
தமரேஸ் தின்னு தமரேஸி
தாக் நீஸ்தெனு மோஸ் ஜாரியாஸி
தாக் தக்யாஸ்தெனு தன்யுடு ஹொரியாஸ்
தாமோதரா தாமோதரா
தொர தய கோன் கலம் அவை தாமோதரா
தமரேஸ் தின்னு தமரேஸி - ஓடுகிறது நாட்கள் ஓடுகிறது
தாக் நீஸ்தெனு மோஸ் ஜாரியாஸி - பாபச் செயல்களிடம் பயம் இல்லாதவர்கள் மோசம் போகிறார்கள்.
தாக் தக்யாஸ்தெனு தன்யுடு ஹொரியாஸ் - பாபச் செயல்களில் பயம் கொண்டு நல்வழியில் வாழ்பவர்கள் பிழைத்துப் போகிறார்கள்.
(என்னால் அப்படி இருக்க முடியவில்லை. உன் அருள் இருந்தால் அது சாத்தியம் என்று அறிந்துள்ளேன்)
தாமோதரா தாமோதரா தொர தய கோன் கலம் அவை தாமோதரா - தாமோதரா உன் கருணை வரும் காலம் எப்பொழுதோ? (சீக்கிரம் எனக்கு அருள் புரிவாய்)
2 comments:
குமரன், பாடலுக்கு நன்றி. இது என்ன மொழி என்று சொல்லுங்களேன்
சிவா,
இது ஸெளராஷ்ட்ர மொழிப் பாடல். மதுரையில் நிறைய ஸெளராஷ்ட்ரர்கள் உண்டு. மதுரையின் ஜனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஸெளராஷ்ட்ரர் என்று கூறக் கேட்டுள்ளேன். இந்த வலைப்பதிவில் முக்கால் வாசி ஸெளெராஷ்ரப் பாடல்கள் தான் வரும் - அனைத்தும் நடன கோபால நாயகி சுவாமிகளால் இயற்றப்பட்டது.
அன்புடன்,
குமரன்
Post a Comment