Tuesday, July 18, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 1

ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் தாயார், சுவாமிகளின் திருமண வயது காலத்தில் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தி வந்தார். அதை தவிர்க்கும் விதத்திலும், தன் தாயாரை சமாதானம் செய்யும் விதத்திலும் ஸஹாநா ராகத்தில் “அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்” என்று சௌராஷ்ட்ர மொழியில் பாடலை பாடி, திருமணம் செய்வதால் தமக்கு வரும், வரவிருக்கும் பிரச்சனைகளையும் அப்பாடலில் தாயாருக்கு விளக்கினார்.

இந்த பாடல் சுவாமிகளின் 300க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் சௌராஷ்ட்ர மொழி பாடல்களில் என்னுடைய விருப்பப் பாடலாகும்.


பல்லவி
நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3


அநுபல்லவி
தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]


சரணு
தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]


நொக்கொ அம்பொ3 மொகொ3 ஹொராடு3
அம்பொ3 அம்பொ3

அம்மா! அம்மா! வேண்டாம் அம்மா எனக்கு திருமணம்

தொகொ பு4க்கொ தைனாஸ்தக் மீ பா4த்
4ல்லேத் ர்ஹியெஸ்தெ நஜ்ஜாய் [நொ]

திருமணம் செய்து இன்னொருத்தியிடம் என் உணவிற்க்காக நானே தவமிருக்க வேண்டியிருக்கும் அப்போது உன் பசி பற்றி நினைவில் இருக்காது, ஆகவே இப்போது உன்னை பட்டினி போடாமல் நான் உணவூட்டி வருவது கெட்டு விடும். எனவே, அம்மா எனக்கு திருமணம் என்ற பந்தம் வேண்டாம்.


தோண்போ4ர் அம்பொ3 மென் பொவரேஸ்
அம்பொ3 அம்பொ3 (தோண்)
ஏ தோணூஸ் தொகொ3 தூ3ஷண கரை
தூ ஸங்கு3னொகொ மொகொ [நொ]

அம்மா! அம்மா! அந்த கோகுல கண்ணன் தன் தாய் யசோதையை “அம்மா” என்று அழைத்தானே அதே போல் நானும் உன்னை வாய் நிறைய “அம்மா” என்றழைக்கிறேன். இதேவாய் உன்னை நிந்திக்கும்படியாகிவிடும். என்னை திருமணத்திற்க்கு வற்புறுத்தாதே அம்மா.


அடுத்த சரணங்கள் அடுத்த பதிவில்.

***

அன்னையை நிந்தித்தப் பாவமும் கங்கைக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும் எந்த விதப் பரிகாரமும் இல்லாத பாவங்கள் என்று படித்தது இந்த முதல் சரணத்தைப் படிக்கும் போது நினைவிற்கு வருகிறது.

No comments: