Thursday, August 17, 2006
நாராயணன் திருநாமம் மிகப்பெரிய விருந்து
ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை, பலர் உற்றார் உறவினர்களுக்கு ஆசி கூறவும் அதனையே ஒரு சாக்காக நல்ல சாப்பாடு சாப்பிடவும் வைப்பது என்று தமது விருந்து வைபவங்களில் பலர் அழைப்பதுண்டு. சாதாரணமாக எவ்வித பிரமச்சாரிகளும் இது போன்ற வைபவங்களை தவிர்ப்பர், அப்போது ஏற்படும் ஒரு தர்மசங்கடமான நிலையை சமாளிக்க தமது சீடர்களுக்கும் இப்பாடலை பாடி அறிவுரை சொல்லியும், தம் பிரமச்சாரிய தர்மத்தை காக்கும் படியும் சொல்வார்.
இப்பாடலில் வரும் ஒருரிரு வரிகளை பாடும் சமயத்தில், அவரது பக்தி ரசம், பக்தி சாப்பாடு ஆவதை காணலாம். ஹரி நாமம் ஒரு இனிய பழம் என்றவர், இனிய மிட்டாய் என்றவர், இப்பாடலில் அந்த ஆழிமழைகண்ணனின் திருநாமம் ஒரு பெரிய விருந்து உணவு என்றும், இனிய பழங்களில் கூட்டு என்றும், இனிய இனிப்புகளின் ஒரு கூட்டுப்படைப்பு என்றும், தமக்கு வீடு, பணம், நகை போல் உள்ளது என்றும், உண்டபின் எடுத்துகொள்ளப்படும் பூ, சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது என்றெல்லாம் பாடினாலும் நரகத்தை தவிர்க்கும் மார்கத்தையும், தமது குருநாதரை வணங்குவதையும் தவறவிடுவதில்லை சுவாமிகள். இப்பாடல் சுவாமிகளின் எல்லா பாடல்களின் ஒரு தொகுப்பு பாடலாக காணப்படுகிறது.
இப்பாடலை திரு டி.எம்.எஸ். அவர்களும், திரு. டி.எம். சந்திரசேகர் அவர்களும் பாடியுள்ளனர்.
தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு
பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு
கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு
கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு
ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு
சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு
கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு
பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு
நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு
வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு
தா3ள் தூப்ஸெரொ பா4த் ஜெமெஸொகன் ஸே ஸ்ரீ
தா3மோதர நமமு புஜா
போ2ள் கராஸ்தெங்கோ ஸப்பை3 யே நமமு
பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது
ஸ்ரீ தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்
பாப்ஜாய் யே ஐகோ பஸெம்ஸொகன் ஸே ஸ்ரீ
கோ3பால ஹரி நமமு
பாபிநுகப்பை3கி யே நமமு
பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்
கெளொ நரெள் ஸெக்கர்குஸ்ரி க2யெஸொகன் ஸே ஸ்ரீ
கேஸவ ஹரி நமமு
கிர்தாப் தே3ரேஸ் யே நமமு
வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்
கு3ள்ளெ பொள்ளாநஸ்கி மிவ்ளெ கு3ள்ளெஸொகன் ஸே ஸ்ரீ
கோ3விந்த3 ஹரி நமமு
து3ர்கு3ண்ணுனு மரிதகய் யே நமமு
இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்
ஸெக்கர் தூ3துமிவ்ளி ஸோகுக்க2ள்யெ ஸொகன் ஸே ஸ்ரீ
ஸங்கு சக்ரதா4ரி நமமு
ஸிள்ளொ கா3ம்தே3ய் யே நமமு
சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்
சொக்கட்மி:டாய் ஜுக்கு ஜுக்கு க2யெஸொகன் ஸே ஸ்ரீ
சொவ்த் லோக் பொ4ரெ ஹரி நமமு
சூக் ஸாநா யே நமமு
நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்
கே4ர:ந்நவ் ஸொம்மு ஹொய்ரி:யெஸ் மொகொ
கெ3ருடோ4ரவய் ஹரி நமமு
கே4ர் அவைகி ஸெரொ அவை யே நமமு
வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்
பூ2ல் ஸிர்க்கண் பான:ப்பள் ஸொகன் ஸே லொ:வ்வத3மர்
பூ2ல் பதா3ல் ஹரி நமமு
ஜெலுமவ்நா பொஸயி யே நமமு
மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாளினை கொண்ட ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்து போடும் இத்திருநாமம்
நரகுஜானார:வாய் யே ஜநி க3வேத் ஸ்ரீ
நடனகோ3பால நமமு
விர்ஜாநெத்தி3க் பொ3ல்ஸொடை3 யே நமமு
நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்
வடபத்ரார்யுநு மொகொ க்ருப கராஸ்
வைகுண்டு வாடு நமமு
வாட்சலேத் ஸுக2ம் தே3ய் யே நமமு
வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இத்திருநாமம்
வழியில் இன்பங்களை பல தந்துள்ளன இத்திருநாமம்.
