Wednesday, August 09, 2006

தயவு தாட்சன்யமில்லாதவன்

3க்ஷண் நீ:ஸ்தெனொபா33தெ3க்ஷணு தெனொ---அம்ரெ
லெக்ஷணான் த3தா3கு பொ3வ்லே ஜிவ்லுவாய் (த3க்ஷண்)

தயவு தாட்சனபமில்லாதவனப்பா தெற்க்கு திசையிலிருப்பவன்–நம்
இலட்சுமணன் அண்ணனை கூப்பிட்டுக்கொள் வாழ்ந்துகொள்ளலாம்.

தெற்க்கு திசை என்பது யமனின் ஆட்சிக்குரிய திசையாகும் அத்திசையிலிருப்பவன் உன்னை அழைத்து செல்ல வரும் போது எப்படி வேண்டினாலும் உன்னை விடமாட்டான், அதற்க்கும் மருந்து உண்டு, சேவைக்கு இலக்கணமான இலக்குவனின் அண்ணன் அந்த ஸ்ரீராம சந்திரனின் நாமத்தை பற்றிக்கொள், அனுமனும் இதை பற்றி தான் இந்துமாஹா சமுத்திரத்தை கடந்து பஜ்ரங்க பலியானான், இச்சம்சாரசாகரத்தை கடக்க இதை பற்றிக்கொள். இவ்வுலகிலும் அவ்வுலகிலும் வாழ்ந்து கொள்ளலாம்.

3 comments:

குமரன் (Kumaran) said...

http://nadanagopalanayaki.blogspot.com/2005/10/blog-post_12.html

சிவமுருகன். இந்தப் பாடலை இங்கே எழுதியிருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். பஜ்ரங்க்பலி என்றால் அனுமன் என்று தெரியும். ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள் என்று தெரியாது. உங்களுக்குத் தெரியுமா?

சிவமுருகன் said...

//சிவமுருகன். இந்தப் பாடலை இங்கே எழுதியிருக்கிறேன். //

மண்ணிக்கனும் ஒரு பட்டியல் தயாரித்தும் எப்படியோ என் கண்ணில் படவில்லை. தட்டி தயாரிப்பது எல்லாம் ஒரு கணிணியில் வலையேற்றம் செய்வது வேறு கணிணியில் என்பதால் சற்று குழப்பம்.

//சிவமுருகன். பஜ்ரங்க்பலி என்றால் அனுமன் என்று தெரியும். ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன பொருள் என்று தெரியாது. உங்களுக்குத் தெரியுமா? //

இதற்க்கு ஒரே வார்த்தையில் பதில் சொல்ல வேன்டும் என்றால் பராகிரமசாலி.

இதற்க்கு ஒரு பதிவாகவும் பதில் சொல்லலாம். ஒரு பதிவாக பிறகு சொல்கிறேன்.