Friday, August 05, 2011
தொண்டு என்னும் கரும்பு
ஆழமான கருத்துகள் கொண்டு இனிமையான எளிதான பாடல் இது.
பல்லவி
க2ள்ளி க2வொ க2ள்ளி க2வொ--நிச்சு
கைங்கர்யம் மெனஸ்தான் கொப்பு3 க2ள்ளி க2வொ [க2]
எடுத்து உண்ணுங்கள் எடுத்து உண்ணுங்கள் - தினம்
தொண்டு என்னும் கரும்பு எடுத்து உண்ணுங்கள் (எ)
அநுபல்லவி
கரெ கர்முன் த4மய்
ஹரிக் பாய்ம்பொடி3 பொ3வொ துமி [க2]
செய்த வினைகள் ஓடும்
ஹரியை வணங்கி அழையுங்கள் - நீங்கள் (எ)
சரணு
தா3ஸ் ஹோனாஜியெத் மோஸ் அவயி ஹரி
தா3ஸ§நுக் தா3ஸ்ஹொயெத் ஹரி க்ருபகரயி
தொ3ங்க3ர் ராணும் ஹிங்க3ன் வேஸ் நீ:
தொ3ங்க3ர் அங்க்3ளிதெ4ரெ ரெங்கா3க் ஸெங்கு3 ஸவொ யேட்[க2]
தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே
காடு மலை ஏறத் தேவையில்லையே - மலை
விரல் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)
மத்திம் உஜி மத்திம் ஹொடி3 மத்திமூஸ்ஜாய் ஸெரிர்
ப4க்தி கிஸொதி கரொ
வடபத்ரஸாயி ஹொய்கிநு மொகொ
நடனக்ருஷ்ண தா3ஸ§ந் ஜொவளும் ஜெய் [க2]
மண்ணில் பிறந்து மண்ணில் வளர்ந்து மண்ணிலே போகும் உடல்
பக்தி எப்படியாவது செய்யுங்கள்
வடபத்ரசாயி ஆகி என்னை
நடனகிருஷ்ண தாசர்கள் உடன் கொண்டு சென்று (எ)
இந்தப் பாடலை டி.எம். சந்திரசேகர் குரலில் இங்கே கேட்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான பாடல். பல முறை நான் முனுமுனுக்கும் பாடல் இது.
அதிலும் இவர் பாடியிருக்கும் மெட்டு இன்னும் கூடுதலாக நம்மைக் கவர்ந்து பாட வைக்கும். இல்லையா சிவமுருகன்?
பாடியவர் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.
அண்ணா,
தன் துள்ளல் இசையுடன் பாடியவர் பெயர் டி.எம்.சந்திரசேகர்.
http://srimannayagi.org/tmc.htm
நன்றி சிவமுருகன்.
Post a Comment