பற்றி தியானம் செய்வதால் அந்த ஞான நிலையை அடையலாம் என்றான் கேஸவன்.

அறிவு சிறந்தால் கருவம் தானே ஓங்குகிறது. கருவம் ஒருவனை கீழே தள்ளிப் புதைத்துவிடுமே என்றான் அனகன்.

எல்லாம் வல்ல இறைவனின் மேல் காதல் கொண்டால் அந்த பக்தி ஒருவன் அடையும் ஞானத்தால் வரும் கருவத்தை நீக்கிவிடும் என்றான் கமலக்கண்ணன்.

இதெல்லாம் எல்லோரும் செய்ய முடியுமா? என்னால் முடியாது என்று தோன்றுகிறது. எளிதான வழி இருந்தால் சொல் என்றான் அனகன்.

உண்டு. இங்கு உனக்குள்ளது என்று நீ நினைக்கும் எல்லாவிதமான பந்தங்களைப் பற்றிய பாசங்களை விட்டுவிட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன் என்றான் ஆண்டவன்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:


எல்லாவிதமான பந்தங்களை விட்டுவிடுவதென்றால் எல்லோரும் துறவு பூண வேண்டுமா?

இல்லை. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பந்தங்களில் உள்ள பாசத்தைப் பற்றுதலை மட்டும் துறக்க வேண்டும்.

அப்படி என்றால் என் குழந்தை அழுதால் நான் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாமா?

அந்த குழந்தை மேல் உள்ள அன்பைக் காதலைத் துறக்க வேண்டாம். ஆனால் அந்த குழந்தை மட்டுமே என்னுடையது என்ற பற்றுதலை நீக்க வேண்டும். இங்கிருக்கும் எல்லோரும் இறைவனுக்குரியவர்; அதனால் எல்லோரும் என் அன்பைப் பெறத் தகுந்தவர்கள் என்னும் எண்ணம் கொள்ளவேண்டும்.

'என்னையே சரணடை. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்' என்று கண்ணன் கொடுத்த உறுதிமொழியே கீதையின் கடைசி உபதேசம்; கடைசி ஸ்லோகம்; சரம ஸ்லோகம் எனப்படுவது. இந்த சரம ஸ்லோகத்தைப் பற்றி நாயகி ஸ்வாமிகள் இந்த பாட்டில் குறிப்பிடுகிறார்.

பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூ
பாப் ஜாய் பஜன கேர்
பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூ
பரமபதமுக் வாடேஸ் அர்ஜுநுக்
சரம ஸ்லோக்ஹால் ஸங்கி ரி:யேஸ்ஹரி
மொர நுஜ்வாவுநு நீ:ஸ்தகொ ரி:யே
பரமபதமு தேய் தேய் தேயி (நிச்சு)

paramapadhamuk vaatES aiki mo-n-nU

paap jaay bajana kEr
paramapadhamuk vaatES aiki mo-n-nU
paramapadhamuk vaatES arju-nuk
saramaSlOk-haal Sangki ri:yES-hari
mora nujvaavu-nu nI:Sthako ri:yE
paramapadhamu dEy dEy dEyi (-niccu)

பரமபதமுக் வாட் ஏஸ் ஐகி மொந்நூ - பரமபதத்திற்கு வழி இதுதான் கேள் மனமே

பாப் ஜாய் பஜன கேர் - பாபம் போகும் பஜனை செய்

பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூ - பரமபதத்திற்கு வழி இதுதான் கேள் மனமே

பரமபதமுக் வாடேஸ் அர்ஜுநுக் சரம ஸ்லோக்ஹால் ஸங்கி ரி:யேஸ்ஹரி - பரமபதத்திற்கு வழி இதுதான். சரம ஸ்லோகத்தால் அர்ச்சுனனுக்கு ஹரி சொல்லியிருக்கிறான்.

மொர நுஜ்வாவுநு நீ:ஸ்தகொ ரி:யே - மரணம் பிறப்பு என்பவை இல்லாத

பரமபதமு தேய் தேய் தேயி - பரமபதம் கொடுப்பான்; கொடுப்பான்; கொடுப்பான்.

கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு
க்ருஷ்ணா ராமா மேன்
கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு
கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமம்
தட புத்தி ஸெரொ மிளி கவியாஸ்தென்கொ
வடபத்ரார்யுநு க்ருபஹால் வாட் அப்பேஸ்
நடனகோபால நாயகி ஹொய் து (நிச்சு)

keto -hinggaday srI kESava namamu

krushNaa raamaa mEn
keto -hinggaday srI kESava namamu
keto -hinggaday srI kESava namam
thata budhdhi Sero miLi gaviyaaSthenko
vatapathraaryu-nu kruba-haal vaat abbES
-natanagOpaala naayaki -hoy thu (-niccu)

கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு - கரையேற்றும் ச்ரீ கேஸவ நாமம்

க்ருஷ்ணா ராமா மேன் - க்ருஷ்ணா ராமா என்று சொல்

கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு - கரையேற்றும் ச்ரீ கேஸவன் நாமம்

தட புத்தி ஸெரொ மிளி கவியாஸ்தென்கொ - உருகிய மனத்துடன் பாடியவர்களை

வடபத்ரார்யுநு க்ருபஹால் வாட் அப்பேஸ் - நம் குருநாதராகிய வடபத்ரார்யர் கருணையால் நல்லவழி கிடைத்தது.

நடனகோபால நாயகி ஹொய் து - நடனகோபாலனாம் நம் இறைவனுக்கு நாயகியாய் நீ தினமும் ச்ரீ ஹரி பஜனை செய் மனமே!

Saturday, October 22, 2005

வழிப்பறி செய்த வால்மீகி

இருண்ட காடு. யாரும் தனிவழியே போவதற்கு பயம் கொள்வர். இரண்டு பெரிய நகரங்களுக்கு நடுவில் இந்த காடு இருந்ததால் பலருக்கு இதன் வழியே செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரும் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் இதன் வழியே செல்வர்.

வணிகர் கூட்டம் அடிக்கடி இந்த வழியே செல்வதால் வழிப்பறி செய்யும் ஒரு கூட்டம் இந்த காட்டில் கூடாரம் இட்டு வாழ ஆரம்பித்து விட்டது. எத்தனைப் பாதுகாப்புடன் வந்தால் தான் என்ன, இந்த கொள்ளையர்களிடம் மாட்டிக் கொண்டு விட்டால் அவ்வளவுதான். தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிடும்.

அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். பெரிய குடும்பி. அவன் கொள்ளையடிப்பதில் மிக சமர்த்தன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர்.


சில நேரம் அவன் தனியாகக் கூட வழிப்பறி செய்ய கிளம்பிவிடுவான். என்ன செய்ய? பெரிய குடும்பம்...காப்பாற்ற வேண்டாமா? மனைவியர்களும் குழந்தைகளும் உறவுகளும் அவன் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளனர்? அவனுக்காக தன் உயிரையும் கொடுக்க முன்வருவார்களே? அவர்களைக் காப்பது தன் கடமையல்லவா? என்று அடிக்கடி எண்ணிக்கொள்வான் அந்த தலைவன்.

ஒரு தடவை அப்படி அவன் தனியே கொள்ளையடிக்கச் சென்றபோது அவனிடம் மாட்டிக்கொண்டார் ஒரு முனிவர். கையில் ஒரு தம்புரா வைத்துக்கொண்டும் 'நாராயண, நாராயண' என்று பாடிக்கொண்டும் அந்த முனிவர் வந்து கொண்டிருந்தார். இவன் அவர் எதிரில் போய் எமன் போல் நின்றதும் அவர் நடுநடுங்கி இவனைப் பார்த்து 'யாரப்பா நீ. உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'நான் யாராய் இருந்தால் உமக்கு என்ன? உம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்து வையும்' என்றான்.


முனிவருக்கு அவன் கொள்ளைக்காரன் என்பது அப்போதுதான் புரிந்தது. 'அப்பா. நீ செய்வது மகா பாவம் அல்லவா? இப்படி வருபவர் செல்பவர்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தால் யமன் உன் உயிரைக் கொள்ளையடித்துச் செல்ல வரும் போது உனக்கு நரகம் தானே கிடைக்கும். இது பாவம்' என்று பலவாறாக அறிவுரை சொன்னார் அந்த முனிவர். கேட்பானா இவன். 'தேவையில்லாமல் பேசி என் நேரத்தை வீணாக்காதே. என் மனைவி மக்கள் உறவு எல்லோரும் இன்று நான் என்ன கொண்டு வரப்போகிறேன் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பர். நீர் சீக்கிரம் உம்மிடம் இருப்பதைக் கொடுத்தால் உயிர் பிழைக்கலாம். இல்லை இங்கேயே செத்துப் போக உம்மை தயார் செய்து கொள்ளும்' என்று கடூரமாகச் சொன்னான்.

