Monday, July 17, 2006

அங்கும் இங்கும் இருப்பவனே ...

“ஹேமா பிரியா” அவர்கள் தமது பின்னூட்டத்திலும், தனி மடலிலும் ஸ்ரீமந் நாயகி சுவாமிகளின் சில பாடல்களை பதிக்கும்படியும், அண்ணன் குமரன் அவர்கள் சிறிய நாமவளிகளை இடும்படியும் கேட்டிருந்தனர் “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பார்களே! இப்போதும் அதே போல் தான் இங்கும். பிரியா அவர்கள் கேட்ட “யேலா தேலா கோபாலா” என்ற நாமாவளியை இப்பதிவில் இடுகிறேன்.

மாய கண்ணனை கணவனாக வரித்து “நாயகி பாவத்தில்” பக்தி செய்து வந்த ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள் கண்ணனை குழந்தையாகவும், தன்னை காக்கும் அரசனாகவும்(உடையவனாக) பார்க்கும் ஒரு பாடல், இந்த நாலு வரி நாமாவளிப் பாடல் எளிமையாகவும், இனிமையிலும் இனிமையாக இருப்பதும் மேலும் சிறப்பு.

யேலா தேலா கோ3பாலா
ஜாலமு கர்நகொ கோ3பாலா
ஜிலபி தெ3வுஸ் கோ3பாலா
பாலி மொகொ கோ3பாலா


யேலா தேலா கோ3பால – பல அர்த்தங்களை கொண்ட இந்த முதல் இருவார்த்தைகள். இங்கும் அங்கும் நிறைந்தவனே கோவிந்தனே, கோபாலனே, இங்கும் அங்கும் உள்ளவனே கோவிந்தனே, கோபாலனே, இங்கும் அங்கும் என்றில்லாமல் எங்கும் இருப்பவனே கோவிந்தனே, கோபாலனே, என் நினைவும் இங்கும், அங்கும் உன்னை தேடும் கோவிந்தனே, கோபாலனே என்றும் மேலும் பலவாறும் கொள்ளலாம்.

ஜாலமு கர்நகொ கோ3பாலா
உன்மாய விளையாட்டுக்களை என்னிடம் காட்டாதே கண்ணா, உன்னையே கதியென்று இருப்பவர்களிடம் மாயாஜாலத்தை காட்டினால் அவர்கள் என்ன செய்வர். தயவு செய்து உன்ஜாலத்தை காட்டாதே.

ஜிலபி தெ3வுஸ் கோ3பாலா
உனக்கு விருப்பமான இனிப்பான ஜாங்கிரியை தருகிறேன், உன்னை மகிழ்விக்கிறேன், உன்னை குழந்தையாக பாவித்து ஆராதிக்கிறேன், உனக்கு நைவேத்தியம் செய்கிறேன். (ஜிலபி – ஜாங்கிரி)

பாலி மொகொ கோ3பாலா
என்னையும் உன் அடியவர்களையும் ஏனைய எல்லோரையும் ஒரே இனமாக பாவிக்கும் கண்ணா, என்னையும் ஏனைய பிறரையும், அனைவரையும் உடையவனாக, அரசனாக பாலித்து காப்பாய்.

இப்பாடலை என்னுடைய அம்மா தன் திருமணத்திற்க்கு முன்பு பாடியதாகவும் திருமணத்திற்க்கு பிறகு இப்பாடலையும் மேலும் ஒருசில நாயகி சுவாமிகளின் பாடல்களையும் பாடுவதில்லை என்று சொல்வார். ஏனென்று நீங்கள் எண்ணுவது எனக்கும் புரிகிறது, என்னுடைய அப்பாவின் பெயர் “கோபால் ராம்”.

5 comments:

pathykv said...

prEvu Sivamurugan,
jukku guLLe hoye geeth.
jilebi veLo, jaangiri veLo.
K.V.Pathy.

Anonymous said...

Arumayaana paadal, Aaalnda karuthukkal.

"Ela thela" endru kulandayaga bhaavikkum podum krishna engum edilum irukkirrar endra mahathuvathai uraikkirathu.

Siru namaavaliyil pudainthu irukkum taatparyathai unarthiyadarku nandri Sivamurugan


- Priya

Anonymous said...

Sivamurugan,

Your mom is very sweet and a typical sourashtra woman. My mom is like that too. I love this culture & courtesy that a woman has for her husband. But its slowly disappearing... :(

Priya

சிவமுருகன் said...

நன்றி K.V.பதி
இந்த சேவையை பயன்படுத்தி தமிழில் பின்னூட்டமிடலாம்.
சுட்டி: http://www.suratha.com/reader.htm

சிவமுருகன் said...

நன்றி பிரியா.

//Your mom is very sweet and a typical sourashtra woman. My mom is like that too.//

அது தான் நாம் சார்ந்த சமுகத்தின் பண்பாடு.

// I love this culture & courtesy that a woman has for her husband. But its slowly disappearing... :(//


காலத்தின் கோலம், அதை மாற்றுவது நம் கையில்தான் (புதிய தலைமுறை) உள்ளது.

நீங்களும் இந்த சேவையை பயன்படுத்தி தமிழில் பின்னூட்டமிடலாம்.
சுட்டி: http://www.suratha.com/reader.htm