யாருக்கு மோக்ஷம்? # 1
யாருக்கு மோக்ஷம்? # 2-4
யாருக்கு மோக்ஷம்? # 5-7
யாருக்கு மோக்ஷம்? # 8
அவி க3வி நசுநாஸ்தெக நீ: மோக்ஷு
அவி ஐகெஸ்தெக ஸே மோக்ஷு
ஸெய்ல்நாஸ்த ஸிநெஸ்தெக நீ: மோக்ஷு
ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)
வந்து ஆடி பாடாதவனுக்கு மோக்ஷமில்லை
வந்து கேட்டவனுக்கு மோக்ஷமுண்டு
பாரமல் களைத்தவனுக்கு மோக்ஷமில்லை
பானகவழி அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு
சத்சங்கதில் சேர்ந்தவன் வெறும் ஒருமுறை வந்த படியில்லாம சத்சங்க கொள்கைகளான ஹரியின் நாமத்தை பாடி, ஆடி வேண்டும், அவ்வாறு செய்யாதவன் மோக்ஷத்தின் வழியிலிருந்து திசைமாறுவதை குறிப்பதாக சொல்கிறார், அவ்வாறில்லாமல் வந்து அதற்க்காக தம்மை தயார் படுத்தி கொள்ள காது கொடுத்து கேட்டவனுக்கு மோக்ஷமுண்டு.
இறைவனை காணாமல் வேறு சிலவற்றை கண்டு களைத்தவனுக்கு மோக்ஷமில்லை,
இவ்வுலகம் ஒரு முட்கள் நிறைந்த காடு, அக்காட்டின் வழியறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு.
ஊசி, காற்று போன்ற நுன்னிய கருவிகள் புகாத இடத்திலும் செல்ல கூடிய இறைவழியை கண்டவனுக்கு மோக்ஷமுண்டு என்று சொல்கிறார். (“ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு”)
கடைசி வழியாக ஊசி வழி என்று சொல்லும் சுவாமிகள், அவ்வழி அடைய இந்த எட்டாவது நிலையில் வைக்கிறார். இவ்வாறாக அடைந்த மோக்ஷ வழியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்று அடுத்த இரு சரணங்களில் சொல்கிறார்.
யாருக்கு மோக்ஷம்? # 9
ஹரிஸ் அதா4ரஸ்கி லோகுரு
ஹரிபதா3ல் அந்தா3ய் விவேகிநுகு
ஹரிவிநா தே3வ் நீ: க்3யாநிநுகு
ஹரிஅப்3பொ3ய்கியே அக்3யாநிநுகு (மொந்நூ)
ஹரியே இவ்வுலகிற்க்கு ஆதாரம்
ஹரியின் பதாரவிந்தத்தை எட்டுமோ விவேகிக்கு?
ஹரியை தவிர வேறு தெய்வமில்லை ஞானிக்கு.
ஹரி கிடைப்பானோ அயோகிக்கு?
உலகை படைத்தவர் நான்முகன், உலகை அழிப்பவர் மஹாகாலன், இவ்விருவருக்கும் இடப்பட்ட தொழிலான காப்பதை செய்பவன் ஸ்ரீமந் நாராயணன் ஆகவே இந்த இடைத்தொழிலன் தான் இவ்வுலகிற்க்கு ஆதாரம், பெற்றல் மட்டும் போதாது அதை பேணி பாதுகாக்க தெரியவேண்டும் அவ்வாறு பாதுகாக்கும் ஹரியின் திருவடியை விவேகி நிலையில் இருந்து தேடினால் எட்டாது, கிட்டாது. அவனை தவிர வேறு தெய்வமில்லை என்ற ஞானியின் பார்வைக்கு வசப்படும் கோவிந்தன் தீய செயல்களை செய்யும் அயோகிக்கு கிடைப்பானோ?
யாருக்கு மோக்ஷம்? # 10
வடபத்ரார்யுநு வாட் தெ4ல்லே --யே
வாட்நா: மெனெஸ்தெநொ மு:டொ3 ஜல்லே
நடனகோ3பால் நமம் மெல்லே
விரஜாநெத்3தி3ஸேயே அண்ட3முஹொல்லே (மொந்நூ)
வடபத்திரர் வழியை பற்றிக்கொள்
இதை அறியாதவன் மூடன் அறிந்துகொள்
நடனகோபாலன் நாமம் சொல்லிக்கொள்
விர்ஜை நதியிலேயே இந்த அண்டம் பார்த்துக்கொள்.
இந்த மோக்ஷத்தின் வழியை தமது குருவிடமிருந்து பெற்றதை நினைவுருத்தும் சுவாமிகள், இவ்வழியை மோக்ஷவழியென்று சொல்லாதவன் மூடன், குருவின் சொல்லை கேளாமல் அதை மீண்டும் தன் சிற்றறிவை கொண்டு ஆராய்பவன் மூடனன்றி யாராக இருக்ககூடும்? அந்த பேரானந்கமான மோக்ஷத்தை தக்க வைத்துக்கொள்ள நடனகோபாலனின் பேரை சொல்லிக்கொள், வைகுண்டத்தில் ஓடும் நதியான விர்ஜை நதிமேல் தான் இவ்வுலகம் உள்ளது பார்த்துக்கொள்.
