Monday, July 24, 2006

ராம பஜனை செய்வாய் மனமே


எப்போது இறைவனை வணங்கவேண்டும் என்று கேட்டதற்க்கு விழிப்பில்(ஹுடினும்), தளர்வாக இருக்கும் சமயத்தில்(பிஸினும்), நடக்கும் சமயத்திலும்(சல்னிம்), தூக்கத்திலும் (ஹோங்கும்) என்று சொன்னவர், அப்படி என்ன எல்லாம் எவ்வளவு செய்ய வேண்டும் என்றும் சொல்லும் படியாக அமைந்த பாடல், இப்பதிவில் உள்ள பாடல், இப்பாடலிலும் மனதை விளிப்பது போல் விளித்து கிடைப்பதற்கரிய நாத நாமக்ரியா ராகத்தில் பாடத்தை பாடலாக சொல்லியுள்ளார். இப்பாடலை டி.எம்.எஸ். அவர்களும் இராம ரத்தினம் அவர்களும் பாடியுள்ளனர்.


ராம்ப4ஜன காரி மொந்நு தூ

நாத3நாமக்ரியா ராகு

ஆதி3 தாளு

பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]


சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக்
பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹ§ந்நொகரெ ஸீதா [ரா]

வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]



பல்லவி
ராம்ப4ஜன காரி மொந்நு தூ
ராம் ப4ஜன காரி


ஆஞ்சனேயர் செய்த ராம பஜனைபோல் நீயும் ராம பஜனை செய்வாய் மனமே.

அநுபல்லவி
ராம்ப4ஜன கரேத் காம் நீ:ஸ்தகன் ரி:யெ
கா3ம்லெகுத்தவி த்யே தா2ம் தெகஹோய் [ரா]

ராம் பஜன செய்தால் உன்பொருப்புகள் எல்லாம் தீர்ந்து, உனக்கு தேவலோக இடமட்டுமல்லாமல், பரமபதமும் கிடைக்கும்.

சரணு
ஸீன் திரி ஜாய்ரே மொந்நு ஏ
ஸீன் திரி ஜாய்ரே
ஸீன் திரி ஜாய் தீ3 கான் தீ3 ஐகோ
மான்ஹோர் ஐகுநொகன் நா:ன் வேது3நும்ஸே [ரா]

வலி தீர்ந்து போகும் மனமே இந்த வலிதீர்ந்து விடும்
வலி தீர்ந்து போகும் இரு காது கொடுத்து கேட்பாய்
காற்று வாக்கில் கேட்காதே, இவை அனைத்தும் வேதத்தில் சொல்லப்பட்டது, வேதத்தில் இருப்பது, இராம பஜனை செய்வாய்.

ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
ஆஸெநு ஸுட்டி ஜாய்ரே
ஆஸெநு ஸுட்டி ஹரி தா3ஸுனுநுக் தா3ஸொய்
ஸ்ரீநிவாஸ ஹரி கேஸவா மெநி மெநி [ரா]

ஆசைகள் தீர்ந்து போகும் மனமே இந்த
ஆசைகள் தீர்ந்து போகும்
ஆசைகள் தீர்ந்து போகும் ஹரியின் அடியாருக்கு அடியாராகி
ஸ்ரீநிவாச, ஹரி கேஸவா என்று ராம பஜனை செய்வாய்

து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே மொந்நு ஏ
து3க்கு ஸரீர் ஸுட்டி ஜாய்ரே
து3க்கு ஸரீர் ஸுடை ஜு:க்கு ப4க்தி ஹுடை
உக்குக்கா2ம்பு3மவெ சொக்கட் நரஸிம்ஹ [ரா]

(சுக)துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும் மனமே இந்த
துக்கங்கள் உடலை விட்டு தீர்ந்து விடும்
துக்கங்கள் உடலை விட்டு நிறம்ப பக்தி கிளம்பும்
எஃகு தூணிலிருந்து வந்த நல்ல நரசிம்மனை எண்ணி இராம பஜனை செய்வாய்.

ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே ஸங்கி3மொந்
ஸெங்க்3 ஹரிவிந கோன்ஸே
ஸெங்க்3 ஹரிவிந நீ: ரெங்க3நாத2 ஹரி
கொங்கி3டி3 ரெ:ய்லி லோக் பொ4ங்க3 பி2ரள்ளேத் ரி:யேஸ் [ரா]

துணையே ஹரியன்றி யாருள்ளார் சொல்வாய் மனமே
துணையே ஹரியன்றி யாருள்ளார்
துணையே ஹரியன்றி யாருமில்லை, திருவரங்கன் ஹரியே
எல்லாமுமாக இருந்து உலக பம்பரத்தை இயக்கும் இராமனை பஜனை செய்வாய்.

நித்தவாடும் சாலி மொந்நு தூ
நித்தவாடும் சாலி
நித்தவாடும் சலெத் பி4த்தர் ரி:யே ஹரி
வத்த கரஸ்தக அத்த யெதூ3ரவை [ரா]

நேர்வழியில் நடப்பாய் மனமே நீ
நேர்வழியில் நடப்பாய்
நேர்வழியில் நடந்து உனுள்ளே இருக்கும் ஹரி
பேசுவதற்க்கு அப்போதே முன்வருவான் எனவே மனமே இராம பஜனை செய்வாய்.