இதற்குள் முனிவருக்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது. இவன் நின்று பேசுகிறான். பேசிப் பேசி இவன் மனதை நல்வழிக்கு திருப்பிவிடலாம் என்று அவன் மேல் கருணை கொண்டு மேலும் பேச ஆரம்பித்தார்.

'அப்பா...நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குத் பதில் சொன்ன பிறகு என்னிடம் இருப்பதை எல்லாம் நீ கொள்ளைக்கொண்டு போகலாம்'

'சீக்கிரம் கேட்டுத் தொலையும்'

' நீ யாருக்காக இந்த கொடுமையான கொள்ளையும் கொலையும் செய்கிறாய்? '

'வேறு யாருக்காக. என் மனைவி மக்கள் இவர்களுக்காகத்தான். அவர்கள் தானே என் எல்லா சுக துக்கங்களிலும் என்னுடன் இருக்கிறார்கள். எனக்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார்கள்.'

'உன் எல்லா சுகங்களிலும் பங்கு கொள்கிறார்கள். சரி. உனக்காக தங்கள் உயிரைத்தருவதாக எப்போதாவது சொல்லி இருக்கிறார்களா? இல்லை உன் பாவங்களில் தான் அவர்கள் பங்கேற்பார்களா? சொல்.'

'என்ன இப்படி கேட்டு விட்டீர்கள். அவர்கள் வாய் திறந்து எனக்காக உயிரைக் கொடுப்பதாய் சொன்னதில்லைதான். ஆனால் என் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பு கொஞ்சம் நஞ்சம் இல்லை. முற்றும் துறந்தவரான உமக்கு அதெல்லாம் புரியாது'.

'அது இருக்கட்டும் அப்பா. உன் பாவங்களில் அவர்கள் பங்கு கொள்வார்களா? அதனை முதலில் கேட்டுப்பார்'.

'அதிலென்ன சந்தேகம். நான் கொள்ளையடித்துக் கொண்டு வருவதைப் பங்கு கொள்ளும் அவர்கள் என் பாவத்திலும் பங்கு கொள்வார்கள்'.

'அதை நிச்சயமாகத் தெரிந்துகொண்டாயா?'

'இல்லை. அதற்குத் தேவையும் இல்லை'.

'அது அவசியம் தேவை. அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டார்கள் என்கிறேன் நான். நீ அதை இல்லையென்று நிரூபிக்க முடியுமா?'

'ஆகா முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா? இதெல்லாம் என்னிடம் முடியாது'.

'இல்லையப்பா. நீ வேண்டுமானால் என்னைக் கட்டிப் போட்டு விட்டுப் போ. போய் அவர்களிடம் கேள். அவர்கள் உன் பாவத்தில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லிவிட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும்.'

கொள்ளையர் தலைவன் யோசித்துப் பார்த்தான். அந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து அந்த முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.

திரும்பி வரும்போது முற்றிலும் மாறியிருந்தான் அவன். ஓடி வந்தவன் முனிவரின் காலில் விழுந்து 'சுவாமி, நீங்கள் சொன்னது சரிதான்' என்று கண்கலங்கிய படியே முனிவரின் கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.

'என்னப்பா நடந்தது'.

'சுவாமி. நீங்கள் சொன்ன படி நான் போய் என் மனைவியர், குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர் எல்லோரிடமும் என் பாவத்தில் பங்கு கொள்வீர்களா என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் 'எங்களை காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த பாவங்களை நீதான் அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை' என்று கூறிவிட்டார்கள்'

'அவர்கள் சொன்னதில் தவறில்லையே. மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல் வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை'.

'ஆமாம் சுவாமி. அதை நான் இப்போது உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும்'

'நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த பிராயச்சித்தம் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே'

'சுவாமி. என்ன நாமம் அது?'