இவ்விரு சரணங்களில் மனிதனை அதே புனிதத்தில் திளைக்க செய்யும் வழிகள்.
Thursday, August 03, 2006
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
அற்புதமாக இருக்கிறது.
பாட்டு ரெகார்டிங் இருந்தால் கேட்கலாம். பாஷை புரியவில்லை. தமிழ் மொழிபெயர்ப்பு அர்த்த செறிவுடன் நன்றாக இருக்கிறது
வழங்கும் தங்களுக்கு நன்றி
நன்றி ஜயராமன் சார்
ஹரிஸ் அதா4ரஸ்கி லோகுரு
ஹரிபதா3ல் அந்தா3ய் விவேகிநுகு
ஹரிவிநா தே3வ் நீ: க்3யாநிநுகு
ஹரிஅப்3பொ3ய்கியே அக்3யாநிநுகு
ஹரியே ஆதாரம் எல்லா லோகங்களுக்கும்
ஹரியின் பாதங்கள் எட்டும் விவேகிகளுக்கு
ஹரியன்றி தெய்வம் இல்லை ஞானிகளுக்கு
ஹரி கிடைப்பானா அஞ்ஞானிகளுக்கு
இப்படித் தானே சொல்லியிருக்கிறார் சுவாமிகள் சிவமுருகன்? ஏன் 'ஹரியின் பதாரவிந்தத்தை எட்டுமோ விவேகிக்கு?' என்று கேள்வியாகப் போட்டீர்கள்? அதே போல் அஞ்ஞானிகளுக்கு என்று தானே கடைசியாகச் சொல்லியிருக்கிறார். நீங்கள் அயோகிக்கு என்று சொல்லிவிட்டீர்களே?
அண்ணா,
//ஹரியே ஆதாரம் எல்லா லோகங்களுக்கும்
ஹரியின் பாதங்கள் எட்டும் விவேகிகளுக்கு
ஹரியன்றி தெய்வம் இல்லை ஞானிகளுக்கு
ஹரி கிடைப்பானா அஞ்ஞானிகளுக்கு
இப்படித் தானே சொல்லியிருக்கிறார் சுவாமிகள் சிவமுருகன்? ஏன் 'ஹரியின் பதாரவிந்தத்தை எட்டுமோ விவேகிக்கு?' என்று கேள்வியாகப் போட்டீர்கள்? //
விவேகி என்பவன் ஆண்டவனையே விவேக அறிவை கொண்டு பார்க்கும் போது அது கேள்வி குறியாகி விடுகிறது
//அதே போல் அஞ்ஞானிகளுக்கு என்று தானே கடைசியாகச் சொல்லியிருக்கிறார். நீங்கள் அயோகிக்கு என்று சொல்லிவிட்டீர்களே? //
அண்ணா, அஞ்ஞானிக்கும் அயோகிக்கும் (இங்கே யோகி அல்லாதவன் என்று பொருளல்ல) என்ன வேற்றுமை?
சிவமுருகன். அறிவு உடையவன் எல்லாம் விவேகி இல்லை. அறிவாளிகள் இறைவனைத் தன் அறிவால் காண முயன்றால் அந்த அறிவால் அவனை அடைய முடியாது என்பது வைணவ சம்ப்ரதாயக் கருத்து. அதன் படி நீங்கள் சொல்வது சரி. ஆனால் விவேகி என்று ஒருவன் சொல்லப் பட வேண்டும் என்றால் அவன் 'அறிவால் மட்டுமே இறைவனை அடையமுடியாது. அவன் அருள் வேண்டும் அதற்கு' என்ற அறிவும் கொண்டவனாக இருக்க வேண்டும். அதனால் தான் சுவாமிகள் 'ஹரி பதால் அந்தாய் விவேகிநுகு' என்று அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார். 'ஹரி பதால் அந்தாய்யா விவேகிநுகு' என்று சுவாமிகள் சொல்லியிருந்தால் அதனைக் கேள்வியாகக் கொண்டு நீங்கள் சொல்வது போல் சொல்லலாம். சுவாமிகள் அப்படிச் சொல்லவில்லை.
அயோகி என்பதற்கு யோகி அல்லாதவன் என்றே நான் பொருள் கொண்டேன். நீங்கள் அது பொருள் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் அயோகி என்பதற்கு என்ன பொருள் கொண்டீர்கள் என்று சொல்லுங்கள். பின்னர் நீங்கள் சொல்லும் அயோகிக்குரிய பொருளுக்கும் அஞ்ஞானிக்கும் வேறுபாடு உண்டா என்று சொல்கிறேன்.
