Wednesday, July 19, 2006

எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா - 3

ரஜொ ஹா மொர பா3பு
அம்பொ3 அம்பொ3 (ரஜொ)
மீ ரஜொ ஹா மொரபெ3டொ
ராஜ்ஜலன் ஜாஸ்ஹா தெகொ3ஹால் [நொ]


எந்தந்தையோ ஸ்ரீராங்கார்யர், என்றால் ஸ்ரீரங்கத்திற்க்கே அரசன் என்று பொருள், ஆனால் அப்பதவி பறிபோய் அப்பெயர் என் மகனக்கு சூட்டி அவனை அரசனாக்க வேண்டி வரும். (தமது தந்தையின் பெயரை, தன் மகனுக்கு சுட்டுவது குடும்ப வழக்கம்) ஆகவே எனக்கு திருமணம் வேண்டாம். (இப்போது அவரது தாய் சற்றே யோசிக்க ஆரம்பிக்கிறார், அதை கண்ட சுவாமிகள் சந்தோஷத்துடன் தொடர்ந்தார்)

காய் ஜிவ்னம் ஜிவ்ன ஹோய்கி
அம்பொ3 அம்பொ3 (காய்)
சொக்கட் கைங்கர்யமு வாடு
கர்னாதிஸொ ஹொய்யாய் [நொ]

மாயையின் விளக்கம் கேட்ட தேவ முனிவரான நாரதரையே ஒரு வழிசெய்துவிட்ட இல்வாழ்க்கை, என்னை என்ன பாடு படுத்துமோ, என்ன வாழ்க்கை வாழவேண்டிவருமோ, நல்வழியான பகவத் சேவை செய்ய வழி இல்லாமலாகிவிடும். எனவே இதை தடுக்கும் திருமணம் எனக்கு வேண்டாம்.

ஸொம்மு ஸொமந்து3 மைலைவோ
அம்பொ3 அம்பொ3 (ஸொம்மு)
மீ ஸொம்புஹோர்ஜிவ்னம் கரெதி
ஸொந்தோஷ் ஹோர் வத்தான் கரை [நொ]

நகை, பணம், என்று உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் நல்ல வார்த்தை சொல்லியோ, அதட்டியோ தான் அடைந்து விடுவாள், நான் மேலும் சில சந்தோஷ வாழ்க்கையை வாழவேண்டும் என்று மேலும் சில வார்த்தைகளை சொல்வாள், என்னை மற்றவரிடமிருந்து பிறிப்பாள், தனக்கே உரியவளாக்கி கொள்வாள். என்னை மற்றவரிடமும், நான் வணங்கும் கோவிந்தனிடமிருந்து பிறிக்கும் சடங்கான திருமணம் எனக்கு வேண்டாம் அம்மா.

மாய் பா3பு வத்தொ ஹெடை3யாய்
அம்பொ3 அம்பொ3 (மாய்)
லோகுர் மாயாம் ஸம்டில்லி தோணும்
மத்தி தைலுவையாய் [நொ]

தாய் தந்தையிரின் பேச்சை கேட்டு கேளாதவனாகி விடுவேன் அம்மா, நாரதன் அகப்பட்ட குழந்தை, மனைவி என்ற பந்தத்தில் அகப்பட்டு என் வாயில் நானே மண்ணிட்டு கொண்டது போலாகிவிடும். எனவே மாயையில் அகப்பட வைக்கும் திருமண பந்தம் எனக்கு வேண்டாம்.

2ல்சொ சலஸ்தெ காய் தெ3க்யாஸ்வோ
அம்பொ3 அம்பொ3 (ப2ல்ஸொ)
அத்தொ சொக்கட் க3தி பஜெமெனி
சொக்கட் வாடும் சல்லேத் ரீ:ரேஸ் [நொ]

அம்மா, பின்னர் என்ன நடக்க போவதை யாரறிவார், ஆனால் இப்போது நான் நல்வழியானை கோவிந்தனை பற்றி, நல் வழியில் நடந்து வருகிறேன். அது போதும், அப்படி நல்வழியிலிருந்து பிறழவைக்கும் திருமணம் என்ற சடங்கு எனக்கு வேண்டாம்.