'ராம நாமம்'

'என் வாயில் நுழையவில்லையே சுவாமி'

'கவலையில்லை. இதோ இங்கிருக்கும் மரத்தின் பெயர் என்ன?'

'இதுவா சுவாமி. இது மரா மரம்'.

'நீ இந்த மரத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டிரு. அது போதும்'.

'ஆகட்டும் சுவாமி. நீங்கள் யார் என்று இன்னும் சொல்லவில்லையே'

'என் பெயர் நாரதன். திரிலோக சஞ்சாரி என்றும் சொல்வார்கள்'.

'நல்லது சுவாமி. நீங்கள் சொன்ன படியே இந்த மரா மரத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்' என்று வணங்கி நின்றான்.

நாரதரும் தன் வழியே சென்றார்.

அவர் போனபின் அந்த கொள்ளையர் தலைவன் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து 'மரா மரா மரா' என்று ஜபிக்க ஆரம்பித்தான். அது 'ராம ராம ராம' என்று ஒலித்தது.

நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. அந்த ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.
அவர் தவம் முடிந்த பின் புற்றிலிருந்து வெளியே வந்தார். புற்றிலிருந்து வந்ததால் 'வால்மீகி' என்று அழைக்கப் பட்டார். பின்னர் இராமாயணம் எழுதி அழியா புகழ் பெற்றார் அந்த கொள்ளையர் தலைவனாய் இருந்து நாரதரின் கருணையால் நல்வழியில் திருப்பி விடப்பட்ட வால்மீகி முனிவர்.

இந்த வரலாற்றை இந்த பாடலில் உதாரணமாகக் காட்டுகிறார் நாயகி சுவாமிகள். இப்போது அந்தப் பாட்டைப் பார்ப்போமா?

நிச்சு ச்ரீஹரி பஜன கார் மொந்நு
நீ: துஸர்வாட் மோக்ஷிக் (நிச்சு)

நிச்சு ச்ரீஹரி பஜன காரி
ஹெச்சுவாடேஸ் லோகுரு ச்ரீ
அச்யுதா கோவிந்தா மெநி தெ
ரெச்சஸெரொ லாஜு ஸொடி நிக்ளி (நிச்சு)

கித்க தபஸுன் கரெதி கைநீ:ரே

ஹரி பஜன ஸொட்டி
கித்க தபஸுன் கரெதி கைநீ:ரெ
லெ:க்கொ ஸேகி வால்மீகு கரெ பாப்
அஸ்கி கோந் நமம் ஹால் ஜியெஸ்தெ
தெக்கி தெல்லெரெ திக்கு துஸர்நீ:

உக்காம்புமவெ ஹரிக்யேஸ் ஹோயெஸ்தெ (நிச்சு)

நிச்சு ச்ரீ ஹரி பஜன கார் மொந்நு - மனமே! நீ தினமும் ச்ரீ ஹரியின் நாமத்தைச் சொல்லி பஜனை செய்.

நீ: துஸர் வாட் மோக்ஷிக் - நம் பாவ புண்ணியங்களிடமிருந்து விடுதலை அடைய வேறு வழியில்லை

நிச்சு ச்ரீ ஹரி பஜன காரி - தினமும் ச்ரீ ஹரி பஜனை செய்வாய்

ஹெச்சு வாட் யேஸ் லோகுரு - சிறந்த வழி இதுதான் இந்த உலகத்தில்

ச்ரீ அச்யுதா கோவிந்தா மெநி தெ ரெச்ச ஸெரொ லாஜு ஸொடி நிக்ளி - ச்ரீ அச்யுதா கோவிந்தா என்று நீ கூச்சத்தை விட்டு வெகு சத்தமாய் அவன் நாமத்தைச் சொல்.

கித்க தபஸுன் கரெதி கைநீ:ரே - எத்தனைத் தவங்கள் செய்தாலும் பயனில்லை

ஹரி பஜன ஸொட்டி கித்க தபஸுன் கரெதி கைநீ:ரே - ஹரி பஜனையை விட்டு எத்தனைத் தவங்கள் செய்தாலும் பயனில்லை.

லெ:க்கொ ஸேகி வால்மீகு கரெ பாப் - கணக்கு உண்டா வால்மீகி செய்த பாவங்கள்?

