Tuesday, August 15, 2006

எனக்கெப்போது கருணை புரிவாய்...

கண்ணனை மனமுருகி அழைப்பதில் ஸ்ரீமந்நாயகி சுவாமிகளுக்கு நிகர் அவரே.

கண்ணனை அழைப்பவர், தான் மட்டும் அழாமல் அந்த கண்ணனையே சில சமயங்களில் அழவைத்துவிடுவார். அப்படி ஒரு பாடலை பாடி அவரது சீடர்கள் பலர் அழுது தொழுத பாடல். ஆனந்த கண்ணீரை வரவழைக்கும் ஒரு பாடல். இப்பாடலை ஸ்ரீமந்நாயகி சுவாமிகள் சங்கீத சமிதியை சேர்ந்த இருபத்தைந்திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் (S.P. கீதா பாரதி குழுவினர்) குழுவாக பாடியுள்ளனர்.


கண்ணினு
மொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ---மொர
பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ---தொர
மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி

களதெ3க்ட3ஹா தொர மொந்நு---மீ
காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு--தொகொ
ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3---தே3
கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3---தே3
ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ---ஸேவ
தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ---தொ3ளர்
ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி--ஜெநெ
மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி---ஹோய்கி
மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி---ஸ்ரீ
ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி---தூ
யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி

து3ஸ்ர ஹட்வுநொகரே---க்ருஷ்ணா
தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே---த்யே
பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி---
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ--- ஹரி
யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி---தே3வூ
தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ---தொர
மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி

கடிஹேடி3 யே கர்முநு மூளு---மீ
காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ

நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக
நசி க3வஸ்தகோஸ் ஏ வேளுமொக் கொ2ப்பா3க் க்ருபகரநவஸ்தெ – எனக்கு எப்போது கருணை புரிவாய் மொர பாபுந் கொ2ப்பா3க் து4வை ஜாஸ்தெ ஹரி – என் பாபங்கள் எப்போது தீரும், ஹரி

தொக் கொ2ப்பா3கு யேடவாஸ்தெ – நீ எப்போது இங்கு வரப்போகிறாய்
தொர மொந்மொர்ஹோர் கொ2ப்பா3க் ஹுத்ரஸ்தெ ஹரி – நீ என்பால் எப்போது மனமிறங்கப் போகிறாய்

களதெ3க்ட3ஹா தொர மொந்நு – கரிய கல்லோ உன் மனம்
மீ காய்கரு தொகொ யே காய் கு3ண்ணு ஹரி – (அப்படி இருந்து விட்டால்) நான் என்ன செய்வேன் ஏன் இப்படி பட்ட குணமுனக்கு.

ஸொளஹோஸ்தெ கொ2ப்பா3க்மோ தி3ந்நு- எப்போது விடியுமோ என் இருண்ட நாட்களில்

தொகொ ஸொண்ணாரி:யேஸ் ஏ மொர் கு3ண்ணு ஹரி – உன்னை விடாமல் இருப்பதே என் குண்மாகும் ஹரி

கு3ண்ணுனு மரி சொக் கு3ண்ணு தே3 - தீய குணங்களை கொண்று நற்குணங்களை அருள்வாய்
தே3 கோ3விந்தா3 கோ3பாலா பதா3ல் தே3 தே3 – கோவிந்தா கோபாலா உன் பாதார விந்தத்தை அருள்வாய்

தி3ந்நுன் கோ3 ஜாரேஸ் ஸேவ தே3- நாட்கள் கரைந்தோடுகிறதே அருள்வாய்
தே3 ஸ்ரீ தே3வு தொர்நாவுக் உடாவ் தே3 தே3 – ஒளிகுறையாத தெய்வமே உன் பெயரை அருள்வாய்

தே3மெனி மக3ரி:யெ மொகொ தூ- நீ என்னை தரச்சொல்லி கேட்கிறாயோ
ஸேவ தே3நாஜியெத் காய்ஹோய் லோகுர் தூ – சேவை தராவிட்டால் உலகில் என்னவாகும்

ஸாமெனி மெநொரி:யெ மொக தூ- நீ பாரென்று சொல்கிறாய் என்னை தொ3ளர் ஸாநாஜியெத் காய்மெனய் ஜக3த் தூ – நீ உலகில் இருந்தும் என் கண்கள் காணாவிட்டால் இந்த உலகம் என்ன சொல்லும்.

