Monday, December 26, 2005

87 - மனமே! என்றும் எங்கும் அவனை நினை.

மனம் ஒரு குரங்கு என்று தான் சொல்கிறார்கள். அது மது அருந்திய குரங்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள். அது உண்மை. மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றிற்கு தாவும் வேகத்தையும் மலரை நினைத்த மறுவினாடி மலத்தை நினைப்பதையும் பார்த்தால் அது உண்மையென்று நன்கு விளங்கும்.

மனமே எல்லா பந்தங்களுக்கும் காரணம் என்றும் அதுவே பந்தங்கள் நீங்குவதற்கு துணைசெய்யும் கருவிகளில் சிறந்தது என்றும் பெரியோர் சொல்வர். எத்தனைத் தான் நல்ல விஷயங்களைப் படித்தாலும் மனதின் துணை இல்லையென்றால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. நல்ல விஷயங்களைப் படித்தும் கேட்டும் பார்த்தும் உணர்ந்தும் முடிந்தவுடனேயே மனம் தன் வழக்கப்படி கெட்ட விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது.
அதனால் தான் மனதிற்கு உரைப்பதாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள் அருளாளர்கள்.

ஹுடினிம் பிஸினிம் சல்னிம் ஹோங்கும்
நடன கோபால் த்யான் சொந்நகோ மொந்நு

ஹுடினிம் - எழும் போதும்

பிஸினிம் - அமரும் போதும்

சல்னிம் - நடக்கும் போதும்

ஹோங்கும் - தூங்கும் போதும்

நடனகோபால் த்யான் சொந்நகோ மொந்நு - நடனகோபாலனின் தியானத்தை விடாதே மனமே.

Saturday, December 03, 2005

70: உஞ்சவிருத்திப் பாட்டு

நாயகி சுவாமிகள் மதுரையில் வசிக்கும் போது உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்ந்து வந்தார். பக்தியும் நற்குணங்களும் கொண்ட இல்லறத்தார் வீடுகளுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைப் பெறுவது தான் உஞ்சவிருத்தி. அப்படி உஞ்சவிருத்திக்குச் செல்லும் போது இறைவன் நாமத்தைப் பாடிய படியும் நல்லவழிகளை போதித்தபடியும் செல்வது வழக்கம். மக்களுக்கு நல்வழி காண்பிப்பதற்கு இதை ஒரு நல்லவழியாகக் கொண்டிருந்தனர் மகான்கள். அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாடியது இந்த பாடல்.

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
பக்திஹோரு தந்தனி கல்னோ
முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ மூலா
முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ - இறைவனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

பக்திஹோரு தந்தனி கல்னோ - பக்தியோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்

முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ - முகுந்தனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.


மூலா முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ - மூலையில் வைத்துள்ள பானையில் இருக்கும் அரிசியை கொண்டுவந்து நீங்கள் அளிக்கவேண்டும்.

ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ
எம தாக் நீ: தந்தனி கல்னோ
காம க்ரோத குண்ணுன் ஜனோ
தமஸ்ஹோனா தந்தனி கல்னோ


ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ - இராமனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

எம தாக் நீ: தந்தனி கல்னோ - எமபயம் இனி இல்லை; நீங்கள் அரிசி கொண்டு வந்து அளிக்கவேண்டும்.

காம க்ரோத குண்ணுன் ஜனோ - காமம், குரோதம் முதலிய குணங்கள் போகவேண்டும்

தமஸ்ஹோனா தந்தனி கல்னோ - தாமதம் செய்யாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ
கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ
கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ
விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ


கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ - கோவிந்தனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ - கோவிந்தா என்று சொல்லியே நீங்களும் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ - கேஸவனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்.

விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ - நம்பிக்கையோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ
லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ
பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ
ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ


அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ - அச்சுதனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ - சலித்துக்கொள்ளாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ - அன்புடன் இறைவனைப் பாடவேண்டும்.

ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ - மகிழ்ச்சியுடன் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ
குரு கைங்கர்யமூஸ் ஹொனோ
புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ
மொரி உஜுநா தந்தனி கல்னோ


ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ - ஹரியின் நாமங்களையே எதிர்பார்க்கவேண்டும்.

குரு கைங்கர்யமூஸ் ஹொனோ - குருவின் சேவைகளே ஆகவேண்டும்.

புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ - புளியம்பழம் இந்த உடல்; இதை உணரவேண்டும்.

மொரி உஜுநா தந்தனி கல்னோ - இறப்பு பிறப்பு இவைகளில் இருந்து விடுபட நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ
நடனகோபாலுக் தந்தனி கல்னோ
ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ
கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ


வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ - நம் குருநாதரான வடபத்ரார்யரின் வழியை அறியவேண்டும்.

நடனகோபாலுக் தந்தனி கல்னோ - நடனகோபாலனுக்கு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ - இன்னும் என்ன செய்யலாம்; இன்னும் என்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து தருமங்களையே கொடுக்கவேண்டும்.

கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ - கரையேறுவதற்கு நீங்கள் வரவேண்டும்.