Tuesday, November 22, 2005

59: எல்லா கஷ்டமும் தீர வழி?

நாம் எத்தனையோ காரியங்கள் செய்கிறோம். அதன் பலனாய் இன்பமும் துன்பமும் அனுபவிக்கிறோம். எல்லையில்லா இன்பம் அனுபவிக்க ஏதாவது வழி இருக்கிறதா? இருக்கிறது என்கிறார் நாயகி சுவாமிகள்.

கைங்கர்யம் கிங்கர்யம் காம்ஸாஜா மெனஸ்தெனஸ்கி
கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன்
கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ.

கைங்கர்ய கிங்கர்யம் காம் ஸாஜா மெனஸ்தெனஸ்கி - சேவையாவது கீவையாவது; உன் வேலையைப் பார் என்பவர்கள் எல்லாம்

கருமு ராணுமு ஸம்டி கெஷ்டம் பொந்திலேது ரா:ன் - நல்வினைத் தீவினைப் பயன்கள் என்னும் கருமக் காட்டிலே மாட்டிக்கொண்டு கஷ்டம் அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.

கைங்கர்யமூஸ் கத்கொ கருமு ராணு கடிலிஜாய் அத்தொ - மக்களுக்குச் செய்யும் சேவையே அரிவாள்; கருமக் காட்டை வெட்டிக்கொண்டு போகும் இப்போதே.


மக்கள் தொண்டே மகேசன் தொண்டு - ஆதலினால் தொண்டு செய்வீர் உலகத்தீரே; அக்தன்றோ இவ்வுலகில் தலைமை இன்பம்.

11 comments:

Anonymous said...

We're all going behind Geetha which is in Sanskrit when we have everything being explained in our mother tongue itself...great quotes about Mankind...

Kumaran sir, pls. try to add these songs in your list of to-be-published ones...

1. Raam bhajana kaari monnu
2. Guru dhyaan kaari monnu
3. Monnu baare hari menno baare
4. Bhagavat naamamu gavle jano

Hemapriya Thoppen

சிவா said...

//**மக்களுக்குச் செய்யும் சேவையே அரிவாள்; கருமக் காட்டை வெட்டிக்கொண்டு போகும்*// ரொம்ப அழகாக உவமை. நிறைய சேவை செய்பவர்களுக்கு பெரிய அருவாளா கெடைக்குமோ :-)

தி. ரா. ச.(T.R.C.) said...

Dear Kumaran,
intha padalayum athan arthathayum parkum pothu Akshya Krishnan than kan ethiril nirkirar.ooru nalla MANITHARAY adayalam katiyathrku nandri TRC

தி. ரா. ச.(T.R.C.) said...

Dear kumaran,
pani nimithamaga mumbay 3 natkal selkiren. please grant me leave of absence for three days. TRC

குமரன் (Kumaran) said...

பாடல்களின் பட்டியல் கொடுத்ததற்கு நன்றி ஹேமப்ரியா. அந்தப் பாடல்கள் எல்லாம் என் பட்டியலில் ஏற்கனவே உள்ளன. ஒவ்வொன்றாய் எதிர்காலத்தில் வரும்.

//We're all going behind Geetha which is in Sanskrit when we have everything being explained in our mother tongue itself.//

இந்த சென்டிமென்ட் எல்லாருக்கும் இருக்கும் போல் இருக்கிறது. தமிழர் நிறைய பேர் பகவத் கீதையையும் திருக்குறளையும் ஒப்பிட்டு இதே கருத்தை என்னிடம் கூறியிருக்கின்றனர். உண்மை ஒன்று தான். அதை எந்த மொழியில் சொன்னாலும் உண்மை உண்மைதான். அதனால் அவரவர் தமதமது தாய் மொழியில் உள்ளதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது தான். மற்ற மொழி இலக்கியங்களை உயர்த்தி தாய்மொழி இலக்கியங்களைத் தாழ்த்தினால் தான் தவறு. :-)

குமரன் (Kumaran) said...

