Tuesday, January 24, 2006

128: *நட்சத்திரம்* - வள்ளல் வாஸுதேவன்

நாயகி சுவாமிகள் சௌராஷ்ட்ரத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

வள்ளல் வாஸுதேவன் நாமம்
தெள்ளமிர்தம்; உள்ளே கொண்டால்
கொள்ளைக்காரன் வரமாட்டான்; வந்தாலும்
கொள்ளைக்கிடமில்லாமல் போவான்.

முதலில் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. இரண்டாவது தடவை படித்தபின் புரிந்தது.

வசுதேவரின் புதல்வனான வாசுதேவன் மாபெரும் வள்ளல். கேட்டதெல்லாம் கொடுப்பான். அவன் கூடத் தேவையில்லை. அவனுடைய நாமமே போதும். அதுவே வள்ளல். வள்ளல் வாசுதேவ நாமம். பிறவிப் பிணியையும் அந்த நாமம் நீக்கும். அதனால் அது தெளிந்த அமிர்தம். அதனை நாம் உட்கொண்டுவிட்டால், நம் உயிரைக் கொள்ளைக் கொள்ளும் கொள்ளைக்காரனான காலன் வர மாட்டான். பிறவா நிலை அடைவோம். அப்படியே அவன் வந்தாலும் கொள்ளை கொள்வதற்கு எதுவும் இல்லாமல் போவான். கண்ணன் நாமத்தை நாம் உட்கொண்டவுடன் நம் உயிர் அவனைச் சேர்ந்துவிடுகிறதே. அப்புறம் எமனுக்கு என்ன கிடைக்கும்?

அற்புதமான நாலு வரிப் பாடல் இது.

39 comments:

ENNAR said...

கொள்ளைக்காரன் என்றால் திருடன் எமனை இது வரை யாரு திருடன் எனச் சொன்னதில்லையே. எமதருமன் அல்லவா அவன்.
திருடன் என்றார் கண்ணன் தானே.

ஞானவெட்டியான் said...

அன்பு என்னார்,

"கவர்தல்" = கொள்ளை
அரி வெண்ணை கவர்ந்தான்.
எமன் உயிர் கவர்பவன். இருவரும் ஒன்றே.

"சமன்செங்கோற் கடவுள் கூற்றுத் தருமன் அந்தகனே சண்டன்
நமன்வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன்
யமன் அரி மறலியேமற் றெருமையூர்தியும் ஆம் இப்பாற்
கமையில்கால் மறல் மடங்கல் காலன் பாசத்தனும் பேர்."

இப்பாடலில் எமனின் பெயர்கள் உள்ளன. இதில், அச்சுதன், அரி ஆகிய பெயர்களும் உள்ளன. ஆக, இருவரும் கொள்ளையர்கள்; இருவரும் தருமர்.

முத்துகுமரன் said...

வருகையை பதிவு செய்கிறேன் குமரன்

முத்துகுமரன் said...

வருகையை பதிவு செய்கிறேன் குமரன்

G.Ragavan said...

"கூகா என என் கிளை கூடியழப் போகா வகை மெய்ப் பொருள் பேசியவா" என்று அருணகிரி சொல்வதும் இதுதான். இறையடிவர்களிடம் அவனுக்கு வேலையில்லை. ஏனென்றால் அவர்களைக் காப்பது வேலையன்றி ஒன்றில்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

கொள்ளைக்காரன் வரமாட்டான்; வந்தாலும்
கொள்ளைக்கிடமில்லாமல் போவான
் எல்லோர் மனதையும் கொள்ளையடிக்கும் வசுதேவன் அவன் நமாம் சொல்லுபவர்கள் கவனிக்கமாட்டான் அப்படி வந்தாலும் கொள்ளையடிக்கவேண்டிய பக்தரின் மனம் எற்கனவே தன்னிடம் வந்து விட்டதால் கொள்ளைக்கிடமில்லாமல் அழைத்துக்கொண்டு போவான். 00000

படா சித்தசோர மனமோகன் மேரா சித்த சோர வ்ரஜமோகன்
தி. ரா.ச

குமரன் (Kumaran) said...

