Wednesday, August 02, 2006

யாருக்கு மோக்ஷம்?

மோக்ஷம் யாருக்குரியது?
யவர்க்கு கிடைக்கும்?
யார் அதற்க்கு தகுதி பெறுவர்?

தகுதி பெற வழியென்ன என்று கேட்ட போது ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் ஒரு கீர்த்தனை பாடி அதன் பதிலாக சொன்னார். அவர் பாடிய அக்கீர்த்தனை நமக்கெல்லாம் இன்றும் நல்வழி காட்டும் ஒரு கலங்கரைவிளக்காக உள்ளது. இப்பாடலை திரு வி.என்.நாகராஜ பாகவதர் பாடியுள்ளார்.

இப்பாடலில் பல்லவியும் அனுபல்லவியும் முதலில் ஒரு மனிதனை மனிதனாக்கும் வரிகள், பின்வரும் ஒவ்வொரு சரணங்களும் மனிதனை புனிதனாக்கும் ஒவ்வொரு அடியாக கருதப்படுகிறது, முதல் சரணத்தில் மனிதனின் தோற்றத்தை மாற்ற சொல்கிறார், திருமணிட்டுக்கொள், ஆண்டவனை பாடியாடு, அவரது புகழ் பரப்பும் திருமண்ணை வீணாக்காதே என்று பல அறிவுரைகளை சொல்லும் சுவாமிகள். மோக்ஷத்தின் அடுத்த அடியாக ஸத் சங்கத்தில் இருக்கவேண்டும், சத்சங்கம் என்றால் உண்மையான சங்கம், உலகம் இருக்கும் வரை இருக்க கூடிய ஒரு சங்கம், ஒரு இயக்கம், ஒரு கூட்டு, ஒரு நட்பு என்று இருக்க வேண்டும். அவர்களுடன் இணந்து இயங்கவேண்டும். என்று சொல்லும் இரு சரணங்களையும் இப்பதிவிலும் மற்ற சரணங்களை அடுத்து வரும் பதிவுகளிலும் காண்போம்.



பல்லவி
மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷுகுவாட் து3ர்
கு3ண்ணுந் ஸெர மிள்நா ரா:ஸ்தேஸ்வாட் (மொந்நூ)

அநுபல்லவி
புந்நு பாப்ஹாலவெ ஸெரிரநித்யம் தொர
ஜுந்ந ஹட்வனுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3 (மொந்நூ)

சரணு
1. நாம் லவ்ல் நாஸ்தெங்க நீ: மோக்ஷு ஹரி
நமம்மெநி நசியாஸ்தெங்கொ ஸே மோக்ஷு
நாம் ஹாத் து4வெஸ்தெகொ நீ: மோக்ஷு
நாம்ஹோர் பி3கித் லௌநாஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

2. ஸத் கு3ருவுக் செர்னாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கர்மு கரஸ்தெக ஸே மோக்ஷு
ஸஹஸ்ர நமம் மெந்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கு3ண்ணு பொ4ரெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

3. ஸமாஸ்ரண கல்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸதா3சார்யு செரெஸ்தெக ஸே மோக்ஷு
யெமா த4க்குநாஸ்தெக நீ: மோக்ஷு
ஸம்ஸார் கடில்லெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

4. அண்டு பா4த் ஜெமஸ்தெக தீ: மோக்ஷு
ஹடுல்நாஸ்தக் ஹந்த3ஸ்தெக ஸே மோக்ஷு
குண்டுவாட் சலஸ்தெக நீ:: மோக்ஷு வை
குண்டும:ட்வன் தெ2வெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

5. தா3ஸோ நாஸ்தெக நீ: மோக்ஷு
தா3ஸுநு தா3ஸொ யெஸ்தெக ஸே மோக்ஷு
காஸநி க33ஸ்தெக நீ: மோக்ஷு
கைங்கர்யம் கரஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

6. மந்துர் ஐகுநாஸ்தெக நீ: மோக்ஷு
மாத4வாஸ் தே3வ்மெந் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு
மந்துர் ஜெபுநாஸ்தெக நீ: மோக்ஷு
மந்துர் ப்ரபா4வ் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

7. பர தந்தூர் ஹோநாஸ்தெக நீ: மோக்ஷு
பர தந்தூர் ஹொயெஸ்தெக ஸே: மோக்ஷு
நியாவுநு கரஸ்தெமொ நீ: மோக்ஷு
நரஹரி ப4ஜநாமூஸ் ஸே மோக்ஷு (மொந்நூ)

8. அவி க3வி நசுநாஸ்தெக நீ: மோக்ஷு
அவி ஐகெஸ்தெக ஸே மோக்ஷு
ஸெய்ல்நாஸ்த ஸிநெஸ்தெக நீ: மோக்ஷு
ஸிவிவாட் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

