நாயகி சுவாமிகளின் பல பாடல்களில் ஹரியையே இருவிதமாக பாடும் கலையை கையாண்டுள்ளார். அப்படி இயற்றிய அவரது ஒரு மிக எளிமையான ஒரு பாடல். இப்பாடலில் கடவுள் உண்மையாக கடந்த காலத்தில் இருந்திருக்கிறார், நிகழ்காலத்தில் இருக்கிறார், வருங்காலத்திலும் இருப்பார் என்று உறுதியாக சொல்கிறார்.
ஸெத்துகன் ரி:யெஸ்தெநொ
மொத்துகா4ம் பொடெ3ஸ்தெநொ
ரெத்தும் ஸங்கே3ஸ் தொகொ மொகொ [ஸெ]
ஸெத்துகன் ரி:யெஸ்தெநொ – உண்மையாக இருந்தவன் என்று பொருள் படும் இந்த இருபதத்தில் எல்லா அவதாரங்களும் உண்மையாக, சத்தியமாக என்று ஆணையிட்டு கூறும் படியாகவும், எல்லா (நான்கு) யுகங்களிலும் வாழ்ந்தவர், வாழ்பவர், வாழ இருப்பவர் என்றும் பொருள் பாடியாக பாடுகிறார்.
மொத்துகா4ம் பொடெ3ஸ்தெநொ – “மத்தினால் அடிபட்டவன்” என்று பொருள் பட்டாலும், கண்ணனாக வந்து வெண்ணை திருடி உண்ட போது தாயின் கையில் இருந்த வெண்ணை கடையும் மத்தினால் அடிபட்டவன் என்ற பொருளிலும் மேலும் பாற்கடலை கடைய மத்தாக பயன்பட்ட மந்திர மலை தாங்கி நின்ற கூர்ம அவதார மூர்த்தியை குறிப்பதாகவும் வருவது குறிப்படத்தக்கது.
ரெத்தும் ஸங்கே3ஸ் தொகொ மொகொ – ரதத்தில் உனக்கும் எனக்கும் (கீதையை) போதித்தவன். என்று பொருள் படும் இந்த நான்கு பதங்கள் வேறு விதமாக பார்க்கும் போது, சத்தியத்தை காக்கும் நன்பனை காக்க அவனுக்காக தம்மால் சண்டையிட முடியாத நிலையிலும் கூட, அவனக்கு சாரதியாக வந்தாவது போராட வேண்டும் என்ற பொருளிலும் சொல்லாமல் செய்து காட்டியது கண்ணனின் இந்த லீலை என்று சொல்வது போல் உள்ளது இந்த எளிமையான மூன்று வரி பாடல்.
सेत्तुकन् रि:येस्तेनो
मोत्तुघाम् पोडेस्तेनो
रेत्तुम् सङ्गॆस् तोको मोको [से]
settukan ri:yesteno
mottuGAm poDesteno
rettum sanggEs toko moko [se]
s£ttukan ri:y£st£nµ
mµttugh¡m pµ¢£st£nµ
r£ttum sa±ges tµkµ mµkµ [s£]
Tuesday, August 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
ஓகோ மத்துக்கடிபட்டவன் என்றால் அந்த தயிர் கடையும் மர மத்து
பாற்கடலை கடைந்த அந்த மலை மத்தை தாங்கியவனல்லவா? நல்ல இருபொருள்
நல்ல விளக்கம்
நன்றி என்னார் சார், ஒரு சின்ன சிந்தனை வந்தது இப்பாடல் அதை வெளிபடுத்த மிகவும் உதவியது.
மிக அருமையான விளக்கம் சிவமுருகன். மிக அருமை. :-)
Post a Comment