Friday, June 30, 2006

இளைப்புகள் தீரும் வழி

சிவமுருகன் அண்மையில் இந்த வலைப்பூவில் 'விரைந்து வந்து காட்சி தருவாய்' என்ற தலைப்பிலான பதிவில் நாயகி சுவாமிகளின் 'ஸெணம் அவி ஸேவ தீ' என்ற அருமையான பாடலை இட்டிருந்தார். அந்தப் பாடலைப் படிக்கும் போது தோன்றும் எண்ணங்களை இங்கே தொடராகப் பதிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

முதலில் பல்லவியில் சொல்லியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம். எத்தனையோ வகையான இளைப்புகள் இந்த உலகில் பிறவி எடுத்தால். தினந்தோறும் எத்தனையோ விதமான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ எத்தனையோ நல்ல செயல்களையும் செய்கிறோம்; தீய செயல்களையும் செய்கிறோம். செய்யும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப பயன்களையும் அனுபவிக்கிறோம். புண்ணிய வினைகளுக்கு இன்பம் தரும் விதயங்களும் பாவ வினைகளுக்குத் துன்பம் தரும் விதயங்களும் நம்மைச் சுற்றி எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன; நம்மையும் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைக்கின்றன.

துன்பம் நேர்கையில் அந்த துன்பத்தால் துவண்டு இளைப்பெய்துதல் இயற்கையான ஒன்றாக இருக்கின்றது. பசி, பிணி, மூப்புத் துன்பம் என்று இவற்றை பாரதியார் சொல்லுவார். இவற்றில் எது வந்தாலும் நாம் கற்றதும் பெற்றதும் நம்மை விட்டு விலகி புத்தித் தடுமாறி தயங்கி பல செயல்கள் செய்து இளைப்பு எய்துகிறோம். இதனை நம் சொந்த செயல்களிலும் மற்றவர் செயல்களிலும் காண்கிறோம்.

அதே நேரத்தில் இன்பத்திலேயே இருந்தாலும் ஒரு வித இளைப்பு ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் முதுமொழிக்கேற்ப. இதனை நாம் எல்லோரும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்போம். இன்பங்கள், சுகங்கள் அதிகமாகும் நேரங்களிலும் மனம் தடுமாறி பல செயல்கள் செய்து இளைப்பு எய்துகிறோம்.

இந்த உலகில் இருக்கும் எல்லாவற்றையும் இன்பம், துன்பம் என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம். இரண்டின் மூலமாகவும் இளைப்பே ஏற்படுகிறது என்பதால் இந்த உலகில் இருக்கும் எல்லாவற்றாலும் நமக்கு ஏற்படுவது இளைப்பு தான் என்பது தெளிவு.

இந்த இளைப்பு நீங்க என்ன வழி?

அவன் அருளைப் பெறுவதே வழி.

அது எப்படி நிகழும்?

அவனுடனும் அவன் அடியார்களுடனும் கூடினால் நிகழும்.

அது எப்போது நிகழும்?

நம் மனமும் உடலும் சூழலும் அதற்கேற்ப ஆகும் போது நிகழும்.

சூழலை நாம் மாற்ற முயலலாம். இறைவனைப் பற்றிச் சிந்திக்க முயலலாம். ஆனால் எப்படி உடலையும் மனதையும் மாற்றுவது? நாம் என்ன தான் சூழ்நிலையை மாற்றினாலும் மனமும் உடலும் நம்மை தகுந்த நேரத்தில் செல்லக் கூடாத வழியில் இழுத்துச் சென்று விடுகிறதே? அதற்கு என்ன வழி?

கீதையில் பகவான் சொல்லியிருக்கிறார் வழி. எத்தனையோ விதமான தவங்களும் யோகங்களும் ஒருவர் செய்தாலும் இறைவனைக் காணும் வரை அவருடைய மனமும் உடலும் முழுக்க முழுக்கத் தூய்மை அடைவதில்லை. அதனால் அவற்றால் துன்பம் நேர்வது நடக்கத் தான் செய்யும்.