அஸ்கி கோந் நமம் ஹால் ஜியெஸ்தெ - எல்லாம் எந்த நாமத்தால் போனது?

தெக்கி தெல்லெரே திக்கு துஸர்:நீ - பார்த்து அவன் நாமத்தைப் பிடித்துக் கொள்ளடா. வேறு கதி இல்லை.

உக்காம்பும் அவெ ஹரிக்யேஸ் ஹோயெஸ்தெ - தூணில் இருந்து (ப்ரஹலாதனைக் காப்பாற்ற நரசிங்கமாய்) வந்த ஹரி இவன் தான்.

நிச்சு ச்ரீ ஹரி பஜன கார் மொந்நு - தினமும் ச்ரீ ஹரி பஜனை செய் மனமே!

Saturday, October 15, 2005

எப்போது போய் சேருவோமோ? யார் கண்டார்?


கோன் வேளும் கோட் பொடி ஜேடைகி ஏ ஸரீர்
ஜியெத் கோன் ஜெலும் அவைகி
கொநொக்கி த்யெ கொங்க ஹால்தி ஜனன் ஹோய்கி (கோ)

மான் ஹோர் ஐகுநாஸ்தக் கான் தீ ஐகொ ஐகொ
த்யான் கரோ ஹரி முக்தி தேந் அவயி ஸெத்ல (கோ)

ஸுனொ மஞ்சிரி கூஸ் ஹொய் உஜெ திந்நு புன்னஹா
ஸுக துக்குனு புந்நஹா பொந்தெ
ஸுக துக்குனி புந்நஹா
ஹநந் அவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால்
மொந் ஹரி ஹோர் தொவொ முக்திதேயி ஸெத்ல (கோ)

கள கொரொ ரூப்ஹொய் உஜெ திந்நு புந்நஹா
கரெ கருமுன் புந்நஹா முல்லோ
கரெ கருமுன் புந்நஹா
கெளரவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால்
ஸிள ஹரிக் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல (கோ)

ஸீன் ஸெர ஜென்முந் கடெ திந்நுன் புந்நஹா
ஸேநும் கிடொ ஹோரெநிஹா ஏ ஸெய்லுவோ
ஸேநும் கிடொ ஹோரெநிஹா
பான் படஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல (கோ)

மொடொ தெநொ எநொ மெனெத் ஸொட்டி ஜேடையா யெமுட்
புட்டுநா ரா:ய்ஹா துருகு யெமுடவேத்
புட்டுநா ரா:ய்ஹா துருகு
வடபத்ரார்யுனு க்ருப ஹால் மொடொ மந்தூர் அப்பேஸ் மொகொ
நடனகோபாலுஸ் தேவ் நஜ்ஜாநகோன் ஐகோ (கோ)

கோன் வேளும் கோட் பொடி ஜேடைகி ஏ ஸரீர் - எந்த வேளையில் எங்கே விழுந்து செத்துப் போகுமோ இந்த உடல்?

ஜியெத் கோன் ஜெலும் அவைகி - அப்படிப் போனால் பின்னர் என்ன ஜன்மம் வருமோ?

கொநொக்கி த்யெ கொங்க ஹால்தி ஜனன் ஹோய்கி - எப்படியோ? யாரால் பிறப்பு ஏற்படுமோ?

மான் ஹோர் ஐகுநாஸ்தக் கான் தீ ஐகொ ஐகொ - கடனுக்கே என்று கேட்காமல் உங்கள் காதுகளைக் கொடுத்து நான் சொல்லுவதைக் கேளுங்கள்.

த்யான் கரோ ஹரி முக்தி தேந் அவயி ஸெத்ல - ஹரி த்யானம் செய்யுங்கள். ஹரி முக்தி கொடுப்பதற்கு வருவான். இது சத்தியம்.

ஸுனொ மஞ்சிரி கூஸ் ஹொய் உஜெ திந்நு புன்னஹா - நாயாகவும் பூனையாகவும் பெருச்சாளியாகவும் பிறந்த நாட்கள் போதாதா?

ஸுக துக்குனு புந்நஹா - சுக துக்கங்கள் போதாதா?

பொந்தெ ஸுக துக்குனி புந்நஹா - அனுபவித்த சுக துக்கங்கள் போதாதா?

