Wednesday, July 19, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 2

தொகொ3 மொகொ3 ஜு:க்கு விரோத் ஹோய்
ஹோய் அம்பொ3 (தொகொ)
தூ கிக்கராக் அல்லியேத் மொள்ளொ
நெக்கித்க மொகொ3 லைனாஜாய் [நொ]

தற்போது அம்மா நீ ஒரு சிறிய சுடு சொல் சொன்னாலும் நான் பயந்து விடுகிறேன், அதை எப்படியாவது தீர்க்க எண்ணுகிறேன் ஆனால் அம்மா எனக்கு திருமணம் என்ற சடங்கு நடந்து விட்டால், உனக்கும் எனக்கும் விரோதம் வளர்ந்திடும், பிறகு நீ எப்பேற்பட்ட கோபம் கொண்டாலும் அதை தவிற்க்கும், தீர்க்கும் வழி தேடாமல் இருந்து, அதுவே வழக்கமாகி விடும் அம்மா. எனவே அப்பேற்பட்ட சடங்கு எனக்கு வேண்டாம்.


பாபினு ஸெர மிளையாய்
அம்பொ3 அம்பொ3 (பாபி)
தூ ஸாபன தே3ஸ்திஸொ ஹொய்யாய்
சொக்கட் கெ3தி மொகொ3 ந்ஹீஜாய் [நொ]

பாவிகள் என்று எவரை சொல்வேன், அப்பாவி என்று எவரை எண்ணுவது என்று எல்லாம் நூறு ஆசிரியர்களுக்கு ஒப்பான தாயவள் நீ சொல்லி தானே உணர்ந்தேன். நீயே சில காலத்திற்க்கு பிறகு என்னுடைய மனைவியையும் அவளது குடும்பத்தையும் “பாவி” என்று சபிப்பாய், அப்பாவத்திற்க்கு நானும் ஆளாகிவிடுவேன், அவளை சபித்தாலும் என்னை சபித்தாலும் இரண்டும் ஒன்று தானே. தாயின் சாபத்திற்க்கு ஆளானால் நல்ல கதி எப்படி ஏற்படும், அதை தான் இப்போது நான் சொல்கிறேன். எனவே அம்மா எனக்கு திருமணம் வேண்டாம்.


அவஸ்தெ நொவ்ரி கோன்கா3தெனொகி
அம்பொ3 அம்பொ3 (அவஸ்தெ)
மீ கரஸ்தெ காம் ஹந்நௌ அஸ்கி
தெகோ3ஸ் தெ3னோகி காய்கி [நொ]

வரக்கூடிய மனைவியானவள் எப்பேற்பட்டவளோ, நான் வேலை செய்து சம்பாதிக்கும் பணம், பொருள் எல்லாம் அவளுக்கே தரவேண்டுமோ என்னவோ. பிறகு உன்னை பரிபாலிப்பார் யாரிருக்கிறார்கள். உன்னை காக்கும் கடமையிலிருந்து தவறிவிடுவேன். (காம் – வேலை, ஹந்நௌ – பணம், பொருள்)

பை3லு வத்தொ கான் ஹுகுடா3ய்
அம்பொ3 அம்பொ3 (பை3லு)
லோகுர் ஸெய்லே தொர் வத்தானுகு
அஸ்கோ கான் ஜ:க3ய்யாய்வோ [நொ]

மனைவியின் சொல்லுக்கு செவிசாய்க்க வேண்டிவரும், இந்த உலகத்தார், சுற்றத்தார் மற்றும் உன்பேச்சுகளை கேட்டும் கேட்காத செவிடன் ஆகிவிடுவேன். அம்மா எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

ஹொராட் மெனஸ்தே வத்தஸோட்
அம்பொ3 அம்பொ3 (ஹொராட்)
தொகொ34ராட் ஸொடி3 வெடி3க்
ஸாஸ்திஸொ ஹொய்யாய் தெகொ3ஹால் [நொ]

திருமணம் என்ற பேச்சை இத்தோடு விட்டு விடு அம்மா. உன்னை மறந்து, வீட்டை துறந்து வேடிக்கை பார்க்க வேண்டி வரும் அம்மா,

இப்படியெல்லாம் சில சாக்குகளை சொல்லி தன் தாயை சமாதான படுத்த முயல்கிறார், ஆனால் தாயோ, அதை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன், பொருத்துக்கொள்கிறேன், திருமணம் செய்து கொள் என்று மேலும் வற்புறுத்த, அப்போது தமது பக்கம் இருக்கும் மேலும் சிலவற்றை சரணங்களாக பாடுகிறார் அவற்றை அடுத்த பதிவில்...

No comments: