Sunday, July 09, 2006

எங்கும் நிறைந்தவனே எனக்கு வேறு கதியில்லை...

இறைவா. எத்தனையோ பாவ புண்ணியங்கள் செய்து இங்கு அவற்றின் பயன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அவற்றைப் பற்றிச் சொல்லும் போது கூட புண்ணிய பாவங்கள் என்று சொல்ல வரவில்லை; பாவ புண்ணியங்கள் என்றே சொல்ல வருகிறது; அந்த அளவுக்கு பாவங்களையே மிகுதியாகச் செய்திருக்கிறேன். செய்த வினைகளின் பயன்களை அனுபவிக்கப் பிறவி எடுத்து விட்டு மேலும் மேலும் பாவ புண்ணியங்களைச் செய்து அந்த வினைகளின் கூட்டத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறேனே ஒழிய இந்த சுழலிலிருந்து விடுபடும் வழி தெரியவில்லை.

பார் என் மேல் கருணை கொண்டு பார். உன் கடைக்கண் பார்வையால் தான் என் வினைகள் அழிந்து எனக்கு நல்வழி கிடைக்கும். நான் எப்போது இந்த சம்சாரக் கடலைத் தாண்டுவேன்? உன் கருணைப் பார்வை என் மேல் விழாவிட்டால் எனக்கு வேறு கதி ஏது? கேஸவா; அழகிய சுருள் முடிகளை உடையவனே; கேசி எனும் அரக்கனைக் கொன்றவனே - உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லை. திருமகளுடன் வந்து என்னை நீ அழைத்துக் கொள்.

ஸா க்ருப ஸா - பார் என்னை தயை கூர்ந்து பார்

யே ஸம்ஸார் - இந்தச் சம்சாரக் கடலை

மீ கொ2ப்பா3க் த3டு - நான் எப்போது தாண்டுவேன்?

ஸாநா ஜியெத் - நீ பார்க்காமல் போனால்

மொகொ கோட் வாடு - எனக்கு எது வழி?

ஸ்ரீ கேஸவா - கேஸவா

தொர விநா க3தி நீ: - உன்னையன்றி எனக்கு வேறு கதியில்லை

யேட் ஸெய்லே - இங்கே பார்

ஸ்ரீலக்ஷ்மி தே3வி ஸெர - ஸ்ரீ தேவியுடன்
அவி மொகொ தூ பொ3வ்லே - வந்து என்னை நீ அழைத்துக்கொள்

உன் திருநாமங்களைச் சொன்னால் 'போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்' என்றாளே ஆண்டாள் நாச்சியார். அதனால் உன் திருநாமங்களை 'ராமா. கிருஷ்ணா. கோபாலா. ஹரி ஹரி' என்று எங்கும் எப்போதும் பாடிக்கொண்டிருக்கிறேன். எங்கும் எல்லா இடங்களிலும் கரந்தெங்கும் பரந்துளாயே. எங்கும் நிறைந்துளாயே. உன் திருவடிகளை எனக்குத் தந்தருள திருமகளுடன் கிளம்பி நான் இருக்குமிடம் வரவேண்டும்.

ஸ்ரீ ராமா - ஸ்ரீ ராமா

ஸ்ரீ க்ருஷ்ணா - ஸ்ரீ கிருஷ்ணா

ஸ்ரீ கோ3பாலா - ஸ்ரீ கோபாலா

ஸ்ரீ ஹரி - ஸ்ரீ ஹரி

யே கொம்மி ரி:யெஸ்தெ பொ4ரி - எல்லா இடங்களிலும் நிறைந்தவனே

தே3மாய் ஹொய்யவி - அப்பொருளானவனே

பதா3ல் கோ3 தூ - பவித்ரமான பாதங்களை

தே3ரெஸ்தா2ம் - தந்தருள

தே3வி ஸ்ரீலக்ஷ்மிஸெர - திருமகள் இலக்குமியுடன்

நிக்ளி அவி மீ ஸேஸ்தா2ம் - நானிருக்கும் இடத்திற்கு கிளம்பி வருவாய்

***

'விரைவில் வந்து காட்சி தருவாய்' என்றத் தலைப்பில் சிவமுருகன் இட்டப் பதிவில் இருக்கும் நாயகி சுவாமிகளின் பாட்டின் முதல் இரண்டு சரணங்களை விளக்கும் பதிவு இது. பல்லவி விளக்கப்பட்டப் பதிவு இங்கே இருக்கிறது. அனுபல்லவி விளக்கப்பட்டப் பதிவு இங்கே இருக்கிறது.

இந்தப் பாடலைத் திரு. டி.எம். சௌந்தரராஜன் பாடிக் கேட்க இங்கே செல்லுங்கள்.

6 comments:

சிவமுருகன் said...

அருமையான விளக்கம்.
//பாவ புண்ணியங்கள் என்றே சொல்ல வருகிறது;//

கோவி.கண்ணன் said...

திரு குமரன்.... இது ஆதி சங்கரரின் சவுந்தர்யலகரியா ?

ENNAR said...

ஆமாம் பாவ புண்ணியம் என தான் எல்லோரும் சொல்கிறோம்

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன் & என்னார் ஐயா?

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் ஐயா. இது மதுரையில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளின் சௌராஷ்ட்ர மொழிப் பாடல்.

அதிசங்கரரின் சௌந்தர்யலஹரி அம்பிகையின் மேல் எழுதப்பட்டது. இந்தப் பாடல் பெருமாள் மேல் பாடப்பட்டது. ஏன் இது சௌந்தர்யலஹரி என்று தோன்றியது என்று சொல்கிறீர்களா?

கோவி.கண்ணன் said...

//ஏன் இது சௌந்தர்யலஹரி என்று தோன்றியது என்று சொல்கிறீர்களா?
//
திரு குமரன், ஆதிசங்கரர் அறுவகையாக ஷன்மத்தங்களை வாழ்வியலுக்காக (பக்தி மார்கம்) உருவாக்கினார் என்று படித்திருக்கிறேன். மேற்கண்ட பாடல்கள் சமஸ்கிரதம் போல் எனக்கு தெரிந்ததாலும், நீங்கள் பஜகோவிந்தம் எழுதுவதாலும் அவ்வாறு கேட்டேன். உங்கள் விளக்கத்துக் பின் புரிகிறது. நன்றி