வாடு ஸங்கு3ஸ் ஐகி மொந்நு தொகொ
வாடு ஸங்கு3ஸ் ஐகி
வாடும் சொக்கட்வா டேடு உநிஸியேத்
தீ4டு விஸிஷ்டா த்3வைதம் ஹொயெ வாடுஸ் [ரா]

வழிசொல்கிறேன் கேள் மனமே உனக்கு
வழிசொல்கிறேன் கேள்
இங்கே இருக்கும் வழியில் மிக சிறந்த வழி
திடமான விஸிஷ்டா த்வைதம் கொண்ட வழியே எனவே இராம பஜனை செய்வாய் மனமே.


தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ மொந்நு தொர்
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ
தி3ந்நுகோ3 ஜாந்தே3நகோ பு3ள்ளிபீ2 ர:ட்வநு
மொந்நு தொ2வி லங்கா ஹுந்நொகரெ ஸீதா [ரா]

சிலர் இன்று நாளை என்று நாட்களை கடத்துவர் அவர்களை கண்டு
நாட்களை கடத்த கூடாது மனமே உன்
நாட்களை கடத்த கூடாது
நாட்களை கடத்தாமல் இப்போதே மனமே இராம பஜனை செய்வாய்
இலங்கைக்கு தீ வைத்து சீதையை கண்டவனை (அனுமனை) போல் மனதை வைத்து, ஸ்ரீ இராம பஜனை செய்வாய்.


வடபத்ரார்யுநுக் ஸாரே மொந்நு தூ அம்ரெ
வடபத்ரார்யுநுக் ஸாரே
வடபத்ரார்யுநுக் ஸா நடனகோ3பால் தொக
கெடொ ஹிங்க3டி3 ஸொடை3 ஹுடுநா ப4க்தி ஹுடை[ரா]

வடபத்ராரியரை பாரப்பா மனமே நீ நம்
வடபத்ராரியரை பாரப்பா
வடபத்ராரியரை பார் நாராயணன் உன்னை
பிறவி கடலில்லிருந்து உன்னை கரையேற்றுவான், எழும்பாத பக்தி எழும்பும் எனவே இராம பஜனை செய்வாய்.

Wednesday, July 19, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 3

ரஜொ ஹா மொர பா3பு
அம்பொ3 அம்பொ3 (ரஜொ)
மீ ரஜொ ஹா மொரபெ3டொ
ராஜ்ஜலன் ஜாஸ்ஹா தெகொ3ஹால் [நொ]


எந்தந்தையோ ஸ்ரீராங்கார்யர், என்றால் ஸ்ரீரங்கத்திற்க்கே அரசன் என்று பொருள், ஆனால் அப்பதவி பறிபோய் அப்பெயர் என் மகனக்கு சூட்டி அவனை அரசனாக்க வேண்டி வரும். (தமது தந்தையின் பெயரை, தன் மகனுக்கு சுட்டுவது குடும்ப வழக்கம்) ஆகவே எனக்கு திருமணம் வேண்டாம். (இப்போது அவரது தாய் சற்றே யோசிக்க ஆரம்பிக்கிறார், அதை கண்ட சுவாமிகள் சந்தோஷத்துடன் தொடர்ந்தார்)

காய் ஜிவ்னம் ஜிவ்ன ஹோய்கி
அம்பொ3 அம்பொ3 (காய்)
சொக்கட் கைங்கர்யமு வாடு
கர்னாதிஸொ ஹொய்யாய் [நொ]

மாயையின் விளக்கம் கேட்ட தேவ முனிவரான நாரதரையே ஒரு வழிசெய்துவிட்ட இல்வாழ்க்கை, என்னை என்ன பாடு படுத்துமோ, என்ன வாழ்க்கை வாழவேண்டிவருமோ, நல்வழியான பகவத் சேவை செய்ய வழி இல்லாமலாகிவிடும். எனவே இதை தடுக்கும் திருமணம் எனக்கு வேண்டாம்.

ஸொம்மு ஸொமந்து3 மைலைவோ
அம்பொ3 அம்பொ3 (ஸொம்மு)
மீ ஸொம்புஹோர்ஜிவ்னம் கரெதி
ஸொந்தோஷ் ஹோர் வத்தான் கரை [நொ]

நகை, பணம், என்று உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நல்ல வார்த்தை சொல்லியோ, அதட்டியோ தான் அடைந்து விடுவாள், நான் மேலும் சில சந்தோஷ வாழ்க்கையை வாழவேண்டும் என்று மேலும் சில வார்த்தைகளை சொல்வாள், என்னை மற்றவரிடமிருந்து பிறிப்பாள், தனக்கே உரியவளாக்கி கொள்வாள். என்னை மற்றவரிடமும், நான் வணங்கும் கோவிந்தனிடமிருந்து பிறிக்கும் சடங்கான திருமணம் எனக்கு வேண்டாம் அம்மா.

