Saturday, July 01, 2006

181: பரமபுருஷ ஸ்ரீ ரகுநாதா...

பரமபுருஷ ஸ்ரீ ரகு4நாதா2 மொரெ
பாபுன் கடிஹேட் ஸ்ரீ ரகு4நாதா2

கொரிமீ பொ3வரேஸ் தொகொ ரகு4நாதா2 தூ
பி2ரிஸானா ரி:யெஸ்தெ காய் ரகு4நாதா2

ஆஸெ தொர்ஹோருஸ் மொகொ ரகு4நாதா2 தூ
அவ்னாரி:யெஸ்தெ காய் ரகு4நாதா2

தோ3ஷபோ4க்ய ஸ்ரீ ரகு4நாதா2 தொர
மொன்னும் காய் ஹட்வில்ரி:யேஸ் ரகு4நாதா2

தீ பாஞ்சவ்தார் க2டெ3 ரகு4நாதா2 பிர்ம்ம
தே3வுகு பா3ப்ஹொய ரகு4நாதா2

ஸாபோ2ர் ஸயன ஸ்ரீ ரகு4நாதா2 தொகொ
ஸனொமெனி லகஸ்ரேபா3 ரகு4நாதா2

ஸாபும் பெ3ஸ்களி ஸொகொ ரகு4நாதா2 மீ
ஸம்டிலி ரி:யேஸ்ரேபா3 ரகு4நாதா2

தூ3த் லொன் சொரி க2யெ ரகு4நாதா2 மொரெ
து3க்குனு ஜனனிகாய் ரகு4நாதா2

வடபத்ரார்ய கு3ரு ரகு4நாதா2 வாட் ஜனி
சலஸ்தெங்கொ வாட்யேஸ் ரகு4நாதா2

பரமபுருஷ - பரம புருஷனே
ஸ்ரீரகு4நாதா2 - ரகுநாதா
மொரெ பாபுன் கடிஹேட் - என் பாபங்களை களைந்திடுவாய்
ஸ்ரீரகு4நாதா2 - ரகுநாதா
கொரிமீ பொ3வரேஸ் - உரக்க (சத்தமாக) நான் அழைக்கிறேன்
தொகொ ரகு4நாதா2 தூ - உன்னை ரகுநாதனே நீ
பி2ரிஸானா ரி:யெஸ்தெ காய் - திரும்பி பாராதது ஏனோ
ரகு4நாதா2 - ரகுநாதா

ஆஸெ தொர்ஹோருஸ் மொகொ - ஆசை உன் மேல் தான் எனக்கு
ரகு4நாதா2 து - ரகுநாதா நீ
அவ்னாரி:யெஸ்தெ காய் - வாராமல் இருந்ததேனோ
ரகு4நாதா2 - ரகுநாதா
தோ3ஷபோ4க்ய - அடியார்களின் குறைகளையும் நிறைகளாக ஏற்று அனுபவிப்பவனே
ஸ்ரீ ரகு4நாதா2 தொர - ரகுநாதா உன்
மொன்னும் காய் ஹட்வில்ரி:யேஸ் - மனதில் என்ன எண்ணியுள்ளாய்
ரகு4நாதா2 - ரகுநாதா
தீ பாஞ்சவ்தார் க2டெ3 - ஈரைந்து அவதாரங்கள் எடுத்தவனே
ரகு4நாதா2 - ரகுநாதா
பிர்ம்ம தே3வுகு - பிரம்மதேவனுக்கு
பா3ப்ஹொய ரகு4நாதா2 - தந்தை யானவனே ரகுநாதா
ஸாபோ2ர் ஸயன - பாம்பனையில் பள்ளி கொண்டவனே
ஸ்ரீ ரகு4நாதா2 தொகொ - ரகுநாதா
ஸனொமெனி லகஸ்ரேபா3 - உன்னை பார்க்க வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறதப்பா
ரகு4நாதா2 - ரகுநாதா
ஸாபும் பெ3ஸ்களி ஸொகொ - பாம்பிடம் தவளையாய்
ரகு4நாதா2 - ரகுநாதா
மீ ஸம்டிலி ரி:யேஸ்ரேபா3 - நான் அகபட்டிருந்தேன்
ரகு4நாதா2 -ரகுநாதா
தூ3த் லொன் - பால் வெண்ணை
சொரி க2யெ - திருடி உண்டவனே
ரகு4நாதா2 - ரகுநாதா
மொரெ து3க்குனு ஜனனிகாய் - என் துன்பங்களை அறியவில்லையே நீ
ரகு4நாதா2 - ரகுநாதா
வடபத்ரார்ய கு3ரு - வடபத்ரார்ய குரு
ரகு4நாதா2 - ரகுநாதா
வாட் ஜனி சலஸ்தெங்கொ வாட்யேஸ் - (வைகுண்ட) வழியறிந்து நடப்பவர்க்கு இதுவே வழி
ரகு4நாதா2 - ரகுநாதா

