Friday, August 04, 2006

அவனை வணங்காதவர்கள் கதி?

கடவுள் என்பவர் எல்லோருக்கும் சமம் என்ற சொல்லும் ஒரு நாமாவளி. மனிதன் வெளுப்பாகவோ, கருப்பாகவோ பிறக்கிறான், ஆனால் எந்த விதபேதமும் இல்லாமல் அவனுள்ளும் அந்த மாயவன் இருந்து ஆட்சி செய்கிறான். அவனை வணங்காதவர்கள் எப்பாவத்திற்க்கு ஆளாகின்றனர் என்று சொல்லும் இந்த நாலுவரி நாமாவளி இதோ.

லிம்பு3 பொள்ளொ ஸொக உஜெதிகாய் களொ
ஜெம்பு பொள்ளொ ஸொக ரி:யெதிகாய் ஜெநெ
அம்ப3ன் போட் து3வ்ந கரஸ்தகஸ்நா ஹொயாஸ்
ஹரி ப4ஜன கர்நாஸ்தெநு

லிம்பு3 பொள்ளொ ஸொக உஜெதிகாய்
எலுமிச்சை பழம் போன்று மஞ்சளாக பிறந்தாலும்

களொ ஜெம்பு பொள்ளொ ஸொக ரி:யெதிகாய்
கரிய நாவல் பழம் போல் இருந்தாலும்

ஹரி ப4ஜன கர்நாஸ்தெநு
ஹரியின் பஜனை செய்யாதவன்

ஜெநெ அம்ப3ன் போட் து3வ்ந கரஸ்தகஸ்நா ஹொயாஸ்
பெற்ற தாயின் வயிறெரிய வைத்த பாவத்திற்க்கு ஆளாவான்

எலுமிச்சை பழம் போன்று மஞ்சளாக பிறந்தாலும்
கரிய நாவல் பழம் போல் இருந்தாலும் பெற்ற
ஹரியின் பஜனை செய்யாதவன்
தாயின் வயிறெரிய வைத்த பாவத்திற்க்கு ஆளாவான்.

இந்த நாமாவளியில் கருப்பு, வெளுப்பு, என்று மறைபொருளாக சொல்லும் நாயகி சுவாமிகள், மனிதன் எந்த குடியில் பிறந்தாலும் மலர்மிசை ஏகினான் தாழ் பணியவேண்டும் என்று சொல்கிறார். கங்கை கரையில் காராம் பசுவை கொண்ற பாவமும் தாயை நிந்தித்த பாவமும், தாயை கொடுமை செய்த பாவமும் தீர்க்க முடியாத பாவத்திற்க்கு ஆளாவோம் என்று இந்த நாமாவளியில் சொல்கிறார்.

அண்ணன் குமரன் அவர்கள் இதற்கான விளக்கம் அழகாக தந்திருந்தார்.

கோதையின் ஐயைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று திருப்பாவை தனியன் பாடல் சொல்வதைப் போல் சொல்கிறார் சுவாமிகள்.

மானிடராய்ப் பிறந்தவர்கள் எல்லோரும் தன் தாய் வயிற்றில் இருக்கும் போது அந்தத் தாய் எத்தனை எத்தனை வலிகளை அனுபவிக்கிறாள் என்பது தாயாய் இருந்தவர்களுக்குத் தெரியும்; இல்லை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் எந்த உணவையும் உட்கொள்ள முடியாமல் எதனை உண்டாலும் வாயிலெடுத்துத் துன்பப்படுவார்கள். எப்போதும் களைப்புடனே இருப்பார்கள். கடைசி ஆறு மாதங்கள் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு புறமாகவே சாய்ந்து படுத்து நிற்க, உட்கார, படுக்க, உண்ண என்று எல்லாவிதங்களிலும் எத்தனை எத்தனை துன்பங்கள் அனுபவிக்கிறாள்.அந்தத் துன்பங்களெல்லாம் ஒன்று அனுபவித்தால் தெரியும். இல்லை அருகில் இருந்து பார்த்தால் தெரியும். இதெல்லாவற்றையும் விட பிள்ளை பிறக்கும் போது செத்துப் பிழைக்கிறாளே அந்த வலி பிள்ளை பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லுவார்கள். பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் புரிகிலாதது அது.

சுவாமிகள் சொல்ல வருவது - ஹரி பஜனை செய்யாதவர்கள் அப்படி பெற்றத் தாய்க்கு வயிற்றில் சுமக்கும் வலியைக் கொடுக்க மட்டுமே பயன்பட்டவர்கள்; மற்ற எதற்கும் பயனில்லாதவர்கள் என்கிறார்.

