Tuesday, January 02, 2007

கண்ணன் எப்போது வருவானடி??



இன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். மாதங்களின் நான் மார்கழி என்றான் கண்ணன் கீதையில். ஒவ்வொரு மாதத்திலும் மதிநிறைந்த நன்னாள் (பௌர்ணமி) எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதைக் கொண்டு தான் மாதங்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். மார்கழியில் மதி நிறைந்த நன்னாள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் வருகிறது. அதனால் வடமொழியில் மார்கழிக்கு மார்க்கஸீருஷம் என்று பெயர். கண்ணனும் கீதையில் 'மாஸானாம் மார்க்கஸீர்சோஹம்' என்கிறான்.

இந்த நன்னாளில் தான் மதுரையின் ஜோதி எனப் போற்றப்படும் ஆண்டாளின் அவதாரம் நவ யுக ஆழ்வார் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதரித்தார். இந்த நன்னாளில் சுவாமியின் பாடல் ஒன்றை பதிக்க வேண்டும் என்று சிவமுருகன் விரும்பி மின்னஞ்சல் அனுப்பினார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே பாடலைப் பதிக்கிறேன்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்

கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)




நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.

13 comments:

ENNAR said...

ஞானமும் தாஙகளும் நல்ல நல்ல பாடல்களை எங்கிருந்தோ கொண்டு வந்து கொட்டுகிறீர்கள் அருமையாக உள்ளது கேட்க கேட்க இணிக்கிறது காதுகளுக்கு தேன்வந்து பாய்கிறது

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் குமரன்.என்னார் சொல்வது போல நல்லன எல்லாம் பயக்கும் வரிகள்.
என்ன ஒரு சோகம் கண்ணனைக் காணாமல்!
டி.எம்.எஸ் ஐய்யாவின் குரல் மகிமையே மகிமை.

Anonymous said...

Excellent song Kumaran. Thanks for posting it. Wish you and your family a very happy and peaceful New Year.

Kumaresh

ஞானவெட்டியான் said...

கேள்வி ஞானம் மட்டும்தான் இங்கே.
கிடைத்ததை பெட்டியிலிட்டேன். இப்பொழுது கேட்பவர்களுக்குத் தருகிறேன்.
அவ்வளவே.
கேட்கத் தெவிட்டாத குரல் ஆழம்; நெஞ்சைத் தொடுகிறது.
அருமை

தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான பாடல் குமரன்.நாயக நாயகி பாவத்தை நன்கு கொண்டு வருகிறார் ஸுவாமிகள். ஆயர் பாடியில் கண்ணனைப் பிரிந்த கோபியரும் இப்படித்தான் கோபிக கீதத்தில் உருகுகிறார்கள்.

ஷைலஜா said...

பாம்பணைமேல் பள்ளி கொண்ட பரந்தாமன் அல்லவா அவனுக்கு புன்னாகவராளி ராகத்தில் பாடலை அமைத்து சுந்தரக்குரலில் பாடவைத்து
சோகத்தில் எங்களைக்கரைத்துவிட்டீர்களே குமரன்?
ஷைலஜா

குமரன் (Kumaran) said...

நன்றி என்னார் ஐயா.

சிவமுருகன் said...

Thank you Kumarandha for the Song. As I don't have the facility even to view the blogs. I 'll back after some time.

Nice song, Till i did not hear the song.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by the author.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.