ஹநந் அவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால் - அடிக்க வரும் எமனை உங்களால் என்ன செய்யமுடியும்?

மொந் ஹரி ஹோர் தொவொ முக்திதேயி ஸெத்ல - மனதை ஹரியின் மேல் வையுங்கள். முக்தி தருவான். இது சத்தியம்.

கள கொரொ ரூப்ஹொய் உஜெ திந்நு புந்நஹா - கருப்பாகவும் சிவப்பாகவும் உருவம் கொண்டு பிறந்த நாட்கள் போதாதா?

கரெ கருமுன் புந்நஹா - செய்த வினைகள் போதாதா? அதன் பயன்களை அனுபவித்தது போதாதா?

முல்லோ கரெ கருமுன் புந்நஹா - நாம் முன்னர் செய்த வினைகள் போதாதா?

கெளரவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால் - கழுத்துக்கு வரும் எமனை என்ன செய்ய முடியும் உம்மால்?

ஸிள ஹரிக் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல - கருணை வடிவாம் ஹரியை தியானம் செய்யுங்கள். அவன் பார்த்து முக்தி கொடுப்பான். இது சத்தியம்.

ஸீன் ஸெர ஜென்முந் கடெ திந்நுன் புந்நஹா - என்ன என்னவோ ஜன்மம் எடுத்து இளைத்துப் போனது போதாதா?

ஸேநும் கிடொ ஹோரெநிஹா - சாணியில் புழு ஆகவில்லையா?

ஏ ஸெய்லுவோ ஸேநும் கிடொ ஹோரெநிஹா - இங்கு பாருங்கள். (நாம்) சாணியில் புழுவாய் பிறக்கவில்லையா?

பான் படஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால் - (நம்மைக் கொன்று) நம் ஜாதகத்தை கிழிக்க வரும் எமனை என்ன செய்ய முடியும் உங்களால்?

ஸீன் திர்ஜாய் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல - நம் இளைப்பு தீர்ந்து போகும். தியானம் செய்யுங்கள். அவன் பார்த்து முக்தி தருவான். இது சத்தியம்.

மொடொ தெநொ எநொ மெனெத் ஸொட்டி ஜேடையா யெமுட் - 'அவன் என்னை விடப் பெரியவன்; இவன் என்னை விட மூத்தவன்' என்று புலம்பினாலும் எமன் விட்டுப் போவானா?

புட்டுநா ரா:ய்ஹா துருகு - இந்த கூடு உடையாமல் இருக்குமா?

யெமுடவேத் புட்டுநா ரா:ய்ஹா துருகு - எமன் வந்தால் இந்த கூடு உடையாமல் இருக்குமா?

வடபத்ரார்யுனு க்ருப ஹால் மொடொ மந்தூர் அப்பேஸ் மொகொ - (என் குரு) வடபத்ராரியர் கருணையால் பெரிய மந்திரம் எனக்கு கிடைத்தது.

நடனகோபாலுஸ் தேவ் நஜ்ஜாநகோன் ஐகோ - நடன கோபாலனே நம்மைக் காப்பான். கெட்டுப் போகாதீர்கள். கேளுங்கள்.

Wednesday, October 12, 2005

யமன் கருணை இல்லாதவன்

தக்ஷண் நீ:ஸ்தெனொபா தெக்ஷெணு தெனொ - அம்ரெ
லெக்ஷணான் ததாகு பொவ்லே ஜிவ்லுவாய்

தக்ஷண் நீ:ஸ்தெனொபா தெக்ஷெணு தெனொ - கருணை இல்லாதவன் அப்பா இந்த தெந்திசைக்காரன் (யமன்)

அம்ரெ லெக்ஷணான் ததாகு பொவ்லே ஜிவ்லுவாய் - நமது லக்ஷ்மணன் அண்ணனை அழைத்துக் கொள். நீ வாழ்ந்து கொள்ளலாம்.

Tuesday, October 11, 2005

எப்போது அவனை வணங்க உனக்கு நேரம் கிடைக்கும்?

