Wednesday, June 28, 2006

179: விரைந்து வந்து காட்சி தருவாய்...

ஸெணமவி ஸேவதீ3 ஸெரிர் வெக்ள கெரி தொர
ஸெர மிள்விலேத் ஸீன் திரயி (தொர ஸெர) (ஸெணமவி)

அநுபல்லவி
3ணாலைடா3 ஹாத் எமாக் த4க்கிமீ தொகொ ஹொயேஸ்
மொந்நுதொ2வி ஸ்ரீ லக்ஷ்மிதே3வி ஸெர தூ நிக்ளி (ஸெணமவி)

சரணு
ஸா க்ருபஸா யே ஸம்ஸார் மீ கொ2ப்பா3க் த3டு
ஸாநாஜியெத் மொகொ கோட் வாடு
ஸ்ரீ கேஸவா தொரவிநா க3திநீ: யேட் ஸெய்லே
ஸ்ரீலக்ஷ்மி தே3விஸெர அவிமொகொ தூபொ3வ்லே (ஸெணமவி)

ஸ்ரீ ராமா ஸ்ரீ க்ருஷ்ணா ஸ்ரீ கோ3பாலா
ஸ்ரீ ஹரியே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி
தே3மாய் ஹொய்யவி பதா3ல் கோ3 தூ தே3ரெஸ்தா2ம்
தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் (ஸெணமவி)

த்யே விர்ஜாநெத்தி3ம் பு3டி3 தேட்
தி3வ்யரூபு க2டி3 மீ தொக கொ2ப்பா3க் ஸவு
த்யே விர்ஜாநெத்தி3 வாடு தே3நவமெநி பொ3வரேஸ்
தேவி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி அவி தூ ஏடு (ஸெணமவி)

நடனகோ3பாலா தொர நாயகிந் ஸெர மிளி
நசி கௌ3னாருக் ஜாய் பாப் து4ளி
வடபத்ரார்யு வாஸுதேவுஸ் தே3வ்மெநி வசெஸி
வாமன ஸ்ரீலக்ஷ்மி தே3விஸெர நிக்ளி (ஸெணமவி)


ஸெணம் அவி ஸேவ தீ3 - சீக்கிரம் வந்து தரிசனமளித்து
ஸெரிர் வெக்ள கெரி - இந்த உடலைத் தூய்மை செய்து
தொர ஸெர மிள்விலேத் - உன்னுடன் கூடும் படி அருள் செய்தால்
ஸீன் திரயி - என் இளைப்புகள் எல்லாம் தீரும்

3ணா லைடா3 ஹாத் - தண்டனைகள் தருவதற்காக கோலைக் கையில் வைத்திருக்கும்
எமாக் த4க்கி மீ - எமனைக் கண்டு பயந்து நான்
தொகொ ஹொயேஸ் - உனக்கே ஆனேன்
மொந்நு தொ2வி - மனம் வைத்து
ஸ்ரீ லக்ஷ்மிதே3வி ஸெர - தேவி ஸ்ரீ லக்ஷ்மியுடன்
தூ நிக்ளி (ஸெணம் அவி) - நீ கிளம்பி (விரைவில் வந்து)
ஸா க்ருப ஸா - அப்பா (ஐயனே) பார் என்னை தயை கூர்ந்து பார்
யே ஸம்ஸார் - இந்த ஸம்ஸார ஸாகரத்தை
மீ கொ2ப்பா3க் த3டு - நான் எப்போது தாண்டுவேன்
ஸாநா ஜியெத் - நீ பார்க்காமல் போனால்
மொகொ கோட் வாடு - எனக்கு என்ன (எது) வழி?
ஸ்ரீ கேஸவா - கேஸ்வா,
தொர விநா க3தி நீ: - உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை
யேட் ஸெய்லே - இங்கே பார்
ஸ்ரீலக்ஷ்மி தே3வி ஸெர - (உடனடியாக) ஸ்ரீ தேவியுடன்
அவி மொகொ தூ பொ3வ்லே - வந்து என்னை நீ அழைத்துக்கொள்

ஸ்ரீ ராமா - ஸ்ரீ ராமா
ஸ்ரீ க்ருஷ்ணா - ஸ்ரீ கிருஷ்ணா
ஸ்ரீ கோ3பாலா - ஸ்ரீ கோபாலா
ஸ்ரீ ஹரி - ஸ்ரீ ஹரி
யே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி - எல்லா இடங்களிலும் நிறைந்தவனே
தே3மாய் ஹொய்யவி - அப்பொருளானவனே
பதா3ல் கோ3 தூ - பவித்ரமான பாதங்களை
தே3ரெஸ்தா2ம் - அதை தந்தருள
தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர - திருமகள் இலக்குமியுடன்
நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் ( ஸெணம் அவி) - நானிருக்கும் இடத்திற்க்கு கிளம்பி வந்து (விரைவில் வந்து)