9. ஹரிஸ் அதா4ரஸ்கி லோகுரு
ஹரிபதா3ல் அந்தா3ய் விவேகிநுகு
ஹரிவிநா தே3வ் நீ: க்3யாநிநுகு
அப்3பொ3ய்கியே அக்3யாநிநுகு (மொந்நூ)

10. வடபத்ரார்யுநு வாட் தெ4ல்லே --யே
வாட்நா: மெனெஸ்தெநொ மு:டொ3 ஜல்லே
நடனகோ3பால் நமம் மெல்லே
விரஜாநெத்3தி3ஸேயே அண்ட3முஹொல்லே (மொந்நூ)

பல்லவி
மொந்நூ மீ ஸங்குஸைகி மோக்ஷுகுவாட் து3ர்
கு3ண்ணுந் ஸெர மிள்நா ரா:ஸ்தேஸ்வாட் (மொந்நூ)

மோக்ஷத்திற்க்கு என்னிடம் உள்ள வழி சொல்கிறேன் கேள் மனமே - நீச
குணங்களை அண்டவிடாமல் இருப்பதே பெருவழி

அநுபல்லவி
புந்நு பாப்ஹாலவெ ஸெரிரநித்யம் தொர
ஜுந்ந ஹட்வனுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3 (மொந்நூ)

புண்ணியங்களால் வந்த இவ்வுடலநித்யம் - நீ
எண்ணிய பழையதை விடு விடு விட்டுவிடு

பாவம் செய்தாலும், புண்ணியம் செய்தாலும் மறுபடியும் இவுலகில் பிறந்து அதன் பலனை அனுபவிக்க வேண்டும், அது அல்லவையே ஆனாலும் அதை மறந்து மோக்ஷ வழிகளை பின்பற்றினால், அவை எல்லாம் தீர்ந்து பூர்த்தியாகி மோக்ஷம் என்னும் இப்பிறப்பின் முக்கிய நோக்கத்தை அடையாலாம்.

சரணு
நாம் லவ்ல் நாஸ்தெங்க நீ: மோக்ஷு ஹரி
நமம்மெநி நசியாஸ்தெங்கொ ஸே மோக்ஷு
நாம் ஹாத் து4வெஸ்தெகொ நீ: மோக்ஷு
நாம்ஹோர் பி3கித் லௌநாஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

திருமண் இடாதவனுக்கு மோக்ஷமில்லை
திருநாமத்தை சொல்லி பாடி ஆடியவர்க்கு மோக்ஷமுண்டு
திருமணிட்ட கையை கழுவியவனுக்கு மோக்ஷமில்லை
திருநீரிட்ட நெற்றியுள்ளவனுக்கு மோக்ஷமுண்டு

2 comments:

Anonymous said...

The question that must be or will be (at least at some point of time in a man's life) on the uppermost mind is who is a bhavan (brahmin). A bhavan is the one who is supposed to have all the virtues and one who is qualified to be close the god. In two sentences, our guru ends the debate once for all: Devuk bhathi karas thenno bhavan, theye neesthenno ravan.
See the word ravan he has used. Ravan is ravanan of lanka, who is known for his mastery over music, vedic literature and courage. Still he didn't have bhakthi for the god, though he prayed Lord Siva without fail. So knowledge is good but it is useful only when it becomes wisdom; like all the virtues gain their brilliance only when they bhakthi is there. This is one of the namavali of our guru deserves to be on the net
k p subramanian

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், சுவாமிகளின் பாடல் வரிகளைப் படிக்கும் போது எனக்கு வேறு விதமாகத் தோன்றும் பொருளினை இங்கே தருகிறேன். தொடர்ந்து பாடல்கள் பதித்துக் கொண்டு வருவதற்கு மிக்க நன்றி.

//புந்நு பாப்ஹாலவெ ஸெரிரநித்யம் //

புண்ணிய பாவங்களால் வந்த உடல் அநித்யம்.

//தொர
ஜுந்ந ஹட்வனுந் ஸோட்3 ஸோட்3 ஸோட்3 ஸோட்3//

உன் பழைய நினைவுகளை விடு விடு விடு

//நாம் ஹாத் து4வெஸ்தெகொ நீ: மோக்ஷு
நாம்ஹோர் பி3கித் லௌநாஸ்தெக ஸே மோக்ஷு //

திருமண் இடுவதைக் கைகழுவியனுக்கு இல்லை மோக்ஷம். திருமண் மேல் திருநீறு இடாதவனுக்கு உண்டு மோக்ஷம். (திருநீறிட்ட நெற்றியுள்ளவனுக்கு மோக்ஷமுண்டு என்று சொல்லவில்லை சுவாமிகள். சுவாமிகள் வைணவர் என்பதால் திருநீறினைப் பற்றிச் சொல்லவில்லை).