ஆமாம் என்னார் ஐயா. திருடன் என்றால் கண்ணன் தான். :-) ஆனால் இந்தப் பாடலில் எமனைத் தான் கொள்ளைக்காரன் என்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன். தவறாக இருக்கலாம்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா. அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

குமரன் (Kumaran) said...

வருகையை இருமுறை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி முத்துக்குமரன். இரண்டு முறை வந்தீர்களோ? :-)

குமரன் (Kumaran) said...

பொருத்தமான பாடலை தந்திருக்கிறீர்கள் இராகவன். நன்றி.

குமரன் (Kumaran) said...

தி.ரா.ச. உங்கள் விளக்கமும் நன்றாகத் தான் இருக்கிறது. :-) மிக்க நன்றி.

rv said...

நல்ல பாடல்.

இராகவன் தந்ததும் பொருத்தம்.

இதுவும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.. அதே அருணகிரியார் இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்.

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்

குமரன் (Kumaran) said...

இராமநாதன். நானும் ஒரு புது விதி போட்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா? யாராவது இனிமேல் பின்னூட்டத்தில் பாடல்களை இட்டால், அந்தப் பாடலுக்கு விளக்கமும் சொல்லவேண்டும். இந்த இரண்டு வரிகளுக்கும் விளக்கம் சொல்லுங்கள். சொன்னால் தானே இதுவும் பொருத்தமா இல்லையா என்று எனக்குத் தெரியும். :-)

rv said...

குமரன்,
இது என்ன நக்கலா? தெரிஞ்சும் தெரியாத மாதிரி.. இருந்தாலும் பதிவின் விதின்னு சொல்லிட்டதால..

கருமையான எருமையில் (ஹி ஹி.. cudnt resist!) எமதர்மன் காலக்கயிற்றோடு தன்னைப் பற்ற வரும் நேரத்தில் அவனுக்கு எதிராய், வெற்றிவேலை அணிந்து அழகு மயிலின் மேல் வந்து தன்னை காத்தருளி ஆட்கொள்ள வேண்டும் என்று சூரனை கொன்ற முருகனுக்கு கட்டளையிடுகிறார் அருணகிரியார்.

போறுமா? :))

rv said...

ஆமா இராகவனுக்கு மட்டும் exemption-ஆ?

கூகாவென -வ விளக்கலியே??? :))

குமரன் (Kumaran) said...

நன்றி. மிக்க நன்றி. ஆனாலும் இன்னும் புரியவில்லை. எங்கே அவர் எருமையைச் சொல்லியிருக்கார்; வெற்றிவேலையும் அழகு மயிலையும் சொல்லியிருக்கார். என்னமோ கலாபக் காதலன்...மன்னிச்சுக்கோங்க...கலபத் தேர் அது இதுன்னு தானே சொல்லியிருக்கார்? :-)

குமரன் (Kumaran) said...

ஊரில இருந்து வரட்டும். விளக்கம் கேட்டு விடலாம். யாருக்கும் விதியிலிருந்து விலக்கு இல்லை. அது இராகவனாய் இருந்தாலும் சரி. இராமநாதனாய் இருந்தாலும் சரி. தி.ரா.ச வாய் இருந்தாலும் சரி. ஞானவெட்டியான் ஐயாவுக்குச் சொல்லவே வேண்டாம். எனக்குப் புரியாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும்; அதனால் விளக்கத்தோடு தான் பின்னூட்டம் எழுதுவார். என்னோட லெவல் அவருக்கு நல்லாத் தெரியுது. உங்களுக்குத் தான் இன்னும் தெரியலை. :-)

rv said...

என்ன குமரன்,
மறுபடியும் நக்கலாச் சொல்றீங்களா இல்ல சீரியஸா கேக்கறீங்களான்னு தெரியலியே? :((

கார் மா மிசை - தெளிவா கருமையான எருமையத் தான் சொல்றார். :)

கலபத்து ஏர் மா மிகை - மீண்டும் தெளிவா அழகான மயில்னு தானே சொல்றார். என்ன குழப்பம். புரியலியே!