ஆமாம். கீதையில் ஸ்வாமி சொன்னதற்கு விசுவாமித்திர மகரிஷியே ஒரு தகுந்த எடுத்துக்காட்டு. எத்தனை எத்தனைத் தவங்கள் செய்திருந்தும் உடலும் மனமும் தூய்மையடையாததாலேயே அவர் மீண்டும் மீண்டும் கீழ்நிலைக்கு இறங்கிக் கொண்டிருந்தார். ஆனால் இறைவனைக் காண்பதென்பது அவ்வளவு சுலபமா? இறைவனைக் காண்பது எப்படி?

அவனருளாலேயே தான் அவன் தாள் வணங்க முடியும். அதற்கும் அவனை வணங்கி நிற்பதே வழி.

ம்ம்ம். இப்போது புரிகிறது. அப்படி என்றால் நான் வேண்டிக்கொள்ள வேண்டியது...

ஸெணம் அவி ஸேவ தீ3
ஸெரிர் வெக்ள கெரி
தொர ஸெர மிள்விலேத்
ஸீன் திரயி

பெருமாளே. விரைந்து வந்து உன் அருட்தரிசனம் தந்து
என் உடலைத் (மனதையும் சேர்த்துத்) தூய்மை செய்து
உன்னுடன் (உன்னுடனும் உன் அடியார்களுடனும்) நான் சேர்ந்திருக்கும் படி அருள் செய்தால்
என் இளைப்புகள் எல்லாம் தீரும்

இதையே மீண்டும் மீண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

Thursday, June 29, 2006

180: மாதவனடியாரை மனம்நோகப் பண்ணினால் ...

கடந்த 1994-ல், ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் ஒரு தமிழ் பாடலை முதல் முறையாக கேட்டேன். அப்பாடல் மிகவும் பிடித்து போக எல்லா கீர்த்தனங்களையும் படித்தும், கேட்டும் ஆனந்தித்தேன். அந்த பாடலை இங்கே பதிக்கிறேன்.

மாதவனின் அடியாரின் மனம் கோன செய்தால் என்ன ஆகும் என்று எச்சரிக்கிறாரா? அல்லது நல்ல கதி பெற தன்னால் இயன்ற எளிய அறிவுறைகளை சொல்கிறாரா? என்று பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு உள்ளது இந்த எளிமையான பாடல். இப்பாடல் ஸ்வாமிகளின் கவிதை நிபுணத்திற்க்கும், தத்துவத்திற்க்கும், எளிமைக்கும் ஒரு மிகப்பெரிய உதாரணம்.

பல்லவி
மாதவனடியாரை மனம்நோகப் பண்ணினால்
மாடாடு ஜென்மம் மருவும் (மாதவனடியாரை)


அனுபல்லவி
பாதகம்வேறில்லை யாதவனடியாரை
பழித்திடுவதுதான் கருவம் (மாதவனடியாரை)


சரணங்கள்
எப்பாவங்களும் தீரும் அப்பன் கோவிந்தனடியாரை இகழ்ச்சியாய்ப் பேசும்
இப்பாவந் தீராது எப்போதும் நரகத்தில் இருக்கும்படி நேரும் மோசம் (மாதவனடியாரை)

கிடைக்குமோ மானிட ஜென்மம் கிடைத்ததற்கு அடைவது இதுதானோ சொல்வீர்
முடவனாய்ப் பிறந்தாலும் தடையில்லை மோக்ஷத்திற்கு முகுந்தனுடைய நாமம் சொல்வீர் (மாதவனடியாரை)

வீடைந்தோமென்றே மாந்திடவேண்டாம்ஓய் வெறுவாய் வெகுளி வார்த்தை பேசி
கேடடைந்தது போதாதோ இனிமேலும் கதிபெறப் பாருங்கள் வாசி (மாதவனடியாரை)

விடத்துக்கொப்பான மாய்கை இடத்திலகப்பட்டு வீணாகக் காலம் போக்குகின்றீர்
வடபத்ராரியர் போற்றும் நடனகோபாலன் நாமம் உரைப்பீர் வைகுந்தம் சேர்வீர் நன்றே (மாதவனடியாரை)


மாதவனான அந்த வைகுண்டவாசனை, நாராயணனனை தெய்வமாக எண்ணி தொழுபவர்களை, மனம் நோக வைத்தால் என்ன நேரும் என்று எச்சரிக்கும் விதமாகவும், சத் பதவிகளான வைகுண்ட வாசமும், பரமபதமும், கிடைக்க வழிசொல்லும் விதமாகவும் அமைந்துள்ள பாடல்.