//சிவமுருகன். அறிவு உடையவன் எல்லாம் விவேகி இல்லை. அறிவாளிகள் இறைவனைத் தன் அறிவால் காண முயன்றால் அந்த அறிவால் அவனை அடைய முடியாது என்பது வைணவ சம்ப்ரதாயக் கருத்து.//
இதுவே இச்சரணத்தின் சாராம்சம்.
// அதன் படி நீங்கள் சொல்வது சரி. ஆனால் விவேகி என்று ஒருவன் சொல்லப் பட வேண்டும் என்றால் அவன் 'அறிவால் மட்டுமே இறைவனை அடையமுடியாது. அவன் அருள் வேண்டும் அதற்கு' என்ற அறிவும் கொண்டவனாக இருக்க வேண்டும்.//
//அதனால் தான் சுவாமிகள் 'ஹரி பதால் அந்தாய் விவேகிநுகு' என்று அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார். 'ஹரி பதால் அந்தாய்யா விவேகிநுகு' என்று சுவாமிகள் சொல்லியிருந்தால் அதனைக் கேள்வியாகக் கொண்டு நீங்கள் சொல்வது போல் சொல்லலாம். சுவாமிகள் அப்படிச் சொல்லவில்லை. //
அந்தாய்கி விவேகிநுகு என்று கொண்டுவிட்டேன். மண்ணிக்கவும்.
//அயோகி என்பதற்கு யோகி அல்லாதவன் என்றே நான் பொருள் கொண்டேன். நீங்கள் அது பொருள் இல்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் அயோகி என்பதற்கு என்ன பொருள் கொண்டீர்கள் என்று சொல்லுங்கள். பின்னர் நீங்கள் சொல்லும் அயோகிக்குரிய பொருளுக்கும் அஞ்ஞானிக்கும் வேறுபாடு உண்டா என்று சொல்கிறேன்.//
இல்லாமல் இருப்பவன் அயோகி,
இருந்தும் இல்லாதவன் அஞ்ஞானி.
//இல்லாமல் இருப்பவன் அயோகி,
இருந்தும் இல்லாதவன் அஞ்ஞானி. //
புரியவில்லை சிவமுருகன். சுவாமிகளே மிகத் தெளிவாகச் சொல்கிறார். நீங்கள் மிகச் சுருக்கமாக, பூடகமாகச் சொல்கிறீர்களே?! :-) இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.
//புரியவில்லை சிவமுருகன். சுவாமிகளே மிகத் தெளிவாகச் சொல்கிறார். நீங்கள் மிகச் சுருக்கமாக, பூடகமாகச் சொல்கிறீர்களே?! :-) இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்.//
அண்ணா,
//இல்லாமல் இருப்பவன் அயோகி,//
இல்லாமல் இருப்பவன் என்றால் அவன் நல்லவற்றைபற்றிய அறிவில்லாமல் இருப்பவன் அப்படி இருப்பவன் அயோகி தானே?
வால்மீகி கூட அயோகியாக தானிருந்தார், அப்போது அவருக்கு பட்டாபிஷேகம் தெரியவில்லை, நல்லவற்றை பற்றிய அறிவு, தெளிவு வந்ததும், காணாத காட்சிஎல்லாம் தெரிந்தது.
இது தான் அயோகி-யோகி என்னும் நிலை.
சைவ ஆலயங்களில் இரண்டு பூதகணங்கள் இருக்கும்.
ஒன்று ஒரு விரலை காட்டும், மற்றொன்று போகலாம் என்று சைகை காட்டும் அதுவும் இது போல்தான்.
//இருந்தும் இல்லாதவன் அஞ்ஞானி. //
இருந்தும் இல்லாதவன் என்றால் கடவுள் தனிடமிருப்பதை மற்றும் நல்லவற்றை பற்றிய அறிவில்லாதவன் ஞானமில்லாதவன். அஞ்ஞானி.
பிரகலாதனுக்கு(மகனுக்கு) தெரிந்தது கூட ஹிரன்யனுக்கு(தந்தைக்கு) தெரியவில்லை, தானே கடவுள் என்று அறிவித்தான், கடவுள் கையாலே மடிந்தான். அப்பேற்பட்ட (மனிதருள்) அறிவில்லாதவன், எப்போது அறிவில் ஆதவன் ஆகிறானோ, ஞானமில் ஆதவன் ஆகிறானோ அப்போது ஞானி ஆகிறான். தான் தூசு என்று உணரும் காலமே ஞானியின் முதல் படி என்று சித்தர் பாடல்களில் படித்துள்ளேன்.
விளக்கம் சரியாக இருக்கிறதா?
அடுத்த பாடலுக்கு போகட்டுமா?
இல்லை மேலும் விளக்க வேண்டுமா?
அல்லது நீங்கள் விளக்குகிறீர்களா?
அதெல்லாம் சரி பூடகம் என்றால் என்ன? (ஏற்கனவே ஒருமுறை சொல்லியுள்ளீர்கள்.)
Post a Comment