Monday, December 26, 2005

87 - மனமே! என்றும் எங்கும் அவனை நினை.

மனம் ஒரு குரங்கு என்று தான் சொல்கிறார்கள். அது மது அருந்திய குரங்கு என்றும் சொல்லியிருக்கிறார்கள். அது உண்மை. மனம் ஒரு எண்ணத்திலிருந்து மற்றொன்றிற்கு தாவும் வேகத்தையும் மலரை நினைத்த மறுவினாடி மலத்தை நினைப்பதையும் பார்த்தால் அது உண்மையென்று நன்கு விளங்கும்.

மனமே எல்லா பந்தங்களுக்கும் காரணம் என்றும் அதுவே பந்தங்கள் நீங்குவதற்கு துணைசெய்யும் கருவிகளில் சிறந்தது என்றும் பெரியோர் சொல்வர். எத்தனைத் தான் நல்ல விஷயங்களைப் படித்தாலும் மனதின் துணை இல்லையென்றால் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. நல்ல விஷயங்களைப் படித்தும் கேட்டும் பார்த்தும் உணர்ந்தும் முடிந்தவுடனேயே மனம் தன் வழக்கப்படி கெட்ட விஷயங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறது.
அதனால் தான் மனதிற்கு உரைப்பதாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்கள் அருளாளர்கள்.

ஹுடினிம் பிஸினிம் சல்னிம் ஹோங்கும்
நடன கோபால் த்யான் சொந்நகோ மொந்நு

ஹுடினிம் - எழும் போதும்

பிஸினிம் - அமரும் போதும்

சல்னிம் - நடக்கும் போதும்

ஹோங்கும் - தூங்கும் போதும்

நடனகோபால் த்யான் சொந்நகோ மொந்நு - நடனகோபாலனின் தியானத்தை விடாதே மனமே.

6 comments:

Anonymous said...

Thanks for presenting this post...

This was the first slokam that i learnt... My Grandfather used to chant this frequently... i have seen him chanting this during his every action and insisted us to do so... Im very happy to see this song getting into the net and thus it would reach all nooks and corners of the world...

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்னது மிகச்சரி. சௌராஷ்ட்ரர்கள் கற்றுக்கொள்ளும் முதல் நாயகி சுவாமிகளின் பாடல் இதுவாகத் தான் இருக்கும். எளிமையாகவும் அதே நேரத்தில் ஆழ்ந்த கருத்தும் கொண்ட பாடல். நானும் பல நேரங்களில் மனதில் முணுமுணுக்கும் பாடல் இது. என் மகளுக்கும் இந்தப் பாடல் தான் முதலில் கற்றுகொடுக்கப் போகிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

குமரன் இதைத்தான் தியாகராஜரும் மனசு நில்ப சக்தி லேக போதே மதுர கண்ட வினவி பூஜ எமிரா என்கிறார் மனசை கட்டுபடுத்தாமல் ம்ணி அடித்து பூஜை செய்து என்ன பயன். அன்பன் தி. ரா ச

குமரன் (Kumaran) said...

உண்மைதான் தி.ரா.ச.

Anonymous said...

Please put up our swamy's guru saranam. That is 'guru theyan kari monnu' song. This is perhaps the best one could have on a guru in all languages. A notch better than our other great Venkataramana Bhagavathar's guru saranam bhajare mannasa guru saranam bhajare on Thiagrayar Swamy (one of Carnatic trinity). Understand and follow Guru Theyan song to the letter, Mukthi, motcham or vaiguntam will be yours. None to beat the anu pallavi in which he has used the right word 'sath guru theyan'. Sath guru means 'unnmaiyana guru'. Who is a true guru? It requires a big explanation (short on time for that). At the basic level it tells that all those who have taken sanyas can't become gurus for all. Then the four saranams aptly describe the four levels of a human being — physical, mental, emotional and sub-consious. It is something mind-boggling one can get all the details in a nutshell in a song, aptly dedicated to a guru, who is none but the ultimate.
K P Subramanian
have a good day

குமரன் (Kumaran) said...

Dear Sri. Subramanian.

Next posting will be on the 'Guru Dhyaan Kaari Monnu' song only. Thanks for the suggestion. I agree that is the best one. I should have started with that song first. I will start the English blog with this song.

Thanks for all the additional information. I will try to understand that song with your pointers in mind.