Saturday, August 30, 2008

ஹரி என சொல்லுங்கள்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. என்றார் வள்ளுவர்

அத்தகைய அருளை பெறுவதற்க்கும், பெற்றதை காப்பதற்க்கும் என செய்வது என்று தன் சீடர்கள் கேட்க, ஹரி நாமம் கேட்பதே, சொல்வதே பேரின்பம் என்று இருக்கும் நாயகி சுவாமிகள் என்ன சொல்வார், சீடர்களுக்கும், வழிபோக்கர்களுக்கு, அருகில் நிற்க்கும் பெரியோர்களையும், அங்கும் இங்கும் திரியும் மக்களுக்கும் சொல்லும் பாங்காக அமைந்துள்ளது இப்பாடல்.

இதை தன்னுடைய துள்ளல் இசையில் டி.என்.சந்திரசேகர் அவர்கள் பாடியுள்ளார்.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)



ஹரி மெனொபா3 - ஹரியென சொல்லுங்கள்
ஹரி மெனொரே - ஹரியென்பீரே
ஹரி மெனெத் - ஹரியெனச் சொன்னால்
பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே - பாபம் பின்னாங்கால் பிடரியில் பட ஓடுமே

ஜியெதி3ந்நு - சென்ற நாட்கள்
ஜான்த3க் - போகட்டும்
ரி:யெதி3ந்நு - இருக்கும் இந்த நாளில்
அத்தோதி - இப்போதாவது (சொல்லுங்கள்)

தா3துன் அஸ்கி - பற்க்கள எல்லா
லல்னாஸ்திக்காம் - உதிர்வதற்க்குள்
தா3ர் தொ3ங்கர் - வாயிலை மலையாக
கெல்லி த3டுநாஸ்திக்காம் - கொண்டு கடப்பதற்க்குள்
பீ4த் தெ4ல்லிகின் - சுவரை பிடித்து
சல்னாஸ்திக்காம் - நடப்பதற்க்குள்
தளம் நீஸ்தக் - ஆதாரம் இல்லாமல்
தொ3வ்ரொஹொய் - வயோதிகமைடந்து
நசுனாஸ்திக்காம் - ஆடுவதற்க்குள்

தூ4ம்லயெ ஸரீர் - புகைப்பட்ட உடலது
து4ள்னாஸ்திக்காம் - புறப்படுவதற்க்குள்
பு3த்தி3 பெ4ண்டு - அறிவு ஆடாய்
ஹொய் த4மிஜானாஸ்திக்காம் - மாறி ஓடுவதற்க்குள்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி - நதியை கடந்து அக்கரை சென்று
பிஸுனாஸ்திக்காம் - அமர்வதக்குள்
ஜொமைன் - வீட்டு மாப்பிள்ளைகள்
3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் - தோளில் ஏறுவதற்க்குள்

இறப்பதற்க்கு முன்னர் சொல்லிவிடு என்பதை எவ்வளவு நாசுக்காக இறப்பு என்ற சொல்லே வராமல் பாடி முடித்த ஐயனது கவி நிபுணத்துவம் சொல்லி மாளாது.

ஹரி மெனொபா3 ஹரி மெனொரே
ஹரி மெனெத் பாப்தா4ம் தெ4ரி த4மய்ரே (ஹரி)

ஹரியென்பீரே, ஹரியென்பீரே
ஹரியென பாபாம் பயந்தோடுமே (ஹரி)

ஜியெதி3ந்நு ஜான்த3க் ரி:யெதி3ந்நு அத்தோதி (ஹரி)

சென்ற நாட்கள் செல்லட்டும், இருக்கும் இப்போழுதாவது (ஹரி)

தா3துன் அஸ்கி லல்னாஸ்திக்காம்
தா3ர் தொ3ங்கர் கெல்லி த3டுநாஸ்திக்காம்
பீ4த் தெ4ல்லிகின் சல்னாஸ்திக்காம்
தளம் நீஸ்தக் தொ3வ்ரொஹொய் நசுனாஸ்திக்காம்(ஹரி)

பற்களனைத்தும் விழுவதற்க்குள்
வாயிலை மலையாக கடப்பதற்க்குள்
சுவரை பிடித்து நடப்பதற்க்குள்
ஆதாரம் இல்லாமல் கிழவனாய் ஆடுவதற்க்குள் (ஹரி)


