கருடாருட வாகனத்தில் அந்த அரங்கனை கண்டால் அடுத்த வினாடியே அவன் வைகுண்ட வாசம் பெருகிறான், அப்பேற்பட்ட பேற்றை பெற என்ன வழி என கேட்ப்பவர்களுக்கு சுவாமிகள் தரும் ஒரு அறிவுரையாக, இப்பாடலை பாடியுள்ளார்.
இப்பாடல் தமது சங்கீத குரலில் திரு. ராமரத்தினம் அவர்கள் பாடியுள்ளார்.
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி
பொ3வொ
ஆரபி4 ராகு
ஆதி3 தாளு
பல்லவி
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)
அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)
சரணு
மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)
அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)
வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)
இஸொயேட் ஸதா3 ஸ்ரீ கேஸவாமெனி பொ3வொ
பிஸொ திரிஜாய் பாப் ஜாயி (இஸொ)
நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே
அநுபல்லவி
நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)
ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்
சரணு
மகெ3 வரமுனு தே3ய் மாத4வா ஹரி மெனொ
கொகொ3 பு4க்கொ ஸுக்கரி:யாஸ்
சொக்கட்க3தி தே3 ஹரி சூகுன் அண்சிலெமெனொ
தெ3க்கெதா4நுக் ஹிண்டெ3த் தே3வ் க்ருப கோனக்கரய் (இஸொ)
கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்
அக்கரகன் ஸெரிர் ஹிப்பி3ரா:னா து4ளிஜாய் ஸ்ரீ
ஜானகி ரமணா மெனொ
ஜானா பாப் அஸ்கி ஜாய் ஜல்வொ ஸ்ரீ ஹரி பத3ம்
தே3னாவ்மெனி பொ3வ்னாஜியேத் தே3வ் க்ருப கோனக்கரய்(இஸொ)
நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்
வட அப்ப3யி ஸ்ரீ வைகுண்டும் மெனி அம்ர
வடபத்ரார்யுநு வசிரி:யாஸ் ஸ்ரீ
நடனகோ3பால ஸ்ரீ நரஹரிமெனி நசொ
தி4டவ்கன் கெ3ருடோ4ர் அவி தே3வ் க்ருப கரய் கரய் (இஸொ)
வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான்
பல்லவி
நித்தமும் சர்வகாலமும் கேஸவா என அழையுங்கள்
பித்தம் தெளியுமே பாவம் தொலையுமே. (நித்தம்)
அநுபல்லவி
ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்(நித்தம்)
சரணு
கேட்ட வரமளிப்பான் கேஸவா என்று சொல்லுங்கள்
ஏன் பட்டினி கிடக்கிறீர்கள்
நல்ல கதி தந்திடுவென ஹரி குற்றங்களை பொருத்திட சொல்லுங்கள்
கண்டபடி அலைந்தால் கண்ணன் எப்படி கருணை புரிவான்(நித்தம்)
நிலைபெயாராது இவ்வுடல் நிற்க்காது உருண்டோடும் ஸ்ரீ
ஜானகி ரமணா என சொல்லுங்கள்
தொலையாத பாபமும் தொலைந்தோடும் ஹரியின் பாதார விந்தத்தை
தரசொல்லி அழைக்காமலிருந்தால் அவனெப்படி கருணை புரிவான்(நித்தம்)
வைகுண்டத்தில் நமக்கும் இடம் கிடைக்கும் என நம்
வடபத்திரர் சொல்லியுள்ளார் ஸ்ரீ
நடன கோபலனே, நரஹரியே என பாடி ஆடுங்கள்
கட்டாயமாக கருடாருட வாகனத்தில் வந்து காட்சி தந்து கருணை புரிவான் (நித்தம்).
Monday, August 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மிக நல்ல பாடல் சிவமுருகன். கேட்கும் போது மனதை உருக்குகின்றது.
சில பிழைத் திருத்தங்கள்:
//நசேரி:யெஸ் கர்முனவி நரஹரி மென்னாஜியேத்
தெ3ஸ் அவ்தார் க2டெ3 தே3வ் க்ருபகோனக்கரய் (இஸொ)
ஆடுகிறான் கர்மவினைகளால் நரஹரி எண்ணாவிட்டால்
தசாவதாரம் எடுத்த தெய்வம் எப்படி கருணைபுரிவான்
//
ஆடுகின்றன கர்ம வினைகள் வந்து; நரஹரி என்று சொல்லாவிட்டால் (நரஹரி என்னாவிட்டால் என்று சொன்னாலும் சரி)
மற்ற இடங்களில் எல்லாம் மிகுந்த கவனம் எடுத்து மிக நன்றாகப் பொருள் சொல்லியிருக்கின்றீர்கள்.
நன்றி அண்ணா,
பிழைகளை திருத்தி விட்டேன்.
சில மாறுதல்களையும் செய்துள்ளேன்.
சௌராஷ்டிரம் தெரியாததால் விளக்கம் எப்படி இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் விளக்கத்தில் சொல்லியிருப்பது சிறப்பு. இது நினைவூட்டும் பாடல் எது தெரியுமா?
கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
தேடுங்கள் கிடைக்குமென்றார்
ஏசு தேடுங்கள் கிடைக்குமென்றார்
சிவமுருகா!
அருமையான ஆரவி.. பொருளுடன் பாடல் மிக ரசித்தேன்.
சௌராட்டிரப் பாடல் கர்நாடக இசையில் அழகாக அமைந்துள்ளது.
Post a Comment