Friday, August 11, 2006

மொழிபற்றும் இறை பற்றும்

பா4ஷா ப4க்தி நீ:ஸ்தெநொ பா4த் நீ:ஸ்தெ பொ4ந்நொ
நித்ய முக்தி பொந்த்3யாஸ் தெங்கொ காய் உந்நொ
ஸெத்து தொப்பி சலெஸ்தெநொ பெ4டெ3 செந்நொ
ஸித்3து3லுவாட் சலெஸ்தெநொ உக்கு செந்நொ


மொழிபற்று இல்லாதவன் உணவில்லாத பானை
நித்ய முக்தி பெற்றவன் – என்ன குறையுள்ளவன்?
சத்தியத்தை தவறி நடந்தவன் கோழையவன்
சித்தமளிக்கும் வழியில் நடந்தவன் எஃகானவன் (வலிமையானவன்)

ஸ்ரீமந் நடன கோபல நாயகி சுவாமிகளும், சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்துக்களை அறிவித்தவரான ஸ்ரீமான் மேதாவி. ராமராய் அவர்களும் சந்தித்த போது இந்த நாமாவளி பாடியதாக குறிப்புள்ளது.

பாஷை பக்தியும் பகவத் பக்தியும் வண்டியின் இருசக்கரங்களாக இருக்கவேண்டும் என்றும், அப்படி இல்லாதவன் உணவில்லாத பானை பசித்தவனுக்கு எப்படி உணவில்லாத பானை பயனாகாதோ அப்படியே இதுவும் பயணளிக்காது என்று சொன்னவர், பக்திக்கு அவசிய தேவை சத்திய வழி இதை பற்றாதவன் கோழை என்றும், சித்தமளிக்கும் வழியான வைகுண்ட வழியை நடந்தவன் (உக்கு என்றால் எஃகு என்று பொருள் படும், உக்கு செந்நொ) எஃகானவன் அதாவது வலிமையானவன் என்று சொல்கிறார்.

(உதாரணமாக மதுரை கீழவாசலுக்கருகில் “விளக்கு தூண்” பகுதிக்கு நம் சௌராஷ்டிரர்கள் “உக்கு காம்பு” என்று புழங்கி வந்தனர், பின் அது மருவி “முக்கு காம்பு” என்று வழங்கலாயினர், எஃகினால் ஆன அந்த விளக்கு தூண் என்பதையே இது குறிக்கிறது)

2 comments:

குமரன் (Kumaran) said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது சிவமுருகன். அடிக்கடி பாடுவது. பெடே செந்நோ என்றால் உடைந்த பருப்பு என்றும் உக்கு செந்நோ என்றால் இரும்புப் பருப்பு (இரும்பு கடலை) என்றும் பொருள் கொண்டிருந்தேன். அது கோழை, உறுதியானவன் என்ற பொருளுக்கு அப்படியே பொருந்துகிறது.

சுவாமிகள் இராமராய் அவர்களைச் சந்தித்த போது இந்தப் பாடலைப் பாடினார் என்ற தகவல் புதியது.

கீழவாசல் விளக்குத்தூணை நான் இன்று கூட உக்கு காம்பு என்றே சொல்லிவருகிறேன். எனக்குத் தெரிந்து உறவினர்கள் எல்லோரும் அப்படித் தான் சொல்கிறார்கள். உக்கு காம்பை உக்காம்பு என்று சொல்வதும் உண்டு.

UPAMANYUOSS said...

mii ukku khaambu meniis aikini poDriyo.
tumi mukku khaambu meni menariyo moko aascharyam lagarEsi.

UPAMANYU.