செடனான் ஹொடை3 ஹொராட்3 ஹால்
அம்பொ3 அம்பொ3 (செடனான்)
ஸ்ரீ நடனகோ3பாலுக் நொம்மேத்
செடனானஸ்கி கடை ஜாய் [நொ]

இராமாயண, மஹாபாரத சண்டைகள் முதல் எல்ல சண்டை, சச்சரவுகளும் திருமணத்தால் தான் வந்தது, வளர்ந்தது அப்பேற்ப்பட்ட சண்டைகளால் நான் வணங்கும் இராமனும், கிருஷ்ணரும் இருந்துள்ளனர், அவர்களது அருளால் தான் அதுவும் தீர்ந்தது, எனவே அம்மா, அவர்களை நம்பி, இருக்கும் சண்டைகளை தீர்ப்பான். எனவே எனக்கு திருமணம் வேண்டாம் அம்மா.

6 comments:

குமரன் (Kumaran) said...

//ரஜொ ஹா மொர பா3பு
அம்பொ3 அம்பொ3 (ரஜொ)
மீ ரஜொ ஹா மொரபெ3டொ
ராஜ்ஜலன் ஜாஸ்ஹா தெகொ3ஹால் [நொ]

எந்தந்தையோ ஸ்ரீராங்கார்யர், என்றால் ஸ்ரீரங்கத்திற்க்கே அரசன் என்று பொருள், ஆனால் அப்பதவி பறிபோய் அப்பெயர் என் மகனக்கு சூட்டி அவனை அரசனாக்க வேண்டி வரும். (தமது தந்தையின் பெயரை, தன் மகனுக்கு சுட்டுவது குடும்ப வழக்கம்) ஆகவே எனக்கு திருமணம் வேண்டாம். (இப்போது அவரது தாய் சற்றே யோசிக்க ஆரம்பிக்கிறார், அதை கண்ட சுவாமிகள் சந்தோஷத்துடன் தொடர்ந்தார்)
//

சிவமுருகன். இந்த வரிகளுக்குச் சரியான பொருள் நீங்கள் சொன்னது இல்லை என்று நினைக்கிறேன். சுவாமிகள் கேட்பது வேறு.

என் தந்தை என்ன அரசனா? நான் என்ன அரசனா? என் மகன் அரசாளப்போகிறானா என்ன? என்று கேட்கிறார்.

நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் அரச பரம்பரைக்கு வாரிசு வேண்டுமென்றால் ஏற்படலாம். என் தந்தையும் அரசரில்லை. நானும் அரசனில்லை. நான் திருமணம் செய்து கொண்டு மகன் பிறந்தால் அவனும் அரசனாகப் போவதில்லை. பின்னர் ஏன் திருமணம் செய்ய வேண்டும். (எந்தக் கட்டாயமும் இல்லாமல் ஏன் பந்தத்தில் மாட்ட வேண்டும் என்கிறார்).

சிவமுருகன் said...

அண்ணா,

//என் தந்தை என்ன அரசனா? நான் என்ன அரசனா? என் மகன் அரசாளப்போகிறானா என்ன? என்று கேட்கிறார். //

நீங்க சொன்னா அது சரியாக தான் இருக்கும்.

ஒரு வேளை "ரஜொஹா" என்று கேட்டது அரசனல்லவா? என்ற கோனத்திலிருந்து எண்ணிவிட்டேன்.

நிங்கள் சொல்வது சரியாக உள்ளது.

ENNAR said...

குமரன் இரண்டு நாட்களாக எனக்கு எந்த பிளாக்கும் ஓபன் ஆகவில்லை ஏதோ உங்களுடையது பலதடவை முயன்று திறந்துள்ளது ஏன் அப்படி

சிவமுருகன் said...

என்னார் சார்,

சில நாட்களாகவே எந்த ப்ளாகரும் திறப்பதில்லை. இந்திய அரசு இதை தடை செய்து விட்டதாக அறிகிறேன், என்ன காரணம் என்பது புதிராகவே உள்ளது. சில ப்ராக்ஸி மூலமாக பதிவுகளை படிக்க பார்க்க, பின்னூட்டமிட முடிகிறது. அதிலும் சில பதிவுகளை இந்த வசதி மூலமாகவும் பார்க்க முடியவில்லை.

Anonymous said...

kumaran,

i am much impressed with your blogs,
am continuously reading all your blogs,
sometimes the song is so impressive that we get tears in our eyes because of reality.
similar songs are written by purandara dasa , kanaka dasa in kannada.
pl continue your good work.
may god bless you with good and peace ful life.
raghs

சிவமுருகன் said...

Raghas,

//i am much impressed with your blogs,I am continuously reading all your blogs, sometimes the song is so impressive that we get tears in our eyes because of reality.
similar songs are written by purandara dasa , kanaka dasa in kannada.//

Those are natural things, Person identifies the good things from their sorroundings itself.

//pl continue your good work.//
Yes we will continue this.

//may god bless you with good and peace ful life.
raghs //

Wish you the same

Thank you for your comments.