அவர் சொல்ற படிசொல்லட்டும்.. நான் ஒரு பிட்டு போடறேன்.

//கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா//

நான் இறந்து போனா கூ, கான்னு (குய்யோமுய்யோன்னு அந்த காலத்துல அழமாட்டாங்களோ) என் சொந்தக்காரங்கள்லாம் வந்து என்ன சுத்தி உக்காந்து ஒப்பாரிவச்சு அழுவாங்க. ஆனா அந்தமாதிரியெல்லாம் எதுவும் நடக்காம; நான் 'போகாத' மாதிரி எனக்கு உண்மைய நீதான் சொல்லிட்டியே.

குமரன் (Kumaran) said...

அப்ப கலாபக் காதலன் பத்தி ஒன்னும் சொல்லலியா? ஏமாற்றமாக இருக்கிறது. :-)

குமரன் (Kumaran) said...

//கார் மா மிசை - தெளிவா கருமையான எருமையத் தான் சொல்றார். :)

கலபத்து ஏர் மா மிகை - மீண்டும் தெளிவா அழகான மயில்னு தானே சொல்றார். என்ன குழப்பம். புரியலியே!
//

எங்கே தெளிவா சொல்லியிருக்கார் இராமநாதன்? கார் என்றால் கருமையா எருமையா? மிசை என்றால் மேல் என்று புரிகிறது. மா என்றால்? எருமையா? பின்னர் கலபத்தேர் மா மிசைன்னும் சொல்லியிருக்கார். எங்கே மயிலைச் சொல்லியிருக்கார்? மா என்றால் மயிலா, எருமையா? கலபம்ன்னா என்ன? ஏர்ன்னா என்ன? கலபத் தேரா? கலபத்து ஏரா? ஒன்னும் சரியா விளக்கம் கொடுக்காம தெளிவா இருக்குன்னு தெளிவாக் குழப்புறீங்களே?

இராகவன் எழுதுன பாட்டுக்கு நல்லா பிட்டைப் போடறீங்க. ஆனா நீங்க எழுதுனப் பாட்டுக்கு சரியா விளக்கம் சொல்லத் தெரியலையே? இதுல வேற நீங்க கந்தர் அனுபூதிக்கு ஒரு தனிப் பதிவு வேறப் போடப் போறதா சவால் வேற விட்டுருக்கீங்க இராகவன் பதிவுல? :-(

rv said...

மன்னிக்கவும் குமரன்,
நீங்கள் என்னுடன் நேற்றைக்கு விளையாடுகிறீர்கள் என்று நினைத்தே ஜாலியா விட்டுவிட்டேன்.

எனக்கு தெரிந்தவரை

கார் என்பது காரிருள் என்பதில் வருவதைப் போல் கருப்பையே குறிக்கிறது.

மா என்பது ஒரு கொடிய மிருகம் என்று பொருள் வரும். அதையே கரிய கொடிய மிருகம் --> எமனின் வாகனம் என்றால் அது எருமை தான் என்பதனைத்தான் தெளிவாக சொல்லியிருக்காரே என்றேன்.

மிசைக்கு நீங்களே சொல்லிட்டீங்க.

மேலும், கலபத்து ஏர் என்று பிரித்திருக்கக்கூடாது. அதனாலேயே உங்களுக்கு குழப்பம். மயிலின் தோகையான ஏரில்கற மாதிரி தப்பா வருது. கலபம் என்றால் மயிலின் தோகை.


கலபத்தேர் - அழகான மயிலின் தோகையான உன் தேரில் மீது ஏறி வந்து...

மாமிகை - எல்லாம் சேர்ந்து அழகுடன் என்றுதான் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

***வந்தெதிரப்படுவாய் என்றுதான் சரியான அர்த்தம் வரும் என்று நினைக்கிறேன். சரிபார்க்க இப்போதைக்கு வசதிகள் இல்லாததால், தவறிருப்பின் அதட்டவும் திருத்தவும் நீங்களும் இராகவனும் இருக்கிறீர்களே. :))

புது ஐடியா வர்க் அவுட் ஆகாது போலிருக்கே :(((

சிவமுருகன் said...

