Saturday, July 28, 2007

குருவை அடைந்தவருக்கும், வணங்காதவர்க்கும்

நாளை குரு பூர்ணிமா. நாளை குருக்களுக்கு வந்தனம் செய்யும் நாள். நம்மை தந்தைக்கு அடுத்த இடத்திலிருந்து காக்கும், கற்பிக்கும் அத்தகைய குருக்களுக்கு நம்மால் முன்னோர்(பித்ரு)கடன் செய்ய முடியாமல் இருக்கும் குறையை போக்க, அவர்களை வணங்க ஒரு நாள். குருபூர்ணிமா.

குருப்ரம்மா குருர் விஷ்ணு, குருர் தேவோ மஹேஸ்வர:
குருசாக்ஷாத் பர ப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ:


அனைத்து வேதத்திற்க்கும் குரு, அந்த வேதக்கடவுள் பிரமன், தேனுக்கெல்லாம் தேவன் ஸ்ரீமந் நாராயாணன், குருவிர்கெல்லாம் குரு, அந்த மாஹாதேவன் ஈசன், இத்தகைய மும்மூர்த்திகளுக்கு இணையானவர் நமக்கு வழிகாட்டும் குரு. அப்பேற்பட்ட குருவை எப்படி வணங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு இதே குரு பூர்ணிமா அன்று ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் ஒரு பாடலை இட்டேன். இப்பதிவில் அத்தகய குருவை அடைந்தவருக்கும், குருவை வணங்காதவர்க்கும் என்ன கதி என்று சொல்லும் பாடல்.

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ்...
ம:லார் ராகு

ஆதி3 தாளு கேட்க


பல்லவி

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ் லோகுர் ராண்
பு4ருமு ஜ:டா3ன்ஹொய் ரீ:ரியாஸ்தெ [கு3]


அநுபல்லவி

கு3ரு தே3வுநுக் சொக்கட் சல்லியாஸ்தெனுஸ் உஜி
தெ4ருமுநும் துரி ரீ:ரியாஸ்தெ [கு3]


சரணு

மொ:ட்டாநுக்தெ3க்கி பாய்ம்பொண்ணாஸ்தெனுஸ் உஜி
ஹுட்டொ பா4துந் ஜெம்லேத் ரீ:ரியாஸ்தெ
மொ:ட்டாநு மொந்நுதா4நுக் சல்லியாஸ்தெனுஸ்
மொ:ட்டொ மொ:ட்டொ ஜெமன்க4ல்லி ரீ:ரியாஸ்தெ [கு3]



பீ4க்மைலி அவஸ்தெங்கொ தா4க்க4லி தொ3வ்டி3யாஸ் தெனுஸ்
பீ4குன்மை கை2லேத் ரீ:ரியாஸ்தெ
பீ4க்மைனாருக் அஸ்கி பூ4குன் திர்ச்சியாஸ்தெனுஸ்
பி3ரஹ்ம குலம்மு உஜி ரீ:ரியாஸ்தெ [கு3]


சிடி3பிள்டானுக் பாயின்மொடி3 தகியாஸ்தெனுஸ்
குடா3 குடி3 ஹொய் உஜி ரீ:ரியாஸ்தெ
பு3டி3 ஜியாஸ்தெங்கொ க2டி3ஸொடி3 யாஸ்தெனுஸ்
கொ4டா3ன் ஹைஸ்துஸெர கு3ருஹொய் அவி ரீ:ரியாஸ்தெ [கு3]



சொக்கட்வாட் விக்குமெநி ஜு:க்கு ஸிக்காஸ்தெனுஸ்
து3க்கர் ஹொய்கின் உஜி ரீ:ரியாஸ்தெ
சொக்கட்வாட் சொக்க3தி தே3ய்மெந் சல்லியாஸ்தெனுஸ்
சொக்கட் க3தி பொந்தி3 ரீ:ரியாஸ்தெ [கு3]



பொ4ரிரி:யெ ஸ்ரீ ஹரிக் கொரி ப4ஜுனாஸ்தெனுஸ்
பி2ரிபி2ரி ஜெலும் க23ரி:யாஸ்தெ
ஹரிதா3ஸுநு ஜொவள் செரிக2ளியாஸ்தெனுஸ்
பி2ரிஜெலுமுக் அவ்நாஜெய் ரீ:ரியாஸ்தெ [கு3]


கெடொஹிங்கு3னார் அஸ்கி வடபத்ரார்யுநு வாட்செரி
கேஸவாக் க3வ்லேத் ரீ:ரியாஸ்தெ
நடனகோ3பாலுக் நொம்முனாஸ்தெனுஸ் நிக்ளி
நரகும் ஜெய் செரரி:யாஸ்தெ [கு3]

பொருள்
பல்லவி

கு3ரு தே3வுநுக் சல்னாஸ்தெநூஸ் லோகுர் ராண்
பு4ருமு ஜ:டா3ன்ஹொய் ரீ:ரியாஸ்தெ [கு3]

குருவின் வழியில் நடக்காதார் உலகில் காடாய்
எதிர்காலத்தில் மரமாய் இருந்து வருவர்.