மாய் பா3பு வத்தொ ஹெடை3யாய்
அம்பொ3 அம்பொ3 (மாய்)
லோகுர் மாயாம் ஸம்டில்லி தோணும்
மத்தி தைலுவையாய் [நொ]

தாய் தந்தையிரின் பேச்சை கேட்டு கேளாதவனாகி விடுவேன் அம்மா, நாரதன் அகப்பட்ட குழந்தை, மனைவி என்ற பந்தத்தில் அகப்பட்டு என் வாயில் நானே மண்ணிட்டு கொண்டது போலாகிவிடும். எனவே மாயையில் அகப்பட வைக்கும் திருமண பந்தம் எனக்கு வேண்டாம்.

2ல்சொ சலஸ்தெ காய் தெ3க்யாஸ்வோ
அம்பொ3 அம்பொ3 (ப2ல்ஸொ)
அத்தொ சொக்கட் க3தி பஜெமெனி
சொக்கட் வாடும் சல்லேத் ரீ:ரேஸ் [நொ]

அம்மா, பின்னர் என்ன நடக்க போவதை யாரறிவார், ஆனால் இப்போது நான் நல்வழியானை கோவிந்தனை பற்றி, நல் வழியில் நடந்து வருகிறேன். அது போதும், அப்படி நல்வழியிலிருந்து பிறழவைக்கும் திருமணம் என்ற சடங்கு எனக்கு வேண்டாம்.

செடனான் ஹொடை3 ஹொராட்3 ஹால்
அம்பொ3 அம்பொ3 (செடனான்)
ஸ்ரீ நடனகோ3பாலுக் நொம்மேத்
செடனானஸ்கி கடை ஜாய் [நொ]

இராமாயண, மஹாபாரத சண்டைகள் முதல் எல்ல சண்டை, சச்சரவுகளும் திருமணத்தால் தான் வந்தது, வளர்ந்தது அப்பேற்ப்பட்ட சண்டைகளால் நான் வணங்கும் இராமனும், கிருஷ்ணரும் இருந்துள்ளனர், அவர்களது அருளால் தான் அதுவும் தீர்ந்தது, எனவே அம்மா, அவர்களை நம்பி, இருக்கும் சண்டைகளை தீர்ப்பான். எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 2

தொகொ3 மொகொ3 ஜு:க்கு விரோத் ஹோய்
ஹோய் அம்பொ3 (தொகொ)
தூ கிக்கராக் அல்லியேத் மொள்ளொ
நெக்கித்க மொகொ3 லைனாஜாய் [நொ]

தற்போது அம்மா நீ ஒரு சிறிய சுடு சொல் சொன்னாலும் நான் பயந்து விடுகிறேன், அதை எப்படியாவது தீர்க்க எண்ணுகிறேன் ஆனால் அம்மா எனக்கு திருமணம் என்ற சடங்கு நடந்து விட்டால், உனக்கும் எனக்கும் விரோதம் வளர்ந்திடும், பிறகு நீ எப்பேற்பட்ட கோபம் கொண்டாலும் அதை தவிற்க்கும், தீர்க்கும் வழி தேடாமல் இருந்து, அதுவே வழக்கமாகி விடும் அம்மா. எனவே அப்பேற்பட்ட சடங்கு எனக்கு வேண்டாம்.


பாபினு ஸெர மிளையாய்
அம்பொ3 அம்பொ3 (பாபி)
தூ ஸாபன தே3ஸ்திஸொ ஹொய்யாய்
சொக்கட் கெ3தி மொகொ3 ந்ஹீஜாய் [நொ]

பாவிகள் என்று எவரை சொல்வேன், அப்பாவி என்று எவரை எண்ணுவது என்று எல்லாம் நூறு ஆசிரியர்களுக்கு ஒப்பான தாயவள் நீ சொல்லி தானே உணர்ந்தேன். நீயே சில காலத்திற்க்கு பிறகு என்னுடைய மனைவியையும் அவளது குடும்பத்தையும் “பாவி” என்று சபிப்பாய், அப்பாவத்திற்க்கு நானும் ஆளாகிவிடுவேன், அவளை சபித்தாலும் என்னை சபித்தாலும் இரண்டும் ஒன்று தானே. தாயின் சாபத்திற்க்கு ஆளானால் நல்ல கதி எப்படி ஏற்படும், அதை தான் இப்போது நான் சொல்கிறேன். எனவே அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்.


அவஸ்தெ நொவ்ரி கோன்கா3தெனொகி
அம்பொ3 அம்பொ3 (அவஸ்தெ)
மீ கரஸ்தெ காம் ஹந்நௌ அஸ்கி
தெகோ3ஸ் தெ3னோகி காய்கி [நொ]

வரக்கூடிய மனைவியானவள் எப்பேற்பட்டவளோ, நான் வேலை செய்து சம்பாதிக்கும் பணம், பொருள் எல்லாம் அவளுக்கே தரவேண்டுமோ என்னவோ. பிறகு உன்னை பரிபாலிப்பார் யாரிருக்கிறார்கள். உன்னை காக்கும் கடமையிலிருந்து தவறிவிடுவேன். (காம் – வேலை, ஹந்நௌ – பணம், பொருள்)

பை3லு வத்தொ கான் ஹுகுடா3ய்
அம்பொ3 அம்பொ3 (பை3லு)
லோகுர் ஸெய்லே தொர் வத்தானுகு
அஸ்கோ கான் ஜ:க3ய்யாய்வோ [நொ]