கொப்பாகு காம் திரி ஜாய்ரே - தொகொ
தொப்பி லதி யெமுடவி தெரி தெல்லி ஜாய்ரே (கொப்)

அப்பைஹா மெனிகு ஜெலும் அப்ரூப்கிரே
கொப்பிஸொக ச்ரீ ராமா க்ருஷ்ணா மேன்ரே (கொப்)

காய் ஸெர்க்கி லுப்பெஸொக பாதுநு கார்யெஸ்ரே
காஸுக் கெதி நீ:மெனத் கான் ஜ:கய் ஜாரெஸ்ரே (கொப்)

வடபத்ரார்யுநு தய கள்ளெரே ச்ரீ
நடனகோபால் ஆயாஸம் திர்ச்சய்ரே (கொப்)

கொப்பாகு காம் திரி ஜாய்ரே - (நீ உன் வேலைகள் கடமைகள் எல்லாம் முடிந்த பிறகு அவனை வணங்குவதாய் சொல்கிறாயே) எப்போதடா உன் வேலைகள் கடமைகள் எல்லாம் தீரும்.

தொகொ தொப்பி லதி யெமுடவி தெரி தெல்லி ஜாய்ரே - அதற்குள் உன்னை தள்ளிவிட்டு உதைத்து யமன் வந்து பிடித்துக்கொண்டு போய் விடுவானே?

அப்பைஹா மெனிகு ஜெலும் அப்ரூப்கிரே - கிடைக்குமாடா மனித ஜன்மம்; ரொம்ப அபூர்வமல்லவா?

கொப்பிஸொக ச்ரீ ராமா க்ருஷ்ணா மேன்ரே - எப்போதும் சகஜமாக ச்ரீ ராமா க்ருஷ்ணா என்று சொல்லடா

காய் ஸெர்க்கி லுப்பெஸொக பாதுநு கார்யெஸ்ரே - ஏன்டா, மாடு வைக்கோலைத் அரைப்பதைப் போல் சாதத்தை அரைக்கிறாயே

காஸுக் கெதி நீ:மெனத் கான் ஜ:கய் ஜாரெஸ்ரே - காசு கிடைக்காது என்றால் உன் காது அடைத்துப் போகிறதேடா? (நான் சொல்லும் நல்ல விஷயங்கள் உன் காதில் விழவில்லையேடா)

வடபத்ரார்யுநு தய கள்ளெரே - நம் குருநாதரான வடபத்ரார்யரின் அருளைப் பெற்று அவர் சொல்லும் வழி செல்.

ச்ரீ நடனகோபால் ஆயாஸம் திர்ச்சய்ரே - உன் ஆயாஸத்தை (கவலைகளை, சோர்வினை) ச்ரீ நடன கோபாலன் தீர்த்து வைப்பானடா.

Sunday, October 09, 2005

பாபம் தீர எளிதான வழி

ச்ரீ ராமா ச்ரீ க்ருஷ்ணா ச்ரீ கோவிந்தா மெனொ ச்ரீ கோபாலா மெனொ
ஸேஸ்த பாபுன் நீஸ்தக் ஹொய் ஜாய் ஸெநம் யெ தானுக் மெனி கவொ
ஏ ஸரீர் அநித்யம் மெனி ஜனொ

ச்ரீ ராமா ச்ரீ க்ருஷ்ணா ச்ரீ கோவிந்தா மெனொ ச்ரீ கோபாலா மெனொ - ச்ரீ ராமா ச்ரீ க்ருஷ்ணா ச்ரீ கோவிந்தா என்று சொல்லுங்கள். ச்ரீ கோபாலா என்று சொல்லுங்கள்.

ஸேஸ்த பாபுன் நீஸ்தக் ஹொய் ஜாய் ஸெநம் ஏ தானுக் மெனி கவொ - இருக்கும் பாபங்கள் எல்லாம் இல்லாமல் போகும்; சீக்கிரம் இப்படி அவன் நாமங்கள் சொல்லிப் பாடுங்கள்.

ஏ ஸரீர் அநித்யம் மெனி ஜனொ - இந்த உடல் அநித்யம் என்று உணர வேண்டும்.

Saturday, October 08, 2005

உன் கருணை எப்போது வரும் தாமோதரா???