அநுபல்லவி

கு3ரு தே3வுநுக் சொக்கட் சல்லியாஸ்தெனுஸ் உஜி
தெ4ருமுநும் துரி ரீ:ரியாஸ்தெ [கு3]
குருவின் வழியை பற்றி சென்றவர் (உலகில்)பிறந்து
தானம் செய்து வருவர்.

சரணு

மொ:ட்டாநுக்தெ3க்கி பாய்ம்பொண்ணாஸ்தெனுஸ் உஜி
ஹுட்டொ பா4துந் ஜெம்லேத் ரீ:ரியாஸ்தெ
மொ:ட்டாநு மொந்நுதா4நுக் சல்லியாஸ்தெனுஸ்
மொ:ட்டொ மொ:ட்டொ ஜெமன்க4ல்லி ரீ:ரியாஸ்தெ [கு3]

பெரியவர்களை மதிக்காமல் வணங்காமல் இருந்தவர் பிறந்து
எச்சில் இலையில் உண்டு வாழ்வர்
பெரியவர்களை மதித்து அவர் மனம் போல் இருந்தவர்
பெரிய விருந்தளித்து வாழ்வர்

பீ4க்மைலி அவஸ்தெங்கொ தா4க்க4லி தொ3வ்டி3யாஸ் தெனுஸ்
பீ4குன்மை கை2லேத் ரீ:ரியாஸ்தெ
பீ4க்மைனாருக் அஸ்கி பூ4குன் திர்ச்சியாஸ்தெனுஸ்
பி3ரஹ்ம குலம்மு உஜி ரீ:ரியாஸ்தெ [கு3]


தர்மம் வேண்டி வந்தவரை பயமுருத்தி விரட்டியவர்
தர்மம் வேண்டி வாழும் நிலையடைவார் (அப்படியல்லாமல்)
தர்மம் வேண்டி வந்தவரின் குறிபறிந்து பசி போக்கியவர்
தர்ம குலமாம் பிரம்ம குலத்தில் பிறப்பர்

சிடி3பிள்டானுக் பாயின்மொடி3 தகியாஸ்தெனுஸ்
குடா3 குடி3 ஹொய் உஜி ரீ:ரியாஸ்தெ
பு3டி3 ஜியாஸ்தெங்கொ க2டி3ஸொடி3 யாஸ்தெனுஸ்
கொ4டா3ன் ஹைஸ்துஸெர கு3ருஹொய் அவி ரீ:ரியாஸ்தெ [கு3]


காக்கை குருவிகளின் காலொடித்து வாழ்ந்தவர்
சேவல் கோழியாய் பிறப்பர்
மூழ்கியவர்களை கரையேற்றியவர்
யானை குதிரையோடு குருவாய் வந்து பிறப்பர்

சொக்கட்வாட் விக்குமெநி ஜு:க்கு ஸிக்காஸ்தெனுஸ்
து3க்கர் ஹொய்கின் உஜி ரீ:ரியாஸ்தெ
சொக்கட்வாட் சொக்க3தி தே3ய்மெந் சல்லியாஸ்தெனுஸ்
சொக்கட் க3தி பொந்தி3 ரீ:ரியாஸ்தெ [கு3]

நல்வழியை விஷவழி என்று அதிமேதாவியாய் இருந்தவர்
உலகில் பன்றியாய் பிறந்து வாழ்வர்
நல்வழியே நற்கதி தரும் என்று பற்றி நடப்பவர்
நற்கதி பெற்று இருப்பர்

பொ4ரிரி:யெ ஸ்ரீ ஹரிக் கொரி ப4ஜுனாஸ்தெனுஸ்
பி2ரிபி2ரி ஜெலும் க23ரி:யாஸ்தெ
ஹரிதா3ஸுநு ஜொவள் செரிக2ளியாஸ்தெனுஸ்
பி2ரிஜெலுமுக் அவ்நாஜெய் ரீ:ரியாஸ்தெ [கு3]


எங்கும் நிறைந்த அந்த ஹரியை வணங்காதார்
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து வாழ்வர்
ஹரியின் அடியாரோடு பாடி ஆடியவர்
மீண்டும் பிறவாத வரம் பெற்றார்

கெடொஹிங்கு3னார் அஸ்கி வடபத்ரார்யுநு வாட்செரி
கேஸவாக் க3வ்லேத் ரீ:ரியாஸ்தெ
நடனகோ3பாலுக் நொம்முனாஸ்தெனுஸ் நிக்ளி
நரகும் ஜெய் செரரி:யாஸ்தெ [கு3]


கரையேராதார் எல்லாம் (என் குருவான) வடபத்திரரின் வழிபற்றி
கேஸவனை பாடி இருப்பர
நடன கோபாலனை நம்பாதார் - பின்னாளில்
நரகத்தை அடைந்து இருப்பர்.