Thursday, July 13, 2006

இறைவனின் உண்மை தொண்டர்

ஒரு இறைவனின் உண்மை தாஸர், உண்மை தொண்டர், எவ்வாறு இருப்பார் அவரது அங்க அடையாளங்கள் என்ன என்ன? என்பதையும், அவர் எதை, எங்கு, யாரிடம், என்ன சொல்வார் என்று தன்னுடைய நடையில் நாயகி சுவாமிகள் சொல்லியுள்ளார். இந்த பாடல் ஆதி சங்கரர் இயற்றிய பஜகோவிந்தத்தில் வரும் 22வது பாடலை ஞாபக படுத்துகிறது. கலியுகத்தில் வாழ்ந்த நடனகோபல நாயகி ஸ்வாமிகளும் அதே கருத்தை சொல்லியுள்ளதும் ஒத்த கருத்துள்ளது, காலம் சுழன்றாலும் தாஸனின் அடையாளங்கள் மாறாமல் இருப்பது வியப்பலும், வியப்பானது.


இந்த பாடலை நானும், என்னுடைய அண்ணனும் பல முறை வீட்டிலும், ஒருமுறை அழகர் கோவிலிலும் பாடியுள்ளோம் (எல்லாம் கேள்வி ஞானம் தான்). கணிணிவகையை சேர்ந்த இப்பாடல் அனுபல்லவி, பல்லவி என்று இல்லாமல், வேகமாக பாடும் படியாக இருக்கும்.


இந்த பாடலை ‘அயி கிரி நந்தினி’ மெட்டில் பாட அருமையாக இருக்கும். அதே ராகத்தில் இப்பாடலை திரு. ராமரத்தினம் அவர்கள் தன்னுடைய சங்கீத குரலில் பாடியுள்ளார்.


ஹரிக் க3வி நசி பொ3வி ஆனந்து3ம்
பு3டெ3ஸ்தேஸ் ஆங்கு3 விஸ்ரை பொட3யி
கு3ரு சரணுகு த்4யான் கரொயி
ரொட3யி அஸயி கோ3ரா:ய் பாய்ம்பொட3யி


பிஸ தெ4ரெஸ்தெந ஸொக பி3ஸயி
4மயி கொங்கிடி3 பி2ரிஸெய் பொ3வயி
பிஸலோக் மென்க்யான்ஸெர தெ3ஸி
தெ3ஸ§நாஸ்தக ரெ:ய் ஹரிக் க3வயி


தி3க்குனுஸாய் தே3வ் அவயிமெநி
தெ3க்குநாஸ்தெனொ ஹொய் பொ3வயி
சொக்கட் ஏ மெனிகு ஜெலும்மென் ஸங்கி3 கொங்கிக்
சொக்கட் வாடும் பி2ர்வொயி


வடதேட் மொகொ ஸேமென் ஜனெஸ்தெந ஹொய்
வாடும் யேடும் சல்லேது ரா:யி
கெடொ ஹிங்¢கு3லுவாய் அவொமெநி பொ3வி
கேஸவ ஸொகொ க்ருப ஸாயி ஸாயி


நடனகோ3பால் நமம் படன கர்லுவோ மெநி
படனகர் தே3யி தே3யி
வடபத்ரார்யுநு வாடும் சலஸ்தென்
வைகுண்டுகு ஜாயி ஜாயி (ஹரி க3வி)




ஹரிக் க3வி நசி பொ3வி ஆனந்து3ம் - ஹரியையே எப்போதும் (பாடியும்) ஆடியும், அழைத்தும், ஆனந்தித்திருப்பார்.


பு3டெ3ஸ்தேஸ் ஆங்கு3 விஸ்ரை பொட3யி - அந்த ஆனந்தத்தில் குளித்திருப்பார் (திளைத்திருப்பார்), உடலையும் மறந்திருப்பார், மறந்து விடுவார்.