மனைவியின் சொல்லுக்கு செவிசாய்க்க வேண்டிவரும், இந்த உலகத்தார், சுற்றத்தார் மற்றும் உன்பேச்சுகளை கேட்டும் கேட்காத செவிடன் ஆகிவிடுவேன். அம்மா எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

ஹொராட் மெனஸ்தே வத்தஸோட்
அம்பொ3 அம்பொ3 (ஹொராட்)
தொகொ34ராட் ஸொடி3 வெடி3க்
ஸாஸ்திஸொ ஹொய்யாய் தெகொ3ஹால் [நொ]

திருமணம் என்ற பேச்சை இத்தோடு விட்டு விடு அம்மா. உன்னை மறந்து, வீட்டை துறந்து வேடிக்கை பார்க்க வேண்டி வரும் அம்மா,

இப்படியெல்லாம் சில சாக்குகளை சொல்லி தன் தாயை சமாதான படுத்த முயல்கிறார், ஆனால் தாயோ, அதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், பொருத்துக்கொள்கிறேன், திருமணம் செய்து கொள் என்று மேலும் வற்புறுத்த, அப்போது தமது பக்கம் இருக்கும் மேலும் சிலவற்றை சரணங்களாக பாடுகிறார் அவற்றை அடுத்த பதிவில்...

Tuesday, July 18, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 1

ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் தாயார், சுவாமிகளின் திருமண வயது காலத்தில் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தார். அதை தவிர்க்கும் விதத்திலும், தன் தாயாரை சமாதானம் செய்யும் விதத்திலும் ஸஹாநா ராகத்தில் “அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்” என்று சௌராஷ்ட்ர மொழியில் பாடலை பாடி, திருமணம் செய்வதால் தமக்கு வரும், வரவிருக்கும் பிரச்சனைகளையும் அப்பாடலில் தாயாருக்கு விளக்கினார்.

இந்த பாடல் சுவாமிகளின் 300க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சௌராஷ்ட்ர மொழி பாடல்களில் என்னுடைய விருப்பப் பாடலாகும்.


பல்லவி
நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3


அநுபல்லவி
தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]


சரணு
தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]


நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3

அம்மா! அம்மா! வேண்டாம் அம்மா எனக்கு திருமணம்

தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]

திருமணம் செய்து இன்னொருத்தியிடம் என் உணவிற்க்காக நானே தவமிருக்க வேண்டியிருக்கும் அப்போது உன் பசி பற்றி நினைவில் இருக்காது, ஆகவே இப்போது உன்னை பட்டினி போடாமல் நான் உணவூட்டி வருவது கெட்டு விடும். எனவே, அம்மா எனக்கு திருமணம் என்ற பந்தம் வேண்டாம்.


தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]

அம்மா! அம்மா! அந்த கோகுல கண்ணன் தன் தாய் யசோதையை “அம்மா” என்று அழைத்தானே அதே போல் நானும் உன்னை வாய் நிறைய “அம்மா” என்றழைக்கிறேன். இதேவாய் உன்னை நிந்திக்கும்படியாகிவிடும். என்னை திருமணத்திற்க்கு வற்புறுத்தாதே அம்மா.


அடுத்த சரணங்கள் அடுத்த பதிவில்.

***

அன்னையை நிந்தித்தப் பாவமும் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும் எந்த விதப் பரிகாரமும் இல்லாத பாவங்கள் என்று படித்தது இந்த முதல் சரணத்தைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது.

Monday, July 17, 2006

அங்கும் இங்கும் இருப்பவனே ...

“ஹேமா பிரியா” அவர்கள் தமது பின்னூட்டத்திலும், தனி மடலிலும் ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் சில பாடல்களை பதிக்கும்படியும், அண்ணன் குமரன் அவர்கள் சிறிய நாமவளிகளை இடும்படியும் கேட்டிருந்தனர் “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பார்களே! இப்போதும் அதே போல் தான் இங்கும். பிரியா அவர்கள் கேட்ட “யேலா தேலா கோபாலா” என்ற நாமாவளியை இப்பதிவில் இடுகிறேன்.

மாய கண்ணனை கணவனாக வரித்து “நாயகி பாவத்தில்” பக்தி செய்து வந்த ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் கண்ணனை குழந்தையாகவும், தன்னை காக்கும் அரசனாகவும்(உடையவனாக) பார்க்கும் ஒரு பாடல், இந்த நாலு வரி நாமாவளிப் பாடல் எளிமையாகவும், இனிமையிலும் இனிமையாக இருப்பதும் மேலும் சிறப்பு.

யேலா தேலா கோ3பாலா
ஜாலமு கர்நகொ கோ3பாலா
ஜிலபி தெ3வுஸ் கோ3பாலா
பாலி மொகொ கோ3பாலா


யேலா தேலா கோ3பால – பல அர்த்தங்களை கொண்ட இந்த முதல் இருவார்த்தைகள். இங்கும் அங்கும் நிறைந்தவனே கோவிந்தனே, கோபாலனே, இங்கும் அங்கும் உள்ளவனே கோவிந்தனே, கோபாலனே, இங்கும் அங்கும் என்றில்லாமல் எங்கும் இருப்பவனே கோவிந்தனே, கோபாலனே, என் நினைவும் இங்கும், அங்கும் உன்னை தேடும் கோவிந்தனே, கோபாலனே என்றும் மேலும் பலவாறும் கொள்ளலாம்.

