Saturday, December 03, 2005

70: உஞ்சவிருத்திப் பாட்டு

நாயகி சுவாமிகள் மதுரையில் வசிக்கும் போது உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்ந்து வந்தார். பக்தியும் நற்குணங்களும் கொண்ட இல்லறத்தார் வீடுகளுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைப் பெறுவது தான் உஞ்சவிருத்தி. அப்படி உஞ்சவிருத்திக்குச் செல்லும் போது இறைவன் நாமத்தைப் பாடிய படியும் நல்லவழிகளை போதித்தபடியும் செல்வது வழக்கம். மக்களுக்கு நல்வழி காண்பிப்பதற்கு இதை ஒரு நல்லவழியாகக் கொண்டிருந்தனர் மகான்கள். அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாடியது இந்த பாடல்.

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
பக்திஹோரு தந்தனி கல்னோ
முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ மூலா
முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ - இறைவனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

பக்திஹோரு தந்தனி கல்னோ - பக்தியோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்

முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ - முகுந்தனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.


மூலா முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ - மூலையில் வைத்துள்ள பானையில் இருக்கும் அரிசியை கொண்டுவந்து நீங்கள் அளிக்கவேண்டும்.

ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ
எம தாக் நீ: தந்தனி கல்னோ
காம க்ரோத குண்ணுன் ஜனோ
தமஸ்ஹோனா தந்தனி கல்னோ


ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ - இராமனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

எம தாக் நீ: தந்தனி கல்னோ - எமபயம் இனி இல்லை; நீங்கள் அரிசி கொண்டு வந்து அளிக்கவேண்டும்.

காம க்ரோத குண்ணுன் ஜனோ - காமம், குரோதம் முதலிய குணங்கள் போகவேண்டும்

தமஸ்ஹோனா தந்தனி கல்னோ - தாமதம் செய்யாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ
கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ
கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ
விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ


கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ - கோவிந்தனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ - கோவிந்தா என்று சொல்லியே நீங்களும் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ - கேஸவனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்.

விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ - நம்பிக்கையோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ
லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ
பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ
ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ


அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ - அச்சுதனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ - சலித்துக்கொள்ளாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ - அன்புடன் இறைவனைப் பாடவேண்டும்.

ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ - மகிழ்ச்சியுடன் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ
குரு கைங்கர்யமூஸ் ஹொனோ
புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ
மொரி உஜுநா தந்தனி கல்னோ


ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ - ஹரியின் நாமங்களையே எதிர்பார்க்கவேண்டும்.

குரு கைங்கர்யமூஸ் ஹொனோ - குருவின் சேவைகளே ஆகவேண்டும்.

புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ - புளியம்பழம் இந்த உடல்; இதை உணரவேண்டும்.

மொரி உஜுநா தந்தனி கல்னோ - இறப்பு பிறப்பு இவைகளில் இருந்து விடுபட நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ
நடனகோபாலுக் தந்தனி கல்னோ
ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ
கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ


வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ - நம் குருநாதரான வடபத்ரார்யரின் வழியை அறியவேண்டும்.

நடனகோபாலுக் தந்தனி கல்னோ - நடனகோபாலனுக்கு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ - இன்னும் என்ன செய்யலாம்; இன்னும் என்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து தருமங்களையே கொடுக்கவேண்டும்.

கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ - கரையேறுவதற்கு நீங்கள் வரவேண்டும்.

34 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

Kumaran,
Intha pattil enakku migavum piditha varigal"puliyam pazham intha udal". Ilam puliyam pinchu tholum sadayum serthu irukkum.Anal pazhutha piraghu Pazham ootil koncham kooda oottathu. Ithil oottuvathu unmaya allathu ottathathu unmaya. Athu polthan nam uadlum uyerum. Ithil serthu irupathu unmaya allathu uadlay vittu aavi oottamal pirivathu unmaya.Anal ondru purigirathu narayana namam unmay nichiyamanathu. anban TRC

supersubra said...

நான் பள்ளி படிக்கும் பொழுது ஹரிதாஸ் சுவாமிகள் மதுரை மீனாக்ஷி கோவில் ஆடி வீதியில் கதா காலட்சேபம் செய்யும் பொழுது இந்த பாடல்களை கேட்ட நினைவு. இது எந்த மொழி (செளராஷ்ட்ராவா). நினைவைக்கிளரியதற்கு நன்றி

குமரன் (Kumaran) said...