எந்த பாவங்களை செய்தாலும் அது தீர்ந்து விடும், அல்லது அது தீர ஒரு பரிகாரம் கிடைத்துவிடும் ஆனால், அவனடியாரை பழிப்பது போன்ற பாவம் தீர்வதற்க்கு எந்த வழியும் பரிகாரமும் இல்லை. அதை செய்பவர்கள் எப்போதும் மோசமான நரகத்தில் வீழ்ந்து கிடப்பர் என்று எச்சரிப்பவர், நரகம் அதுவும் மோசமான நரகம் என்றும், வாழ்க்கை மோசமாகும் என்றும் இரு பொருளில் கொள்ளலாம்.

இந்த மானிட ஜென்மம் காணகிடைக்காதது, அவ்வாறு கிடைத்த ஜென்மத்தை களிப்பது இது போன்ற வல்வினை செய்தா களிப்பது, கழிப்பது? நீங்கள் பணிகளுக்கு இயலாதவனாய், முடவனாய், பிறந்தாலும் மோக்ஷத்தை அடைய தடையேதும் இல்லை, ஒருமுறையேனும் சொல்லிவிடு அதுவே போதும் என்கிறார். இதே போல் மேலும் ஒரு பாடலில் மனிதனாக பிறந்தவன் தான் கொட்டாவி விடும் போதாவது ‘ராம்’ என்று சொன்னால் அவனை நினைத்து வழிபட்டால் அதுவே போதும் என்றும் சொல்கிறார்.

சிலர் தாம் எல்லாம் அறிந்து விட்டோம் இனி எதுவும் கற்க, காண வேண்டியதில்லை என்று எண்ணுவர், அவர்களை பார்த்து சொல்லும் படியாகவும், மேலும் சிலர் கிடைத்த எதோ ஒன்றை வைத்து இதுவே எல்லாம் என்று விவாதம் செய்வர் அவர்களுக்கு அறிவுறை சொல்லும் விதமாகவும் அமைந்துள்ளது அடுத்த சரணம். அய்யாமார்காளே, அம்மாமார்களே என்பதை ஒரு வார்த்தையில் ஓய் என்று விளிக்கிறார், வீட்டை (எல்லாம்) அடைந்து விட்டோம் என்று இறுமாப்புடன் வெறு வார்த்தைகளை பேசி வாழ்வை கழிக்க கூடாது, அப்படி ஒரு கிடைப்பதற்க்கறிய கிடைத்த (மெய்) வீட்டை தந்தவனை என்றென்றும் வணங்க வேண்டும் என்றும், மேலும் உயரிய நிலைகள் கிடைக்கவும், கிடைத்தது நிலைக்கவும் அவன் திருநாமத்தை என்றென்றும் சொல்லி வரவேண்டும் என்றும் சொல்கிறார்.

விசனத்திற்க்கு ஒப்பான இந்த மாயையில் அகப்பட்டு காலத்தை ஏன் வீணாக போக்குகிறீர்கள், அதிலிருந்து விடு பட (என் குருவான) வடபத்ராரியர் போற்றுகின்ற அந்த நடன கோபாலனின் நாமத்தை உறைப்பீர், எல்லாம் இனிதாக, நன்றாக வைகுண்டம் சேர்வீர்.

Wednesday, June 28, 2006

179: விரைந்து வந்து காட்சி தருவாய்...

ஸெணமவி ஸேவதீ3 ஸெரிர் வெக்ள கெரி தொர
ஸெர மிள்விலேத் ஸீன் திரயி (தொர ஸெர) (ஸெணமவி)

அநுபல்லவி
3ணாலைடா3 ஹாத் எமாக் த4க்கிமீ தொகொ ஹொயேஸ்
மொந்நுதொ2வி ஸ்ரீ லக்ஷ்மிதே3வி ஸெர தூ நிக்ளி (ஸெணமவி)

சரணு
ஸா க்ருபஸா யே ஸம்ஸார் மீ கொ2ப்பா3க் த3டு
ஸாநாஜியெத் மொகொ கோட் வாடு
ஸ்ரீ கேஸவா தொரவிநா க3திநீ: யேட் ஸெய்லே
ஸ்ரீலக்ஷ்மி தே3விஸெர அவிமொகொ தூபொ3வ்லே (ஸெணமவி)