ஜாலமு கர்நகொ கோ3பாலா
உன்மாய விளையாட்டுக்களை என்னிடம் காட்டாதே கண்ணா, உன்னையே கதியென்று இருப்பவர்களிடம் மாயாஜாலத்தை காட்டினால் அவர்கள் என்ன செய்வர். தயவு செய்து உன்ஜாலத்தை காட்டாதே.

ஜிலபி தெ3வுஸ் கோ3பாலா
உனக்கு விருப்பமான இனிப்பான ஜாங்கிரியை தருகிறேன், உன்னை மகிழ்விக்கிறேன், உன்னை குழந்தையாக பாவித்து ஆராதிக்கிறேன், உனக்கு நைவேத்தியம் செய்கிறேன். (ஜிலபி – ஜாங்கிரி)

பாலி மொகொ கோ3பாலா
என்னையும் உன் அடியவர்களையும் ஏனைய எல்லோரையும் ஒரே இனமாக பாவிக்கும் கண்ணா, என்னையும் ஏனைய பிறரையும், அனைவரையும் உடையவனாக, அரசனாக பாலித்து காப்பாய்.

இப்பாடலை என்னுடைய அம்மா தன் திருமணத்திற்க்கு முன்பு பாடியதாகவும் திருமணத்திற்க்கு பிறகு இப்பாடலையும் மேலும் ஒருசில நாயகி சுவாமிகளின் பாடல்களையும் பாடுவதில்லை என்று சொல்வார். ஏனென்று நீங்கள் எண்ணுவது எனக்கும் புரிகிறது, என்னுடைய அப்பாவின் பெயர் “கோபால் ராம்”.

Thursday, July 13, 2006

இறைவனின் உண்மை தொண்டர்

ஒரு இறைவனின் உண்மை தாஸர், உண்மை தொண்டர், எவ்வாறு இருப்பார் அவரது அங்க அடையாளங்கள் என்ன என்ன? என்பதையும், அவர் எதை, எங்கு, யாரிடம், என்ன சொல்வார் என்று தன்னுடைய நடையில் நாயகி சுவாமிகள் சொல்லியுள்ளார். இந்த பாடல் ஆதி சங்கரர் இயற்றிய பஜகோவிந்தத்தில் வரும் 22வது பாடலை ஞாபக படுத்துகிறது. கலியுகத்தில் வாழ்ந்த நடனகோபல நாயகி ஸ்வாமிகளும் அதே கருத்தை சொல்லியுள்ளதும் ஒத்த கருத்துள்ளது, காலம் சுழன்றாலும் தாஸனின் அடையாளங்கள் மாறாமல் இருப்பது வியப்பலும், வியப்பானது.


இந்த பாடலை நானும், என்னுடைய அண்ணனும் பல முறை வீட்டிலும், ஒருமுறை அழகர் கோவிலிலும் பாடியுள்ளோம் (எல்லாம் கேள்வி ஞானம் தான்). கணிணிவகையை சேர்ந்த இப்பாடல் அனுபல்லவி, பல்லவி என்று இல்லாமல், வேகமாக பாடும் படியாக இருக்கும்.


இந்த பாடலை ‘அயி கிரி நந்தினி’ மெட்டில் பாட அருமையாக இருக்கும். அதே ராகத்தில் இப்பாடலை திரு. ராமரத்தினம் அவர்கள் தன்னுடைய சங்கீத குரலில் பாடியுள்ளார்.


ஹரிக் க3வி நசி பொ3வி ஆனந்து3ம்
பு3டெ3ஸ்தேஸ் ஆங்கு3 விஸ்ரை பொட3யி
கு3ரு சரணுகு த்4யான் கரொயி
ரொட3யி அஸயி கோ3ரா:ய் பாய்ம்பொட3யி


பிஸ தெ4ரெஸ்தெந ஸொக பி3ஸயி
4மயி கொங்கிடி3 பி2ரிஸெய் பொ3வயி
பிஸலோக் மென்க்யான்ஸெர தெ3ஸி
தெ3ஸ§நாஸ்தக ரெ:ய் ஹரிக் க3வயி


தி3க்குனுஸாய் தே3வ் அவயிமெநி
தெ3க்குநாஸ்தெனொ ஹொய் பொ3வயி
சொக்கட் ஏ மெனிகு ஜெலும்மென் ஸங்கி3 கொங்கிக்
சொக்கட் வாடும் பி2ர்வொயி


வடதேட் மொகொ ஸேமென் ஜனெஸ்தெந ஹொய்
வாடும் யேடும் சல்லேது ரா:யி
கெடொ ஹிங்¢கு3லுவாய் அவொமெநி பொ3வி
கேஸவ ஸொகொ க்ருப ஸாயி ஸாயி


நடனகோ3பால் நமம் படன கர்லுவோ மெநி
படனகர் தே3யி தே3யி
வடபத்ரார்யுநு வாடும் சலஸ்தென்
வைகுண்டுகு ஜாயி ஜாயி (ஹரி க3வி)




ஹரிக் க3வி நசி பொ3வி ஆனந்து3ம் - ஹரியையே எப்போதும் (பாடியும்) ஆடியும், அழைத்தும், ஆனந்தித்திருப்பார்.