TRC சார். சரியான விளக்கம் சொன்னீர்கள். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

வருகைக்கு நன்றி திரு. சூப்பர்சுப்ரா.

ஆமாம். இது சௌராஷ்ட்ர மொழிப்பாடல்தான். ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் பாடியது.

ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள் இந்தப் பாடலைப் பாடியிருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. பஜனை சம்பிரதாயத்தில் நாயகி சுவாமிகள் பாடலைப் பாடுவதை நானும் கேட்டிருக்கிறேன். நாயகி சுவாமிகளின் பெயரில் நடனகோபால நாயகி மந்திர் என்று ஒரு கட்டிடத்தை மதுரை மக்கள் மதுரை மாரியம்மன் தெப்பகுளக்கரையில் கட்டத் தொடங்கிய போது ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் வந்து அடிக்கல் நாட்டினார் என்று செய்தியும் படமும் பார்த்திருக்கிறேன்.

நாயகி சுவாமிகளைப் பற்றி மேலும் அறிய http://sourashtra.com/nayagi/

இந்தப் பாடலை சௌராஷ்ட்ரப் பாடகரான T.M. சௌந்தரராஜன் பாடியுள்ளார். அதுவும் மேலே கொடுத்த வலைப்பக்கத்தில் உள்ளது. நீங்கள் பாட்டை மீண்டும் கேட்டு ரசிக்கலாம்.

rv said...

குமரன்,
ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் பாடிய டோலோத்ஸ்வம் மட்டுமே எனக்க்குத்தெரியும்.

பிரமாதமான ஆல்பம் அது.

குமரன் (Kumaran) said...

இராமநாதன். நீங்க சொன்னது சரி. நானும் அந்த ஆல்பத்தை வச்சிருக்கேன். எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது.

G.Ragavan said...

ஹரிதாஸ்கிரியின் ஆல்பம் ஒன்றை என்னுடைய அத்தை அடிக்கடி கேட்பார்கள். தூத்துக்குடி செல்லும் பொழுதெல்லாம் நானும் கேட்டதுண்டு. அவர் நிறைய ஆல்பங்கள் வெளியிடவில்லையென நினைக்கிறேன். ஏனென்றால் காசட் கடைகளில் அவற்றைப் பார்ப்பதில்லையே.

தி. ரா. ச.(T.R.C.) said...

Dear kumaran,
H.H.Haridoss giriyen 10 cassettes mel ennidam ullathu.miga arputhamana pathivugal.Neengal kuripidum avar
rudraprayg yel jalasamadhi anavar nthane. Avarudan enakku nalla paricheyam undu. CD yem ullathu. Anban TRC

குமரன் (Kumaran) said...

ஹரிதாஸ்கிரி சுவாமிகளுக்கு நிறைய ரசிகர்கள் (?!) இருப்பார்கள் போலிருக்கிறதே, என்னையும் சேர்த்து. பேசாம அவர் பாடுன பாட்டுகளுக்கும் விளக்கம் சொல்ல ஆரம்பிக்கவேண்டியதுதான். என்ன சொல்றீங்க? :-)

குமரன் (Kumaran) said...

இராகவன்,

TRC சொன்னமாதிரி நிறைய கேசட்டுகளும் இசைத்தட்டுகளும் (CD) அவர் பாடிய பாடல்களுடன் கிடைக்கிறது. என்னிடமும் பல கேசட்டுகளும் CDகளும் இருக்கின்றன. போனமுறை பெங்களுர் வந்தபோது (June 2005) Music Worldல் சில வாங்கினேன்.

உங்களுக்கு பிடிக்கும் என்றால் தேடிப் பாருங்கள். கிடைக்கும். தமிழிலும் பாடியிருப்பார்.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

Dear TRC,

ஆமாம். ருத்ரப்ரயாகையில் ஜலசமாதி அடைந்தவரைத்தான் நாங்கள் குறிப்பிடுகிறோம். அவர் எல்லாரிடமும் எளிதாகப் பழகுவார் என்று கேள்விப்பட்டுள்ளேன். நான் அவரைப் பார்க்கும் பாக்கியம் பெறவில்லை. அவர் சிஷ்யரைப் பார்த்துப் பேசியுள்ளேன். எளிமையாகப் பழகினார். நான் சௌராஷ்ட்ரன் என்று தெரிந்ததும் நாயகி சுவாமிகள் பாடல் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டார். அதை வாங்கிக்கொடுப்பதற்குள் அமெரிக்கா வந்துவிட்டேன். இப்போதும் சென்னை செல்லும் போதெல்லாம் அவர் தலைமையில் நாரதகான சபாவில் மாதமொரு முறை நடக்கும் பஜனைக்குச் சென்றுவிடுவேன்.