கு3ரு சரணுகு த்4யான் கரொயி - குருவின் பாத சரணங்களை தியானிப்பார்


ரொட3யி அஸயி கோ3ரா:ய் பாய்ம்பொட3யி - (ஒரு காரணமில்லாமல்) அழுவார், சிரிப்பார், தனித்திருப்பார், (எங்கோ நோக்கி) வணங்குவார்.


பிஸ தெ4ரெஸ்தெந ஸொக பி3ஸயி -

பித்து பிடித்தவர் போல் (எங்கும்) அமர்வார்.


4மயி கொங்கிடி3 பி2ரிஸெய் பொ3வயி - (அடுத்த விணாடியே) ஓடுவார், திரும்பி எங்கோ நோக்கி அழைப்பான்


பிஸலோக் மென்க்யான்ஸெர தெ3ஸி

தெ3ஸுநாஸ்தக ரெ:ய் ஹரிக் க3வயி


பித்து பிடித்தவர் போல் தெரிந்தாலும் அவர்களிடமிருந்து ஒட்டி ஒட்டாமல் (தனியாக) தெரிவார். ஹரியை பாடுவார் (பைத்தியக்கார உலக மக்களுடன் ஒட்டியும் ஒட்டாமல் இருந்து ஹரியைப் பாடுவார்.)

தி3க்குனுஸாய் தே3வ் அவயிமெநி - திக்குகளை நோக்கி பரமன் வருவார் என்று


தெ3க்குநாஸ்தெனொ ஹொய் பொ3வயி - காணாதவன் போலாகி அழைப்பார்.


சொக்கட் ஏ மெனிகு ஜெலும்மென் ஸங்கி3 - இந்த மனித ஜென்மம் நல்லதே என்று சொல்லியும்


கொங்கிக் சொக்கட் வாடும் பி2ர்வொயி - யாவரையும் அந்த நல்ல வழியில் திருப்புவார்


வடதேட் மொகொ ஸேமென் ஜனெஸ்தெந ஹொய் - எனக்கு அங்கே (பரமபதத்தில்) இடம்முண்டு என்று தெரிந்திருப்பார்


வாடும் யேடும் சல்லேது ரா:யி - வழியிலும், (அங்கும்) இங்கும் நடந்த படியிருப்பார்.


கெடொ ஹிங்¢கு3லுவாய் அவொமெநி பொ3வி - கடைத்தேற்றிகொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்து


கேஸவ ஸொகொ க்ருப ஸாயி ஸாயி - கேஸவனின் நற்கிருபையை அருளை பார்பார்


நடனகோ3பால் நமம் படன கர்லுவோ மெநி - நடன கோபாலனின் திருநாமத்தை மனனம் செய்து கொள்க என்று


படனகர் தே3யி தே3யி - பாடங்களை(தீக்ஷை) தருவார்.


வடபத்ரார்யுநு வாடும் சலஸ்தென் - வடபத்ராரியர் வழியில் நடந்து


வைகுண்டுகு ஜாயி ஜாயி - வைகுண்டத்ற்க்கு செல்வார் (வைகுண்டத்தை அடைவார்).


ஹரியையே எப்போதும் (பாடியும்) ஆடியும், அழைத்தும், ஆனந்தித்திருப்பார்.

அந்த ஆனந்தத்தில் குளித்திருப்பார் (திளைத்திருப்பார்), உடலையும் மறந்திருப்பார், மறந்து விடுவார்.

குருவின் பாத சரணங்களை தியானிப்பார்

(ஒரு காரணமில்லாமல்) அழுவார், சிரிப்பார், தனித்திருப்பார், (எங்கோ நோக்கி) வணங்குவார்.


பித்து பிடித்தவர் போல் (எங்கும்) அமர்வார்.