பு3டெ3ஸ்தேஸ் ஆங்கு3 விஸ்ரை பொட3யி - அந்த ஆனந்தத்தில் குளித்திருப்பார் (திளைத்திருப்பார்), உடலையும் மறந்திருப்பார், மறந்து விடுவார்.


கு3ரு சரணுகு த்4யான் கரொயி - குருவின் பாத சரணங்களை தியானிப்பார்


ரொட3யி அஸயி கோ3ரா:ய் பாய்ம்பொட3யி - (ஒரு காரணமில்லாமல்) அழுவார், சிரிப்பார், தனித்திருப்பார், (எங்கோ நோக்கி) வணங்குவார்.


பிஸ தெ4ரெஸ்தெந ஸொக பி3ஸயி -

பித்து பிடித்தவர் போல் (எங்கும்) அமர்வார்.


4மயி கொங்கிடி3 பி2ரிஸெய் பொ3வயி - (அடுத்த விணாடியே) ஓடுவார், திரும்பி எங்கோ நோக்கி அழைப்பான்


பிஸலோக் மென்க்யான்ஸெர தெ3ஸி

தெ3ஸுநாஸ்தக ரெ:ய் ஹரிக் க3வயி


பித்து பிடித்தவர் போல் தெரிந்தாலும் அவர்களிடமிருந்து ஒட்டி ஒட்டாமல் (தனியாக) தெரிவார். ஹரியை பாடுவார் (பைத்தியக்கார உலக மக்களுடன் ஒட்டியும் ஒட்டாமல் இருந்து ஹரியைப் பாடுவார்.)

தி3க்குனுஸாய் தே3வ் அவயிமெநி - திக்குகளை நோக்கி பரமன் வருவார் என்று


தெ3க்குநாஸ்தெனொ ஹொய் பொ3வயி - காணாதவன் போலாகி அழைப்பார்.


சொக்கட் ஏ மெனிகு ஜெலும்மென் ஸங்கி3 - இந்த மனித ஜென்மம் நல்லதே என்று சொல்லியும்


கொங்கிக் சொக்கட் வாடும் பி2ர்வொயி - யாவரையும் அந்த நல்ல வழியில் திருப்புவார்


வடதேட் மொகொ ஸேமென் ஜனெஸ்தெந ஹொய் - எனக்கு அங்கே (பரமபதத்தில்) இடம்முண்டு என்று தெரிந்திருப்பார்


வாடும் யேடும் சல்லேது ரா:யி - வழியிலும், (அங்கும்) இங்கும் நடந்த படியிருப்பார்.


கெடொ ஹிங்¢கு3லுவாய் அவொமெநி பொ3வி - கடைத்தேற்றிகொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்து


கேஸவ ஸொகொ க்ருப ஸாயி ஸாயி - கேஸவனின் நற்கிருபையை அருளை பார்பார்


நடனகோ3பால் நமம் படன கர்லுவோ மெநி - நடன கோபாலனின் திருநாமத்தை மனனம் செய்து கொள்க என்று


படனகர் தே3யி தே3யி - பாடங்களை(தீக்ஷை) தருவார்.


வடபத்ரார்யுநு வாடும் சலஸ்தென் - வடபத்ராரியர் வழியில் நடந்து


வைகுண்டுகு ஜாயி ஜாயி - வைகுண்டத்ற்க்கு செல்வார் (வைகுண்டத்தை அடைவார்).


ஹரியையே எப்போதும் (பாடியும்) ஆடியும், அழைத்தும், ஆனந்தித்திருப்பார்.

அந்த ஆனந்தத்தில் குளித்திருப்பார் (திளைத்திருப்பார்), உடலையும் மறந்திருப்பார், மறந்து விடுவார்.

குருவின் பாத சரணங்களை தியானிப்பார்

(ஒரு காரணமில்லாமல்) அழுவார், சிரிப்பார், தனித்திருப்பார், (எங்கோ நோக்கி) வணங்குவார்.


பித்து பிடித்தவர் போல் (எங்கும்) அமர்வார்.

(அடுத்த விணாடியே) ஓடுவார், திரும்பி எங்கோ நோக்கி அழைப்பான்

பித்து பிடித்தவர் போல் தெரிந்தாலும் அவர்களிடமிருந்து ஒட்டி ஒட்டாமல் (தனியாக) தெரிவார். ஹரியை பாடுவார்


திக்குகளை நோக்கி பரமன் வருவார் என்றவர்

காணாதவன் போலாகி அழைப்பார்.

இந்த மனித ஜென்மம் நல்லதே என்று சொல்லியும்

யாவரையும் அந்த நல்வழியில் திருப்புவார்.


எனக்கு அங்கே (பரமபதத்தில்) இடம்முண்டு என்று தெரிந்திருப்பார்

வழியிலும், (அங்கும்) இங்கும் நடந்த படியிருப்பார்.

கடைத்தேற்றிகொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்து

கேஸவனின் நற்கிருபையை அருளை பார்பார், மற்றவர் பெறுவதற்க்கும் வழிகாட்டுவார்.


நடன கோபாலனின் திருநாமத்தை மனனம் செய்து கொள்க என்று

பாடங்களை(தீக்ஷை) தருவார்.

