Thursday, August 03, 2006

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1

யாருக்கு மோக்ஷம்? # 2

ஸத் கு3ருவுக் செர்னாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கர்மு கரஸ்தெக ஸே மோக்ஷு
ஸஹஸ்ர நமம் மெந்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கு3ண்ணு பொ4ரெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)


சத்குருவை சேராதவனுக்கு மோக்ஷமில்லை
சத் கர்மத்தை செய்தவனுக்கு மோக்ஷமுண்டு
சஹஸ்ர நாமத்தை சொல்லாதவனுக்கு மோக்ஷமில்லை
சத் குணங்கள் நிறைந்தவனுக்கு மோக்ஷமுண்டு

உண்மை குருவை சேர்பவனுக்கு மோக்ஷத்தை அடைய வழிகிடைத்துவிடும்,
அழியா செல்வமான, மோக்ஷம் கிடைப்பது அரிதிலும் அரிது. அப்பேற்பட்ட வழியை தரும் சத்குருவை அடைபவன் மோக்ஷத்தின் பாதிவழியை கண்டவன் ஆகிறான்.
பின் சத்கர்மாவான, ஸ்லோகங்களை சொல்வது, நித்ய கர்மாவான சூர்ய நமஸ்காரம், ப்ராணாயாமம் செய்வது, சந்தியா வந்தனம் செய்வது போன்றவை செய்பவன் மோக்ஷத்தின் வழியில் ஏற்படும் எல்லாவித தடைகளை தகர்த்தெறியும் சத்குணங்களை நிறைந்த ஆற்றலை பெறுகிறான்.

முதல் சரணத்தில் சீருடை அணிவித்தவர், இந்த சரணத்தில் வகுப்பிற்க்கு வழிசொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 3

ஸமாஸ்ரண கல்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸதா3சார்யு செரெஸ்தெக ஸே மோக்ஷு
யெமா த4க்குநாஸ்தெக நீ: மோக்ஷு
ஸம்ஸார் கடில்லெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

சமாஸ்சர சேவைகளை ஏற்காதவனுக்கு மோக்ஷமில்லை
சதாசர சேவைகளில் சேர்பவனுக்கு மோக்ஷமுண்டு
இம்மார்கத்தில் பயபடாதவனுக்கு மோக்ஷமில்லை
சம்சாகரத்தை அறுத்தவனுக்கு மோக்ஷமுண்டு

இச்சரணத்தில் நமது தடைகளை, இருக்கும் ஓட்டைகளை அடைகிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 4

அண்டு பா4த் ஜெமஸ்தெக தீ: மோக்ஷு
ஹடுல்நாஸ்தக் ஹந்த3ஸ்தெக ஸே மோக்ஷு
குண்டுவாட் சலஸ்தெக நீ:: மோக்ஷு வை
குண்டும:ட்வன் தெ2வெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

தீட்டு உணவை உண்டவனுக்கு மோக்ஷமில்லை
தீட்டென்று எண்ணாமல் சமைத்தவனுக்கு மோக்ஷமுண்டு
தவறான வழியில் செல்பவனுக்கு மோக்ஷமில்லை
தவறாத வழியில் கவனம் செலுத்தியவனுக்கு மோக்ஷமுண்டு

இச்சரணத்தில் சில ஆசாரங்களை கடைபிடிக்க சொல்கிறார், தீட்டு உணவை சாப்பிடக்கூடாது அவ்வாறு சாப்பிடுபவர்கள் இறந்தவர்களுக்கு கடமைபட்டவராகின்றனர் அவ்வாறு கடமைபட்டவர் பகவத் கடமையாற்றுவது சற்று இயலாத காரியமாகிவிடும் என்பதால் அவ்வாறு சொன்னவர், அவர்களது வீட்டில் இருப்பவர்களுக்காக உணவு தயாரித்தவர்கள் மோக்ஷத்திற்க்கு தகுதி பெற்றவராகின்றனர் என்றும் சொல்கிறார்.

தவறான வழியில் செல்லாமல், தவறாத வழியான வைகுண்டவழியை கண்டவன், கொண்டவன், மோக்ஷத்தை அடைவது இயலாத காரியமா?