தூ4ம்லயெ ஸரீர் து4ள்னாஸ்திக்காம்
பு3த்தி3 பெ4ண்டு ஹொய் த4மிஜானாஸ்திக்காம்
நெத்தி3 ஜெய் கெட்டொத3டி பிஸுனாஸ்திக்காம்
ஜொமைன் த3ணி ஹிங்கு3னாஸ்திக்காம் (ஹரி)

புகைபட்ட உடலதம் விழுவதற்க்குள்
புத்தி பேதலித்து ஓடுவதற்க்குள்
ஆற்றை கடந்து சென்று அமர்வதற்க்குள்
மாப்பிள்ளை தோளில் ஏறுவதற்க்குள் (ஹரி).

Thursday, August 28, 2008

இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்?



நீரில் மூழ்கும் போது நீச்சல் தெரியாதவன் எப்படித் தவிப்பானோ அப்படிப்பட்ட தவிப்பு இருந்தால் இறையை உடனே உணரலாம் என்று அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறைவற்ற அன்பு மட்டுமே துணையாகக் கொண்டு நீரில் மூழ்கி மூச்சுத் திணறும் ஒரு மீனவ பக்தனுக்காக அன்னை காட்சி கொடுப்பதை மிக நன்றாக 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தவிப்பு கொள்வதை 'ஆர்த்தி' என்று சொல்வது வழக்கம். இனி மேலும் தாங்காது; நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிகிறது; உன் கருணைக்காக வேண்டி நிற்கிறேன்; வருவாய் வருவாய் வருவாய் என்று ஏங்கி அழைக்கும் ஆர்த்திப் பிரபந்தமாக இருக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்.

இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடி இங்கே கேட்கலாம். இந்த இடுகையில் சௌராஷ்ட்ரப் பாடலின் வரிகளையும் அதனைத் தொடர்ந்து அடியேன் செய்த தமிழாக்கத்தையும் தருகிறேன். ஒரே மெட்டில் இரண்டு மொழிப் பாடல்களையும் பாடலாம் என்று நினைக்கிறேன். யாரேனும் அதே மெட்டில் தமிழ்ப்பாடலைப் பாடித் தந்தால் அதனை இங்கே சேர்த்துவிடுகிறேன்.



ராமா க்ருப ஸாரே ராக் ஸோட் ரே ஸ்ரீ
ராமா க்ருப ஸாரே (ராமா)

இராமா கருணை செய்வாய் சினம் விடடா ஸ்ரீ
இராமா கருணை செய்வாய் (இராமா)

ராமா க்ருப ஸாரே ப்ரேம ஹோர் அவிகிநு
தே தொர் பதாலுநு தூஸ் மொக் கதி ஸ்ரீ (ராமா)

இராமா கருணை செய் அன்புடன் வந்திங்கு
தா உன் பாதங்கள் நீயே கதி எனக்கு ஸ்ரீ (இராமா)

திந்நூ ஜேடரேஸி தேவு கோ
திந்நூ ஜேடரேஸி
திந்நூ கோ ஜேடரேஸ் மொந்நு தொவி மொர
மொந்நும் அவி மொந்நு துவெ மொதி காரி ஸ்ரீ (ராமா)

நாட்கள் போகின்றன தேவா வீணே
நாட்கள் போகின்றன
நாட்கள் வீணாகின்றன மனம் வைத்து எனது
மனத்தில் வந்து மனம் வெண் முத்தாய் செய் ஸ்ரீ (இராமா)

காய் கரு மீ யேடு ஏ கர்முனுக்
காய் கரு மீ யேடு
காய் கரு மீ யேடு மாய் பாப் மொக் கோநுரே
ஸாய் தூத் லொநி சொரே ரெங்க ஸாயி க்ருப ஸாரே (ராமா)

என்ன செய்வேன் நான் இங்கே இந்த வினைகளை
என்ன செய்வேன் நான் இங்கே
என்ன செய்வேன் நான் இங்கே அன்னை தந்தை எனக்காரடா
ஆடைப் பால் வெண்ணெய் தின்ற ரெங்கசாயி கருணை செய்வாய் (இராமா)


கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா க்ருஷ்ணா செனம்
கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா
கெடோ செர்சிலே நமம் படன கர்யாஸ்தெங்கோ
வடபத்ரஸாயி ஹொய் அவெ நடனகோபாலா (ராமா)

கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா விரைவாய்
கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா
கரை சேர்த்துக் கொள் நாமம் பாடிக் கொண்டிருப்பவர்களை
வடபத்ரசாயி ஆகி வந்த நடனகோபாலா (இராமா)



ஆழ்வார்கள் கண்ணன் செய்ததை இராமன் செய்ததென்றும் நரசிம்மனைப் பாடும் போது நடுவில் இராமனையும் கண்ணனையும் பாடியும் அவதாரங்களில் முன் பின்னாக நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்று உருகுவார்கள். ஆழத் தொடங்கி உருகிவிட்டால் இப்படித் தான் நிகழும் போலிருக்கிறது. பத்தொன்பதான் நூற்றாண்டின் சௌராஷ்ட்ர ஆழ்வாருக்கும் அப்படியே நடக்கிறது.

சினத்தை விடடா இராமா என்று கெஞ்சித் தொடங்கியவர் உன் பாதங்களே கதி என்று சரணம் அடைந்து, 'உன் அருளாலே உன் தாள் வணங்கி' என்று அருளாளர்கள் சொன்னது போல் நீயே மனம் வைத்து என் மனத்தில் வந்திருந்து என் மனத்தைத் தூய்மை செய் என்று பாடுகிறார். நடுவில் கரும வினைகளைப் பற்றி நொந்து கொண்டு என் தாயும் தந்தையுமான ரங்கசாயி நீயே கருணை செய் என்று இராமனிடமிருந்து அந்த இராமன் வணங்கிய அரங்கனிடம் தாவிவிடுகிறார்.

திருவரங்கனைப் பாடியவுடன் கண்ணனின் உருவாக நிற்கும் அழகிய மணவாளன் திருவுருவம் நினைவில் ஆடியது போலும். அதனால் திருவரங்கனைப் பாடும் போதே வெண்ணெய் களவு செய்து உண்ட வாயனையும் பாடிவிடுகிறார். அப்போது தானே இறுதியில் கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகி அழைக்க முடியும்.

இராமனாய், அரங்கனாய், கண்ணனாய் வந்தவனே தன் குருவான வடபத்ரஸாயி ஜீயராகவும் வந்தார் என்று குருவின் கருணையே தலையாயது என்று நிறைவு செய்தார். நாயகி சுவாமிகளுக்கு வடபத்ரார்யராக வந்து அருள் செய்த நடனகோபாலா! நீயே எங்களுக்கும் கருணை செய்ய வேண்டும்!

Thursday, March 20, 2008

கண்ணன் கைத்தலம்பார் கனாகண்ட...

வைணவ மரபில் அப்பனாம் பெருமாளின் திருவருளைப் பெறுவதற்கு முதலில் தேவையானது அன்னையாம் திருமகளின் திருவருள். அப்பனின் கருணையே அம்மையாக வடிவ்ம் கொண்டிருக்கிறது. உலக மக்களுக்கு எல்லாம் தந்தையாக இருக்கும் பெருமானே பக்கம் சாரா பெருமகனாகவும் இருப்பதால் நாம் செய்த நல்லது கெட்டது பார்த்து தான் அவன் தீர்ப்பு அமையும். அவன் உகக்கும்படியாக (மகிழும்படியாக) நாம் செய்தது மிகவும் குறைவே என்று நமக்கு நன்கு தெரியும். அதனால் தாயாரின் திருவடியை முதலில் பற்றிவிட்டால் நாம் தந்தையாரின் திருவடியைப் பற்றும் போது நம் தாய் நமக்காக பெருமாளிடம் பரிந்துரைப்பாள். அப்படி பெருமாளின் ஒரு பக்கத்தில் (பாரிசத்தில்) அமர்ந்து திருவானவள் பரிந்துரைப்பதால் தான் அந்த நற்செயலுக்கு ஸ்ரீபாரிசு ..> சிபாரிசு என்று பெயர் வந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள்.

இந்த மரபினை ஒட்டியே திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரும் முதலில் நப்பின்னை பிராட்டியைச் சரண் புகுந்து அவள் துணையுடன் கண்ணனைச் சரணடைகிறாள். நப்பின்னையை ஒத்த இன்னொரு பிராட்டி தானே கோதையும். அப்படியிருக்க அவரும் நப்பின்னையைச் சரணடைய வேண்டுமோ என்றால் நமக்கு அந்த நல்வழியைக் காட்டியருளத் தானே அவதரித்தாள் கோதை? அந்த அவதார நோக்கத்தின் படி அந்த நல்வழியைத் தானே பின்பற்றி நமக்கு நல்ல ஆசிரியையாக அமைகிறாள்.