பரம புருஷனே ரகுநாதா என்
பாபங்களை களைந்திடுவாய் ரகுநாதா

உரக்க (சத்தமாக) அழைக்கிறேன் உன்னை ரகுநாதனே
திரும்பி பாராதது ஏனோ ரகுநாதா

உன்மீது ஆசை உண்டாகிறது ரகுநாதா நீ
வராமல் இருந்ததேனோ ரகுநாதா

தோஷங்களை போக்குபவனே ரகுநாதா உன்
மனதில் என்ன எண்ணியுள்ளாய் ரகுநாதா

ஈரைந்து அவதாரங்கள் எடுத்தவனே ரகுநாதா
பிரம்மதேவனுக்கு தந்தை யானவனே ரகுநாதா

பாம்பனையில் பள்ளி கொண்டவனே ரகுநாதா
உன்னை பார்க்க எண்ணுகிறேன் ரகுநாதா

பாம்பிடம் தவளையாய் ரகுநாதா
நான் அகபட்டிருந்தேன் ரகுநாதா

பால் வெண்ணை திருடி உண்டவனே ரகுநாதா
என் துன்பங்களை களையவில்லையே ரகுநாதா

வடபத்ரார்ய குரு ரகுநாதா
(வைகுண்ட) வழியறிந்து நடப்பவர்க்கு இதுவே வழி ரகுநாதா

***

இந்தப் பாடலை டி.எம்.எஸ். அவர்களின் குரலில் கேட்க இந்த வலைப்பக்கத்தைப் பாருங்கள்.

13 comments:

pathykv said...

cokkat se. nandinin!
K.V.Pathy.

rnatesan said...

சமஸ்கிருத பாடலையும் முழுவதுமாக எழுதி பின் வரிவரியாக விளக்கவும்,அப்போதுதான் பாடிப்பார்க்க வசதியாய் இருக்கும்.நன்றி....

சிவமுருகன் said...

நன்றி திரு. K.V.பதி.

சிவமுருகன் said...

நன்றி. நடேசன் சார்.

சிவமுருகன் said...

//சமஸ்கிருத பாடலையும் முழுவதுமாக எழுதி பின் வரிவரியாக விளக்கவும்,அப்போதுதான் பாடிப்பார்க்க வசதியாய் இருக்கும்.நன்றி.... //

இனி அவ்வாறே செய்து விடுகிறேன்.

நன்றி. நடேசன் சார்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கேட்டால் கல்லும் கரையும் பாடல்கள். ஸ்வாமிகளின் ஆத்ம நிவேதனத்தை நன்றக எடுதுக்காட்டும் நல்ல படல்.அன்பன் தி ரா ச

ENNAR said...

சோழன் என்றால் சமஸ்கிருதத்தில் என்ன பொருள். தெரிந்தால் சொல்லுங்கள்

சிவமுருகன் said...

தி ரா ச,

//கேட்டால் கல்லும் கரையும் பாடல்கள். ஸ்வாமிகளின் ஆத்ம நிவேதனத்தை நன்றக எடுதுக்காட்டும் நல்ல படல்.//

நாயகி பாவத்தில் அவர் செய்த 200க்கும் மேற்ப்பட்ட கீர்த்தனைகள் ஒவ்வொன்றும் தேனில் ஊறிய பலா சுளை, அவை சிறிது அவை சிறிதாக இங்கே ஊட்டவும், உண்ணவும் போகிறேன்.

நன்றி.

சிவமுருகன் said...

//சோழன் என்றால் சமஸ்கிருதத்தில் என்ன பொருள். தெரிந்தால் சொல்லுங்கள்//

என்னார் சார்,
தெரிந்து கொண்டு சொல்கிறேன்.

VSK said...

நல்ல உருக்கமான பாடல்.
நல்ல முறையில் விளக்கியிருக்கிறீர்கள்.
நன்றி.

குமரன் (Kumaran) said...

மிக அருமையான பாடல் இது சிவமுருகன். பதித்ததற்கு நன்றி.

ஆங்காங்கே சில சொற்பிழைகள் (தட்டச்சுப் பிழைகள்) இருந்தன. அவற்றைச் சரி செய்திருக்கிறேன்.

இந்தப் பாடலை டி.எம்.எஸ். அவர்கள் பாடியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்குச் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அனைவரும் கேட்டுப் பாருங்கள்.

குமரன் (Kumaran) said...

நடேசன் ஐயா. இந்தப் பாடல் சமஸ்கிருதப் பாடல் இல்லை. சௌராஷ்ட்ரப் பாடல். ப்ராகிருத மொழிகளில் ஒன்றான சௌரசேனி என்ற மொழி சௌராஷ்ட்ர மொழிக்கு முன்னோடி என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

சிவமுருகன் said...

அண்ணா,
//ஆங்காங்கே சில சொற்பிழைகள் (தட்டச்சுப் பிழைகள்) இருந்தன. அவற்றைச் சரி செய்திருக்கிறேன். //

நன்றி.