சிவா said...

குமரன்! இந்த பாடல் இருந்தால் போடலாமே? ""புளியம்பழம் இந்த உடல்; இதை உணரவேண்டும்."" அது என்ன புளியம்பழம்?. விளக்குங்களேன்.

குமரன் (Kumaran) said...

சிவா,

இந்தப் பாடலில் ஒலிவடிவம் மேலே சொன்ன sourashtra.comல் உள்ளது. ஆனால் downloadable கிடையாது. அதனால் என் பதிவில் போட முடியவில்லை.

'புளியம் பழம் இந்த உடல்' - இதற்கு TRC கொடுத்த பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறார். அதனைப் பாருங்கள்.

Anonymous said...

Kumaran,

Intha padalai nan pala murai kettirukkiren, but never haerd the complete song, because enakku niraya wordsukku artham puriyalai. Ungal vilakkum enakku thelivai koduthullathu, nandrigal pala.

Prevgan,
Kumaresh

குமரன் (Kumaran) said...

ஆமாம் குமரேஷ். TMS பாடினதால இந்தப் பாட்டு கொஞ்சம் பாப்புலர் ஆச்சு. எல்லா சௌராஷ்ட்ரர்களும் கேட்டிருப்பார்கள்.

சிவமுருகன் said...

Shri Kumuran, amra vatham likiryo blog bheLi chokkat sE, bhagavat kainggaryam askithenkO abhuna, thura e-mail sourashtrafamily siyes, thura blogya chokkat sE. aski blog chovithi thunga mail kerus.

Sivamurugan.

குமரன் (Kumaran) said...

ஜுக்கு ஸொந்தோஷ் சிவமுருகன். துமி மெள்ளி அம்ர பாஷாம் லிக்கத் காய்? துமி ப்ளாக் அர்ம்பம் கெர்ரியாஸ்; ஹொயெதி ஒன்டெ பதிவூஸ் கெர்ரியாஸ். ஜுக்கு லிக்குவொ.

நன்றிகள் சிவமுருகன். எனது மற்ற வலைப்பூக்களையும் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். உங்கள் வலைப்பூவினைப் பார்த்தேன். ஒரே ஒரு பதிவு போட்டுவிட்டு பின்னர் எதுவும் எழுதவில்லையே. சீக்கிரம் நிறைய எழுதுங்கள். தமிழ்மணத்திலும் சேருங்கள்.

Anonymous said...

God is great. I am really happy to see our swamy's songs on this page. As I stay in Secunderabad (India) I don't get much time to get know what is happening in Madurai. But I used to read swamy's kirtanas as long as I was a bachelor. It makes happy to find that you have taken the initiative as well as trouble to post this song and its meaning in tamil. Our words have specific meanings and it is sometimes very difficult to translate them into exact tamil. I hope you won't mind if I slightly differ from your interpretation of the word purumu pollo (it is not tarmind fruit, but there is a fruit which never ripens and stays green all the time. It is more like the 'ilauv katha kili'. Parrot waits all the time for this fruit to ripen to eat, but it never ripens. We are supposed to leave the body forever, never return. But we keep coming back into the world with a body, because of our karmas. That's the reason why our guru is telling everyone to leave this 'unripe' body.
I came to know that about 45 songs have been recorded in a cd and is being sold at Madurai. I was also told that if you donate Rs 1000 for the mandir, you will given a cd free. I have quite a strong collection of our songs in cassettes and am keen to write them into cds.
Thanks. Have a good day
k p subramanian

குமரன் (Kumaran) said...

ஜுக்கு ஸொந்தோஸ் சுப்ரமண்யன் தா. துமி பிரி பிரி (அடிக்கடி) எல்லெட் அவி சொவ்தி துர அபிப்ராயம் சங்குனோ மெனி மெல்லரெஸ்.