ஸ்ரீ ராமா ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்ரீ கோ3பாலா
ஸ்ரீ ஹரியே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி
தே3மாய் ஹொய்யவி பதா3ல் கோ3 தூ தே3ரெஸ்தா2ம்
தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் (ஸெணமவி)

த்யே விர்ஜாநெத்தி3ம் பு3டி3 தேட்
தி3வ்யரூபு க2டி3 மீ தொக கொ2ப்பா3க் ஸவு
த்யே விர்ஜாநெத்தி3 வாடு தே3நவமெநி பொ3வரேஸ்
தேவி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி அவி தூ ஏடு (ஸெணமவி)

நடனகோ3பாலா தொர நாயகிந் ஸெர மிளி
நசி கௌ3னாருக் ஜாய் பாப் து4ளி
வடபத்ரார்யு வாஸுதேவுஸ் தே3வ்மெநி வசெஸி
வாமன ஸ்ரீலக்ஷ்மி தே3விஸெர நிக்ளி (ஸெணமவி)


ஸெணம் அவி ஸேவ தீ3 - சீக்கிரம் வந்து தரிசனமளித்து
ஸெரிர் வெக்ள கெரி - இந்த உடலைத் தூய்மை செய்து
தொர ஸெர மிள்விலேத் - உன்னுடன் கூடும் படி அருள் செய்தால்
ஸீன் திரயி - என் இளைப்புகள் எல்லாம் தீரும்

3ணா லைடா3 ஹாத் - தண்டனைகள் தருவதற்காக கோலைக் கையில் வைத்திருக்கும்
எமாக் த4க்கி மீ - எமனைக் கண்டு பயந்து நான்
தொகொ ஹொயேஸ் - உனக்கே ஆனேன்
மொந்நு தொ2வி - மனம் வைத்து
ஸ்ரீ லக்ஷ்மிதே3வி ஸெர - தேவி ஸ்ரீ லக்ஷ்மியுடன்
தூ நிக்ளி (ஸெணம் அவி) - நீ கிளம்பி (விரைவில் வந்து)
ஸா க்ருப ஸா - அப்பா (ஐயனே) பார் என்னை தயை கூர்ந்து பார்
யே ஸம்ஸார் - இந்த ஸம்ஸார ஸாகரத்தை
மீ கொ2ப்பா3க் த3டு - நான் எப்போது தாண்டுவேன்
ஸாநா ஜியெத் - நீ பார்க்காமல் போனால்
மொகொ கோட் வாடு - எனக்கு என்ன (எது) வழி?
ஸ்ரீ கேஸவா - கேஸ்வா,
தொர விநா க3தி நீ: - உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை
யேட் ஸெய்லே - இங்கே பார்
ஸ்ரீலக்ஷ்மி தே3வி ஸெர - (உடனடியாக) ஸ்ரீ தேவியுடன்
அவி மொகொ தூ பொ3வ்லே - வந்து என்னை நீ அழைத்துக்கொள்

ஸ்ரீ ராமா - ஸ்ரீ ராமா
ஸ்ரீ க்ருஷ்ணா - ஸ்ரீ கிருஷ்ணா
ஸ்ரீ கோ3பாலா - ஸ்ரீ கோபாலா
ஸ்ரீ ஹரி - ஸ்ரீ ஹரி
யே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி - எல்லா இடங்களிலும் நிறைந்தவனே
தே3மாய் ஹொய்யவி - அப்பொருளானவனே
பதா3ல் கோ3 தூ - பவித்ரமான பாதங்களை
தே3ரெஸ்தா2ம் - அதை தந்தருள
தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர - திருமகள் இலக்குமியுடன்
நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் ( ஸெணம் அவி) - நானிருக்கும் இடத்திற்க்கு கிளம்பி வந்து (விரைவில் வந்து)