இப்படி இருக்க நாம் சரணடைவது யாரை? திருமகளையா? நப்பின்னை பிராட்டியையா? அவர்களைச் சரணடைந்தாலும் பெருமாளின் திருவருள் பெறத் துணையாவார்கள் தான். ஆனால் தாயாகவும் ஆசிரியையாகவும் இருக்கும் ஆண்டாளைச் சரணடைந்தால்? இன்னும் அது பெருமாளுக்கு உகப்பான செய்கையாக இருக்குமே?

அப்படி கண்ணன் கைத்தலம் பற்றும் கனாவினைக் கண்ட சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின் திருவடியைப் பற்றும் வாய்ப்பு எப்போது கிட்டும் என்று இந்தப் பாடலின் மூலம் வியக்கிறார் நாயகி சுவாமிகள்.

இதோ முழுப்பாடலும். பாடலின் வரிகளுக்கான பொருளை அடுத்த இடுகைகளில் காணலாம்.

கண்ணன் கைத்தலம் பார் கனா கண்ட நாச்சியார்
கருணைக்கு ஆவது எப்போது?
புண்ணியஸ்தலமாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
போய் சேருவது எப்போது?

ஆயர் மகன் மேல் ஆசை கொண்டாள் அடிக்கு
அன்பு செய்வது நாம் எப்போது?
வேயர் புகழ் வில்லிபுத்தூருக்கு ஏக நாம்
விருப்பம் வைத்திடுவது எப்போது?

அச்சுதன் அனந்தன் மேல் ஆசை வைத்தாள் மலர்
அடி சிரம் அணிவது எப்போது?
முச்சகம் போற்றும் வில்லிபுத்தூருக்கு
முடிவில் செல்வது நாம் எப்போது?

துளசி வனம் தனில் உலக மகிழ் ஆண்டாளுக்கு
தொண்டு செய்திடுவது எப்போது?
குளம் மூன்றும் ஒன்றாய் வில்லிபுத்தூருக்கு ஏக
உளம் மகிழ்ந்திடுவது எப்போது?

அன்ன நடை எங்கள் ஆண்டாள் திருவடிக்கீழ்
அமர்ந்திடுவது எப்போது?
அன்னவயல் ஸ்ரீ புதுவைக்கு ஏக நாம்
ஆசை வைத்திடுவது எப்போது?

திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள் சே
வடிக்கீழ் புகுவது எப்போது?
திருப்பாவை அருளும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
செல்வது இனி நாம் எப்போது?

குயிலைக் கூவாய் என்னும் குயில் மொழியாள் அடிக்
கீழ் குடி ஆவது எப்போது?
குயிலினங்கள் ஆர் ஸ்ரீவில்லிபுத்தூர் தனில்
குடியேறி வாழ்வது எப்போது?

பெண்மணியாம் கோதை ஆண்டாள் திருப்பாதம்
பேணிப் பணிவது எப்போது?
கண்குளிர அப்பனை வில்லிபுத்தூர் தனில்
கண்டு களிப்பது எப்போது?

இண்டர் நடைக்குணம் கொண்டாடும் ஆண்டாள்
இணையடி பணிவது எப்போது?
அண்டர் முனிவர்கள் தொண்டர் ஏத்தும் புத்தூர்
கண்டு களிப்பது எப்போது?

திருவரங்கேசனை மருவி வாழ் ஆண்டாள் தன்
திருவடை அடைவது எப்போது?
இருநிலம் புகழ் வில்லிபுத்தூருக்கே போவேன் என்று
இயம்பி நடப்பது எப்போது?

நடனகோபாலனை நாடும் கோதைத் திரு
அடி நாடி வாழ்வது எப்போது?
வடபத்ரஸாயி அருளும் வில்லிபுத்தூர்
மருவி வாழ்ந்திடுவது எப்போது?

Wednesday, March 19, 2008

எப்போது எங்கு...

கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
எதுகுலகாம்போ3தி ராகு
ஆதி3 தாளு


பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

பல்லவி
கோன் வேளும் கோட்பொடி3 ஜேடை3கி ஏ ஸரீர் ஜியேத்
கோன் ஜெலுமவைகி கோநொக்கி த்யே கொங்க்ஹால்தி ஜநன் ஹோய்கி (கோன்)

எப்போது எங்கு விழுந்து போகுமோ இவ்வுயிர் போனால்
எந்த ஜென்மம் வருமோ என்னவோ, இதை யாரால் அறியசெய்ய முடியுமோ

அநுபல்லவி
மான்ஹோர் ஐகுநாஸ்தக் கான்தீ3 ஐகோ ஐகோ
த்4யாந் கரோ ஹரி முக்தி தே3நவயி ஸெத்ல (கோன்)


கழுத்து மீது என்றில்லாமல் காது கொடுத்து கேட்ப்பீர்
தியானித்தால் ஹரி முக்தி தர சத்திய (எப்போது)

சரணு
ஸுநொ மஞ்ஜ்ரி கூ4ஸொ:ய் உஜெதி3ந்நு பு4ந்நஹா
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா பொந்தெ3
ஸுக2 து3க்குநு பு2ந்நஹா
ஹந நவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
மொந் ஹரிஹோர் தொ2வொ முக்திதே3யி ஸெத்ல (கோன்)


நாய், பூனை, பெருச்சாளியாய் பிறந்தது நாட்கள் போதாதா
சுகம், துக்கம் போதாதா அடைந்த
சுகம், துக்கம் போதாதா
அடிக்க வரும் எமனை என்ன செய்ய இயலும் உம்மால்,
ஹரிமீது மனம் வைக்க, முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

கள கொ3ரொ ரூப்ஹொய் உஜெதி3ந்நு பு2ந்நஹா
கரெ கருமுன் பு2ந்நஹா பு2ள்ளோ
கரெ கருமுன் பு2ந்நஹா
கெ3ளரவஸ்தெ யெமாக் காய்கரன்ஹோய் தும்ரா:ல்
ஸிள ஹரிக் த4யாந்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

கருப்பு வெள்ளை ரூபத்துடன பிறந்த நாட்கள் போதாதோ
செய்த கர்மங்கள் போதாதோ பின்னால்
செய்த கர்மங்கள் போதாதோ
யமன் கழுத்தை நெறிக்க வரும் போது என்ன செய்ய இயலும் உம்மால்
(பாற்கடலில்) குளிர்ச்சியாய் இருக்கும் ஹரியை தியானித்தால் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)


ஸீன்ஸெர ஜென்முந் க2டெ3 தி3ந்நுந் பு2ந்நஹா
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா யே ஸெய்லுவோ
ஸேநும் கிடொ3 ஹோரெ:நிஹா
பான்ப23ஸ்தெ யெமாக்காய்கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்4யான்கரோ ஸெய்முக்தி தே3ய்ஸெத்ல (கோன்)

இளைப்புகளை தரும் ஜென்மங்களை எடுத்த நாட்கள் போதாதோ
சாணத்தில் புழுவாய் இருந்தனையே பாருங்கள்
சாணத்தில் புழுவாய் இருந்தனையே
ஜாதகத்தை கிழிக்கும் எமன் முன் என்ன செய்யமுடியும் உம்மால்
இளைப்புகளை தீர்க்க தியானிப்பீர் முக்தியளிப்பான் சத்திய (எப்போது)

மொ:டொதெநொ யெநொ மெநேத் ஸொட்டி3 ஜேடை3ஹா யெமுட்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3யெமுட3வேத்
பு2ட்டுநா ரா:ய்ஹா து3ருகு3
வடபத்ரார்யுநு க்ருபஹால் மொ:டொ மந்தூர் அப்3பே3ஸ் மொகொ
நடனகோ3பாலூஸ் தே3வ் நஜ்ஜாநகோநைகொ (கோன்)

அவன், இவன் பெரியவன் எனச் சொன்னார் விடமாட்டான் எமன்
உடையாமல் போகுமோ இப்பானை எமன் வந்தால்
உடையாமல் போகுமோ இப்பானை
வடபத்ரர் கிருபையினால் பெரியமந்திரம் எனக்கிட்டியது
நடனகோபாலனே கடவுள் கெட்டு விடாதீர் கேளும் (எப்போது)