தமது பாடல்கள் மூலம் யாரிடம் நமது உற்ற உறவு இருக்க வேண்டும் என்று சொன்னவர் யாரை கண்டால் தூர விலக வேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார். உனக்காக கண்ணீர் விடவில்லை என்றாலும் பரவாயில்லை, உனக்காக முதலை கண்ணீர் வடிப்பவரிடமிருந்து தள்ளி நிற்க்க வேண்டும் என்று சொல்லும் இப்பாடல் இப்பதிவில். இப்பாடலை தமது துள்ளலிசையுடன் திரு. சந்திரசேகர் பாடியுள்ளார்.
கோ3 கோ3 கோ3 தொ3ளாம்பனி க2ள்ளன் தும்ர
க3திக்வாட் ஸெய்ல்வொமெனி மென்னான் (கோ3)
சொ3ட்டா3 சொ3ட்டி3ன் த்யேவேள் (கோ3)
கோட் காய் தொ2வ்ரி:யாஸ்மெனி புஸன்
கோட் க3டி3 தொ2வ்ரி:யாஸ்மெனி அஸன் (கோ3)
ஸங்கொ3மெனி லெகுத்தொ பி3ஸன்
தொங்கி3 தொங்கி3 நஸன் (கோ3)
வொங்கி3 வொங்கி3 பனி பொஸன்
ஸங்கி3 ஸங்கி3 மெனி நெஸன் (கோ3)
காஸ் ஹன்னவ் க3திமெல்லன் அம்மான்
களாநாஸ்தக்விதி3 அவேஸ்மெனி ரொள்ளன் (கோ3)
மேடின் ஜியெவாட் ஜாமென்னான்
நடனகோ3பாலுக் பாய்ம் பொண்ணான் (கோ3)
கோ3 கோ3 கோ3 தொ3ளாம்பனி க2ள்ளன் தும்ர
க3திக்வாட் ஸெய்ல்வொமெனி மென்னான் (கோ3)
சும்மா சும்மா கண்ணீரை காட்டுவார் உனக்கு
என்ன வேண்டுமென்று கேட்டு வைப்பார்
சொ3ட்டா3 சொ3ட்டி3ன் த்யேவேள் (கோ3)
தீய துஷ்டர்கள் அப்போது (சும்மா)
கோட் காய் தொ2வ்ரி:யாஸ்மெனி புஸன்
கோட் க3டி3 தொ2வ்ரி:யாஸ்மெனி அஸன் (கோ3)
எங்கு என்ன இருக்கிறதென்று கேட்பார்
எங்கு எதை புதைத்தாய் என்று சிரிப்பார்
ஸங்கொ3மெனி லெகுத்தொ பி3ஸன்
தொங்கி3 தொங்கி3 நஸன் (கோ3)
சொல்ல சொல்லி அருகில் வந்தமர்வார்
தாங்கி தாங்கி ஆடுவார்
வொங்கி3 வொங்கி3 பனி பொஸன்
ஸங்கி3 ஸங்கி3 மெனி நெஸன் (கோ3)
வந்து வந்து சேவை செய்வார்
சொல்ல சொல்லி கேட்டு வைப்பார்
காஸ் ஹன்னவ் க3திமெல்லன் அம்மான்
களாநாஸ்தக்விதி3 அவேஸ்மெனி ரொள்ளன் (கோ3)
பெண்டிர் பணம் பொருள் கதி என்பர்
தெரியாத விதி வந்துவிட்டெதென அழுவர்
மேடின் ஜியெவாட் ஜாமென்னான்
நடனகோ3பாலுக் பாய்ம் பொண்ணான் (கோ3)
பெரியவர்கள் சென்ற வழியில் செல்ல மாட்டர்
நடன கோபாலனின் காலில் விழமாட்டர்
சும்மா சும்மா கண்ணீரை காட்டுவார் உனக்கு
என்ன வேண்டுமென்று கேட்டு வைப்பார் (சும்மா)
தீய துஷ்டர்கள் அப்போது (சும்மா)
எங்கு என்ன இருக்கிறதென்று கேட்பார்
எங்கு எதை புதைத்தாய் என்று சிரிப்பார் (சும்மா)
சொல்ல சொல்லி அருகில் வந்தமர்வார்
தாங்கி தாங்கி ஆடுவார் (சும்மா)
வந்து வந்து சேவை செய்வார்
சொல்ல சொல்லி கேட்டு வைப்பார் (சும்மா)
பெண்டிர் பணம் பொருள் கதி என்பர்
தெரியாத விதி வந்துவிட்டெதென அழுவர்(சும்மா)
பெரியவர்கள் சென்ற வழியில் செல்ல மாட்டர்
நடனகோபாலரின் காலில் விழமாட்டர் (சும்மா)
Friday, August 04, 2006
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
nalla karutthu.
