Thursday, August 10, 2006

நரக வேதனை தீர

நடனகோ3பால் நமம் படன கரோ ஏ
நரகு3பா3த ஸொடி3 ஜவாய் ஜவாய்-அம்ரெ
வடபத்ரார்யுனு வாட் சலேத் தென்
வைகுண்டுமு ஜெய்கிநு ர:வாய் ர:வாய்


நடன கோபல நாமத்தை பற்றிக்கொள்
நரகவேதனை உனக்கில்லை ஒத்துக்கொள் – நம்
வடபத்திரர் வழி சென்றவர்கள்
வைகுண்டம் சென்று இருந்தவர்கள்

நடனகோ3பால் நமம் படன கரோ - நடனகோபாலனின் நாமத்தை இடையறாது சொல்லுங்கள்
ஏ நரகு3பா3த ஸொடி3 ஜவாய் ஜவாய் - இந்த நரக உபாதையை விட்டுப் போகலாம் போகலாம்
அம்ரெ வடபத்ரார்யுனு வாட் சலேத் - நமது வடபத்ரார்யரின் வழியில் நடந்தால்
தென் வைகுண்டுமு ஜெய்கிநு ர:வாய் ர:வாய் - அவர்கள் வைகுண்டத்திற்குச் சென்று இருக்கலாம் இருக்கலாம்.


நரக வேதனை தீர பல வழிகள் இருந்தாலும், எப்போதும் ஒரே நிரந்தர வழி அது தன் குருநாதர் வடபத்திரர் தந்த சத்வழி என்று சொல்லும் சுவாமிகள், அவ்வழியை பற்றியவர்கள் வைகுண்டத்தை அடைந்தவர்கள் என்றும் சொல்லும் எளிய நாமாவளி இது.

4 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். சுவாமிகள் சொல்வதை வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்காமல் சொல்நயத்திற்காக நீங்கள் கொஞ்சம் மாற்றி மொழிபெயர்ப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் அப்படி செய்த பின்னர் சொல்லுக்குச் சொல் உள்ள பொருளினையும் எழுதினால் நல்லது. நாம் மொழிபெயர்க்கும் போது சுவாமிகள் சொல்ல வந்தது மாறிவிடக்கூடாது.

நடனகோ3பால் நமம் படன கரோ - நடனகோபாலனின் நாமத்தை இடையறாது சொல்லுங்கள்
ஏ நரகு3பா3த ஸொடி3 ஜவாய் ஜவாய் - இந்த நரக உபாதையை விட்டுப் போகலாம் போகலாம்
அம்ரெ வடபத்ரார்யுனு வாட் சலேத் - நமது வடபத்ரார்யரின் வழியில் நடந்தால்
தென் வைகுண்டுமு ஜெய்கிநு ர:வாய் ர:வாய் - அவர்கள் வைகுண்டத்திற்குச் சென்று இருக்கலாம் இருக்கலாம்.

ENNAR said...

நரகம் என்றால் இப்பூஉலகம் தானே நரன் என்றால் நாம் தானே இங்கு நாம் யாரும் வேதனை படவில்லையே.

சிவமுருகன் said...

அண்ணா,

//நாம் மொழிபெயர்க்கும் போது சுவாமிகள் சொல்ல வந்தது மாறிவிடக்கூடாது.//

அப்படி எதாவது மாறி விட்டால், விளங்கிகொள்ள்வதில் வரும் என்னுடைய பிழையே. அப்படி ஏற்படின் திருத்துவீர்களா?

சிவமுருகன் said...

என்னார் ஐயா,
//நரகம் என்றால் இப்பூஉலகம் தானே //

நர லோகம் என்றாலோ நரலோகம் என்றாலோ தான் இப்பூலோகம், அதுவே நரகம் என்றால் தேவலோகத்தில் உள்ள ஒரு பகுதி, வைஷ்ணவ சம்பிருதாயதில் பாவம் செய்தவனும், பாவத்தை கண்டு கைகட்டி இருந்தவனும் செல்ல வேண்டிய, பார்க்க வேண்டிய இடம் நரகம்.

//நரன் என்றால் நாம் தானே //
நரன் என்றால் மனிதன் தான்.

//இங்கு நாம் யாரும் வேதனை படவில்லையே. //
யாரும் வேதனை படவில்லையா? ஐயா, காலையில் எழுந்து பல்துலக்கி காபி குடித்துவிட்டு, இரவு படுக்கைக்கு முன் பால் அருந்தி பல்துலக்கும் வரை நரன் என்னென்ன வேதனை படுகிறான்? அது எல்லம் சொல்லி மாளாது. தட்டி முடியாது.