(அடுத்த விணாடியே) ஓடுவார், திரும்பி எங்கோ நோக்கி அழைப்பான்

பித்து பிடித்தவர் போல் தெரிந்தாலும் அவர்களிடமிருந்து ஒட்டி ஒட்டாமல் (தனியாக) தெரிவார். ஹரியை பாடுவார்


திக்குகளை நோக்கி பரமன் வருவார் என்றவர்

காணாதவன் போலாகி அழைப்பார்.

இந்த மனித ஜென்மம் நல்லதே என்று சொல்லியும்

யாவரையும் அந்த நல்வழியில் திருப்புவார்.


எனக்கு அங்கே (பரமபதத்தில்) இடம்முண்டு என்று தெரிந்திருப்பார்

வழியிலும், (அங்கும்) இங்கும் நடந்த படியிருப்பார்.

கடைத்தேற்றிகொள்ளலாம் வாருங்கள் என்று அழைத்து

கேஸவனின் நற்கிருபையை அருளை பார்பார், மற்றவர் பெறுவதற்க்கும் வழிகாட்டுவார்.


நடன கோபாலனின் திருநாமத்தை மனனம் செய்து கொள்க என்று

பாடங்களை(தீக்ஷை) தருவார்.

வடபத்ராரியர் வழியில் நடந்து

வைகுண்டத்ற்க்கு செல்வார் (வைகுண்டத்தை அடைவார்).

6 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். இந்தப் பாடலை இந்தப் பதிவில் தான் முதன் முதலாகப் படிக்கிறேன். பாடலின் ஒலிவடிவத்தையும் இட்டதற்கு நன்றி.

நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அடியாரின் இந்த நிலையைப் பற்றி பல பாசுரங்கள் படித்திருக்கிறேன். இந்தப் பாடலைப் படித்த போது அந்தப் பாசுரங்களில் சில நினைவிற்கு வந்தன. எடுத்துக் காட்டாய் இந்தப் பதிவில் இருக்கும் பாசுரங்களைப் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2006/01/108.html

குமரன் (Kumaran) said...

இந்த மாதிரி நீளமான பாடல்களை இடும் போது நடு நடுவே சிறிய நாமாவளையைப் போல் இருக்கும் பாடல்களையும் போடுங்கள் சிவமுருகன். சிறு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் வகையில் இருக்கும் 'ஹுடினிம் பிஸினிம்...' போன்ற பாடல்களையும் பதியுங்கள்.

Anonymous said...

excellent song
i listen everyday
thanks for posting this
may god bless u

சிவமுருகன் said...

thank you anany,

May I know about you?

Thanks with regards.

G.Ragavan said...

இந்தப் பாடலில் ஹரி என்பதற்குப் பதிலாக வேறு எந்தத் தெய்வத்தையும் வைத்துப் பாருங்கள்....பொருள் ஒன்றும் மாறத் தேவையில்லை. வைகுண்டத்திற்குப் பதிலாக கைலாசம். அவ்வளவுதான். கருத்துகள் அனைத்திற்கும் பொருந்தும்.

சிவமுருகன் said...

இராகவன்,
நீங்கள் சொல்வது சரியாக பொருந்துகிறது,

ஸ்ரீ மந் நாயகி சுவாமிகள், முதலில் சதானந்த அடிகளாக இருந்து, சதானந்த சித்தராகி பின் சதா சர்வகாலங்களிலும், கோவிந்தனை தன்னை ஆட்கொண்ட கணவனாக வரித்து ஸ்ரீ ரெங்க ஜீயரவர்களால் நடனகோபாலனுக்கு நாயகி என்று பெயர் பெற்றார்.

//இந்தப் பாடலில் ஹரி என்பதற்குப் பதிலாக வேறு எந்தத் தெய்வத்தையும் வைத்துப் பாருங்கள்....பொருள் ஒன்றும் மாறத் தேவையில்லை. வைகுண்டத்திற்குப் பதிலாக கைலாசம். அவ்வளவுதான். கருத்துகள் அனைத்திற்கும் பொருந்தும். //

ஆதலால் இவ்வாறு வருவது பல பாடல்களில் பொருந்தும்.