Thursday, August 03, 2006

யாருக்கு மோக்ஷம்?

யாருக்கு மோக்ஷம்? # 1
யாருக்கு மோக்ஷம்? # 2-4

யாருக்கு மோக்ஷம்? # 5
தா3ஸோ நாஸ்தெக நீ: மோக்ஷு
தா3ஸுநு தா3ஸொ யெஸ்தெக ஸே மோக்ஷு
காஸநி க33ஸ்தெக நீ: மோக்ஷு
கைங்கர்யம் கரஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

அடியாராகவனுக்கு மோக்ஷமில்லை
அடியாருக்கு அடியாரானால் மோக்ஷமுண்டு
பணத்தை புதைத்தவனுக்கு மோக்ஷமில்லை - இறை
பணி செய்தவனுக்கு மோக்ஷமுண்டு

சுவாமிகள் எப்போது தாஸனுக்கு தாஸன் என்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர், பல கீர்த்தனைகளில் இதை வலியுறுத்தியுள்ளார்.

அரங்கனின் அடியாராகாதவனுக்கு மோக்ஷமில்லை என்பவர் அரங்கனுக்கும் மேலாக அவன் அடியாருக்கு அடியாரானாலேயே மோக்ஷத்தை அடையலாம். தன்னிடம் உள்ள செல்வத்தை புதைப்பவனுக்கு, மறைப்பவனுக்கு மோக்ஷமில்லை, இறைபணி செய்தவனுக்கு மோக்ஷமுண்டு என்பதை நாயகி சுவாமிகள் மிக மிக எளிதாக இந்த சரணத்தில் சொல்கிறார்.

இச்சரணத்தில் மோக்ஷத்திற்க்கான ஐந்தாவது நிலை, அங்கே வரும் அடியவர்க்கு வழிகாடும் குருவும் ஒரு அடியவரே அவருக்கு அடியாராகும் பேற்றை பெறும் படி சொல்கிறார்.


யாருக்கு மோக்ஷம்? # 6
மந்துர் ஐகுநாஸ்தெக நீ: மோக்ஷு
மாத4வாஸ் தே3வ்மெந் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு
மந்துர் ஜெபுநாஸ்தெக நீ: மோக்ஷு
மந்துர் ப்ரபா4வ் ஜநெஸ்தெக ஸே மோக்ஷு (மொந்நூ)

மந்திரம் கேட்காதவனுக்கு மோக்ஷமில்லை
மாதவனே தெய்வம் என்று அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு
மந்திரம் ஜபிக்காதவனுக்கு மோக்ஷமில்லை
மந்திரத்தின் சக்தியை, வீரியத்தை அறிந்தவனுக்கு மோக்ஷமுண்டு.

இந்த ஆறாவது நிலையில் அவ்வாறு அடியாருக்கு அடியாராகி பின் சில உட்செயல்களை செய்யவேண்டும். சிறுவர்களை நற்செயல்களை செய்யாத போதிலும் தீய செயல்களையாவது தவிர்க்கவேண்டும் என்று சொல்வர், தீய செயல்களை தவிர்த்த பின் சில சில நற்செயல்களை செய்ய ஆரம்பிக்க வேண்டும். அதற்க்கு முதல் செயல் மந்திரம் ஜபிப்பது, தன்னிடமிருந்த தீய செயல்களை நிறுத்தியவர், பின் நற்செயல்களை தம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். பின் மாதவனே தெய்வமென்று அறிந்தவனாக வேண்டும், மந்திரம் ஜபிப்பதை முதலில் கேட்க வேண்டும், பின் மாதவனை உணரவேண்டும், பின் ஜபிக்க வேண்டும், பிறகு மந்திரத்தின் பொருளணர்ந்து கொள்ள வேண்டும். போருளுணர்ந்து பிறர்க்கு போதிக்க வேண்டும்.


யாருக்கு மோக்ஷம்? # 7
பர தந்தூர் ஹோநாஸ்தெக நீ: மோக்ஷு
பர தந்தூர் ஹொயெஸ்தெக ஸே: மோக்ஷு
நியாவுநு கரஸ்தெமொ நீ: மோக்ஷு
நரஹரி ப4ஜநாமூஸ் ஸே மோக்ஷு (மொந்நூ)

பரமாணந்தத்தில் ஆகாதவனுக்கு மோக்ஷமில்லை
பரமாணந்தத்தில் ஆணவனுக்கு மோக்ஷமுண்டு
வெறும் நியாயங்க செய்தவனுக்கு மோக்ஷமில்லை
சீரீய தெய்வமான ஹரியை பாடியவனுக்கு மோக்ஷமுண்டு

2 comments:

குமரன் (Kumaran) said...

பர தந்தூர் ஹோநாஸ்தெக நீ: மோக்ஷு
பர தந்தூர் ஹொயெஸ்தெக ஸே: மோக்ஷு
நியாவுநு கரஸ்தெமொ நீ: மோக்ஷு
நரஹரி ப4ஜநாமூஸ் ஸே மோக்ஷு

இறைவனுக்கே அடிமையாகாதவனுக்கு இல்லை மோக்ஷம்
இறைவனுக்கே அடிமையானவனுக்கு உண்டு மோக்ஷம்
நியாயமானதை மட்டுமே செய்வதால் இல்லை மோக்ஷம்
(அதோடு) நரசிம்மனின் பஜனையிலேயே உண்டு மோக்ஷம்

சுதந்திரம், பரதந்திரம் - இவை இரண்டும் எதிர் எதிர் நிலைகள். எந்த நிலையிலும் எல்லா நேரங்களிலும் பந்தத்திலும் விடுதலையிலும் உயிர் இறைவனுக்கே பரதந்திரமானது; அடிமையானது என்பது வைணவ சம்ப்ரதாயம். அதனைத் தான் இங்கே சுவாமிகள் சொல்கிறார். இறைவனுக்கு உரிதான தன் ஆத்மாவை எவனொருவன் தனக்கே தனக்கு சுதந்திரமானதொன்று என்று சொல்கிறானோ அவன் இறைவனுக்கு உரிய பொருளான தன் உயிரைத் திருடியவனாகிறான் என்பதும் வைணவ சம்ப்ரதாயக் கருத்து. இதனை விரித்துப் பின்னர் ஒருமுறை எழுதுகிறேன்.

சிவமுருகன் said...

அண்ணா,
//இதனை விரித்துப் பின்னர் ஒருமுறை எழுதுகிறேன். //

விரைவில் எழுதுங்கள்.