த்யே விர்ஜா நெத்தி3ம் - அந்த 'விரஜை' என்னும் புனித ஆற்றில் (வைகுண்டத்தில் ஓடும் ஆறு)
பு3டி3 - நீராடி
தேட் தி3வ்ய ரூபு க2டி3 - அங்கே புனித உருவம் தரித்து
மீ தொக கொ2ப்பா3க் ஸவு - உன்னை நான் எப்போது காண்பேன்?
த்யே விர்ஜா நெத்தி3 வாடு - அந்த ஆற்று வழியை
தே3ன் அவ மெநி பொ3வரேஸ் - கொடுப்பதற்காக உன்னை அழைக்கிறேன்
தேவி ஸ்ரீலக்ஷ்மிஸெர நிக்ளி - திருமகள் இலக்குமியுடன்
அவி தூ ஏடு (ஸெணம் அவி) - இங்கு நீ வந்து (விரைவில் வந்து)

நடனகோ3பாலா - நாக படம் மீது நடமாடியவனே
தொர நாயகிந் - உன் நாயகியரான ஸ்ரீதேவி, பூதேவியுடன் (நாயகி என்று சொல்வது அடியாரையும் குறிக்கும்)
ஸெர மிளி - உடன் சேர்ந்து
நசி கௌ3னாருக் - பாடி ஆடுவோருக்கு
ஜாய் பாப் து4ளி - பாபங்கள் உருண்டோடும்
வடபத்ரார்யு - வடபத்ரார்யர் (இவர் ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் குரு)
வாஸுதேவுஸ் - வாஸுதேவனான மஹாவிஷ்ணுவே
தே3வ்மெநி - தெய்வம் என்று
வசெஸி - சொன்னார்
வாமன ஸ்ரீலக்ஷ்மி - வாமனா, மதுசூதனா திருமகளுடன்
தே3விஸெர நிக்ளி - விரைந்து வருவாய்

கண்ணனை எப்போதும் தரிசனம் கண்டவர், எப்போது வருவார், எப்போது தரிசனம் தருவார் என்று கண்ணன் மேல் பித்து பிடித்தது போல் இருந்தார்.
அச்சமயத்தில் அவர் இந்த பாடலை பாடி பரவசப்பட்டார் என்று அவரது சீடர்கள் சொல்வதுண்டு.

கண்ணா சீக்கிரம் வந்து தரிசனமளித்து, இந்த மனகவலை, சோகம் தீர உன்னுடன் கலந்தால் என் வலி தீரூம்.

அப்படி பட்ட தரிசனம் எதற்க்காக வேண்டும், யார் யாருடன் வந்து தரிசனமளிக்க வேண்டும், என்று அனுபல்லவியில் சொல்கிறார்.

எமனின் கைகளால் தண்டனைகளில் இருந்து தப்ப, நான் அவனுக்கு பயந்து, உனக்கே ஆனேன், மனம் வைத்து ஸ்ரீ தேவியான லக்ஷ்மியுடன் கிளம்பி வருவாய்

சரணங்களில் கண்ணனை புகழ்ந்தும், அவனடியவர்களை பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஐயனே என்னை தயை கூர்ந்து பார் இந்த ஸம்ஸார ஸாகரத்திலிருந்து நான் எப்போது மீள்வேன் நீ பார்க்காமல் போனால், எனக்கு என்ன (எது) வழி கேஸ்வா, உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை இங்கே பார், (உடனடியாக) ஸ்ரீ தேவியுடன், வந்து என்னை அழைத்துக்கொள்

ஸ்ரீ ராமா, ஸ்ரீ க்ருஷ்ணா, ஸ்ரீ கோபாலா, ஸ்ரீ ஹரியே எல்லா இடங்களிலும் நிறைந்தவனே, அப்பொருளானவனே பவித்ரமான பாதங்களை, அதை தருவிக்க திருமகள் இலக்குமியுடன், நானிருக்கும் இடத்திற்க்கு எழுந்தருள்வாய்

அந்த புனித ஆற்றில் குளித்து, அங்கே புனித உருவம் தரிக்க உன்னை எப்போது காண்பேன், அந்த ஆற்று வழியிலேயே நீ மக்களக்கு காட்சி தருவதற்காக அழைகிறேன், திருமகள் இலக்குமியுடன், நீ இங்கு வருவாய்.

