ஒரு சொல்லை ஓரிரு முறை சொன்னால் அது மறந்து விடுகிறது. ஆனால், அதுவே பல முறை நூறு முறை சொல்லப்படும் போது, அதுவே குணமாக மாறிவிடுகிறது. மாறியகுணம் உங்கள் வாழ்வை மாற்றுகிறது. மாறிய வாழ்வு, உங்கள் சுற்று புறத்தை மாற்றுகிறது. எல்லாவற்றிர்க்கும் ஆரம்பம் நம்மிடம் தான் ஆகவே தான் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் தங்களது மாணவ வம்சாவழிக்கு தரும் ஒரு பெரிய நீதியாக இந்நாமாவளி சொல்லப்படுகிறது.
ஸ்ரீ இராமனை துதிசெய் மனமே
ஸ்ரீ வாமனை கதியென்றிரு தினமே
எமனை அடிக்கும் வில்குணமே
காமனை ஜெயிக்கும்சொல் மனமே
உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான இராமனே வரவேண்டும் ஆகவே அவனை துதிசெய்.
உன்னை காக்க அந்த நாராயணனின் அவதாரமான வாமனனே வரவேண்டும் அவனை கதி என்று இரு.
ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்று வாழ்ந்த இராமனது அறம் (குணம்) தான் எமனையும் காமனையும் வெற்றி கொள்ளும் அறம் ஆகவே அவனை சொல் (வணங்கு), அவனது புகழ் பாடுவாய்.
Wednesday, October 18, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மிக நல்ல பாடல் சிவமுருகன். இந்த வலைப்பூவை நீங்கள் மட்டுமே இன்னும் கொஞ்சம் நாள் கவனித்துக் கொள்ளுங்கள். :)
Post a Comment