பருப்பு நெய் கலந்து உண்டது போல் உள்ளது ஸ்ரீ
தாமோதரனின் திருநாமம் – பூஜை
செய்து வாழ்பவர்க்கே கிடைக்கும் இத்திருநாமம்
பாவம் தொலையும் கேளுங்கள் பாயசம் போலிருக்கே ஸ்ரீ
கோபாலன் ஹரி இத்திருநாமம்
பாபிகளுக்கிடைக்குமோ இத்திருநாமம்
வாழைப்பழம் தேங்காய் கலந்து உண்டது போலிருக்கே ஸ்ரீ
கேஸவ ஹரியின் நாமம்
கருணை தருகிறதே இத்திருநாமம்
இனிய பழங்களை ஒன்றான இனிமையை கொண்டுள்ளது ஸ்ரீ
கோவிந்த ஹரியின் நாமம்
கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்
சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்
நல்ல மிட்டாய்களை அதிநிறைய உண்டது போல் உள்ளது ஸ்ரீ
பதினான்கு உலகில் நிரம்பிய ஹரியின் நாமம்
குற்றம் பொருக்குமே இத்திருநாமம்
வீடு, பணம், நகை ஆகவுள்ளது எனக்கு
கருடவாகனன் ஹரியின் நாமம்
வீடுபேறு கிடைக்க செய்யும் இத்திருநாமம்
மலர், சந்தனம், வெற்றிலை பாக்கு போல் உள்ளது செந்தாமரை
மலர் தாள் ஹரியின் நாமம்
ஜென்மம் எடுப்பதை துடைத்திடும் இத்திருநாமம்
நரகத்தை தவிற்கலாம், அறிந்து பாடினால் ஸ்ரீ
நடன கோபாலனின் நாமம்
விர்ஜை நதிக்கு கொண்டு போய்விடும் இத்திருநாமம்
வடபத்திரர் எனக்கு கருணை புரிந்துள்ளார்
வைகுண்ட வழி இந்நாமம்
வழியில் இன்பங்களை பல தந்துதிருக்குமே இத்திருநாமம்.
இப்பதிவு "மதுரையின் ஜோதி" பதிவின் ஐம்பதாவது பதிவு, என்னுடைய இருநூற்றி ஐம்பாதவது பதிவுமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
நாராயணன் இல்லையோ அது?
250-க்கு வாழ்த்துக்கள்
250 பதிவுகளா வாழ்த்துக்கள்
பாடல்கள் நன்றாக உள்ளது
எப்படி படல்களை வலைஏற்றுகிறீர்கள்
//நாராயணன் இல்லையோ அது?//
நன்றி தருமி சார். பிரசாதங்களால் உருவகப்பட்ட பெருமாளே தான்.
//250 பதிவுகளா வாழ்த்துக்கள்//
நன்றி என்னார் சார்.
//பாடல்கள் நன்றாக உள்ளது
எப்படி படல்களை வலைஏற்றுகிறீர்கள்?//
நான் பாடல்களை வலையேற்றுவதில்லை, இவையனைத்தும் இணைத்தில் கிடைக்கின்றன அதற்க்கு நாங்கள் தொடுப்புகளை மட்டும் தருகிறோம்.
சிவமுருகன். தலைப்பில் 'நாராயணன்' என்று சொல்வதற்குப் பதிலாக 'நாராயனன்' என்று சொல்லியிருக்கிறீர்கள். அதனைத் தான் தருமி ஐயா சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அருமையான பாடல் இது சிவமுருகன். இந்தப் பாடலை இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. ஒரே நேரத்தில் படித்து முடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக இருக்கிறது இந்தப் பாடல். மெதுவாகப் படிக்கிறேன்.
நீங்கள் இட்டிருக்கும் வெங்கடாசலபதி படமும் மிக நன்றாக இருக்கிறது.
250வது பதிவிற்கு வாழ்த்துகள்.
அண்ணா,
மாற்றி விட்டேன். தற்சமயம் சென்னையில் உள்ளேன், விரைவில் தொடர்கிறேன்.
நன்றி தருமி ஐயா.
//அருமையான பாடல் இது சிவமுருகன். இந்தப் பாடலை இன்னும் முழுதாகப் படிக்கவில்லை. ஒரே நேரத்தில் படித்து முடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக இருக்கிறது இந்தப் பாடல். மெதுவாகப் படிக்கிறேன். //
சமயம் கிடைக்கும் போது அவசியம் படித்து தங்களது கருத்துக்களை சொல்லவும்.
//நீங்கள் இட்டிருக்கும் வெங்கடாசலபதி படமும் மிக நன்றாக இருக்கிறது.//
இது பிரசாதங்களை கொண்டு செய்யப்பட்ட நாராயணன், மஹால் 5வது தெரு அனுமார் கோவில்.
//250வது பதிவிற்கு வாழ்த்துகள்.//
நன்றி.
அன்பு சிவமுருகன்,
250ம் பதிவுக்கு வாழ்த்துகள்.