இச்சரணத்தில் சில நுனுக்கமான செயல்களை (fine tune) செய்ய செய்கிறார்.

2 comments:

குமரன் (Kumaran) said...

நன்கு பொருள் சொல்லியிருக்கிறீர்கள் சிவமுருகன்.

ஸத் கு3ருவுக் செர்னாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கர்மு கரஸ்தெக ஸே மோக்ஷு
ஸஹஸ்ர நமம் மெந்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸத் கு3ண்ணு பொ4ரெஸ்தெக ஸே மோக்ஷு

இந்த வரிகளுக்கு மிக அருமையான பொருளினைச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஸமாஸ்ரண கல்நாஸ்தெக நீ: மோக்ஷு
ஸதா3சார்யு செரெஸ்தெக ஸே மோக்ஷு
யெமா த4க்குநாஸ்தெக நீ: மோக்ஷு
ஸம்ஸார் கடில்லெஸ்தெக ஸே மோக்ஷு

இந்த வரிகளுக்கு எனக்குத் தோன்றும் பொருள்:

ஸமாஸ்ரயணம் செய்துக் கொள்ளாவதுக்கும் இல்லை மோக்ஷம்
ஸத் ஆசார்யனை அடைந்தவனுக்கும் உண்டு மோக்ஷம்
எமனுக்குப் பயப்படாதவனுக்கு இல்லை மோக்ஷம்
ஸம்ஸார பந்தங்களை அறுத்துக் கொண்டவனுக்கு உண்டு மோக்ஷம்

இறைவனுக்குத் தான் அடிமை என்று சொல்லி சங்கு சக்கர முத்திரைகளை இரு தோள்களிலும் ஒற்றிக் கொண்டு ஒரு ஆசார்யனால் இறைவனிடம் சரணாகதி செய்து கொள்வதை ஸமாஸ்ரயனம் என்று வைணவ சம்ப்ரதாயத்தில் சொல்லுவார்கள். அதற்கு ஒரு ஸத் ஆசார்யனை அடையவேண்டும்.

அண்டு பா4த் ஜெமஸ்தெக தீ: மோக்ஷு
ஹடுல்நாஸ்தக் ஹந்த3ஸ்தெக ஸே மோக்ஷு
குண்டுவாட் சலஸ்தெக நீ:: மோக்ஷு வை
குண்டும:ட்வன் தெ2வெஸ்தெக ஸே மோக்ஷு

தீட்டு உணவை உண்டவனுக்கு இல்லை மோக்ஷம்
தீட்டின்றி சமைத்தவனுக்கு உண்டு மோக்ஷம்
தவறான வழியில் சென்றவனுக்கு இல்லை மோக்ஷம்
வைகுண்டத்தில் நினைவை வைத்தவனுக்கு உண்டு மோக்ஷம்

ஹடுல்நாஸ்தக் என்றால் தீட்டுப்பட்டுவிடாமல் என்று பொருள். நீங்கள் அதனை ஹவ்டுல்நாஸ்தக் (நினைத்துக் கொள்ளாமல்) என்று பொருள் கொண்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

வைகுண்டும் ஹட்வன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே. ஏன் அதனைத் தவறாத வழி என்று மொழிபெயர்த்துப் பின்னர் வைகுண்டவழி தவறாத வழி என்று விளக்கத்தில் சொல்லியிருக்கிறீர்கள்?

சிவமுருகன் said...

//வைகுண்டும் ஹட்வன் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே. ஏன் அதனைத் தவறாத வழி என்று மொழிபெயர்த்துப் பின்னர் வைகுண்டவழி தவறாத வழி என்று விளக்கத்தில் சொல்லியிருக்கிறீர்கள்?//

அண்ணா,

தவறான வழி - தவறாத வழி என்று சொல்லி இருக்கிறேன்.

இரன்டும் ஒரு எழுத்து தான் மாறியுள்ளது. அதே போல் குண்டு வாட் - வைகுண்டு வாட் என்பதிலும் ஒரு எழுத்து தான் மாறி வரும் அதே நடையில் தரவேன்டும் என்பதற்கால அவ்வாறு செய்து விட்டேன்.