Saturday, October 15, 2005

எப்போது போய் சேருவோமோ? யார் கண்டார்?


கோன் வேளும் கோட் பொடி ஜேடைகி ஏ ஸரீர்
ஜியெத் கோன் ஜெலும் அவைகி
கொநொக்கி த்யெ கொங்க ஹால்தி ஜனன் ஹோய்கி (கோ)

மான் ஹோர் ஐகுநாஸ்தக் கான் தீ ஐகொ ஐகொ
த்யான் கரோ ஹரி முக்தி தேந் அவயி ஸெத்ல (கோ)

ஸுனொ மஞ்சிரி கூஸ் ஹொய் உஜெ திந்நு புன்னஹா
ஸுக துக்குனு புந்நஹா பொந்தெ
ஸுக துக்குனி புந்நஹா
ஹநந் அவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால்
மொந் ஹரி ஹோர் தொவொ முக்திதேயி ஸெத்ல (கோ)

கள கொரொ ரூப்ஹொய் உஜெ திந்நு புந்நஹா
கரெ கருமுன் புந்நஹா முல்லோ
கரெ கருமுன் புந்நஹா
கெளரவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால்
ஸிள ஹரிக் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல (கோ)

ஸீன் ஸெர ஜென்முந் கடெ திந்நுன் புந்நஹா
ஸேநும் கிடொ ஹோரெநிஹா ஏ ஸெய்லுவோ
ஸேநும் கிடொ ஹோரெநிஹா
பான் படஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால்
ஸீன் திர்ஜாய் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல (கோ)

மொடொ தெநொ எநொ மெனெத் ஸொட்டி ஜேடையா யெமுட்
புட்டுநா ரா:ய்ஹா துருகு யெமுடவேத்
புட்டுநா ரா:ய்ஹா துருகு
வடபத்ரார்யுனு க்ருப ஹால் மொடொ மந்தூர் அப்பேஸ் மொகொ
நடனகோபாலுஸ் தேவ் நஜ்ஜாநகோன் ஐகோ (கோ)

கோன் வேளும் கோட் பொடி ஜேடைகி ஏ ஸரீர் - எந்த வேளையில் எங்கே விழுந்து செத்துப் போகுமோ இந்த உடல்?

ஜியெத் கோன் ஜெலும் அவைகி - அப்படிப் போனால் பின்னர் என்ன ஜன்மம் வருமோ?

கொநொக்கி த்யெ கொங்க ஹால்தி ஜனன் ஹோய்கி - எப்படியோ? யாரால் பிறப்பு ஏற்படுமோ?

மான் ஹோர் ஐகுநாஸ்தக் கான் தீ ஐகொ ஐகொ - கடனுக்கே என்று கேட்காமல் உங்கள் காதுகளைக் கொடுத்து நான் சொல்லுவதைக் கேளுங்கள்.

த்யான் கரோ ஹரி முக்தி தேந் அவயி ஸெத்ல - ஹரி த்யானம் செய்யுங்கள். ஹரி முக்தி கொடுப்பதற்கு வருவான். இது சத்தியம்.

ஸுனொ மஞ்சிரி கூஸ் ஹொய் உஜெ திந்நு புன்னஹா - நாயாகவும் பூனையாகவும் பெருச்சாளியாகவும் பிறந்த நாட்கள் போதாதா?

ஸுக துக்குனு புந்நஹா - சுக துக்கங்கள் போதாதா?

பொந்தெ ஸுக துக்குனி புந்நஹா - அனுபவித்த சுக துக்கங்கள் போதாதா?

ஹநந் அவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால் - அடிக்க வரும் எமனை உங்களால் என்ன செய்யமுடியும்?

மொந் ஹரி ஹோர் தொவொ முக்திதேயி ஸெத்ல - மனதை ஹரியின் மேல் வையுங்கள். முக்தி தருவான். இது சத்தியம்.

கள கொரொ ரூப்ஹொய் உஜெ திந்நு புந்நஹா - கருப்பாகவும் சிவப்பாகவும் உருவம் கொண்டு பிறந்த நாட்கள் போதாதா?

கரெ கருமுன் புந்நஹா - செய்த வினைகள் போதாதா? அதன் பயன்களை அனுபவித்தது போதாதா?

முல்லோ கரெ கருமுன் புந்நஹா - நாம் முன்னர் செய்த வினைகள் போதாதா?

கெளரவஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால் - கழுத்துக்கு வரும் எமனை என்ன செய்ய முடியும் உம்மால்?

ஸிள ஹரிக் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல - கருணை வடிவாம் ஹரியை தியானம் செய்யுங்கள். அவன் பார்த்து முக்தி கொடுப்பான். இது சத்தியம்.