//கெட்ட குணங்களை கொண்று போடிடும் இத்திருநாமம்//
"கெட்ட குணங்களை கொன்று போடிடும் இத்திருநாமம்" என வரும்.
//சக்கரை பால் கலந்து தகத்தை தனித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நமம்
குளுமையான ஊரை தரும் இத்திருநாமம்//
"சக்கரை பால் கலந்து தாகத்தைத் தணித்தது போல் உள்ளது ஸ்ரீ
சங்கு சக்ரதாரியின் நாமம்
குளுமையான ஊரைத் தரும் இத்திருநாமம்" என வரும்
சிவமுருகன்,
250 பதிவுகளா? பாராட்டுக்கள்!!!
தொடரட்டும் உங்கள் பணி!
வடைமாலை தெரியும்.
நீங்கள் இட்ட படம் மூலம்
வடை-மாலைப் (வடையால் ஆன மால்) பார்த்ததில் மகிழ்ச்சி!
உங்கள் பதிவைப் படித்தவுடன்,
வான் கலந்த மாணிக்க வாசக
நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால்
நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து பால் கலந்து
செழுங்கனித் தீஞ்சுவை கலந்து
ஊன் கலந்து உயிர் கலந்து
உவட்டாமல் இனிப்பதுவே
என்ற வள்ளலார் பாடல் தான் நினைவுக்கு வந்தது!
நாராயணன் நாமமே பிரசாதம் ஆகி விட்டது மிகவும் உவப்பானது!
ஞானம் ஐயா.
வரவேன்டும் வரவேன்டும், இது போல் நான் செய்யும் பிழைகளை திருத்த அருளவேன்டும்.
தவறுகளை திருத்திவிட்டேன். மிக்க நன்றி.
250வது பதிவா! வாழ்த்துகள்.
ஆண்டன் திருப்பெயரே உணவும் உணர்வும் என்று இருப்பது பெரியோர் திறமே. நமக்கெல்லாம் அது சிரமமே!
டீ.எம்.எஸ் பாடிய பாட்டைக் கேட்டேன். படிக்கும் பொழுது கொஞ்சம் கடினமாக இருப்பது....பாட்டாகக் கேட்கச் சுவையாக இருக்கிறது. டீ.எம்.எஸ் பாடிய இன்னொரு பாட்டு நினைவுக்கு வருகிறது.
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே பாட்டைத்தான் சொல்கிறேன்
அன்பு சிவமுருகன்,
தயங்கித் தயங்கித்தான் எழுதினேன். ஆயினும் தாங்கள் எடுத்துக்கொண்ட பாங்கு கண்டு மனம் அமைதியுற்றது.
//வரவேன்டும் வரவேன்டும், இது போல் நான் செய்யும் பிழைகளை திருத்த அருளவேன்டும்.//
வரவேண்டும் வரவேண்டும், இது போல் நான் செய்யும் பிழைகளை திருத்த அருளவேண்டும்.
ஐயம் வரும்பொழுது ஒரு முறைக்கு இருமுறை உரக்கச் சொல்லிப்பாருங்கள். போகப்போகப் புரிபடும்.
ஐயா,
//ஐயம் வரும்பொழுது ஒரு முறைக்கு இருமுறை உரக்கச் சொல்லிப்பாருங்கள். போகப்போகப் புரிபடும்.//
சந்தோஷத்தில் ஆன தோஷங்கள். மண்ணிக்க வேண்டும்.
//250 பதிவுகளா? பாராட்டுக்கள்!!!//
நன்றி KRS.
//வடைமாலை தெரியும்.
நீங்கள் இட்ட படம் மூலம்
வடை-மாலைப் (வடையால் ஆன மால்) பார்த்ததில் மகிழ்ச்சி!//
பிரசாதங்களால் உருவகப்பட்ட மால்.
//என்ற வள்ளலார் பாடல் தான் நினைவுக்கு வந்தது!//
வள்ளலார் பாடலை தந்ததற்க்கு நன்றி
//250வது பதிவா! வாழ்த்துகள்.//
நன்றி இராகவன்
//ஆண்டன் திருப்பெயரே உணவும் உணர்வும் என்று இருப்பது பெரியோர் திறமே. நமக்கெல்லாம் அது சிரமமே!//
உண்மை தான் இராகவன், ஆனால் அவர்களுடைய வழியில் சென்றால் எந்த கடினமும் இல்லை.
//டீ.எம்.எஸ் பாடிய பாட்டைக் கேட்டேன். படிக்கும் பொழுது கொஞ்சம் கடினமாக இருப்பது....பாட்டாகக் கேட்கச் சுவையாக இருக்கிறது. டீ.எம்.எஸ் பாடிய இன்னொரு பாட்டு நினைவுக்கு வருகிறது.
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே பாட்டைத்தான் சொல்கிறேன் //
சரியான ஒரு எடுத்துக்காட்டு பாடலை தந்துள்ளீர்கள். நன்றி.
Post a Comment