நண்பர் சிவமுருகன் நாயகி சுவாமிகளின் அருமையான பாடல் ஒன்றை எடுத்து இட்டுள்ளார். அந்தப் பாடல் மிக ஆழமான பொருள் செறிவு உள்ள பாடல். பலமுறை முதல் நான்கு ஐந்து வரிகள் பாடும் போதே அதன் பொருட் செறிவில் ஆழ்ந்து மயங்கிவிடுவதுண்டு நான்.
நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கிறான் என்று சொல்லும் போது யார் எந்தப் பக்கம் சென்றாலென்ன யார் எப்படி ஆனாலென்ன என்று தொடங்குவார். இது மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்வது போல் முதலில் தோன்றும். ஆனால் அவர் சொல்வது வேறு. மற்றவரை மதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. நம்மைக் காப்பவர்கள் என்று சில பேரை நாம் நினைக்கிறோமே - வைத்த நிதி (வங்கிக் கணக்கு), கணவன்/மனைவி, மக்கள், குலம், கல்வி என்று; அவர்கள் நம்மைக் காக்க வேண்டிய அவசியம் இல்லை; அவர்கள் நம்மைக் காக்காமல் எப்படிச் சென்றாலும் பரவாயில்லை கோவிந்தம் நம்மைக் காக்க காத்திருக்கும் போது - இந்தக் கருத்தைத் தான் முதல் மூன்று வரிகளில் சொல்கிறார்.
கோன் கொங்குட் ஜியெத் காய் - யார் எந்தப் பக்கம் சென்றால் என்ன?
கோன் கிஸொ ஹொயத் காய் - யார் என்ன ஆனால் என்ன?
அம்கோ ஸான் ஹரி ர:த தாக் காய் - நமக்கு நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கும் போது என்ன பயம்?
அடுத்த வரிகளில் இருந்து முன்னர் சொன்னதை விரித்துச் சொல்லத் தொடங்குகிறார்.
முல்லோ பான் லிக்கெ தாநுக் ரா:ய் ரா:ய் - முன்னர் தலையில் எழுதிய எழுத்துப்படி எல்லாம் இருக்கும்
புள்ளோ கரெ போளுந் கா ஸொடி ஜாய் ஜாய் - முன்பு செய்த செயல்களுக்கு ஏற்ப விட்டுப் போவது போகும் போகும்
லேத் அநெ திந்நு ஸெரெத் ஸெரிர் பொடி ஜாய் ஜாய் - கொண்டு வந்த நாட்கள் முடிந்தால் உடல் விழுந்து போகும் போகும்
ர:தோஸி நமம் கான் தீ ஐகுலுவோ - இருக்கும் போதே நாமங்களைக் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளுங்கள்
ஹரி ஸாய் ஸாய் - ஹரி கருணைக் கண் பார்ப்பான்
பஜன யேட் கோந் கரெத் திந்நு ஹோய் ஹோய் - எந்த நாளில் பஜனை செய்கிறோமோ அந்த நாள் நன்னாள் ஆகும்
தேவ் அவி பதால் தேர் மெனி தேய் தேய் - தேவன் வந்து தாள்களை இந்தா என்று கொடுப்பான் கொடுப்பான்
தெக்டா மொந்நு பனி கர்லி - கல் மனத்தை நீர் ஆக்கி (பக்தியால் கரைய வைத்து)
சொக்கட் குண்ணு ஸெந்தோ - நல்ல குணங்களுடன்
ஹரி தியான் திந்நு கோ ஜவல்நாஸ்தக் கரொ - நாட்களை வீணாகப் போக்காமல் ஹரி தியானம் செய்யுங்கள்
புரோ ஜன்மு - பிறப்பெடுப்பது அயர்சியைத் தருவது.
ஒவ்வொரு வரியாக ஆழ்ந்து நோக்கி வந்தால் எத்தனை எத்தனை ஆழ்பொருள் கிடைக்கின்றன என்று பார்க்க முடியும்.
Monday, April 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
//நம்மைப் பார்த்துக் கொள்ள ஹரி இருக்கிறான் என்று சொல்லும் போது யார் எந்தப் பக்கம் சென்றாலென்ன யார் எப்படி ஆனாலென்ன//
சிவா, குமரன்,
யார் என்ன சொன்னாலும்
அஞ்சாதே நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு!
-ஊத்துக்காட்டு வரிகள் நினைவிற்கு வருகின்றன!
கண்ணன் பாட்டில், குமரனைக் கண்ணன் அழைப்பதாக ஒரு சேதி வந்ததே! :-)
//தெக்டா மொந்நு பனி கர்லி - கல் மனத்தை நீர் ஆக்கி (பக்தியால் கரைய வைத்து)//
ஒரு உபன்யாசத்தில் கேட்டது குமரன்!
கல்லைக் கரைய வைக்க முடியுமோ?
முடியும் - நீரால்!
என்ன - நீராலா?
ஆமாம், கண்ணீரால்!
கோவிலில் கல்லாய் நிற்பவன்!
அவனைக் கரைய வைக்க
கண் நீரால் முடியும்! முயன்று பாருங்கள் என்று பரனூர் அண்ணா சொன்னது நினைவுக்கு வருகிறது!
நடன கோபால நாயகி சுவாமிகளைப் போலவே பஜனை சம்பிரதாயம் அல்லவா? அதான் இப்படி கருத்துகள் அருமையாய் வந்து விழுகின்றன!
ஆமாம் இரவி. யார் என்ன சொன்னாலும் பாடலையும் அடிக்கடி பாடுவதுண்டு. பரனூர் அண்ணா உபன்யாசங்களைச் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். இப்போது கண்ணன் ஐயா புண்ணியத்தில் அவர் பதிவுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
நல்ல பதிவு குமரன்...
நன்றி பாலாஜி. முதன்முறையாக இந்தப் பதிவிற்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தப் பாடல் எந்த மொழி என்று கேட்காதது வியப்பாக இருக்கிறது. என் தாய்மொழி என்று அறிந்து கேட்காமல் விட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். :-)
அண்ணா,
"ஹரி இருக்க ஏது பயம்?" என்பர்
நன்றாக விளக்கமாக சொல்லியுள்ளீர்கள். நான் இப்பாடலை இடும் முன் மூன்று-நான்கு நாட்கள் இப்பாடலை படித்து, அனுபவித்து பிறகு தான் பதித்தேன். ஆனால் தற்போது அடைந்த ஆனந்தத்திற்க்கு அளவே இல்லை.
நன்றி.
Post a Comment