௧௧1. கண்ணனை வள்ளல் என்று கூறிய பின் மீண்டும் திருடன் என விளிக்க முடியாது. எனவே திருடன் யமனை தான் சொல்கிறார். நாம் செய்யும் பாவம், புண்ணியம் பொறுத்து தான் யமதர்மர் மறுபிறப்போ, வானுலக வாசமொ அளிக்கிறார். ஆனால் 'வாசுதேவன்' நாமத்தை சொன்னவர்களிடம் பாவமோ, புண்ணியமோ எதுவும் இன்றி மறுபிறப்போ, வானுலகமோ கிடைக்காமல், பரமபதத்தை அடைவர் என்று சொல்கிறார்.

2. இதையே நாயகி ஸ்வாமிகள் தம் ஸௌரஷ்ட்ர பாடலில் கண்ணன் நாமம் இனிய மிட்டாய் என்றும் கூறுகிறார்.

சிவமுருகன்

குமரன் (Kumaran) said...

இராமநாதன், நீங்கள் நினைத்தது போல் நான் விளையாட்டாய்த் தான் சொன்னேன். ஒவ்வொரு சொல்லாக எடுத்துப் பொருள் சொன்னால் படிப்பவர்களுக்கும் மிக நன்றாகப் புரியும்; அடுத்த முறை அதே சொல் வேறோர் இடத்தில் வரும் போது அவர்களால் அந்தச் செய்யுளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். அப்படித்தான் நான் தமிழையும் வடமொழியையும் கற்றுக் கொண்டேன். அதனால் தான் யாராய் இருந்தாலும் ஒரு செய்யுள் இட்டால் பொருளும் விளக்கமாகத் தரவேண்டும் என்று கூறுகிறேன். அப்படித் தரப் படும் விளக்கம் ஒவ்வொரு சொல்லுக்குமாய் இருந்தால் மிக நன்றாய் இருக்கும். பின்னூட்டங்களில் அது முடியாமல் இருக்கலாம். ஆனால் வலைப் பதிவில் போடும் போது அது நிச்சயம் முடியும்.

ஆனால் உங்களுக்கு என்று தனியான பாணி இருக்கலாம். அது இந்தப் பாணியாய் இல்லை என்றால் பரவாயில்லை. உங்கள் பாணியிலேயே எழுதுங்கள். எது எழுதினாலும் இன்னும் எவ்வளவு எளிமையாக எழுதலாம் என்பதை மட்டும் நாம் கவனத்தில் கொண்டால் போதும்.

தமிழுக்கும் ஆன்மிகத்துக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்றால் கடைநிலையில் இருக்கும் தமிழனுக்கும் தமிழனல்லாதவன் தமிழ் படித்தால் அவனுக்கும் புரியும் படி எளிமையாக இருக்க வேண்டும் நம் பதிவுகள். அவ்வளவு தான் ஐயா நான் சொல்வது.

என் பதிவுகளில் ஏதேனும் எளிமையாக இல்லாவிட்டால் சுட்டிக் காட்டுங்கள். எளிமைப் படுத்த முயல்கிறேன். படித்தவர்களே படித்துக் கொண்டிருந்தால் படிக்காதவர் எப்போது தமிழின் சுவையை அறிவது?

உங்கள் புது வலைப்பூவிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். :-)

அப்பாடா....ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு லெக்சர் கொடுத்து. ரொம்ப நன்றி. அப்பப்ப உள்ள இருந்து இந்த கருத்து கந்தசாமி வெளிய வந்து இப்படி ஆட்டம் காமிக்கிறான் :-)

குமரன் (Kumaran) said...