மிக்க நன்றி திரு. சுப்ரமணியன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. புருமு பொள்ளோ என்பதற்கு எனக்குச் சரியான பொருள் தெரியவில்லை என்பதே சரி. ஆனால் நான் படித்த ஆன்மீகப் புத்தகங்களில் சரீரத்தை புளியம் பழம் என்று சொல்லப் படித்திருக்கிறேன். அதனால் அந்த அர்த்தமாய்த் தான் இருக்க வேண்டும் என்று எண்ணி அவ்விதம் பொருள் கூறினேன். நீங்கள் சொல்லும் விளக்கமும் மிக்கப் பொருத்தமாக இருக்கிறது. நாளையே இந்த பொருளுடன் என் பதிவை மாற்றி எழுதிவிடுகிறேன்.

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொன்ன மாதிரி சுவாமிகளின் கீர்த்தனைகள் பல ஒலித்தட்டு வடிவில் பதிக்கப் பட்டு மதுரையில் விற்கப்படுவதாக நானும் கேள்விபட்டுள்ளேன். இப்போது நான் இருப்பது அமெரிக்காவில். அடுத்த முறை மதுரை செல்லும் போது நானும் வாங்க வேண்டும் என்று திட்டம்.

Anonymous said...

I am happy as well as surprised to find the response to my explanation so fast. The explanation fits the bill because our guru has used it in another song which goes this way: poorumu jhaad rahkhe rama oye jeevasthe (the english translation is like the parrot that stays waiting forever on the 'poormu' tree.
Can I take liberty to ask your assistance in spreading the awareness that we sourashtrians belong to a very noble race and we are cut above the rest. We just need to be positive and a bit pragmatic. I have all along been feeling that unless we employ the audio system, we wouldn't be able to reach our people properly and fast. The reason is obvious because there are practically no sourashtrian who can read and write sourastram at a comfortable speed. Then writing our words either in english or tamil is a neck-breaking job, literally. It holds the same for the reader. So to be effective we should use the audio system. Is there any easy way of communication, for instance type an idea and attached it with an audio file. This is possible but the process, to my knowledge is tedious and time consuming. If you have any solution in this regard, that will be of immense help to me and our community.
Thanks again
K P Subramanian
Kouvlan mannen
have a good day

குமரன் (Kumaran) said...

சுப்ரமண்யன் தா. துமி சங்கே 'பொருமு ஜாட் ரஹே ரமொ ஹொயி ஜிவஸ்தெ' மெனஸ்த குருதேவுன் கீத் மீ மெள்ளி ஐகிரேஸ்.

திரு. சுப்ரமணியன் அவர்களே. நீங்கள் சொன்ன 'பொருமு ஜாட் ரஹே ரமோ ஹொயி ஜிவஸ்தெ' என்னும் நாயகி சுவாமிகள் பாடல் வரியினை நானும் படித்திருக்கிறேன். அதனால் நீங்கள் சொல்லும் பொருள் மிக்கப் பொருத்தம்.

சௌராஷ்ட்ரர்கள் மட்டுமின்றி எல்லா இனத்தாரும் நல்ல இனத்தைச் சேர்ந்தவர்களே. ஏற்றத் தாழ்வு ஏன் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. அவரவர்க்கு அவரவர் நல்ல குலத்தைச் சேர்ந்தவர்கள்.

நீங்கள் சொல்லும் ஒலி முறையில் சௌராஷ்ட்ரத்தைப் பரப்புவது, தொடர்பு கொள்வது என்பது நல்ல விஷயம் தான். அதற்குரிய தகவல் தொடர்பு சாதனங்கள் இன்னும் வரவில்லையாதலால் அது வரும் போது நாம் அப்படிச் செய்ய ஆரம்பிக்கலாம். துரதிர்ஷ்ட வசமாக அதனைச் செய்யும் திறமை என்னிடம் இல்லை.

நீங்கள் சொன்னதைப் போல் சௌராஷ்ட்ரத்தைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதுவதும் படிப்பதும் கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் உலகில் எது தான் கஷ்டமில்லை? போன நூற்றாண்டில் வந்த தமிழ் இலக்கியங்களும் நாவல்களும் வடமொழிச் சொற்கள் மிகுதியாய்ப் பெற்று இருந்தன. பின்னர் தனித் தமிழ் இயக்கம் வந்தது. முன்பு இருந்த தமிழ்ச் சொற்களும் புதிய தமிழ்ச் சொற்களும் மீட்டெடுக்கப் பட்டு இப்போது பெரும்பாலும் தமிழிலேயே எழுத முடிகிறது. தொடக்கத்தில் அதுவும் கடினமாகத் தான் இருந்திருக்கும். அது போல சௌராஷ்ட்ரத்தைத் தமிழ் எழுத்துகளை கொண்டோ ஆங்கில எழுத்துகளை கொண்டோ எழுதுவதும் பேசுவதும் முதலில் கடினமாய் இருந்தாலும் போகப் போகப் பழகிவிடும்.