ஜக3துர்மொக தூ ஹாத்ஸொட3ன் ஹோய்கி – இவ்வுலகின் என்னை கைவிடலாமோ ஹரி
ஜெநெ மாய் நு:க்ருக் மரி தொ3வ்ட3ன் ஹோய்கி ஹரி – பெற்ற தாய் பிள்ளையை கொல்வாளோ ஹரி...

ஹொக3த் தொர நமம்விநா ஸேகி – உன்நாமம் அன்றி வேறு மருந்தும் உள்ளதோ?
ஹோய்கி மொரஹோர் தொகொ ராக் கொக3ஹால்கி ஹரி – என்மீது கோபம் எதனாலோ ஹரி...

ராக் தெ2வெத் மீ சொக்கடொ4வுகி – கோபங்கொண்டால் நான் நன்றாக இருப்பேனோ?
ஸ்ரீ ராமா தொகொ கொ2ப்பா3க் ஸவுகி மீ தூ – ஸ்ரீராம எப்போது உன்னை நான் காண்பேனோ? ஹரி...

யோக் ஹொய்லஸ்தெ கோந் கலம்கி – ஒன்றாகும் நாள் எக்காலமோ
தூ யோசன கர்லேத் ரி:யெஸ்தெ கொக3கி ஹரி – நீ யோசனை செய்வது எதனாலோ ஹரி...

து3ஸ்ர ஹட்வுநொகரே – உன்னையன்றி வேறு சிந்தனை வேண்டாமைய்யா
க்ருஷ்ணா தொரநமம் மொகொ தூ3த்ஹொய்ரி:யெஸ்ரே ஹரி – கிருஷ்ணா உன் திருநாமம் எனக்கு பாலாகி (அமுதமாகி) இருந்ததைய்யா. ஹரி...

பிஸொ தெ4ரஸ்திஸொ ஸாரே – பித்து பிடித்தது போல் இருக்கிறதே
த்யே பிஸொ தெ4ர்நாஸ்தெக காய் ஸுக2ம்ஸேரே ஹரி – அந்த பித்தம் பிடிக்காமல் என்ன சுகமுண்டோ – ஹரி...

ஸுக2ம் தே3நவயி மெல்லி மீ ரி:யெஸி – நீ சுகமளிப்பாய் என நானிருந்தேன்
ஸோத3ன கர்லேத் தூ ரி:யெஸி ஹரி – நீ சோதனை தந்துகொண்டிருந்தாய் - ஹரி...

யெகஸ்ஹா மீ தொகொ தா3ஸொ:யெஸ்தெ – இதற்காகவா நானுன் தாஸனானேன்
ஹரி யேஸ்ஹா மொர ப்ராப்தமு ஸேஸ்தெ ஹரி – இல்லை இது தான் என் பிராப்தமோ என்னவோ. ஹரி...

தீ3ஸ் நிக்ளெத் ஹந்தா3ர் ஜ:கில்ராய்கி – சூரியன் வந்தால் இருள் நிற்க்குமோ?
தே3வூ தொர கிர்பகெது3ர் கர்முனு ரா:ய்கி ஹரி - உன் கருணைக்காக எத்தனை வினைகளை தாங்கனுமோ?

தூ விநா து3ஸர் கோந்தி ஸேகீ – உன்னையன்றி வேறு யவரேனுமுண்டோ
தொர மாயா கட்வென் மொரஹால் ஹோய்கி ஹரி – உன் மாயையை அறுக்க வேறு யவருமுண்டோ? ஹரி...