தமரேஸ் தின்னு தமரேஸி
தாக் நீஸ்தெனு மோஸ் ஜாரியாஸி
தாக் தக்யாஸ்தெனு தன்யுடு ஹொரியாஸ்
தாமோதரா தாமோதரா
தொர தய கோன் கலம் அவை தாமோதரா

தமரேஸ் தின்னு தமரேஸி - ஓடுகிறது நாட்கள் ஓடுகிறது

தாக் நீஸ்தெனு மோஸ் ஜாரியாஸி - பாபச் செயல்களிடம் பயம் இல்லாதவர்கள் மோசம் போகிறார்கள்.

தாக் தக்யாஸ்தெனு தன்யுடு ஹொரியாஸ் - பாபச் செயல்களில் பயம் கொண்டு நல்வழியில் வாழ்பவர்கள் பிழைத்துப் போகிறார்கள்.

(என்னால் அப்படி இருக்க முடியவில்லை. உன் அருள் இருந்தால் அது சாத்தியம் என்று அறிந்துள்ளேன்)

தாமோதரா தாமோதரா தொர தய கோன் கலம் அவை தாமோதரா - தாமோதரா உன் கருணை வரும் காலம் எப்பொழுதோ? (சீக்கிரம் எனக்கு அருள் புரிவாய்)

Friday, October 07, 2005

நடன கோபாலம் பஜேஹம் ஸதா


ச்ரீமத் ப்ரம்ஹ குலாப்தி சந்த்ர மமலம்
ஜாபாலி கோத்ரோத்பவம்
ச்ரீரங்கார்ய ஸுதம் புதாதி வினுதம்

பக்த்யாதி யோகான்விதம்
ச்ரீஸெளராஷ்ட்ர ஸுபாஷயா கவிக்ருதம்
வேதாந்த சீலப்ரதம்
ச்ரீராமாப்ஜ பதாஸ்ருதம்
ச்ரீ நடனகோபாலம் பஜேஹம் ஸதா
பெருமையும் செல்வமும் மிகுந்த ஸெளராஷ்ட்ர குலமாகிய கடலுக்கு குற்றம் குறை இல்லாத சந்திரன் போன்றவரும், ஜாபாலி கோத்திரத்தில் உதித்தவரும், ரங்காரியரின் மகனும், கற்றவர்களால் வணங்கப்படுபவரும், பக்தி முதலான யோகங்களில் சிறந்தவரும், சிறப்பும் மங்கலமும் மிகுந்த ஸெளராஷ்ட்ர மொழியில் கவிதைகளை பொழிந்தவரும், வேத உபநிஷதங்களில் சொல்லப்பட்ட சீலங்கள் நிறைந்தவரும், ராமாப்ஜரின் சிஷ்யரும் ஆன ச்ரீ நடன கோபாலரை நான் எப்போதும் வணங்குகிறேன்.

Wednesday, October 05, 2005

மதுரையின் ஜோதி

பகூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே வாசுதேவ சர்வமிதி ச மகாத்மா சுதுர்லப:

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்னபடி பல ஜன்மங்களில் நற்காரியங்களில் ஈடுபட்டு இறைவனின் அருளைப்பெற்று பின்னரே ஒருவன் 'ஸர்வம் வாசுதேவ மயம் - உண்பது, உறங்குவது, தின்பது, பருகுவது எல்லாமே இறைவன்' என்னும் ஞான நிலையை அடைகிறான். கண்ணனே மேலும் சொன்னது போல் அப்படிப்பட்ட மகாத்மா கிடைப்பதற்கு அரிதாய் இங்கொருவர் அங்கொருவர் என்று இவ்வுலகில் தோன்றுகின்றனர்.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட மகாபுருஷர்கள் பாரத நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் தோன்றி அங்குள்ள மக்களுக்கு தங்கள் உபதேசங்களாலும் நன்னடத்தைகளாலும் வழிகாட்டியுள்ளார்கள். வங்க தேசத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற மஹான்கள் தோன்றி மக்களை நல்வழி காட்டி அழைத்து சென்ற அதேகாலத்தில் மதுரையில் 'ச்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள்' என்னும் மஹான் தோன்றி 'உண்ணும் உணவு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் யாவும் கண்ணனே' என்று வாழ்ந்து மக்களை பக்தி நெறியில் வழி நடத்தி சென்றார். அவர் அருளிய ஸெளராஷ்ர மொழி பாடல்களின் சொல் பொருள் விளக்கத்தை இங்கு காணப்போகிறோம்.