இது வரை நம் சௌராஷ்ட்ர மொழிப் பாடல்களுக்குத் தமிழில் பொருள் எழுதி வருகிறேன். வரும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஆங்கிலத்திலும் பொருள் கூறலாம் என்று எண்ணுகிறேன். அதற்கும் ஒரு தனி வலைப்பதிவு இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். திரு. கே.வி. பதி அவர்கள் ஆங்கில் எழுத்துகளைக் கொண்டு சௌராஷ்ட்ரத்திலேயே எழுதுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதையும் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும்.

தொடர்ந்துப் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். மிக்க நன்றி. மற்ற பதிவுகளில் நீங்கள் இட்டக் கருத்துகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறேன். தயைசெய்து படித்துப் பாருங்கள்.

Anonymous said...

Thanks again for the response. Did I mean that other community people are not good. No, what I meant was what our people must realise is that they aren't inferior to anybody. The worst disease that has been crippling the psyche of our community folks is inferiority complex. That is the reason why I wanted them to know their root. Once they find them, I am sure, they will have a positive outlook on life and world. Prosperity in all sense of the word, like in the olden days, will be ours. To clarify yet again, I never ever underestimate others. To make it interesting here goes a story associated with Sriman Natanagopala Nayaki Swamigal. Here was the saint who informed his disciples that next Vaigunta Ekadesi he would merge with God. Not only that he had chalked up the auspicious time as well. It was a Thursday — the best day for gurus (that was his ultimate greatness). When his body was being carried to the place of his samadhi (he had taken chosen that well in advance), after crossing the river vaigai (you can say near Goripallayam) one muslim had come with a coconut and aarathi to pay his respects. When our surprised elders asked him, he had said "myself and Swamy were disciples of Nagalinga Adigal at Paramakudi. We both learnt sidha yoga. But as god willed, I couldn't keep going, swamy reached the highest level. I knew he was coming this way, so I was waiting." So for me it is "onere kulam oruvane devan".

Anonymous said...

Please read instead of 'here goes story, read 'an ancdote'. Because this incident was told to me by Swami's second or third generation blood relative. I was very young when I heard it from the old uncle.
Thanks
K P Subramanian
Have a good day

குமரன் (Kumaran) said...

Dear Sri. Subramanian,

Obviously I misunderstood your comments. Sorry about that. Thanks for mentioning the small story about Nayaki Swamikal. This is the first time I am hearing it. I will be glad to read more anectodes like this.

pathykv said...

amre samuuham dhere ivarnu yelte blogum vivaad kereti dusro bhaashaakerinuk oppaanaa. tekolega amre web site-unum amre vishayamun likkiyen. Etu Sri Kumaran cokkat likki cokkat naav khdiraas. tisOs thenu likkilEt avandak.
K.V.Pathy.

pathykv said...

This idea of Sri Nayagi Swamigal regarding 'poorumu' fruit can be compre to the mrutyunjaya mantra where the body is referred as ripe cucumber.
Pathy.

குமரன் (Kumaran) said...

Pathy aiyaanu, tumi sangaye mogo melli serkko lagaras. amre samuuham, amre bhaasa ivarnu amre website-unum, amre yahoogroups-unum vivaad kerasthEs sokkat.

mannen dhaa, thumi yahoogroups-um member-gan rhaan meni mellariyo. nhee menath sanguvo. mii thunga email-um ivar sangus.

குமரன் (Kumaran) said...

Good Comparision Sri. K.V. Pathy. Thanks.

Unknown said...

படித்தேன் குமரன்

குமரன் (Kumaran) said...

படித்ததற்கும் அதனைப் பின்னூட்டத்தில் சொன்னதற்கும் நன்றி செல்வன்.

இத..இதத் தான் எதிர்ப்பார்த்தேன். :-)

Anonymous said...

Namaskar Mr.Kumaran,

you are doing valuable work to the community. Keep it up.

I will be sending seperate email to you regarding regarding Sriman Natanagopala nayagi swamigal Keerthans CD.

Ganesh

குமரன் (Kumaran) said...

கணேஷமூர்த்தி, உங்கள் தனிமடல் கிடைத்தது. இன்று மாலை பதில் மடல் அனுப்புகிறேன். தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.