Thanks for explaining.
நன்றி அனிதா.
பாடலின் ஒலி வடிவச் சுட்டியைக் கொடுக்கவில்லையே சிவமுருகன்.
எங்கள் வீட்டில் இப்போது மீண்டும் மீண்டும் ஓடும் பாடல் இது தான். பாடலின் மெட்டு என் மகளுக்குப் பிடித்திருக்கிறது... கோ கோ கோ தொளாம் பனி கள்ளன் சொட்டா சொட்டின் என்று பாடிக் கொண்டிருக்கிறாள். :-)
அண்ணா,
//பாடலின் ஒலி வடிவச் சுட்டியைக் கொடுக்கவில்லையே சிவமுருகன்//
அப்படியா, இதோ கொடுத்து விடுகிறேன்.
நம் உறவினர்களை நாம் மலை போல் நம்பியிருக்கிறோமே. அவர்கள் நம் மரணப் படுக்கையில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்கிறார் இந்தப்பாடலில் சுவாமிகள்.
கோ3 கோ3 கோ3 தொ3ளாம்பனி க2ள்ளன் தும்ர
க3திக்வாட் ஸெய்ல்வொமெனி மென்னான்
சும்மா சும்மா சும்மா கண்ணீரைக் காட்டுவார்கள்
உங்கள் நல்கதிக்கு என்ன வழி என்று பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல மாட்டார்கள்.
சொ3ட்டா3 சொ3ட்டி3ன் த்யேவேள்
திருடன் திருடிகள் அந்த வேளையில் (உறவினர்களை திருடர்கள் என்கிறார்)
கோட் காய் தொ2வ்ரி:யாஸ்மெனி புஸன்
கோட் க3டி3 தொ2வ்ரி:யாஸ்மெனி அஸன்
யாரிடம் என்ன கொடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பார்கள்
எங்கு புதைத்துவைத்திருக்கிறீர்கல் என்று கேட்டு புன்னகைப்பார்கள்.
ஸங்கொ3மெனி லெகுத்தொ பி3ஸன்
தொங்கி3 தொங்கி3 நஸன்
(நான் உங்கள் அன்பிற்கு உரியவன்(ள்) அல்லவா?) சொல்லுங்கள் என்று அருகில் வந்து அமர்வார்கள்
நம்மைத் தாங்கிப் பிடிப்பவர்கள் போல் நடிப்பார்கள் (நஸன் என்றால் ஆடுவார்கள் என்றும் பொருள்; நடிப்பார்கள் என்றும் பொருள். இங்கே நடிப்பு தான் சரியான பொருள்)
வொங்கி3 வொங்கி3 பனி பொஸன்
ஸங்கி3 ஸங்கி3 மெனி நெஸன்
குனிந்து குனிந்து நம் சிறுநீரைத் துடைப்பார்கள்
சொல்லு சொல்லு என்று நம்மிடம் அன்பைப் (போலியாய்) காட்டுவார்கள்
காஸ் ஹன்னவ் க3திமெல்லன் அம்மான்
களாநாஸ்தக்விதி3 அவேஸ்மெனி ரொள்ளன்
காசு பணமே கதியென்றெண்ணுவர் பெண்டிர்
(நான்) அறியாமலேயே எப்படியோ யமன் வந்துவிட்டானே என்று அழுது கொள்வர்
மேடின் ஜியெவாட் ஜாமென்னான்
நடனகோ3பாலுக் பாய்ம் பொண்ணான்
பெரியவர்கள் போன வழி போ என்று சொல்லமாட்டார்கள்
(என் கடைசி நேரத்திலும்) நடனகோபாலனை வணங்க மாட்டார்கள்
//பாடலின் மெட்டு என் மகளுக்குப் பிடித்திருக்கிறது... கோ கோ கோ தொளாம் பனி கள்ளன் சொட்டா சொட்டின் என்று பாடிக் கொண்டிருக்கிறாள். :-) \\
வேணுரஸந் வீணொரஸந் மெந்லந் அபுல்பா3ளுந்
தே3ந்ரஸவாக் அய்குநாத் தெந்.
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
Post a Comment