நாகபடம் மீது நடமாடியவனே உன் நாயகியரான ஸ்ரீதேவி, பூதேவியுடன், உடன் சேர்ந்து இருப்பதை பாடி ஆடி அறிவப்பர்க்கு, இருப்பவர்களுக்கு பாபங்கள் உருண்டோடும்
வடபத்ராரர், வாஸுதேவனான மஹாவிஷ்ணுவே (நீயே) தெய்வம் என்று சொன்னார் வாமனா, மதுசூதனா திருமகளுடன் விரைந்து நீ வருவாய்.

11 comments:

சிவமுருகன் said...

'மதுரையின் ஜோதி' என்ற இந்த வலைப்பூ, வலையகத்தில் முதன் முதலில் தமிழில் கண்ட ஒரு வலைப்பூ, அதே வலை பூவில் என்னாலும் இயண்ற ஒரு பங்களிப்பை தரவேண்டும் என்று எண்ணி அதை குமரன் அவர்களிடம் தெரிவித்த போது, தனக்கே உரிய பெருந்தன்மையுடன் இருகரம் நீட்டி வரவேற்ற அண்ணனை, நன்றி சொல்ல கிடைத்த இந்த வாய்ப்பை கூறி மகிழ்கிறேன்.

நன்றி.

Merkondar said...

படிப்பது சற்று கடினமாகத்தானுள்ளது.

சிவமுருகன் said...

என்னார் ஐயா,

//படிப்பது சற்று கடினமாகத்தானுள்ளது.//

ஆமாம், முதலில் ஒரு பாடல் அதன் விளக்கம் தாய் மொழி சௌராஷ்ட்ரத்தில் தந்துள்ளேன் அடுத்து வரும் சில நாட்கள் ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் தமிழ் பாடல்களையும் இடுகிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். பாடலைப் படிப்பதற்கு உதவியாக கொஞ்சம் வண்ணத்தையும் தடிப்பினையும் சேர்த்திருக்கிறேன். ஒரு முறை படித்தேன். இன்னொரு முறை மெதுவாகப் படித்து என் கருத்துகளைக் கூறுகிறேன்.

தயங்காமல் நீங்கள் அடுத்தடுத்துப் பாடல்களை எடுத்துப் போடுங்கள்.

சிவமுருகன் said...

அண்ணா,
//சிவமுருகன். பாடலைப் படிப்பதற்கு உதவியாக கொஞ்சம் வண்ணத்தையும் தடிப்பினையும் சேர்த்திருக்கிறேன்.//

மிக்க நன்றி.

//ஒரு முறை படித்தேன். இன்னொரு முறை மெதுவாகப் படித்து என் கருத்துகளைக் கூறுகிறேன்.//

கட்டாயமாக. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

//தயங்காமல் நீங்கள் அடுத்தடுத்துப் பாடல்களை எடுத்துப் போடுங்கள். //
நன்றி. இன்றே அடுத்த பதிவும்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். நான்கைந்து பதிவுகளில் போட வேண்டிய பாடல் இந்தப் பாடல். மிகப் பெரிய கருத்துகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அடிகளை எடுத்தாலே ஒரு பதிவு போட வேண்டிய அளவு சங்கதி இருக்கின்றன. மெதுவாக ஒவ்வொரு பதிவாகப் போட்டுச் செல்லலாம் என்று இருக்கிறேன்.

SK said...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் சலித்தேன்

என்ற பாடல்தான் உடனே நினைவுக்கு வந்தது!
பல அரிய நிகழ்வுகளை ஒரேயடியாகச் சொல்லியிருக்கிருக்கிறீர்கள்!
சற்றுக் கனமான பாடல்,
ஆனால், நிறைவான பாடல்.

சிவமுருகன் said...

திரு SK,
//நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் சலித்தேன்

என்ற பாடல்தான் உடனே நினைவுக்கு வந்தது!
பல அரிய நிகழ்வுகளை ஒரேயடியாகச் சொல்லியிருக்கிருக்கிறீர்கள்!
சற்றுக் கனமான பாடல்,
ஆனால், நிறைவான பாடல். //

மிக்க நன்றி. நானும் அடுத்த பதிவிலிருந்து சற்று தடிமன்னை குறைத்து கொள்கிறேன். சில பகுதிகளாக பிரித்து சொல்கிறேன்.

rnateshan. said...

படிப்பதற்கு சிரமமாக இருந்தாலும் ஊன்றி படித்தும் தமிழ் அர்த்தங்களை பார்த்ததும் ஆஹா அருமை!

Anonymous said...

Kannan mel irunda teeraada kaadhalaal nayagi vesham kondu, avarai palavaaru vara alaitha anda mahaanai oru vinaadi kanniliye kondu vandu vitteergal sivamurugan.