வடபத்ராரியர் வழியில் நடந்து

வைகுண்டத்ற்க்கு செல்வார் (வைகுண்டத்தை அடைவார்).

Monday, July 10, 2006

200: குருவை தியானம் செய்வாய்...

இன்று குரு பௌர்ணமி, ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகள் முதன் முதலில் பாடியதாக கருதப்படும் இந்த பாடல், சுவாமிகளின் எந்த கீர்த்தனைகளின் தொகுப்பிலும் முதலில் இடம்பெற்றிருக்கும், அதை 200வது பதிவாக, குரு பௌர்ணமி சிறப்பு பதிவாக பதிவிட, என்குருவின், குருவை வணங்கிட, எண்ணினேன்.

பல்லவி

கு3ருத்4யாந் காரிமொந்நு தூ ஸத்
கு3ருத்4யாந் காரிமொந்நு (கு3ரு த்யான் காரி)

அநுபல்லவி

கு3ருத்4யாந் காரிஸ்ரீ ஹரிதெநோஸ் மெநிஹட்வி
திருமந்தூர் த்3வய சரம ஸ்லோகு நப்3பை3 (கு3ரு த்யான் காரி)


சரணு

ஹரிரூ பவயிமொந்நு த்4யாந் ஹால்
ஹரிரூ பவயிமொந்நு
ஹரிரூ பவயிஸத் கு3ருத்4யாந் கரேதீஸ்
ஸரிர்ஸொடி3 ஜெய்பி2ரி அவ்நா ரெ:ய்லுவாய் (கு3ரு த்யான் காரி)

2நிமா ஸாநு ஸோடி3 ஹோநாஸ்தெ
பெநிமா ஸாநுஸோடி3
2நிமா ஸாநுஸொடி3 காந்நாக் ஹொல்லெ தூஜெய்
தெ3நிம்ஸீந் நீ:ஸ்தகரி:யெதே3வு ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)

பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு மீ தொகொ
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு
பாய்ம்பொடு3 ஸுகு3ருவுந் பாயிர்பொடி3 பாய்ம்போட்3
பாய்ம்பொடெ3தீஸ் கரெ பாபுநுஜாய் ஹரி (கு3ரு த்யான் காரி)

கடெஜா:ட் ஸொகபோடி3 பு2ள்ளொகரெ
கருமுஜாய் பாய்ம்போடி3
வடபத்ரார்யுநு வாட்யேஸ் வைகுண்டு
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)


பல்லவி
கு3ருத்4யாந் காரிமொந்நு தூ ஸத்
கு3ருத்4யாந் காரிமொந்நு (கு3ரு த்யான் காரி)

குருவை தியானம் செய்வாய் மனமே நீ, சத்
குருவை தியானம் செய்வாய்

அநுபல்லவி
கு3ருத்4யாந் காரிஸ்ரீ ஹரிதெநோஸ் மெநிஹட்வி மொ:ட்டொ
திருமந்தூர் த்3வய சரம ஸ்லோகு நப்3பை3 (கு3ரு த்யான் காரி)

அந்த ஹரியே என்றெண்ணி குருவை தியானிப்பாய்,
பெரிய திருமந்திரமான திவ்ய பாதாவிந்தம் கிடைக்கும்

சரணு
ஹரிரூ பவயிமொந்நு த்4யாந் ஹால்
ஹரிரூ பவயிமொந்நு
ஹரிரூ பவயிஸத் கு3ருத்4யாந் கரேதீஸ்
ஸரிர்ஸொடி3 ஜெய்பி2ரி அவ்நா ரெ:ய்லுவாய் (கு3ரு த்யான் காரி)


ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும், தியானிப்பதால்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும் குருவை தியானித்தால்
இவ்வுடல் விட்டு போய் திரும்பாமல் (மறுபிறப்பில்லாமல்) இருக்கலாம்.

2நிமா ஸாநு ஸோடி3 ஹோநாஸ்தெ
பெநிமா ஸாநுஸோடி3
2நிமா ஸாநுஸொடி3 காந்நாக் ஹொல்லெ தூஜெய்
தெ3நிம்ஸீந் நீ:ஸ்தகரி:யெதே3வு ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)


உண்ணும் ஆவலை விடு, அல்லாத
பருகும் ஆவலை விடு
உண்ணும் ஆவலை விட்டு தூரத்தில் மேலனப்பும்
உலகில் இருந்து பார்க்க தகும் தெய்வமாகலாம்

பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு மீ தொகொ
பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு
பாய்ம்பொடு3 ஸுகு3ருவுந் பாயிர்பொடி3 பாய்ம்போட்3
பாய்ம்பொடெ3தீஸ் கரெ பாபுநுஜாய் ஹரி (கு3ரு த்யான் காரி)


வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே நான் உன்னை
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
குருவை திருவடியில் விழுந்து வணங்கி
வணங்கினாலே செய்த பாவங்கள் தீரும்

கடெஜா:ட் ஸொகபோடி3 பு2ள்ளொகரெ
கருமுஜாய் பாய்ம்போடி3
வடபத்ரார்யுநு வாட்யேஸ் வைகுண்டு
நடனகோ3பால நாயகி ஹொய்லுவாய் (கு3ரு த்யான் காரி)