த்யே விர்ஜா நெத்தி3ம் - அந்த 'விரஜை' என்னும் புனித ஆற்றில் (வைகுண்டத்தில் ஓடும் ஆறு)
பு3டி3 - நீராடி
தேட் தி3வ்ய ரூபு க2டி3 - அங்கே புனித உருவம் தரித்து
மீ தொக கொ2ப்பா3க் ஸவு - உன்னை நான் எப்போது காண்பேன்?
த்யே விர்ஜா நெத்தி3 வாடு - அந்த ஆற்று வழியை
தே3ன் அவ மெநி பொ3வரேஸ் - கொடுப்பதற்காக உன்னை அழைக்கிறேன்
தேவி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி - திருமகள் இலக்குமியுடன்
அவி தூ ஏடு (ஸெணம் அவி) - இங்கு நீ வந்து (விரைவில் வந்து)

நடனகோ3பாலா - நாக படம் மீது நடமாடியவனே
தொர நாயகிந் - உன் நாயகியரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் (நாயகி என்று சொல்வது அடியாரையும் குறிக்கும்)
ஸெர மிளி - உடன் சேர்ந்து
நசி கௌ3னாருக் - பாடி ஆடுவோருக்கு
ஜாய் பாப் து4ளி - பாபங்கள் உருண்டோடும்
வடபத்ரார்யு - வடபத்ரார்யர் (இவர் ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் குரு)
வாஸுதேவுஸ் - வாஸுதேவனான மஹாவிஷ்ணுவே
தே3வ்மெநி - தெய்வம் என்று
வசெஸி - சொன்னார்
வாமன ஸ்ரீலக்ஷ்மி - வாமனா, மதுசூதனா திருமகளுடன்
தே3விஸெர நிக்ளி - விரைந்து வருவாய்

கண்ணனை எப்போதும் தரிசனம் கண்டவர், எப்போது வருவார், எப்போது தரிசனம் தருவார் என்று கண்ணன் மேல் பித்து பிடித்தது போல் இருந்தார்.
அச்சமயத்தில் அவர் இந்த பாடலை பாடி பரவசப்பட்டார் என்று அவரது சீடர்கள் சொல்வதுண்டு.

கண்ணா சீக்கிரம் வந்து தரிசனமளித்து, இந்த மனகவலை, சோகம் தீர உன்னுடன் கலந்தால் என் வலி தீரூம்.

அப்படி பட்ட தரிசனம் எதற்க்காக வேண்டும், யார் யாருடன் வந்து தரிசனமளிக்க வேண்டும், என்று அனுபல்லவியில் சொல்கிறார்.

எமனின் கைகளால் தண்டனைகளில் இருந்து தப்ப, நான் அவனுக்கு பயந்து, உனக்கே ஆனேன், மனம் வைத்து ஸ்ரீ தேவியான லக்ஷ்மியுடன் கிளம்பி வருவாய்

சரணங்களில் கண்ணனை புகழ்ந்தும், அவனடியவர்களை பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஐயனே என்னை தயை கூர்ந்து பார் இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து நான் எப்போது மீள்வேன் நீ பார்க்காமல் போனால், எனக்கு என்ன (எது) வழி கேஸ்வா, உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை இங்கே பார், (உடனடியாக) ஸ்ரீ தேவியுடன், வந்து என்னை அழைத்துக்கொள்

ஸ்ரீ ராமா, ஸ்ரீ க்ருஷ்ணா, ஸ்ரீ கோபாலா, ஸ்ரீ ஹரியே எல்லா இடங்களிலும் நிறைந்தவனே, அப்பொருளானவனே பவித்ரமான பாதங்களை, அதை தருவிக்க திருமகள் இலக்குமியுடன், நானிருக்கும் இடத்திற்க்கு எழுந்தருள்வாய்

அந்த புனித ஆற்றில் குளித்து, அங்கே புனித உருவம் தரிக்க உன்னை எப்போது காண்பேன், அந்த ஆற்று வழியிலேயே நீ மக்களக்கு காட்சி தருவதற்காக அழைகிறேன், திருமகள் இலக்குமியுடன், நீ இங்கு வருவாய்.

நாகபடம் மீது நடமாடியவனே உன் நாயகியரான ஸ்ரீதேவி, பூதேவியுடன், உடன் சேர்ந்து இருப்பதை பாடி ஆடி அறிவப்பர்க்கு, இருப்பவர்களுக்கு பாபங்கள் உருண்டோடும்
வடபத்ராரர், வாஸுதேவனான மஹாவிஷ்ணுவே (நீயே) தெய்வம் என்று சொன்னார் வாமனா, மதுசூதனா திருமகளுடன் விரைந்து நீ வருவாய்.