எலுமிச்சம்பழம் போல் இருந்தால் தான் என்ன? கருப்பு நாவற்பழம் போல் பிறந்தால் தான் என்ன? பெற்றத் தாயின் வயிற்றில் வலியேற்படுத்தத் தானே ஆனார்கள் ஹரி பஜனை செய்யாதவர்கள்!!!

9 comments:

ENNAR said...

சிவா
நல்ல விளக்கம்

சிவமுருகன் said...

நன்றி என்னார் ஐயா.

துளசி கோபால் said...

நாமும்தான் கடவுளையே பல நிறத்திலும் வைத்துள்ளோம்.
மனிதன் மட்டும் லேசுப்பட்டவனா?:-))))

குமரன் (Kumaran) said...

மிக மிக நல்ல பாடல் சிவமுருகன். நான் பலமுறை பாடிக் கொண்டிருக்கும் பாடல்.

கோதையின் ஐயைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு என்று திருப்பாவை தனியன் பாடல் சொல்வதைப் போல் சொல்கிறார் சுவாமிகள்.

மானிடராய்ப் பிறந்தவர்கள் எல்லோரும் தன் தாய் வயிற்றில் இருக்கும் போது அந்தத் தாய் எத்தனை எத்தனை வலிகளை அனுபவிக்கிறாள் என்பது தாயாய் இருந்தவர்களுக்குத் தெரியும்; இல்லை அருகிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியும். கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் எந்த உணவையும் உட்கொள்ள முடியாமல் எதனை உண்டாலும் வாயிலெடுத்துத் துன்பப்படுவார்கள். எப்போதும் களைப்புடனே இருப்பார்கள். கடைசி ஆறு மாதங்கள் வயிற்றில் உள்ள குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று ஒரு புறமாகவே சாய்ந்து படுத்து நிற்க, உட்கார, படுக்க, உண்ண என்று எல்லாவிதங்களிலும் எத்தனை எத்தனை துன்பங்கள் அனுபவிக்கிறாள்.அந்தத் துன்பங்களெல்லாம் ஒன்று அனுபவித்தால் தெரியும். இல்லை அருகில் இருந்து பார்த்தால் தெரியும். இதெல்லாவற்றையும் விட பிள்ளை பிறக்கும் போது செத்துப் பிழைக்கிறாளே அந்த வலி பிள்ளை பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சொல்லுவார்கள். பக்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கும் புரிகிலாதது அது.

சுவாமிகள் சொல்ல வருவது - ஹரி பஜனை செய்யாதவர்கள் அப்படி பெற்றத் தாய்க்கு வயிற்றில் சுமக்கும் வலியைக் கொடுக்க மட்டுமே பயன்பட்டவர்கள்; மற்ற எதற்கும் பயனில்லாதவர்கள் என்கிறார்.

எலுமிச்சம்பழம் போல் இருந்தால் தான் என்ன? கருப்பு நாவற்பழம் போல் பிறந்தால் தான் என்ன? பெற்றத் தாயின் வயிற்றில் வலியேற்படுத்தத் தானே ஆனார்கள் ஹரி பஜனை செய்யாதவர்கள்!!!

சிவமுருகன் said...

அண்ணா.
உங்கள் விளக்கம் அருமையாக இருக்கிறது.

இதையும் பதிவில் சேர்த்து விடவா?

குமரன் (Kumaran) said...

பதிவில் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம் சிவமுருகன். எந்தத் தடையும் இல்லை.

சிவமுருகன் said...

அம்மா,
//நாமும்தான் கடவுளையே பல நிறத்திலும் வைத்துள்ளோம்.
மனிதன் மட்டும் லேசுப்பட்டவனா?
:-)))) //

தன்னை பல நிறத்தில் படைத்த இறைவனை பல வண்ணங்களில் வணங்குகிறான்.

G.Ragavan said...

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடன் என்கிறது புறம். புறந்தருதல் என்றால் பெற்றுப் போடுதல் அல்ல. ஒரு பிள்ளையை ஈன்று நன்கு வளர்த்திடுவது. அதனால் மற்றோர்க்குப் பயனாவது. அந்தப் பயனை அடையா விட்டால் "மகன் எனல் மக்கட் பதடி எனல்" என்ற வள்ளுவன் வாக்கு நினைவுக்கு வருகிறது சிவமுருகன்.

சிவமுருகன் said...

வருகைக்கும் ஒப்பிட்டு பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி இராகவன்,