ஸீன் ஸெர ஜென்முந் கடெ திந்நுன் புந்நஹா - என்ன என்னவோ ஜன்மம் எடுத்து இளைத்துப் போனது போதாதா?

ஸேநும் கிடொ ஹோரெநிஹா - சாணியில் புழு ஆகவில்லையா?

ஏ ஸெய்லுவோ ஸேநும் கிடொ ஹோரெநிஹா - இங்கு பாருங்கள். (நாம்) சாணியில் புழுவாய் பிறக்கவில்லையா?

பான் படஸ்தெ யெமாக் காய் கரன் ஹோய் தும்ரால் - (நம்மைக் கொன்று) நம் ஜாதகத்தை கிழிக்க வரும் எமனை என்ன செய்ய முடியும் உங்களால்?

ஸீன் திர்ஜாய் த்யான் கரோ ஸெய் முக்தி தேய் ஸெத்ல - நம் இளைப்பு தீர்ந்து போகும். தியானம் செய்யுங்கள். அவன் பார்த்து முக்தி தருவான். இது சத்தியம்.

மொடொ தெநொ எநொ மெனெத் ஸொட்டி ஜேடையா யெமுட் - 'அவன் என்னை விடப் பெரியவன்; இவன் என்னை விட மூத்தவன்' என்று புலம்பினாலும் எமன் விட்டுப் போவானா?

புட்டுநா ரா:ய்ஹா துருகு - இந்த கூடு உடையாமல் இருக்குமா?

யெமுடவேத் புட்டுநா ரா:ய்ஹா துருகு - எமன் வந்தால் இந்த கூடு உடையாமல் இருக்குமா?

வடபத்ரார்யுனு க்ருப ஹால் மொடொ மந்தூர் அப்பேஸ் மொகொ - (என் குரு) வடபத்ராரியர் கருணையால் பெரிய மந்திரம் எனக்கு கிடைத்தது.

நடனகோபாலுஸ் தேவ் நஜ்ஜாநகோன் ஐகோ - நடன கோபாலனே நம்மைக் காப்பான். கெட்டுப் போகாதீர்கள். கேளுங்கள்.

18 comments:

தருமி said...

ஒன்றும் புரியலை...என்ன மொழி..சமஸ்கிருதம்..? செளராஷ்ட்ரம்..?

குமரன் (Kumaran) said...

இது ஸெளராஷ்ட்ரம் தான். நீங்கள் முழுவதும் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். கீழே தமிழில் பொருள் கூறியுள்ளேன்.

Anonymous said...

ரொம்ப நல்லப் பாட்டு. முதலில் ஒன்றும் புரியாத மாதிரி இருந்தது. தமிழில் நீங்கள் சொல்லியிருக்கும் பொருளைப் பார்த்தபின் சாட்டையடி போல் இருக்கிறது.

Anonymous said...

Sokkat likkiraas. Jukku Sonthos...

Hemapriya said...

Anonymous said...
Great job!!!!

Kodi namaskar tungo...

Avre ayyo Devunukku mhotto devotee. Jhukku sontosh.

Please continue this.

Ive some old sourashtra songs with me too. They are composed by Sri Neelarao. I'd try to post them in my blog soon. I have spread your blog to all my reach. My father would be very glad to know your blog too.

Thank you and Regards
Hemapriya Thoppen

Unknown said...

Dear Kumaran,

Miga Arrumaiyana Paddal.....palla murrali ikka karruthukallai naam palar koora keetu irrukirrom...Ningaalum Naanum ithai padithu vittu meendum intha maayayillathan mooozhga pogirrom....Annal yaaro orruvar ithai padithu unamai villangi athanpaddi vaazha thunivaaraga.....

Antha Yaaro orruvaraga virraivil vaazha irrivan yennauku theyiram mattrum arrul purivaraga....

Anbudan,
Adiyeen.

குமரன் (Kumaran) said...

நன்றி ஹேமப்ரியா...உங்கள் அப்பாவும் நண்பர்களும் இந்தப் வலைப்பக்கத்தைப் பற்றி என்ன சொன்னார்கள்?

குமரன் (Kumaran) said...

நன்றி நடராஜன்.

rv said...

தொடர்ந்து பதியுங்கள்..

நன்றி குமரன்..

குமரன் (Kumaran) said...

நன்றி ராமநாதன். உங்கள் வலைப்பதிவில் நீங்கள் கொடுத்திருந்த கந்தரனுபூதி பாடலைக் கேட்டேன். நல்ல சேவை.

Anonymous said...

Mikavum Nantraaka Irunthathu! Nallachinthanaikal Tharamaana Thatthuvangal.....Ippa Enakkum Sourastiram Theriyume!