Mikka paravasam adainden. Naan idu varai inda paadalai kettade illai. Migavum uthamamaana varaigalai kondulladu inda paadal. Nalla vilakkam alithu irukkireergal. Paadalukku keele padalukkiruya nigalvayum pagirndu kondu ennai magilchiyil aalthi vittergal sivamurugan. Mikka nandri.

Thiru. Kumaran avargalukku pakka balamaaga avar seyyum uthamamana inda paniyai neengal thodarvadu mikka magilchi. Inda uyarnda karuthukkalai undarthum naayagi keerthanaigalai eliya makkal idaye kondu sellum pani sirakka Naayagi swamigal endrun ungalukku thunai purivaar.

Paadalil Lakshmi deviyudan varavendu endru alaipathu, kaviraayarin Ramakathayil varum oru paadal (En Palli kondeer ayya) ninavukku varugiradu. Angeyum kaviraayar, kannanai thirumagaludan viraindu vandu thammai aat kollumaaru vendi iruppaar.

Satrum suyanalam, porul aasai, matra ulaga itchagal illamal kannanin bhakthiyayum, avan thiruvadi mukthiyai mattum kolgayaaga kondirunda Naaygai swamigal pugal endum aliyadirukka sevai seyyum ungal iruvarukkum en vankkangal

Priya

சிவமுருகன் said...

பிரியா அவர்கள் இட்டிருந்த தமிங்கிலத்தில் பின்னூட்டம் தமிழிலும் அதன பதிலையும் இடுகிறேன். ப்ரியா தங்கள் தான் இப்பதிவில் நான் பங்களிப்பதற்க்கு ஒரு முதல் காரணம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

//கண்ணன் மெல் இருந்த தீராத காதலால் நாயகி வெஷம் கொண்டு, அவரை பலவாறு வர அலைத அந்த மஹானை ஒரு வினாடி கண்ணில்லேயே கொண்டு வந்து விட்டீர்கள் சிவமுருகன்.//


பலர் எண்ணுகிறார்கள் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.


//மிக்க பரவசம் அடைந்தேன். நான் இது வரை இந்த பாடலை கெட்டதே இல்லை. மிகவும் உத்தமமான வார்த்தைகளை கொண்டுள்ளது இந்த பாடல். நல்ல விளக்கம் அளித்து இருக்கிறீர்கள்.//


அடுத்தடுத்த பதிவில் இருந்த அண்ணன் குமரன் அவர்களின் விளக்கத்தையும் படித்து பாருங்கள், அருமையாக சொல்லிவருகிறார்.


//பாடலுக்கு கீழே பதிலுக்குறிய நிகழ்வையும் பகிர்ந்து கொண்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் சிவமுருகன். மிக்க நன்றி.//

நன்றி.


//திரு. குமரன் அவர்களுக்கு பக்க பலமாக அவர் செய்யும் உத்தமமன இந்த பணியை நீங்கள் தொடர்வது மிக்க மகிழ்ச்சி. இந்த உயர்ந்த கருதுக்களை உணர்த்தும் நாயகி கீர்தனைகளை எளிய மக்கள் இதையே கொண்டு செல்லும், பணி சிறக்க நாயகி ஸ்வமிகள் என்றும் உங்களுக்கு துணை புரிவார்.//


அவனருளாலே அவனடியை வேண்டினேன். வேண்டுகிறேன். வேண்டுவேன்.


//பாடலில் லட்சுமி தெவியுடன் வரவேண்டும் என்று அழைப்பது, கவிராயரின் ராமகதையில் வரும் ஒரு பாடல் (“ஏன் பள்ளி கொண்டீர் ஐயா”) நினைவுக்கு வருகிறது. அங்கேயும் கவிராயர், கண்ணனை திருமகளுடன் விரைந்து வந்து தம்மை ஆட்கொள்ளுமாரு வேண்டி இருப்பார்.//


கவிராயரின் பாடலை நான் கேட்டதில்லை, கேட்கிறேன்.


//சற்றும் சுயநலம், பொருள் ஆசை, மற்ற உலக இச்சைகள் இல்லாமல் கண்ணனின் பக்தியயும், அவன் திருவடி முக்தியை மட்டும் கொள்கையாக கொண்டிருந்த நாயகி சுவாமிகள் புகழ் என்றும் அழியதிருக்க சேவை செய்யும் உங்கள் இருவருக்கும் என் வணக்கங்கள்.//


அமர காவிய வரிசைகளில் நம் சுவாமிகளின் கீர்த்தனைகளும் சேரும்.


//ப்ரியா.//


உங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றி. மற்ற பதிவுகளையும் இனி வரும் பதிவுகளையும் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.