அற்புதமான விளக்கம் சிவமுருகன். நீங்கள் ஏன் இன்னும் நிறைய எழுதக் கூடாது? ரொம்பத் தெளிவாகச் சிந்திக்கிறீங்களே. நிறைய பேர் வானுலகையும் (சொர்க்கத்தையும்) பரமபதத்தையும் குழப்பிக் கொள்வார்கள். வைகுண்ட வாசல் (பரமபத வாசல்) என்பதையும் சொர்க்கவாசல் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நீங்கள் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவைகளுக்குச் செல்லும் வழிகளையும் மிகத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். இன்னும் நிறைய நீங்கள் எழுதவேண்டும். உங்களுக்கு எந்த இலக்கியம் தெரியுமோ அதனை எடுத்துக் கொண்டு தொடர்ந்து எழுதுங்கள். ஏதாவது ஐடியா வேண்டுமென்றால் கேளுங்கள். சொல்வதற்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

நீங்கள் சொன்ன மிட்டாய் சௌராஷ்ட்ரப் பாடலை விரைவில் பதிக்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

சிவமுருகன் said...

எழுத்துலகுக்கு நான் சிறுவன். இது வரை நான் எழுதியதில்லை. பேசியுள்ளேன், நான் எனக்குள் பேசியதை வலையில் பதித்தேன். நான் வணங்கும் நாயகி ஸ்வாமிகளின் கீர்த்தனைகள் எங்கிருந்தாலும் தேடி போவது என்னுடைய பழக்கம். அதை தான் செய்தேன். உங்கள் ஊக்கம் உற்ச்சாகம் அளிக்கின்றது. தொடர்ந்து எழுதுவேன். எழுதுவதற்க்கு முன் படிக்க வேண்டும். முதலில் படிப்பேன் பிறகு எழுதுகிறேன். ஏதோ எழுதுகிறேன் என்பதை விட, இதை எழுதுகிறேன் என்று சொல்ல ஆசை படுகிறேன். நன்றி.

சிவமுருகன்.

குமரன் (Kumaran) said...

படிப்பதும் எழுதுவதும் ஒரே நேரத்தில் நடக்கும் சிவமுருகன். கற்றது கைம்மண் அளவு. அதனால் இப்போது தோன்றுபவைகளை எழுதுங்கள். அதே நேரத்தில் தொடர்ந்து படியுங்கள்.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 'மதுரையின் ஜோதி' வலைப்பூவை மட்டும் தான் படிக்கிறீர்கள் போல் இருக்கிறதே. என்னுடைய மற்ற வலைப்பூக்களையும் படியுங்கள். என்னுடைய பார்த்தால் வலைப்பூக்களின் பட்டியல் கிடைக்கும். அங்கிருக்கும் பதிவுகளும் உங்களுக்குப் பிடிக்கும் என்று தோன்றுகிறது.

நீங்கள் அடுத்த முறை பதிவு போட்டவுடன் எனக்கு மின்னஞ்சலில் சொல்கிறீர்களா? மிக்க நன்றி.

Anonymous said...

This seemingly simple 'song' has sparked a hot debate and the centre point appears to be Lord Yama. Bhagawan Krishan to be called a thief is ruled out for more than one reason, in this context. Yes Krishna was known for stealing butter in his childhood, all for fun. Our guru can't be contradicting after describing him as Vallal and his Namam as "thelamritham" that is pure nector (exlir). There is no harm in calling Lord Yama a thief, because from the point of view of any human being he comes unannounced and deprives him of all the worldly pleasures and attachments. Apparently everyone loves to hate Yama. He could be doing his duty and no human being likes him.
K P Subramanian
have a good day

Anonymous said...