//நிறைய சேவை செய்பவர்களுக்கு பெரிய அருவாளா கெடைக்குமோ//

சிவா. நிச்சயம் கிடைக்கும். ஆனால் சேவை செய்கிறோம் என்ற தற்பெருமையும் கர்வமும் வந்துவிட்டால் அந்த அரிவாள் மொக்கையாகப் போய்விடும். அப்புறம் கருமக்காட்டை வெட்டமுடியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டியது தான். :-)

Anonymous said...

Well said kumaran jee, your words are chord-striking ones. Truth is truth; language is immaterial!

Hemapriya Thoppen

G.Ragavan said...

// சிவா. நிச்சயம் கிடைக்கும். ஆனால் சேவை செய்கிறோம் என்ற தற்பெருமையும் கர்வமும் வந்துவிட்டால் அந்த அரிவாள் மொக்கையாகப் போய்விடும். அப்புறம் கருமக்காட்டை வெட்டமுடியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டியது தான். :-) //

இது தொடர்பாக ஒரு பழைய கதை இருக்கிறது. அதை என் பாணியில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். சில பொழுதுகள் கழித்து முடிந்ததும் இடுகிறேன்.

குமரன் (Kumaran) said...

//இது தொடர்பாக ஒரு பழைய கதை இருக்கிறது. அதை என் பாணியில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். சில பொழுதுகள் கழித்து முடிந்ததும் இடுகிறேன்//

இராகவன். நட்சத்திர வாரத்திலேயே இடப்போகிறீர்களா இல்லை வருங்காலத்திலா?

Anonymous said...

The beauty is we have gita in our sourastram, written superbly by K Ve Padmanabha Iyer. It will easily rival Sanskrit slogas. I have a copy of the book and read a couple of times. It is a bit tough to start with as there are plenty words that sound more like sanskrit than sourashtra. Of course it is said that sourashtra is one of the five languages that have been used to create sanskrit. Sanskrit means a cultured language. please if you find time, just go through our gita. I am told that Padmanabha Iyer was an exponent in gita and his recital and understanding of the slogas had drawn appreciation even from Mahatma Gandhi, when the father of the nation visited Madurai a couple of days before he started the historic salt satyagrah, I think somewhere near tuticorin. I feel everyone of us should read gita.
k p subramanian
kopulas@rediffmail.com
have a good day.

குமரன் (Kumaran) said...

அன்பு சுப்ரமணியன் சார், உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. பத்மனாப ஐயரின் சௌராஷ்ட்ர கீதையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படித்ததில்லை. அடுத்த முறை மதுரைக்குப் போகும் போது வாங்கிப் படிக்க முயலுகிறேன்.

சமஸ்கிருதம் தோற்றுவிப்பதற்கு எடுத்துக்கொண்ட ப்ராகிருத மொழிகளில் சௌராஷ்ட்ரத்தின் முந்தைய தோற்றமான சௌரசேனியும் ஒன்று என்பதைப் படித்திருக்கிறேன். கண்ணன் துவாரகையை ஆண்ட போது அங்கு வழங்கி வந்த மொழி சௌரசேனி; அதனால் கண்ணன் பேசிய மொழி பழம்சௌராஷ்ட்ரமான சௌரசேனியாய் இருக்கலாம் என்றும் படித்திருக்கிறேன்.

காந்தி மகான் சௌராஷ்ட்ர கீதையைக் கேட்டு அனுபவித்தார் என்பது எனக்குப் புதிய செய்தி. மதுரை காந்தி திரு. நாட்டாண்மை மல்லி சுப்புராமன் அவர்களின் வீட்டிற்கு மகாத்மா வந்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

உங்களுக்கு மின்னஞ்சல் (இமெயில்) அனுப்பியிருக்கிறேன். தயைசெய்து படித்துப் பதில் அனுப்புங்கள்.