குருவின் பாதத்தில் வெட்டப்பட்ட மரம்போல் விழுவாய் முன் செய்த
வினைகள் அகலும் வணங்குவாய்
வடபத்திரர் வழியான வைகுண்டு வழிபெற்று, அந்த
நடன கோபலனுக்கு நாயகி ஆகலாம்

பிறருக்கு சொன்னால் எங்கே ஆகாதவன் ஆகிவிடுவோமோ என்று தாம் சொல்ல எண்ணும் விஷயங்கள் எல்லாம் தம் மனத்திற்க்கு சொல்வது போல் சொல்லியிருக்கும் ஒரு அற்புதமான வழிகாட்டும் பாடல். இப்பாடலில் சுவாமிகளின் வார்த்தை அலங்காரங்கள் வெகு அற்புதமாக பயின்று வந்திருப்பதை காணலாம்.

1. கடே ஜாட் சொக போடி - வெட்ட பட்ட மரம் போல்,
2. பாய்ம்பொடு3 ஸய்கிமொந்நு - வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
3. ஹோனாஸ்த்த பெனிம் ஆஸானு ஸோடி - அல்லாத குடி மோகத்தை விடுவாய்.

இது போன்ற எளிய வார்த்தைகளை படிக்கும் சமயம் அதன் காட்சிகளும் கண்முன் வரும்.

பல்லவி
குருவை தியானம் செய்வாய் மனமே நீ, சத்
குருவை தியானம் செய்வாய்

அநுபல்லவி

அந்த ஹரி அவனே என்றெண்ணி குருவை தியானிப்பாய்,
பெரிய திருமந்திரமான (எட்டெழுத்தும்) திவ்ய பாதாவிந்தம் கிடைக்கும்

சரணு

ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும், தியானிப்பதால்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும்
ஸ்ரீஹரியின் ரூபம் கிடைக்கும் குருவை தியானித்தால்
இவ்வுடல் விட்டு போய் திரும்பாமல் (மறுபிறப்பில்லாமல்) இருக்கலாம்.

உண்ணும் ஆவலை விடு, அல்லாத
பருகும் ஆவலை விடு
உண்ணும் ஆவலை விட்டு தூரத்தில் மேலனப்பும்
உலகில் இருந்து பார்க்க தகும் தெய்வமாகலாம்

வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே நான் உன்னை
வணங்கி சொல்கிறேன் கேட்பாய் மனமே
குருவை திருவடியில் விழுந்து வணங்கி
வணங்கினாலே செய்த பாவங்கள் தீரும்

குருவின் பாதத்தில் வெட்டப்பட்ட மரம்போல் விழுவாய் முன் செய்த
வினைகள் அகலும் வணங்குவாய்
வடபத்திரர் வழியான வைகுண்டு வழிபெற்று, அந்த
நடன கோபலனுக்கு நாயகி ஆகலாம்

पललवि
गुरुध्यान कारिमोननु तू सत्
गुरुध्यान कारिमोननु

अनुपललवि
गुरुध्यान कारि श्रि हरि तेनॊस मेनि हट्वि - म्हॊट्टो
तिरुमन्तूर द्वय चरम स्लॊकु नब्बै

चरणु
हरिरू पवयिमोननु ध्यान हाल्
हरिरू पवयिमोननु
हरिरू पवयिसत गुरुध्यान करॆतीस्
सरिरसोडि जेयफिरि अवना रे:यलुवाय्

खनिमा सानु सॊडि हॊनास्ते
पेनिमा सानुसॊडि
खनिमा सानुसोडि काननाक् होलले तूजेय्
देनिमसीन नी:स्तकरि:येदॆवु होयलुवाय्

पायमपोडु सयकिमोननु मी तोको
पायमपोडु सयकिमोननु
पायमपोडु सुगुरुवुन पायिरपोडि पायमपॊड्
पायमपोडेतीस करे पापुनुजाय हरि

कटेजा:ट् सोकपॊडि फुळळोकरे
करुमुजाय पायमपॊडि
वटपत्रारयुनु वाट्यॆस वैकुणटु
नटनगॊपाल नायकि होयलुवाय्


palalavi
gurudhyAn kArimonanu tU sat
gurudhyAn kArimonanu

anupalalavi
gurudhyAn kAri Sri hari tenOs meni haTvi - mhOTTo
tirumantUr dvay caram slOku nabbai

caraNu
harirU pavayimonanu dhyAn hAl
harirU pavayimonanu
harirU pavayisat gurudhyAn karEtIs
sarirasoDi jeyaPiri avanA re:yaluvAy

khanimA sAnu sODi hOnAste
penimA sAnusODi
khanimA sAnusoDi kAnanAk holale tUjey
denimasIn nI:stakari:yedEvu hoyaluvAy

pAyamapoDu sayakimonanu mI toko
pAyamapoDu sayakimonanu
pAyamapoDu suguruvun pAyirapoDi pAyamapOD
pAyamapoDetIs kare pApunujAy hari

kaTejA:T sokapODi phuLaLokare
karumujAy pAyamapODi
vaTapatrArayunu vATyEs vaikuNaTu
naTanagOpAl nAyaki hoyaluvAy