Wednesday, October 05, 2005

மதுரையின் ஜோதி

பகூனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே வாசுதேவ சர்வமிதி ச மகாத்மா சுதுர்லப:

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்னபடி பல ஜன்மங்களில் நற்காரியங்களில் ஈடுபட்டு இறைவனின் அருளைப்பெற்று பின்னரே ஒருவன் 'ஸர்வம் வாசுதேவ மயம் - உண்பது, உறங்குவது, தின்பது, பருகுவது எல்லாமே இறைவன்' என்னும் ஞான நிலையை அடைகிறான். கண்ணனே மேலும் சொன்னது போல் அப்படிப்பட்ட மகாத்மா கிடைப்பதற்கு அரிதாய் இங்கொருவர் அங்கொருவர் என்று இவ்வுலகில் தோன்றுகின்றனர்.

சென்ற பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட மகாபுருஷர்கள் பாரத நாட்டில் வெவ்வேறு மாநிலங்களில் தோன்றி அங்குள்ள மக்களுக்கு தங்கள் உபதேசங்களாலும் நன்னடத்தைகளாலும் வழிகாட்டியுள்ளார்கள். வங்க தேசத்தில் இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்ற மஹான்கள் தோன்றி மக்களை நல்வழி காட்டி அழைத்து சென்ற அதேகாலத்தில் மதுரையில் 'ச்ரீ நடன கோபால நாயகி சுவாமிகள்' என்னும் மஹான் தோன்றி 'உண்ணும் உணவு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் யாவும் கண்ணனே' என்று வாழ்ந்து மக்களை பக்தி நெறியில் வழி நடத்தி சென்றார். அவர் அருளிய ஸெளராஷ்ர மொழி பாடல்களின் சொல் பொருள் விளக்கத்தை இங்கு காணப்போகிறோம்.

6 comments:

Anonymous said...

El-lam Nandru. Palla Janmangal naarkariyathil edupatha pinbuthan sarvam sivamayam enbathai addya mudiyuma inna?? :-(

குமரன் (Kumaran) said...

அப்படித்தான் கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார். பஹூனாம் - பல; ஜன்மனாம் - பிறவிகளுக்கு; அந்தே - பிறகு; வாசுதேவ சர்வம் இதி - இந்கு எல்லாமே வாசுதேவன்; ஞானவான் - என்ற ஞானத்தை அடைந்தவன்; மாம் - என்னை; ப்ரபத்யதே - சரணடைகிறான்; ச - அப்படிப்பட்ட; மஹாத்மா - மஹாபுருஷன்; ஸுதுர்லப - நிச்சயமாய் காண்பதற்கு அரிதாய் இருக்கிறான்.

Anonymous said...

I can't but be happy with a site on our swamyji. He is a gem of our sourashtra kulam. Great to have a photo of his and I would appreciate highly if you could post his virtues and life history on the site. Don't think I am bit avarice. Put articles of greats like Venkataramana Bhagavathar of Ayyampettai and Venkatasuri of Tanjore

குமரன் (Kumaran) said...

Dear Sri. Subramanian. I am writing the history in the English blog on Swamikal. Please see my other blogs in my profile.

I will try to write about other great personalities also soon.

crsathish said...

Good to see a sou blog.

குமரன் (Kumaran) said...

Thanks Sathish. Please visit frequently.