கடிஹேடி3 யே கர்முநு மூளு – அறுத்தெரிவாய் வினைபயனை
மீ காய்கருயே லோக் தொரெ கே2ளு ஸ்ரீ – நான் என் செய்வேன் உலகே உன் மேடை ஸ்ரீ...

நசி க3வஸ்தகோஸ் ஏ வேளு – உன்னை பாடி ஆடுபவர்களுக்கு இப்போது
நடனகோ3பாலா கோ3 பீளு க4ல்நக – நடன கோபாலா தடைகளை போடாதே.

1 comment:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன்.

நன்கு பொருள் சொல்லியிருக்கிறீர்கள்.

தொர்நாவுக் உடாவ் தே என்னும் போது 'நீ எனக்கு அருள் புரிந்தால் உன் பெயர் இன்னும் நன்றாகப் பிரகாசிக்கும்' என்று சொல்கிறார் சுவாமிகள் என்று தோன்றுகிறது. 'உள்ளமும் கரியவன்' என்று ஆண்டாள் நாச்சியார் சொன்னதைப் போல் 'உன் உள்ளம் கரிய கல்லோ' என்று கேட்டவர், நம்மாழ்வார் சொன்னதைப் போல் இங்கே சொல்கிறார் என்று தோன்றுகிறது.

ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண்
பாசம் வைத்தப் பரஞ்சுடர் சோதிக்கே

திருவேங்கடத்தானை தேவர்களுக்கெல்லாம் தலைவன் என்று நான் சொன்னால் அதுவா அவனுக்குப் பெருமை? நீசன்; எந்த வித நிறைகளும் இல்லாதவன் என் மேல் பாசம் வைத்தானே அது அல்லவோ அவனுக்குப் பெருமை.

இப்படி நம்மாழ்வார் சொல்லுவதை இங்கே கண்ணனுக்கு நினைவூட்டுகிறார் என்று தோன்றுகிறது. நானும் நீசன்; நற்குணங்கள் இல்லாதவன்; எனக்குத் தரிசனம் தந்தால் உன் பெயரும் புகழும் இன்னும் கூடும் என்பதைத் தான் 'தொர் நாவுக் உடாவ் தே' என்கிறார் போலும்.

தே மெனி மகரியொ மொகொ தூ என்பதைத் தனியாகப் பொருள் கொள்ளாமல் அடுத்த வரியில் சேர்த்துப் பொருள் கொள்ள வேண்டும்; தரிசனம் தா என்று கேட்கும் எனக்கு நீ தரிசனம் தராமல் போனால் உலகத்தில் உன் பெருமை என்னவாகும்? என்று கேட்கிறார்.

அதே போல் தான் அடுத்த வரியும் - ஸா மெனி மெனரியெ மொகொ தூ....

மரி தொவ்டன் என்பதில் மரி என்பதற்கு அடித்து என்ற பொருள் கொள்ள வேண்டும். மரி என்பது 'கொல்லுதல்' 'அடித்தல்' என்ற இரு பொருள்களிலும் சௌராஷ்ட்ரத்தில் வழங்குகிறது. பெற்ற தாய் குழந்தையை அடித்து விரட்டுதல் தகுமா ஹரி? என்று கேட்கிறார்.

யோக் ஹொய்லஸ்தே கோன் கலம்கி என்பதில் யோகம் என்பதற்குச் சேர்தல் என்ற பொருளை அருமையாகச் சொன்னீர்கள். எளிதில் புரியாத வரி இது.

தீஸ் என்பதற்குப் பகல் என்ற பொருள் மட்டுமே உண்டு. நீங்கள் அதன் நீட்சியாக சூரியன் என்ற பொருளைக் கொண்டிருக்கிறீர்கள். பகல் என்று சொல்லியிருந்தாலே பொருத்தமாக இருந்திருக்கும்.

இந்தப் பாடலில் பல இடங்களில் எனக்கு வேறு பொருள் தோன்றுவதால் விரைவில் இந்தப் பாடலை மீண்டும் எனக்குத் தோன்றும் பொருளுடன் விரிவாக எழுத நினைக்கிறேன் சிவமுருகன். மறுப்புண்டா?