There is a difference between 'paramapadham' and vaiguntam. The common knowledge is what is paramapadham (abode of Siva) for saivaites (those who pray Lord Siva) is vaiguntham (abode of Mahavishnu) for vaishnavaites (those who pray Mahavishnu), the two major sects in Hinduism.
Here I would like to bring it your attention a couplet from our guru: Thevuk bhakti karasthena bhavan, theya neesthenaus Ravan (in Tamil Ravanan). I don't think anybody else has given such a crisp definition for a bhavan. Here our guru clearly tells us that reading or chanting mantras and leading an outwardly clean life and sporting a me-a-good-guy look is not enough to be qualified as a bhavan (brahmin). The word Ravan is pregnant with meanings. Ravan is not just an ordinary man. He had pleased Lord Siva to such an extent that the Lord was at his beck and call. Everyone is aware of Ravan's prowess in music as well.
And a spicy story goes thus. Once upon a time long long ago Ravanan wanted to perform a maha yaga. To do that he had to conquer a lot of lands or the world. So on his way he enters Sourashtram (a group of kingdoms, to be specific 100 that is what sou means. There is another meaning to Sou, that is beautiful or all that is good) and as usual he makes the clarion call of “either fight or surrender” to the kings. Ravanan’s bravery is known all over the universe. Then comes the catch. A king from Sourashtra doesn’t want to give in that easily. He says “I have my self-respect to keep. So I want to fight you. Of course I can face you on the battlefield, but on the intellectual level. If I lose, I will pay you 'ransom', otherwise....” Before the king completes the sentence, Ravanan, so confident of his all-round skills, accepts the challenge. To everyone’s surprise he fails. That puts him in a tight spot. Ravanan doesn’t want to drop the idea of the maha yagam. So requests the king to find him a way out. The king condenses. Knowing Ravanan’s mastery over music, he orders him to a sing song in a ragam that hasn’t been sung before. That’s how ragam Sourashtram is born, a unique one.
Have you ever wondered why is there a raga named after a particular community? You don’t have a tamil ragam, either telugu or maharashtra.
There is one more story to it. Of course of a comparatively recent origin. Our Venkatramana Bhagavathar lived in Ayyampettai and his guru Thyaga Brahmam at Thiruvaiyaru. It is routine on the part of Thyaga Brahmam to organise concerts. Without fail, Venkataramana Bhagavathar used to attend it and end it with ‘Mangalam’. One day due to some unforeseen reasons Venkataramana Bhagavathar is late. Thyaga Brahmam keeps waiting, despite his other disciples and bhagthas urging him to end it. As the day wears into night, Brahmam is worried. At that point of time, a child comes running breathlessly to inform Brahmam that Bhagavathar is around and will come in any minute. The surprise was that boy had never been seen before or after that. Soon after, Bhagavathar walks in and duly sings Mangalam to end the concert. A stunned Brahmam has no words to describe this ‘surreal’ incident. He embraces Venkataramana and begins to call him Bhagavathar from that day onwards. Brahmam tells him that "you are so fortunate that the ‘god’ came in a messenger and he likes you more than me". And that is the other reason why Mangalam is always sung in ragam Sourashtram, in honour of our Bhagavathar.
K P Subramanian
Have a good day

Unknown said...

அருமையான படைப்பு குமரன்,

திருமால் வள்ளலானது தாய் லஷ்மியால் தான்.அதை மறந்துவிடாதீர்கள் ஜெகத்தோரே

குமரன் (Kumaran) said...

செல்வன், யார் மறந்தாலும் அன்னை மஹாலக்ஷ்மியை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். :-) செல்வனுக்கு எல்லாவித சம்பத்தும் திருமாலின் 'திரு'வருளால் கிடைக்கட்டும். :-)

இந்தப் படைப்பு என்னுடையது அன்று. நாயகி சுவாமிகளுடையது.

குமரன் (Kumaran) said...

சுப்ரமணியன் அண்ணா. தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

I am visiting your blog site after a long time. It is always a delight to read the works of Sri Nayagi. Hats off to you.

There is a context to this stanza which could add interest and relevance as well. I have read that Sri Nayagi confronted a thief (and a murderer) once while travelling and probably it was a source to this stanza. I don't remember fully the story though.

That said, your interpretation sounded correct to me.

Is 'mittAi, mittAi, rAma nAma mittAi' coming next ? :)

குமரன் (Kumaran) said...

விஸ்வேஷ். நீங்களும் 'மிட்டாய், மிட்டாய், ராம நாம மிட்டாய்' பாடலைப் பற்றி இரண்டு மூன்று முறை கூறிவிட்டீர்கள். சீக்கிரம் அந்தப் பாடலை போடுகிறேன்.