குமரன் (Kumaran) said...

நன்றி ஹமீத் அப்துல்லா...

நீங்கள் இந்த வலைப்பதிவில் இருக்கும் எல்லாப் பதிவுகளையும் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். அடிக்கடி வாருங்கள். வாரத்திற்கு ஒரு பதிவாவது இடலாம் என்று இருக்கிறேன்.

நீங்கள் மதுரைக்காரராய் இருந்தால் இங்கு கற்றுக்கொண்ட சௌராஷ்ட்ரத்தை வைத்து உங்கள் சௌராஷ்ட்ர நண்பர்களை ஆச்சரியப்படுத்தலாம் :-)

மதுமிதா said...

குமரன்
மதுரை அருகே திருநகரில்
ஏழு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்(நாயகி சுவாமிகள்)
விழாவினைப் பார்க்க நேர்ந்தது.
அன்றிலிருந்து முழுமையாக அறிந்து கொள்ள விருப்பம்.

நூல் வடிவில் இப்பாடல்கள் கிடைக்குமா?
அல்லது நீங்களே நூலாக வெளியிட விருப்பம் உள்ளதா?
அவர் குறித்த வரலாறும்தேவை?
விபரம் சொல்லவும்.

குமரன் (Kumaran) said...

அக்கா, நூல் வடிவில் இந்தப் பாடல்கள் எல்லாம் கிடைக்கும். என்னிடம் ஒரு பிரதி உள்ளது. அதில் இருந்து தான் இந்தப் பாடல்களை எடுத்துப் பதிக்கிறேன். நாயகி சுவாமிகளின் பாடல்களைப் பற்றியும் அவர் வரலாறையும் அறிய இந்த http://sourashtra.com/nayagi/ வலைப்பக்கத்திற்கு செல்லுங்கள்.

பாடல் புத்தகம் உங்களுக்கு வேண்டுமென்றால் எங்கே கிடைக்கும் என்று விசாரித்துச் சொல்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நானும் நாயகி சுவாமிகளின் வரலாற்றை ஆங்கிலத்தில் http://natanagopalanayaki.blogspot.comஎழுதி வருகிறேன்.

Anonymous said...

It is one of the best songs of our swamy. The way TMS sang this song in the early 80s at the Sourashtra Higher Secondary School ground, still rings in my mind. He is born to sing. He has everything a great singer should have. Majestic voice, the ability to get to the feel of the songs and render them the best possible way. He is our treasure, unfortunately no body seems to be bothered about him. Our bhuvthulunn began the concert at around 7 pm and finished at about 4 in the dawn. The last song was bhagavat nammu meleth jano. When he finished with sri ram sri ram, I was lucky enough to hear HIS VOICE. The first of my two momentary experience of the divinity. Time our people came together for noble causes.
K P Subramanian
Have a good day

Anonymous said...

I have heard about Mr Neela Rao and after getting initiated to our swamys his 'sourashtra' songs are very ordinary and filmi. I know his song can help rekindle interest in our language among the younger generation who don't seem to know the difference between sourashtram and tamil. Pity we are losing our identity so rapidly. My son Harish Krupo is 10 years old. He speaks sourashtra the way it should be, hardly mixing tamil words. Nowadays he has a fancy for sourashtra slang (typical Madurai, though he went there four years ago). By god's grace, he is showing signs of interest in our literature and kirtanas. Wish every parent takes care their children, feeding them on sourashtrasm. We desperately need bhasha bhakthi. According to our guru, Bhasha bhakthi neesthena bhat neesthe bhonno. (Man without devotion to mother tongue is like an empty vessel). Hope our cousins take note of it and act. God is great.
K P Subramanian
have a good day

குமரன் (Kumaran) said...

திரு. சுப்ரமணியன். உண்மைதான். திரு. டி.எம். சௌந்திரராஜன் அவர்கள் இந்தப் பாடலை அற்புதமாகத் தான் பாடியிருக்கிறார். எனக்கும் அவர் பாடி நேரில் கேட்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.

தங்கள் மகன் சௌராஷ்ட்ரத்தைச் சரளமாகப் பேசுகிறார் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. என் மகளுக்கு மூன்று வயது. அவளும் வீட்டில் எங்களுடன் சௌராஷ்ட்ரத்தில் சரளமாகப் பேசுகிறாள். நம் சுவாமிகளின் 'ஹுடிநிம் பிசிநிம்' பாடலைச் சொல்லிக்கொடுக்கத் தொடங்கி இருக்கிறோம். ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறாள். எல்லோரும் இப்படி நம் மொழியின் மேல் பற்றை சிறு வயதில் இருந்து ஊட்டினால் மிக நல்லது.