Friday, August 04, 2006

திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம்

கோ3விந்த3 நமமுஸ் கு3ள்ளே பொள்ளொ
2ள்ளி க2வகா தா3ஸுன் துமி
ஜீவ் ஹெள்னா முல்லோ
அவி மூக3 மிள்னா முல்லோ


கோ3விந்த3 நமமுஸ் கு3ள்ளே பொள்ளொ
கோவிந்த நாமமான திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம்

அவி மூக3 மிள்னா முல்லோ
கூட்டம் கூடுவதற்க்கு முன்னரே.

2ள்ளி க2வகா தா3ஸுன் துமி
ஜீவ் ஹெள்னா முல்லோ
முடியும் மட்டும் உண்டு விடுங்கள் அடியார்வர்களே



கோவிந்த நாமமான திருவெட்டெழுத்து ஒரு இனிய பழம் கூட்டம் கூடுவதற்க்கு முன்னரே, முடியும் மட்டும் உண்டு விடுங்கள் அடியார்வர்களே. அது அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரத்தில் இருந்தாலும், நமக்கோ பிறர்க்கோ கிடக்காதோ என்று எண்ணாமல் முடிந்த வரை சங்கோஜமில்லாமல் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

கோவிந்த நாமமே இனிய பழம் (உலகில் மற்ற விஷயங்கள் எல்லாம் இனிப்பவை போல் இருந்தாலும் அவை இனியவை இல்லை)எடுத்து உண்ணுங்களே அடியவர்களே நீங்கள்உயிர் எடுக்கப்படுவதன் முன்னர்(உங்கள் பூதவுடலைப் பார்ப்பதற்காக) கூட்டம் வந்து கூடுவதற்கு முன்னர்.

2 comments:

குமரன் (Kumaran) said...

சிவமுருகன். இந்தப் பாடலை நான் புரிந்து கொள்வது வேறு விதமாக இருக்கிறது.

கோவிந்த நாமமே இனிய பழம் (உலகில் மற்ற விஷயங்கள் எல்லாம் இனிப்பவை போல் இருந்தாலும் அவை இனியவை இல்லை)
எடுத்து உண்ணுங்களே அடியவர்களே நீங்கள்
உயிர் எடுக்கப்படுவதன் முன்னர்
(உங்கள் பூதவுடலைப் பார்ப்பதற்காக) கூட்டம் வந்து கூடுவதற்கு முன்னர்

இதுவே நான் எடுத்துக் கொண்ட பொருள்.

'கூகா என என் கிளை கூடியழ' என்று அருணகிரிநாதர் சொல்வாரே அதே பொருள்.

சிவமுருகன் said...

அண்ணா,
//இதுவே நான் எடுத்துக் கொண்ட பொருள்.//

இந்த பொருள் தான் சரியாக படுகிறது, சரியாக வருகிறது.

நீங்க இந்த 'மதுரையின் ஜோதி' பதிவு மட்டும் தான் படிக்கிறீர்களா?

சௌராஷ்ட்ர திருக்குறள் சில அதிகாரங்களையும், மேலும் நிகழ்வுகளில் சில பதிவுகளையும் பதித்துள்ளேன் பார்க்கவும்.