நாயகி சுவாமிகளின் சரித்திரத்தில் நீங்கள் சொல்லும் சம்பவம் வருகிறது. சுவாமிகள் வருடா வருடம் வைகுண்ட ஏகாதசிக்கு ச்ரிரங்கத்தில் அன்னதானம் செய்வது வழக்கம். ஒரு முறை அன்னதானத்திற்காக அன்பர்கள் கொடுத்தப் பணத்துடன் ச்ரிரங்கம் போக மதுரை புகைவண்டி நிலையத்திற்கு வந்திருந்த சமயம் ஒரு திருடன் அந்தப் பணத்தைத் திருடி விட்டான். சுவாமிகள் அது ரங்கனின் பணம் அவன் அதனை இங்கேயே எடுத்துக் கொண்டான் என்று சொல்லிவிட்டு தரிசனத்துக்காக ச்ரிரங்கம் சென்றுவிட்டார். நடந்ததைக் கேள்விப்பட்ட அன்பர்கள் உடனே மேலும் பணத்தைச் சேகரித்து மதுரையிலிருந்து ச்ரிரங்கத்திற்கு மனிஆர்டர் செய்தார்களாம். அந்தப் பணத்தை வைத்து அன்னதானம் செய்து விட்டு சுவாமிகள் 'ஒரு முறைக்கு ரெண்டு முறை தருமம் ஆச்சு' என்று ஆனந்தக் கூத்தாடினாராம்.

குமரன் (Kumaran) said...

விஸ்வேஷ். 'மதுரையின் ஜோதி' மட்டும் தான் படிக்கிறீர்களா? எனது மற்ற வலைப்பூக்களையும் படித்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். எனது மற்ற வலைப்பூக்களின் பட்டியல் பார்க்க என் பாருங்கள்.

வெளிகண்ட நாதர் said...

என்ன தான் 'திருடன்' என்ற பதம் ஏழனமாக விமரிசிக்கப் பட்டு அதன் சொற்பிரயோகத்தின் பேரில் இழிவான கருத்தக்கள் கூறினாலும் அது ரகசியாமாக நேசிக்கப் படும்பொழுது உள்ளம் கவர்ந்த கள்வனாகிப் போய்விடும். ஆதால் மறை மொழிக் கருத்துக்களுக்கு அச்சொற்பதம் சரியென்றூ நான் வாதிடுகிறேன்! -- அப்பா போதுமா குமரன் என் சொல்லு தமிழை வுட்டுட்டேம் இந்த பின்னோட்டம் போடறப்ப-;)

குமரன் (Kumaran) said...

திருடன் பதத்துக்கும் உள்ளங்கவர் கள்வன் பதத்துக்கும் பொருள் சொன்னதற்கு நன்றி வெளிகண்ட நாதர். சொன்ன மாதிரி ஒவ்வொரு பதிவா படிச்சு பின்னூட்டம் போடறீங்க. ரொம்ப நன்றி.

Anonymous said...

If I'm not wrong Vishvesh could be trying to relate to the incident of a gang of robbers waylaying our swamy when he was coming to Madurai from Paramakudi, where he learnt or attained siddha yoga from Nagalinga Adigal. It so happens the robbers lose their eye sights and pray for his pardon. Our benevolent guru blesses them with vision.
If I'm not wrong again, during the same journey nayaki swamigal takes rests under a tree, apparently overcome by fatigue. As the time passes, the sun rays begin to fall on his face. At that point of time, a hooded snake stands above his head to cover the guru from heat. Guru wakes up when the gardener of that place, it is said to be on the outskirts of Madurai, brings in a crowd of people to drive away the snake. As the guru sits up the snake slithers away silently. The stunned crowd stands in admiration of our guru’s yogic power.
To me the snake could well have been the extension of his yogi power, as a reclining Maha Vishnu is portrayed in temples and calendar pictures.
K P Subramanian
guru krupo

குமரன் (Kumaran) said...

Dear Subramaniyan Dhaa, I have read about the incident you have mentioned. Thanks for reminding us on that incident.

குமரன் (Kumaran) said...

நன்றி தமிழ்க்குழந்தை